வெள்ளி, 30 ஜூலை, 2010

கியூபா


கியூபா: சாதனை அல்ல... சரித்திரம்!

சமீபத்தில் வணிகப் பத்திரிகை ஒன்றில் தொடர் கட்டுரை எழுதி வரும் எழுத்தாளர் சாருநிவேதிதா தன்னைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். சிறு பத்தி ரிகையில் எழுதிய காலத்தில் தன்னை பக்கத்து வீட்டுக்காரர் அறிந்திருக்கவில் லை என்றும் வணிகப் பத்திரிகையில் எழுதியவுடன்தான் தன்னைப்பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கும் தெரிந்திருப் பதாக அங்கலாய்த்திருக்கிறார். இப்படி பக்கத்து வீட்டுக்காரரைக் கூட தெரிந் திருக்காத ஒருவர் உலகின் கண்ணிய மான சோசலிச நாடான கியூபா பற்றி தன்னுடைய தொடர் கட்டுரையில் அவதூறு பரப்பியிருக்கிறார். அவருடைய நண்பர் கியூபா சென்ற போது “பேயிங் கெஸ்ட்” (பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளி) என்ற முறையில் ஒரு கியூபக் குடிமகனின் வீட்டில் தங்கியதாகவும், அப்போது உள்ளாடைகளைத் தொலைத் துவிட்டதாகவும், அந்த கியூபக் குடிமகன் வறுமை காரணமாக எடுத்துவிட்டார் என்றும் தன் மனம் போன போக்கில் எழுதி, கியூபாவை இழிவுபடுத்த முயன் றிருக்கிறார்.

ஜூலை 26. மாண்கடா படைத்தளத் தில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் தாக்குதல் தொடுத்த நாள். 57 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் புரட்சியின் தாக்குதல் தினத்தை கியூப அரசு தனது தேச விடுதலை நாளாக இன்றைக்கும் கொண்டாடி வரு கிறது. கியூபாவின் சாதனைகள் எண் ணற்றதாக இருந்த போதும், சில முத லாளித்துவ அறிஞர்கள் குறிப்பிட்ட சாத னை உதாரணங்களை சாருநிவேதிதா முன் வைக்க விரும்புகிறோம்.

வாஷிங்டனை விட கியூபா சுகாதாரப் பராமரிப்பில் முன்னேறியிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ பத்திரிகையில் பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இயான் கிப்சன் எழுதியிருக்கிறார். குறிப் பாக அமெரிக்காவில் 188 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலை இருக்கிற போது, கியூபா 170 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை எட்டி சாதனை படைத் திருக்கிறது என்பது அவரது கட்டுரை யின் சாராம்சம். உலகின் எண்ணற்ற நாடு களில் இயற்கைச் சேதாரங்கள் ஏற்படுகிற போதெல்லாம், உள்நாட்டுப் போர்களில் மக்கள் துன்புறுகிற போதெல்லாம், கியூப மருத்துவர்கள் நேரடியாகச் சென்று மனித நேயத்தின் மகத்துவத்தை உணரச் செய்த வர்கள். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆகிய ஆசிய நாடுகளில் கியூப மருத்துவர்களின் பங்களிப்பு மகத்தானது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணம் கொடுத்து மருத்துவம் பயிலும் வணிகப் பொருளாக கல்வி நிலைமை மாறிய போது, லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்காக கியூபாவில் மருத்துவக் கல்லூரியைக் கட்டி அதிலே பல்லாயிரம் மாணவர் களை இலவசமாக பயிற்றுவித்து மருத்து வர்களாக மாற்றிய சாதனை உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தாத சரித்திரம். வெனிசுலாவில் சாவேஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு, பெரும் குற்றவாளி களின் தலைநகரமாக விளங்கியது காரகஸ் நகரம். ஆனால் சாவேஸ் ஆட்சி யைப் பிடித்தபின் கியூப மருத்துவர்களின் உதவியோடு காரகஸின் குடிசைப் பகுதி களில் சுகாதாரத்தை உறுதி செய்ததோடு 5000 கியூப மருத்துவர்களை நேரடியாக வரவழைத்து மருத்துவக் கல்வியின் மகத்துவத்தை எளிய மக்களுக்கும் விளக்கிய அனுபவத்தை சாவேஸே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண் டுகள் முடிந்துவிட்டன. இன்றும் 30 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுதப் படிக்க அறியாதவர்களாக இருக்கிறார் கள். ஆனால் கியூபா 1959 ஜனவரி 1ம் தேதி ஹவானா நகருக்குள் புரட்சிப் படை நுழைந்ததன் மூலம் புரட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் கியூப மக்களுக்கு எழுத்தறிவித்த வெற் றியை கியூபா அறிவித்த போது உலகமே வியந்து போனது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல கொடூரமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கல்வியில் பெரும் சாதனையை கியூபா நிகழ்த்தியது சாதாரணமானதல்ல.

தமிழ்நாட்டு கல்வியாளர் சா.சி. இராஜ கோபாலன் “கல்விக்கு கலங்கரை விளக் கம் கியூபா” என்ற தியாகுவின் நூலுக்கு அணிந்துரை எழுதுகிற போது; “கல்வி அமைப்பில் பெரும் பங்கு வகிப்பவர் ஆசிரியர் ஆதலின், ஆசிரியரை உரு வாக்குவதில் கியூபக் கல்வி மிகுந்த கவ னம் செலுத்துகிறது. கற்பித்தல் திறன் களோடு சமுதாய நோக்கு, மனித நேயம், மாணவரிடத்திலே தோழமை உணர்வு, பெற்றோரிடமும், மக்களிடமும், ஆசிரியர் கொள்ள வேண்டிய ஒட்டுறவு ஆகியவை வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் கல்விக் கூடங்களில் எந்நிலை பணியில் உள் ளாரோ, அந்நிலையில் 6,7 ஆண்டுகளா வது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டிலோ , தொடக்கப் பள்ளியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ ஒரு நாள் கூட கற்பிக்காதவர் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்குகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்படி அணிந்துரை மூலம் நாம் புரிந்து கொள்வது, கியூபா மிகப்பெரிய அளவில் மனித நேயக் கல்வியை பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறது என்பதாகும். அங்கே திருட்டுக்கும், இதர சமூக அவலங்களுக் கும், எந்தவிதமான முகாந்திரமும் இருப் பதை முதலாளித்துவ அறிஞர் பெரு மக்கள் கூட குறிப்பிடாதபோது, யாரை திருப்திப்படுத்த சாருநிவேதிதா கியூபா குறித்து அவதூறு பரப்பியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்தியா பல துறைகளில் பின் தங்கியிருக்கும் நிலையில் கியூபா பல துறைகளில் சாதனை படைத்திருக் கிறது. ஒன்று, மனிதவள மேம்பாட்டு அறிக்கை அடிப்படையில் இந்தியா 138வது இடத்திலும், கியூபா 51 வது இடத்திலும் இருப்பதாகும். இரண்டாவ தாக, இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் இடம் பெறுவதே பெரிய விஷயம். ஆனால் குட்டி நாடு கியூபா பல பதக்கங்களை பெற்று 10 இடங்களுக்குள் தொடர்ந்து தன்னை தக்க வைப்பது ஆகும். மூன்றாவ தாக, கியூபாவில் கல்வி வணிகப் பொரு ளாக யாருக்கும் விற்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிலோ கல்வி வணிக மயமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்தியாவோடு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளோடு ஒப்பிட முடியும்.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் 2007இல் அல்ஃபா, வில்மா புயல்களின் சூறைத் தாக்குதலின் போது ஜார்ஜ் புஷ் நிலை குலைந்து போய்விட்டார். அதே புயல்கள் கியூபாவையும் தாக்கின. கியூபா ஒரு சில நாட்களில் அனைத்து சேதாரங்களையும் சரி செய்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. குட்டி நாடு கியூபா, தன்னை 50 ஆண்டு காலம் பொருளாதாரத் தடை என்ற பெயரில் அமெரிக்க வருத்திக் கொண்டிருப்பதையும் மறந்து, தன் மனித நேயக் கரத்தை பிலடெல்பியா நோக்கி நீட்டியது. அமெரிக்காவின் கர்வம் அதை ஏற்க மறுத்தது. இதை உலகம் அறியும். 50 ஆண்டுகால பொருளாதாரத் தடை தொடர்ந்து இருந்த போதும், கியூபாவினால் அறிவியலில் , மருத்துவத்தில், கல்வியில், விளையாட்டுத் துறையில் பல்வேறு முன்னேற்றங்களை தன் சொந்தக் காலில் நின்று சாதித்து இருப்பதை ‘கார்டியன்’ பத்திரிகை 2006ம் ஆண்டு கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

சோவியத் யூனியன் 1990ம் ஆண்டு சோசலிச கொள்கையைக் கைவிட்ட நேரத்தில் கியூபாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் ரத்து செய்தது. சோவி யத்தை மட்டுமே நம்பி வர்த்தகத்தில் இருந்த கியூபா மிகப் பெரிய பொருளாதார மந்தத்தை சந்திக்க நேர்ந்தது. உலகின் எண்ணற்ற கம்யூனிஸ்ட்டுகள், மனித நேய ஆர்வலர்கள், நீட்டிய ஆதரவுக் கரத்தினால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் கியூப மக்கள். பெட்ரோல் உள் ளிட்ட எரிபொருள்கள் கிடைக்காத நேரத் தில் அன்றைய கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் சைக்கிளில் வலம் வந்ததை உலகப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. 24 மணி நேரம் தொடர்ந்து மின் வெட்டை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் கியூப மக்கள் மீது திணிக்கப்பட்ட நேரத் திலும், உணவு நெருக்கடி அதிகரித்த போதிலும் கூட கியூபாவில் உள்நாட்டுக் கல வரங்கள், திருட்டுக்கள் போன்ற எது வும் நடக்கவில்லை. அப்படி நடந் திருந்தால் அமெரிக்காவும், அமெரிக்க ஆதரவு நாடுகளும், பத்திரிகைகளும் சும்மா இருந்திருக்குமா? என்பதை சாரு நிவேதிதா தான் விளக்க வேண்டும். இது போன்ற அவதூறுகளை அள்ளி வீசிய அமெரிக்காவையே எதிர்த்து நிற்கும் கியூபா மக்களுக்கு தமிழ்நாட்டு அவதூறு எழுத்தாளர்கள் அற்பமானவர்களே

நக்சல் இயக்கம்:

சித்தாந்தத்தைக் கொன்று அராஜகத்தை முன்னிறுத்துகிறது.

காலத்தின் தேவை கருதி நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் விவாதத்திலும் இயக்கம் தத்துவார்ந்த விவாதத்திலும், நடைமுறை விவாதத்திலும் நீண்ட காலத்தினை செலவிட்டு இருக்கிறது. நடைமுறையின் செயல்பாட்டில், தான் எடுத்த அரசியல், தத்துவார்த்த நிலைபாடு சரி என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அளவில் உணர்த்தியுள்ளது. சிறந்த எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் மாற்று அரசியல் குறித்த புரிதலையும் உருவாக்கி மக்களின் அங்கீகாரத்தை வலுவாகக் கொண்டிருக்கிறது.
நந்திகிராம், சிங்கூர், லால்கர் ஆகிய மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு, இடது அதிதீவிர சித்தாந்தத்திற்கும், நடைமுறைக்கும் மக்களிடையே வரவேற்பு அதிகரித்து விட்டது போன்ற உணர்வை தேசிய ஊடகங்களும், சில அறிவுஜீவிகளும் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. அதை சரி செய்து மக்களை வென்றெடுப்போம் என உறுதியாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி தாராளமயக் கொள்கைகளை தாராளமாக அமலாக்கிட காங்கிரஸ் கட்சிக்கு உதவியுள்ளது. அப்படியானால் இது உழைக்கும் மக்களுக்கான தோல்வி என்ற அரசியலை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.
ஆனால் என்ன நடைபெறுகிறது? உழைக்கும் மக்களின் ஓற்றுமையை சிதைக்கும் தத்துவார்த்த சீர்குலைவு சர்ச்சை வலுப்பெறுகிறது. அது வளர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரை கொல்லும் சித்தாந்தப் போராட்டமாக மாவோயிஸ்டுகள் தங்கள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கமும், பன்னாட்டு நிறுவனங்களும், சிக்கலின்றி தங்கள் லாபத்தை கொள்ளை லாபமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். எப்போதெல்லாம் எங்கெல்லாம் இதுபோன்ற சித்தாந்தப் போராட்டத்தில் சிதைவுகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு, இடது தீவிரவாதம் துணை புரிந்துள்ளது என்ற வரலாற்றை நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை தெளிவாக வரிசைப் படுத்துகிறது.
இன்றைய இளம் தலைமுறை 40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய நக்சல்பாரி இயக்கம் குறித்தோ, அதன் பின்னணி குறித்தோ முழுமையாக அறிந்திருக்க நியாயம் இல்லை. அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் முழுமையான ஆய்வினை மேற்கொண்டு வரலாற்று ரீதியான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழில் இதுபோன்ற விவாதங்கள் மிகத் தேவையாக இருக்கிறது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய 7 மாநிலங்களில் 250 மாவட்டங்களில் அரசை ஆட்டி வைக்கும் சக்தியாக மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்ற சித்திரம் வரையப்படுகிறது. இந்த செய்தியை மட்டும் படிக்கும் தமிழ்நாட்டின் வாசகர் உலகில் வேறு கம்யூனிஸ்டுகள் இல்லை. என தவறாகப் புரிந்து கொள்வார். 600 மாவட்டங்களைக் கொண்ட இந்தியாவில், 250 மாவட்டங்களில் பெரும் சக்தியாக இருப்பது உண்மையென்றால், ஏன் புரட்சியைத் துவக்கவில்லை? உண்மை என்ன என்பதை நக்சல் கோஷ்டிகளின் வீழ்ச்சி என்ற 33வது அத்தியாயம் விவரிக்கிறது 12,476 காவல் நிலையங்கள் அடங்கிய பகுதிகளில் 509 காவல் நிலையங்களின் வரம்பிற்குள் உள்ள பகுதிகளில்தான் மாவோயிஸ்டுகளின் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஊடகங்களின் சித்தரிப்பிற்கும், உண்மைக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி. உண்மையில் நக்சல் அமைப்புகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு உள்ளனர் என்பதை பலர் குறிப்பிட்டுள்ளனர். சுனந்தா பானர்ஜி, 2009 தேர்தலில் மாவோயிஸ்டுகளின் அறைகூவலை நிராகரித்து வாக்களித்துள்ளனர் என்ற விவரங்களை ணிறிகீ அக்டோபர் 2009 இதழில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மாவோயிஸ்டுகளை ஏற்கவில்லை. என்ற கையறு நிலையிலேயே வன்முறைகளை அதிகரிக்கின்றனர். அதிலும் சி.பி.எம் ஊழியர்களை சொல்வதன் மூலம், தனது சித்தாந்தத் தோல்விக்கு விடைகாண்கின்றனர். இது போன்ற விவரங்கள் நூல் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.
பழங்குடி மக்களிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இயக்கங்கள் சல்வா ஜீடும் (சட்டிஸ்கர்), கிரிஜன் (ஆந்திரா), பஹாரி (ஜார்கண்ட்), ஓரிசாவில் 3000 பேர் கொண்ட மலைவாழ் மக்களின் படை என்ற பெயரில் உருவாகியுள்ளன. காரணம் ஆயுதப் போராட்டம் என்ற பெயரில், நக்சல் அமைப்பினர் நடத்தி வரும் அராஜகங்களை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தாலேயே இத்தகைய எதிர்ப்பை மாவோயிஸ்டுகள் சந்திக்க வேண்டியுள்ளது.

நக்ஸல் இயக்கம்:
நக்சல்பாரி கிராமத்தில் பிறந்த காலத்தில் இருந்து நக்சல் இயக்கம் குழப்பத்தில் இருப்பதை, மிகத் தெளிவாக நூல் விளக்குகிறது. 1969இல் துவங்கிய சில நாள்களிலேயே சித்தாந்தம் சிதைந்து அராஜகம் தலையெடுத்ததை நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இன்றைய இடது தீவிர சிந்தனையாளர் குழப்பங்கள் தீர்ந்து மாவோயிஸ்டுகள் ஒரே அணியாக இணைந்து விட்டனரே என கேட்கலாம் புரட்சி குறித்து குழப்பத்திலும் அவசரத்திலும் இருக்கும் தீவிர சிந்தனையாளர்களால், மக்களை வென்றெடுக்க முடிவதை விட கிரிமினல் குற்றவாளிகளை வென்றெடுப்பது எளிதாக இருக்கிறது. என்பதையும் நூல் தெளிவு படுத்துகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சி.பி.எம் இயக்கத்தை தாக்குவதில் இருந்து கிரிமினல்களுடன் மாவோயிஸ்டுகளுக்கு உள்ள உறவை அறியலாம்.
இன்று மட்டுமல்ல 1969இல் துவங்கிய காலத்திலும் 1970முதல் 75 வரை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தாக்கிய அதே ஃபார்முலாவை, மாவோயிஸ்டுகள் பின்பற்றுகின்றனர். கொல்கத்தா நகரில் மார்ச் 1970 முதல் அக்டோபர் 1971 வரையிலான 20 மாதங்களில் 528 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைக் கொன்றழித்தவர்கள் தான், நக்சல் சீர்குலைவாளர்கள். இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 20 மாதங்களில் 240 ஊழியர்களை கொன்றுள்ளனர். இக்கொலைகள் குறித்தோ, மனித உரிமைகள் இருப்பது குறித்தோ அரசு சாரா அமைப்புகளோ, ஊடகங்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ பேசுவதில்லை என்பது புதிய அரசியல் நாகரீகமாகவும் சொல்லப்படுகிறது.
1971இல் நக்சல் இயக்கம் ஒருபுறம் தேர்தல் புறக்கணிப்பு கோஷத்தை முன்னிறுத்தியும், மறுபக்கம் சி.பி.எம்க்கு எதிரான தேர்தல் சீர்குலைவு என இரட்டை நிலையை மேற்கொண்டனர். அதே நிலைபாட்டை இன்றைய மாவோயிஸ்டுகள் மேற்கொள்கிறார்கள். இத்தகைய அரசியல் நிலைபாடு காரணமாக, மறைமுகமாக ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த விமர்சனத்தை மாவோயிஸ்ட்டுகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஆமாம் நாங்கள் ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கிறோம் என வெறிகொண்டு கூச்சலிடுவதன் மூலம் ஆமோதிக்கிறார்கள்.
எங்கள் முழக்கம் விவசாப் புரட்சி எனக் குறிப்பிடும் மாவோயிஸ்டுகள் ஏதாவது ஒரு இடத்தில் வெகுஜனங்களையோ, விவசாயிகளையோ திரட்டி சாதித்து இருக்கிறார்களா? தாங்கள் கைபற்றியதாக அறிவித்த பகுதிகளில், நிலச்சீர்த்திருத்தம் செய்ததற்கான சுவடுகள் உண்டா? போன்ற கேள்விகளை மாவோயிஸ்ட்டுகள் உதாசீனப்படுத்துவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவற்றை மாவோயிஸ்டுகளாலும் அவர்களுக்கு முந்தைய மூதாதையர்களாலும் சாதிக்க இயலாததற்கு ஒரே காரணம், நக்சல் சீர்குலைவளர்களின் செயலும், திரிணாமுல் அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகளின் செயலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதே ஆகும். இந்த விவரங்களையெல்லாம் நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை நூலில் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் அன்வர் உசேனின் உழைப்பும் நூலின் அமைவுக்கு அடிப்படை என்பதை மறுக்க முடியாது.
இடதுசாரி இலக்கியங்களை, தமிழ் வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், பாரதி புத்தகாலயம் இந்த நூலின் மூலம் மேலும் புதிய மைல் கல்லைப் படைத்திருக்கிறது. இடது தீவிரவாதத்தின் தொட்டில் பழக்கம் கொஞ்சமும் மாறாமல் தொடருகிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. அதை நினைவு படுத்துவது போலவே இடது தீவிர சிந்தனையாளர்களின் செயல் அமைந்திருக்கிறது. நக்சல்பாரி கிராமம் துவங்கி, இன்றைய லால்கர், ஜாக்ராம் செயல்கள் வரை பழைய மொந்தையை புதிய பாட்டிலில் அடைத்ததைப் போலவே இருக்கிறது. ஆம் நக்சலிம் என்ற பெயர் மாவோயிஸ்டுகளாக மாறினாலும், குணமும், செயலும் ஒரே தன்மையில் அமைந்திருப்பதை நூல் அருமையாக விவாதிக்கிறது. 1980களில் தமிழில் சிறுசிறு பிரசுரங்கள் நிறைய வெளிவந்துள்ளன. நக்சலிஸம் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பேரா. பிப்ளவ தாஸ் குப்தா எழுதிய ஆங்கிலப் புத்தகம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வுக்குழுவின் பொருப்பாளர் டாக்டர். பிரசென்ஜித் போஸ், எழுதி சமீபத்தில் லெப்ட்வேர்டு நிறுவனம் வெளியிட்ட நூல், மறைந்த தலைவர் அனில்பிஸ்வாஸ் எழுதிய நூல், மற்றும் சமீபத்தில் கீகீகீ.றிஸிளிநிளிஜிமி.ளிஸிநி இணைய தளத்தில் தோழர். கிரிமாங்லோ எழுதி வெளிவந்துள்ள கட்டுரை ஆகியவற்றையும், தீவிர வாசகர்கள் படிப்பது அவசியம். ஏனெனில், மாவோயிஸ்டுகள் சிந்தாந்த ரீதியில் எவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளார்கள் என்பதையும், மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்று அனுபவத்தில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் மறைந்த மாவோயிஸ்டு ஆதரவாளர் கே.கே. பாலகோபால், உண்ணாவிரதம், தர்ணா போன்றவற்றில் சோர்வுறுவோர் ஆயுதப் போராளிகளாக மாறுவதும், ஆயுதப் போராட்டத்தில் சோர்வுறுவோர், அரசு சாரா நிறுவனங்களின் பணிகளிலும் ஈடுபட்டு புரட்சியைத் தேடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த சிந்தனைப் போக்கை உலகமயம், தனியார்மயம், தாராளமயச் சிந்தனைகள் உரமூட்டி வளர்க்கிறது. அமைப்பு ரீதியான செயல்பாட்டை வெகுஜனங்களின் எழுச்சி மிக்க வீதிப் போராட்டத்தை தகர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ உலகமயக் கொள்கைகள், அப்படித்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
இருந்தாலும் இடதுசாரி சிந்தனை மட்டும் போதாது. வெகுஜன எழுச்சி மூலம் இந்திய ஆட்சியாளர்களை எதிர் கொள்வதே, மானுட விடுதலைக்கு வழிவகுக்கும். இதை அழுத்தமாகக் குறிப்பிடும் நூல் நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை ஆகும். இடதுசாரி ஊழியர்களின் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

அரசு வேலை உரிமை



மனிதகுல வரலாறு அடர்காட்டில் துவங்கிய போது, அவனின் பசிக்கு தேவையானதை எடுத்தோ, வேட்டையாடியோ உண்டு உயிர்வாழ முடிந்தது. நதிக்கரையில் குடிலிட்டு, சமைத்து உண்ணத்துவங்கிய போது, தனக்கானதை தானே உருவாக்கிக் கொள்ள முடிந்தது. மலைகளை காடுகளை அழித்து சமதளமாக்கி விவசாய பூமியாக பரந்த நிலத்தை உருவாக்கிய போது வர்க்கம் உருவாகிறது. ஆண்டை, அடிமை என இருகூறாக பிரிந்த நேரத்தில் தான் உழைப்புச் சுரண்டல் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை சுரண்டப்படுகிறோம். எனவே தான் கார்ல் மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என கூறுகிறார்.

அடிமைச் சமூகத்தில் உழைப்பு இருந்ததனால் அங்கே உழைப்புச் சுரண்டல் இருந்தது. சில ஆயிரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணைகள், கோயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் அனைத்தும் அடிமைகளின் உழைப்பில் உயர்ந்த பிரம்மாண்டங்கள் அன்றைக்கு அடிமை மனிதனின் தேவை ஒட்டிய துணி தான், ஆனால் பொழுதெல்லாம் உழைத்தான். இன்றைய நவீன தாராளமய உலகின் நாகரிகத் தொழிலாளியின் தேவை அதிகம். அன்று போல் பொழுதெல்லாம் உழைக்கிறான். எனவே இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என சிலர் குறிப்பிடுகின்றனர். இன்றைய தேவை அதிகம் எனவே அதிக உழைப்பு என்ற தர்க்கம் மிகுந்த ஆபத்தை விலைவிக்கக்கூடியது. ஏனென்றால் தேவை அதிகம் கொண்ட நவீன தொழிலாளியின் 10 ஆண்டுகால சேமிப்பு அதிபட்சம் ஒரு வீடு இருசக்கர வாகனம் சில வீட்டு உபயோக சாதனங்கள் அவ்வளவு தான். ஆனால், இந்த நவீன தொழிலாளியைக் கொண்ட இந்திய நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை 10 ஆண்டுகளுக்குள் லாபமீட்டுகிறார்கள். உதாரணம் இன்ஃபோசிஸ். மேலும் கடந்த 7ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ந்துள்ள பெரும் கோடிஸ்வரர்களின் நிறுவனங்கள் இவர்கள் இல்லாது பல பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உதாரணங்களில் சேர்க்கப்பட முடியும்.

சென்னையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் நிறுவனத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர். இன்று பலர் ஆள்குறைப்பு செய்யப்படுகின்றனர். ஏன் என குரல்கொடுத்தவர்கள் பணி நீக்க அறிவிப்புக்கு ஆளாகிறார்கள். தொழிலாளர் உரிமை, தொழிற்சங்க உரிமை, போன்ற நூறாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகிற உரிமைகளைப் பறிப்பதே நவீன தொழில்களில் உள்ள நாகரிக அணுகுமுறை.

மற்றொரு உதாரணம் போபால் விஷவாயு கசிவு நடந்து 26 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள தீர்ப்பு இத்தீர்ப்பு இரண்டு செய்திகளைச் சொல்கிறது. ஒன்று இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் தொழில் துவங்கினால், இலாபத்தை மகிழ்ச்சியாக அள்ளிச் செல்லவும், விஷவாயு கசிவு போன்ற பல்லாயிரம் மனித உயிர்களைக் கொன்றால், சொற்பத் தொகையை இழப்பீடாக தருவது. இரண்டு, ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார சுரண்டலையும், அதிகாரம் இழந்த நாடுகளாக இந்தியாவும் வளரும் நாடுகளும் இருக்க வேண்டும் என நிர்பந்திப்பது ஆகும்.

மேற்படி இரண்டு உதாரணங்களும் வளரும் நாடுகளில் உழைப்பாளர்களையும், அலுவலர்களையும் கொள்ளையடிக்கும் தன்மை கொண்டவை என்பதை விவரிகின்றன. மனிதகுல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்பதைச் சொன்ன கார்ல் மார்க்ஸ் அனைத்துலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஓவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும், நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. (கம்யூனிஸ்ட் அறிக்கை பக்கம் 48) என்று 1848இல் 160 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறியிருக்கிறார். உற்பத்திக் கருவிகள் அனைத்திலும் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லா தேசங்களையும், வளர்ச்சி பெறாத நிலையில் இருக்கும் தேசங்களையும் தனது நாகரிக வட்டத்திற்குள் இழுக்கிறது. அதாவது முதலாளித்துவமயமாகும் படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகிறது. நாம் மேலே கண்ட உதாரணங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரிகளுடன் ஒத்துப் போவதை புரிந்து கொள்ள முடியும்.

மேலே கண்ட கொள்கைகளை ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் பின்பற்றுகிற போது, அந்த நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. கடந்த கட்டுரையில் விவாதிக்கிற போது, உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்தும், சீனாவின் வளர்ச்சி குறித்தும் குறிப்பிட்டது இவையோடு ஒத்துப் போவதை நாம் அறிய முடியும். இன்று சமூகத்தின் சுரண்டல் முறை ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளையும் வளரும் நாடுகளில் உள்ள பெருமுதலாளிகள் சிறு தொழில்களைத் துவங்க அனுமதிப்பதும் படிப்படியாக வேலையில்லா திண்டாட்டத்தைப் பெருக்கும். இதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒரு உதாரணம் என்றால் மற்றொரு உதாரணம் வால்மார்ட், பிக் பஜார், ரிலையன்ஸ், பிரெஷ் மோர் ப்ளஸ் மோர் ஆகிய வணிக வளாகங்கள் ஆகும்.

ஆம் படிப்படியாக வளர்ந்து வந்த சுரண்டல் முறை முதலாளித்துவ சமூகத்தில் தன் கோரமுகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே தன் கோர முகத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வேலையின்மை சுயதொழில் செய்து வந்தவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் திறன் கொண்ட உழைப்பாளிகள் , திறனற்ற உழைப்பாளிகள் என பிரிக்கப்படுகின்றன. திறனற்ற உழைப்பாளிகளில் படித்தவர்களும் இடம் பெறுகின்றனர். மொத்தத்தில் கணினித்துறை, பொறியியல் துறை, மருத்துவ, போக்குவரத்து, ஹோட்டல் போன்ற துறைகள் பல கோடித் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் கொண்டதாகவும், சில லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்ட தொழில் திறனற்றவர்களும் பணியாற்றக் கூடியதாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவு, வன்முறை அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி, அரசியலில் என்றும் இல்லாத ஊழல், கல்வித்துறையை, அடிப்படை சுகாதாரத்தை, தனியாரிடம் தாரைவார்த்தல் போன்றவை நிகழ்கிறது. இதில் பெரும்பாலும் திறனற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தங்களை முன்னிறுத்துகின்றனர். இந்த வளர்ச்சி போக்கு உருவாகும் என்பதை 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வேறு வரிகளில் குறிப்பிட்டு உள்ளது. விரிந்த அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் விளைவாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும், பாட்டாளிகளுடைய வேலையானது, தனித்தன்மையை முற்றிலும் இழந்து விட்டது. ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகி விட்டது. இயந்திரத்தின் துணையிருப்பு போல் மாறி விடுகிறார். மிகவும் எளிமையான அலுப்பு தட்டும் படியான ஒரேவிதமான சுலபமாக பெறத்தக்கதுமான கைத்திறன் தான் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொழிலாளியினது வருமானம் முற்றிலும் அவரது பராமரிப்பிற்கும் அவரது குடும்பத்திற்குமான பிழைப்புச் சாதனங்களுக்குமே பற்றாத அளவிற்கு குறுகி விடுகிறது. வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாக அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. இயந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் அதிகரிக்க அதிகரிக்க வேலைப் பளூவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையை கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகப்படுத்துவதன் மூலமோ இது நடந்தேறுகிறது என குறிப்பிடுகிறது.

இன்றைக்கு நாம் சந்திக்கும் எண்ணிலடங்காத இளைஞர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சுட்டிக்காட்டிய கொடுமைகளைத் தான் அனுபவிக்கின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட நிலையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் இன்று அமலாக்கி வருகின்றனர். இதன்காரணமாகவே, நாம் முதல் கட்டுரையில் குறிப்பிட்ட பல்வேறு சீர்குலைவு வாத கருத்துக்கள் தலைதூக்குகின்றன. தனியார் முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அதே பாதையில் பயணம் செய்ய விரும்புவதால், இந்த அரசு தன்னை முதலாளித்துவ அரசு என பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் மேற்படி பாதையில் பயணிப்பதுடன், பாதை போட்டவர்களுக்கு பாதபூஜையும் நடத்துகின்றனர்.

திங்கள், 12 ஜூலை, 2010

மாவோயிஸ்டுகள்

மாவோயிஸ்டுகளும் மம்தாவும்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சாதனையைப் படைத்த பெருமை மேற்கு வங்க மக்களுக்கு உண்டு. 30 ஆண்டு காலம் தேர்தல் முறையில் தொடந்து மக்களால் ஒரு கம்யூனி°ட் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவது, முதலாளித்துவத்தை எரிச்சலூட்டியது என்றால் மிகையல்ல. 44 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 31 பேர் இடது முன்னணியைச் சேர்ந்தவர்கள் இடதுசாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எண்ணிக்கையில் சரிபாதி மத்திய அரசை, மக்களுக்கான அரசாக வழிநடத்து-வதில் 50 சதமான ஆற்றலைக் கொடுத்த மாநிலம், ஆனாலும். “நந்திகிராம்” பிரச்சனை அறவுஜீவிகளையும் சந்தேகம் கெள்ளச் செய்துள்ளது. எதிர்ப்பு, கண்டனம், நாடாளுமன்றத்தில் விவாதம் போன்ற கடுமையான சவால்களை மார்க்சி°ட் கட்சியும், இடது முன்னணியும் எதிர் கொண்டுள்ளது.

நந்திகிராம் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்த காரணம் என்ன?

நமது நாடு ஒரு அரை நிலபிரபுத்துவ, முதலாளித்துவ நாடு என்பது தெளிவானது, இங்கு அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் அரை நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிப்பதாகவே இருக்கும் என்பதில் வியப்பில்லை, ஊடகம் என்கிற நான்காவது தூணும், மேற்படி முதலாளிகளால் தான் நடத்தப்படுகிறது. சின்னதை பெரிதாக்குவதும், பெரிதான ஒன்றை இருட்டடிப்பு செய்வதும் ஊடகங்களின் வித்தைகளில் ஒன்றாகும். “ஒன்றரை லட்சம் விவசாயிகளின் தற்கொலை” என்ற செய்தி மூலையில் சின்ன செய்தியாகவும், நந்திகிராம் தினசரி தலைப்பு செய்தியாகவும் வருவதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஜனவரி - 5, 6 - 2007 தேதிகளில் வன்முறையைத் துவக்கிய பூமி உச்சத் பிரத்தியோர்க் கமிட்டி (க்ஷருஞஊ) (நிலப் பாதுகாப்பு இயக்கம்), நந்திகிராம் என்றழைக்கப்படுகிற பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள மார்க்சி°ட்டுகளை வேட்டையாடியது. பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டார். 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டார். இன்னும் பலர் சித்திரவதைக்கு உள்ளானர். 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி வேறு பகுதியில் குடியேறினர். இந்த எண்ணிக்கைக்குட்பட்ட குழந்தைகள் படிப்பை நிறுத்தினர். வீடுகளை இழந்தனர். நிலம், சொத்து போன்றவை இருந்தும், அரசு மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்களின் உதவியினால் உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்-பட்டனர். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ், ளுருஊஐ, மாவோயிஸ்டுகள், உலேமா ஜமாத்இ போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து, மார்க்சிஸ்ட் மற்றும் ஆதரவு குடும்பங்களை வெளியேற்றினர். பிப்ரவரியில் மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா, இராசாயனத் தொழிற்-சாலையைத் துவக்கவில்லை என்பதை பகிரங்க-மாக அறிவித்ததுடன், நிலம் கையகப்-படுத்தும் திட்டத்தையும் கைவிட்டதாக அறிவித்தார், நந்திகிராம் பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் - 14 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு, மேற்படி அகதிகள், மறுவாழ்வு மையம், கலகக் கும்பல்களின் செயலை பின்னுக்குத் தள்ளியது.

பதினோறு மாத காலம் அகதிகள் முகாமில் வாழ்ந்த மக்கள் தன் சொந்த வசிப்பிடத்திற்கு திரும்பியதை, மீண்டும் கைப்பற்றியது (சுநு ஊஹஞகூருசுநு) என்ற பெயரின் ஊடகங்கள், ஆளுநர், அறிவுஜீவி உள்ளிட்ட அனைவரும் கண்டித்-திருப்பது, வர்க்கக் கூட்டணியின் ஆதங்கம், அகதிகள் திரும்பியதில் மார்க்சி°ட் ஊழியர்கள் 30 பேர் கொல்லப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.

நிலம் கையகப்படுத்துவதை மேற்குவங்க அரசு உண்மையில் கைவிட்டு விட்டதா?

நந்திகிராம் பிரச்சனையை செய்தியாக ஆக்குகிற ஊடகம், அரசியல் தேவைக்கு பயன்படுத்தும் பா.ஜ.க, திரிணாமுல், நக்சலைட், மாவோயிஸ்ட் போன்ற அனைவரும், “சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தை, நிலம் மீட்புக் குழுவினரை, மேற்கு வங்க அரசு ஒடுக்கியது”, என்று தான் துவக்குகின்றனர். உண்மையில் மேற்குவங்க அரசு, நந்திகிராமில் அமைக்க இருந்த இராசாயன ஆலையை வாபஸ் பெறுவதாகப் பிப்.2007இல் அறிவித்தது. நிலம் கையகப்படுத்தாது, என்பதை தெளிவுபடுத்தியது. இத்தகைய அறிவிப்புகளை அரசு வெளியிடுவதற்கு முன்பாகவே, “நில மீட்புக்குழு” என்ற பெயரிலான கலகக்குழு கிராமங்களைக் கைப்பற்றிவிட்டது. “நில மீட்பு” என்ற வார்த்தை, கம்யூனிஸ்ட்களால் உருவாக்கப்பட்ட வீரியம் கொண்ட வார்த்தை, அதை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்துவதில் முதலாளித்துவமும், மேற்படி இயக்கமும், ஊடகங்களும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

நமது நாட்டிலேயே நிலச்சீர்த்திருத்தை முறையாக அமல் படுத்தி, விவசாய உற்பத்தியை, கிராமப்புற மேம்பட்டை வளர்ச்சி பெற செய்தது இடது முன்னணி அரசான மேற்கு வங்க அரசு மட்டும் தான். அப்படி இருக்கை-யில் ‘நில மீட்பு’ என்ற பெயரை இடது முன்னணிக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட முயற்சியே, மேற்படி செய்தி-களுக்கு அடிப்படை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சன கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களும், மேற்படி செய்திகளுக்கு அடிப்படை. அவர்களே இந்தப் பிரச்சாரத்திற்கு இறையாகியுள்ளனர் ஆந்திராவில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய நிலமீட்பு போராட்டத்தையும், 7 பேர் படுகொலை ஆனதையும் ஏன் கண்டு-
கொள்ளவில்லை என்ற கேள்வி மிக நியாயமானது.

அறிவு ஜீவிகள் பிரச்சாரத்திற்கு இறையாவார்களா?

அறிவு ஜீவிகள் தரவுகளை ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைக்கின்றனர். கடந்த நவம்பர் 5ம் தேதி முதல், இன்று வரை முன்வைக்-கப்படும் தரவுகள் என்ற செய்தி அனைத்தும், முதலாளித்துவ ஊடகங்களின் வர்க்கத்தை மறந்து விட்டு, செய்தியை மட்டும் பார்க்கிற போது, ஏற்படுகிற ஊசலாட்டம் , அறிவு ஜீவி-களையும் அசைத்திருக்கிறது.

நேம் சாம்ஸ்கி, தாரிக்அலி, முகம்மது அமீன், வால்டன் பெல்லோ போன்ற உலக அறிஞர்கள், “நந்திகிராமில் நடந்த கலவரத்தையும், அதற்கு பின்னால் உள்ள சர்வேதச அரசியல் பின்-னணியும் இணைத்து பார்க்க வேண்டும்,’’ என்று விடுத்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத அல்லது பிரசுரிக்காத ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமான ஊடகங்களாகத் தானே இருக்க வேண்டும். அந்த வேண்டுகோள் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கைகளிலும், தி இந்து விலும் பிரசுரமானது. அதன் பின் இந்திய அறிவு ஜீவிகள் சற்று மௌணம் காக்கின்றனர் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேதா பட்கர் போன்றவர்கள் அறிவு ஜீவிகள் என்ற பட்டியலில் இருந்து, அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பிரநிதிகள் என்ற பட்டியலில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள். வெளிநாட்டு நிதியைக் கொண்டு “எளிய’’ வாழ்க்கை நடத்துபவர்கள் காந்தியின் அகிம்சையை உதட்டில் கொண்டு, நக்ஸல்-களுடன் உளமார்ந்த நட்பு கொண்டவர்கள். அதனால் தான் இந்திய மண்ணில் ஆ°திராவில் நடைபெறும் நக்ஸலிஸத்தை எதிர்த்தும், மேற்கு வங்க மண்ணில் உள்ள நக்ஸலிஸத்தை ஆதரித்தும் பேச முடிகிறது.

மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது எப்படி?

உண்மை தான் நவ-10ம் தேதி நந்தி கிராம் பகுதிகளில் சொந்தக் காரர்கள் தங்களுடைய வீடுககளுக்கு திரும்பிய பின், மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ், ளரஉi, நக்ஸல் மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் நடத்தின. பந்த்-ன் போது, அரசை வெறுப்பூட்டும் செயல்களில் நடந்தன. ஆனால், அசம்பாவிதங்கள் நடைபெற-வில்லை. மேலும் ஒரு நாள் போராட்டம் நீடித்ததே அன்றி, தொடர் வேலைநிறுத்தம் அல்லது காலவரையற்ற பந்த் என்ற அறைகூவல் வெற்றி பெறவில்லை.

“நவ 7, சோவியத் மண்ணில் ஜார் மண்ணை வீழ்த்தி புரட்சி வெற்றி பெற்ற நாள். அந்த தினத்தை குறி வைத்து இந்திய ஸ்டாலின்ஸ்டுகள், நந்தி கிராமில் வன் முறையைக் கட்ட-விழ்த்து விட்டனர்,’’ என்று வாரப் பத்திரிக்கை
பத்திரிக்கைகளான டெஹல்கா, த சண்டே இண்டியன் போன்றவை செய்தி வெளியிட்டுள்ளன. “மகா கொடுமையான தாக்குதல்களும், கொலைகளும், கற்பழிப்புகளும் கூட நடந்துள்ளன,’’ என்று வெறியூட்டும் செய்திகள் வந்த வண்ணம் இருந்த போதும் கூட, காலவரையற்ற வேலைநிறுத்தம் ஏன் வெற்றி பெறவில்லை.? என்று ஊடகம் அல்லது முதலாளித்துவம் கேள்வி எழுப்பிப் பார்த்த-துண்டா? மாறாக நந்திகிராமில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. அதையும் ஊடகங்கள் திரித்து செய்தியாக்கின. டெஹல்கா பத்திரிக்கை, உலேமா ஜாமாத் இ என்ற அமைப்பில் பிரதிநிதி உள்ளிட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மிரட்டி, வெற்றிப் பேரணிக்கு அழைத்து வந்தனர், என எழுதியுள்ளது. ஃபிரண்ட்லைன் பத்திரிக்-கையில் வெளிவந்த புகைப்-படம் இதை மறுக்கிறது. பேரணியில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்பது தெளிவாகிறது.

ஊடகத்தின் அடுத்த தாக்குதல், நவ - 21 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற வேலை நிறுத்தம் சார்ந்து இருந்தது. “தஸ்லீமா நஸ்ரூதீன் என்ற எழுத்தாளரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்,’’ என்ற கோரிக்கையை பிரதான-மாக்கி நடைபெற்ற வேலை நிறுத்தம், பின் கலவரமாக மாறியது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை போனது. ராணுவத்தை தயக்கமின்றிஅழைத்தது மாநில அரசு. ஆனால் ஊடகங்கள், நந்திகிராம் பிரச்சனை மீதான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலவரம் என செய்தி வெளியிட்டது.

குஜராத் சம்பவத்துடன் நந்திகிராமை ஒப்பிடலாமா?

குஜராத் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதை மிக சமீபத்தில் டெஹல்கா அம்பலப்படுத்தியது. மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியின் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டன. 3000க்கும் அதிகமானோர் கொலை செய்யப்-பட்டனர். மாநிலத்தில் இஸ்லாமியர்கள் குடியிருந்த அனைத்துப் பகுதியிலும் கலவரம்- படுகொலைகள் இணைந்து நடந்தது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக வெட்டி கொல்லப்பட்டார். நீதிமன்றம் மகராஷ்ட்டிராவுக்கு மாற்றப்பட்டது. மனித உரிமை ஆணையம் தலையிடுவதற்கு அல்லது பார்வையிடுவதற்கான அனுமதி பல மாதங்கள் கடந்த பின்பு தான் வழங்கப்பட்டது. தீஸ்தா செதல்வாத் என்ற மனித உரிமைப் பேரணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவமானப்-படுத்தப் பட்டார். நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாயி கலவர காலத்தில், மத மாற்றம் தடுக்கப்பட வேண்டும் என சம்மந்தம் இல்லாத வார்த்தை-களைப் பயன்படுத்திப் கொண்டிருந்தார்.

இத்தகைய மனித தன்மையற்ற செயல்-களுடன் மேற்கு வங்கத்தில் நடந்த நந்திகிராம் சம்பவத்தை இணைப்பது கீழ்த்தரமான அரசியலாகும். மேற்கு வங்கத்தில் 44 பேர் படுகொலை செய்யப்-பட்டுள்ளனர். அதில்14 பேர் துப்பாக்கி சூட்டிலும், 30 பேர் திரும்ப தனது வீடுகளுக்கு திரும்பிய மார்க்சிஸ்ட் ஊழியர்-களும் ஆவர். ஜனவரியில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியு-டன் பேச அரசு முயற்சித்தது. ஆளுநர் பேசியுள்ளார், ஜோதிபாசு பேசியுள்ளார். மம்தா பானர்ஜி தனது அரசியல் கீழ்த்தனத்தை ஒரு போதும் மேம்படுத்த முயற்சிக்க வில்லை. நாடாளு-மன்றத்தில் மாநில அரசின் செயல்பாடு குறித்து விவாதிக்க வேண்டியதில்லை என்ற போதும், மார்க்சிஸ்ட் கட்சி சம்மதித்தது. அகதி-களாக ஆளும் கட்சியின் ஊழியர்கள், குடும்பங்கள், குழந்தை குழந்தைகள் 11 மாத காலத்தை கழித்து வந்ததை ஜீரணித்துக் கொண்டது. எந்த பத்திரிக்கையாளரும் கொலை செய்யப்-படவில்லை. த சண்டே இந்தியன் பத்திரிக்-கையாளர் தான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருடன் போனதால் தான் நந்திகிராமத்-திற்குள் அனுமதிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய ஒப்பீட்டுக்குப் பின்னர் பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஊடகங்களுக்கு அது போன்ற உரிமையை யாரும் வழங்கவில்லை, என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மனித உரிமை ஆணையம் ஒரே வாரத்திற்குள் பார்வையிட்டு அறிக்கையையும் வெளியிட்டு உள்ளது.

மாவோயிஸ்டுகள் பா.ஜ.க வுடன் உறவு என்பது நம்பும்படியானதா?

நாடாளுமன்றத்தின் எதிர் கட்சித்தலைவரும், பா.ஜ.கவின் தேசியத் தலைவர்களில் ஒருவருமான எல்.கே. அத்வானி, நந்திகிராமுக்குச் சென்ற போது,கம்யூனிஸ்ட் கொடியுடன் மாவோயிஸ்டுகள் வரவேற்ற செய்தியை படத்துடன் பார்த்தவர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். “எதிரிக்கு எதிரி நண்பன்’’ என்ற முறையில் பா.ஜ.க மாவோயிஸ்டுகளை மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கிறது. தரகு முதலாளித்துவம் தான் இந்திய ஆளும் வர்க்கம் என்ற விமர்சனத்தைக் கொண்டிருந்த மாவோயிஸ்டு-கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும், உலேமா மாத் இ என்ற இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புடனும் சமரசம் கொள்ள தயங்காத போது, பா.ஜ.கவுடன் சமரசம் செய்து கொள்ள என்ன தயக்கம் இருக்கப் போகிறது.

ராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தின் போது, சுஷ்மா சுவராஜ் ,“நேபாளத்தில் நல்லவர்களாக காட்சி அளிக்கும் மாவோயி°டுகள், மே.வங்கத்-தில் மட்டும் மோசமானவர்கள் என சி.பி.எம் குறிப்பிடுவது ஏன்,’’ என மறைமுகமான சான்றிதழை பா.ஜ.க வழங்கியது. மாவோயிஸ்டு-கள் என்ற ஒரே பெயரில் இரு கொள்கை-களுடன் செயல்படுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ளவில்லை. நேபாளத்தில் மிகப்பெரிய மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய மாவோயிஸ்டுகள், பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருந்தனர். மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நந்திகிராம் என்கிற சிறு பகுதிக்குள் நுழைந்து மக்களை விரட்டி விட்டதுடன், பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காதவர்கள் இந்த வேறுபாட்டை பா.ஜ.க ஏற்க மறுக்கிறது.

ஊடகங்களும் தமிழகத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் என்ற விவாதம் நடந்தால் அதை தீவிரவாத கண்ணோட்டத்துடன் செய்தியாக்குவதும், அதையே மேற்கு வங்கத்தில் நல்லவர்களாக சித்தரிப்பதும் மேற்கு வங்கமும், தமிழகமும் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் இரண்டும் மாநில அரசுகள் என்ற பார்வை இல்லை. மேற்கு வங்க அரசின் வேண்டு-கோள் படி, சி.ஆர்.பி.எஃப் நந்திகிராமத்திற்குள் புகுந்து ஒரே ஒரு ஏ.கே.47 துப்பாக்கியையும் ஜெலட்டின் குச்சி ஒன்றையும் கண்டறிந்தனர்,’’ என குறிப்பிடுகின்றது ஒரு பத்திரிக்கை. அதே நேரத்தில் மனித உரிமை ஆணையம், தன்னுடைய அறிக்கையில், (நவ-15- என்.எச்.ஆர்.சி.) கன்னி வெடிகள் ஜெலட்டின் குச்சிகள், ஏ.கே-47 துப்பாக்கிகள் பலவும் இருந்ததாகவும், அவற்றில் தெழுங்கு மொழியில் எழுதப் பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. அதோடு வீடுகளில் கிடைத்த மார்க்சீய இலக்கியங்கள் பெரும்பாலும் தெழுங்கில் எழுதப்பட்டதாக குறிப்பிடுகிறது. மனித உரிமை ஆணையமே குறிப்பிட்ட இத்தகைய விவரங்களை முதலாளித்துவ ஊட-கங்-கள் ஏன் வெளியிடவில்லை, என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நாடளுமன்றத்தில் விவாதிக்க முதலில் மறுத்தது ஏன்?

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் போது கேள்வி நேரங்களை முழு-மையாக ஒத்திவைத்து விட்டு, அவையின் மையப் பிரச்சனையாக நந்திகிராம் பிராச்சனையின் மீது விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க வெளிநடப்பு மற்றும் ரகளையில் ஈடுபட்டது. மார்க்சிஸ்ட் கட்சி இது போன்று மாநில பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதித்தது இல்லையே, இப்போது 371 பஞ்சாயத்து யூனியனைக் (பிளாக்) கொண்ட மேற்கு வங்கத்தில், ஒன்றரை பிளாக் என்ற அளவில் உள்ள ஒரு பகுதியின் பிரச்சனையை, நாடாளு-மன்றத்தில் விவாதிக்க வேண்டியதில்லை, என்று சொன்னது, தொடந்து பா.ஜ.க ரகளையில் ஈடுபட்டதால், மக்கள் பணம் வீணாவதைக் தடுக்கிற தேவையில் இருந்து நாடாளு-மன்றத்தில் விவாதிக்க சம்மதம் தெரிவித்தது. நாட்டையே அச்சுறுத்தும் நக்சல் தீவிரவாதம் குறித்தும் விவாதிக்க வேண்டும், என்ற சி.பி.எம்.-ன் வேண்டுகோளை பா.ஜ.க, திரிணாமுல் போன்ற கட்சிகளும், ஊடகமும் புறக்கணித்தது. இதிலிருந்தே தேச நலனில் அக்கறை செலுத்தும் கட்சியை புரிந்து கொள்ள முடியும்.

மார்க்சிஸ்ட் கட்சி, ஜனநாயகத்தை மதிப்பதில்லை என்ற அவதூறு, நாடாளுமன்ற விவாதத்தின் போது தகர்ந்தது.3000 பேரைக் கொலை செய்த நரேந்திர மோடி மற்றும் குஜராத் மாநில அரசு குறித்து நாடாளு-மன்றத்தில் விவாதிக்க முன்வராத பா.ஜ.க, நந்திகிராம் பிரச்சனை மூலம் அம்பலமானது. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டி-லும், தனது பதிலில், மாவோயிஸ்டுகள் இருந்தது உண்மை. மேற்படி பிரச்சனைக்கு திரிணாமுல் காங்கிரஸ் உடன் இணைந்து துணை போனது உண்மை என்பதை ஒப்புக் கொண்டார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா என்ற தனி நபர் தான் காரணமா?

மாநிலத்தின் இடது முன்னணி 30 ஆண்டு-களைக் கடந்து ஆட்சி நடத்தி வருகிறது. 24 ஆண்டுகள் கடந்து ஆட்சியில் இருக்கிறார். புத்ததேவ் பட்டாச்சார்யா உலகிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் அரசு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டது கேரளாவில் தான். முதன் முதலில் ஒரு மாநில அரசு கலைக்கப்-பட்டதும் கம்யூனிஸ்ட் அரசு தான். அதுவும் கேரளாவில் தான் நிகழ்ந்தது. நபர் அல்ல பிரச்சனை, கொள்கை தான் காரணம். ஜோதி-பாசு அவர்கள் முதல்வராக இருந்த போது, நிலச்சீர் திருத்தம், விவசாய உற்பத்தி, கிராமப்புற மேம்பாடு, பள்ளி கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி-களுக்கான அதிகாரம், பொதுவிநியோகம் போன்றவை தீவிரமாக திட்டமிட்டு அமல் படுத்தப்பட்டது. அதற்கு காரணம் இடது முன்னணியின் கொள்கை. அன்றைக்கு பிரச்சனை இருந்தது. கூர்க்கலாந்து போராட்டம், ஆனந்த மார்க்கிகளின் போராட்டம், புரூலியாவில் ஆயுத மழை போன்றவை பூதாகரமாக்கப்பட்டது. ஜோதிபாசுவை நல்லவர் என்று சொல்லும் மம்தா கூட, 1992-ல் ரைட்டர்ஸ் பில்டிங்-ல் இருந்த முதல்வர் அறையில் தகராறு செய்து கீழ்த்தரமான போராட்டத்தை நடத்தியவர் தான் அதையும் ஜனநாயகப் பூர்வமான முறையில் எதிர் கொண்டது இடது முன்னணி. உலமயமாக்கலுக்கு மாற்றான கொள்கை அணுகுமுறையைக் கொண்ட இன்றைய இடது முன்னணி, தொழில்வளர்ச்சி, உயர்கல்வி, தொழில்நுட்பம், அதிநவினம் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுவும் கொள்கை சார்ந்ததே அல்லாமல், தனிநபர் சார்ந்தது அல்ல. எனவே இது ஒரு முதலாளித்துவ பிரச்சாரம். முதலாளித்துவ கட்சியில், தனிநபர் விமர்சனத்தின் மூலம் மாற்று நபரை முன்நிறுத்தி அரசியல் செய்வது வழக்கம்.
எப்படி இருந்தாலும் நந்திகிராம் பிரச்சனை, இடது முன்னணிக்கு மட்டுமல்லாது மக்களுக்கு ஓர் எச்சரிக்கை. ஏன் என்றால் உழைக்கும் மக்-களை இடது முன்னணியை விட வேறுயாரும் பாதுகாக்கும் வாய்பில்லை.

2007 டிசம்பரில் இளைஞர் முழக்கதில் வெளிவந்த கட்டுறை