வியாழன், 12 நவம்பர், 2015


சீரழியும் சீர்திருத்தம்!!
________________________

உடன்கட்டை ஏறும் கொடுமையை
எதிர்த்த வரலாற்றை
இனி என்னவென்று சொல்வது?

விளிம்பு நிலையில் உள்ளோரைக் கைதூக்க
இடஒதுக்கீடு வேண்டும் என்றோரை
சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்தோரை
பண்ணைகள் குவித்து வைத்த
நிலங்களை விநியோகம் செய்ய வலியுறுத்தியோரை
இனி என்னவென்று அழைப்பது?

முடியைச் சிக்கெடுக்கும் சீப்பைக் கூட
இனி வால்மார்ட் தான் விற்பனை செய்யும்
வாசலைத் திறந்து வை.
சொல்கிறது தாரளமயம்.
அதற்கு பெயர் சீர்திருத்தமாம்.

எதிர்ப்பில் கவிழ்ந்துவிடும் ஆட்சி
என்று தாமதித்த மன்மோகனை.
டைம் சொன்னது நீ கையாலாகாதவன் என்று.
இல்லை இல்லை 51 சதம் சில்லரை வர்த்தகத்தில்
என்றார் வீரியத்துடன்.
கொசுறு கொடுப்பது
சில்லரை வர்த்தகத்தின் பண்பாடு என்பதால்
இன்சூரன்ஸ் லும் 49 சதத்தை தாரை வார்த்தார்.
போதாது சாட்டிங்கில் சொன்னது ஏகாதிபத்தியம்.
அரிசி, கோதுமை, டீசல், சரக்கு கட்டணங்களையும்
உயர்த்துகிறேன் என மண்டியிட்டார்.

கடையடைத்து காரித்துப்பியது போதாது 
தூக்கி எரிவதே
சீர்திருத்தம் வார்த்தை அளவிலாவது
காக்கப்படும்.
எஸ். கண்ணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக