வெள்ளி, 13 நவம்பர், 2015

சுரண்டலை சோசலிசம் மட்டுமே ஒழிக்கும்!

        
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக் திருமணத்திற்கும், பிரிட்டிஷ் இளவரசர், வில்லியம்ஸ் திருமணத்திற்கும் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட, பல லட்சம் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, தமிழக ஊடகங்கள்  தரவில்லை. உலகம் இதுவரை கண்டிராத, தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தை சந்திக்கிறது. ஊடகங்களின் விளம்பரத்தை எதிர்பார்த்து, அமெரிக்காவின் வால்தெருவில் தொழிலாளர்கள் பங்கெடுப்பது திட்டமிடப் படவில்லை. தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு எதிரான அரசியல் அவர்களை வால்தெருவில் நிறுத்தியுள்ளது.. ஆயிரம் பேருடன் துவங்கிய போராட்டம் பல லட்சங்களாகவும், பல பெரு நகரங்களிலும் திரளும் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டமாக, வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

முதலாளித்துவத்தின் லாபவெறியால் அதுவே உருவாக்கிக் கொண்ட நெருக்கடியில் இருந்தே இந்த போராட்டங்கள் நடைபெறுகிறது. ஒபாமா அரசு, 2300 பக்கங்களில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை 2010ல் திருத்தி வெளியீடு செய்திருக்கிறது. அதில் 99 சதமான மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை. மாறாக, மூலதனத்தைப் வலுப்படுத்துவதற்கான தேவையை, கொண்டிருக்கிறது. வால்த்தெருவில் அமைந்துள்ள வங்கிகளுக்கு மிக அதிக அளவிலான சலுகைகளை வாரி இரைத்திருக்கிறது. எனவே தான் தொழிலாளர்கள் வால் தெருவை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்தையும், நாங்கள் 99 சதம் என்ற முழக்கத்தையும் முன் வைத்துள்ளனர். ஒபாமா அரசு, வங்கிகள் திவாலானதற்குக் காரணமான அதே பாதையில் தொடர்ந்து பயணிக்க, பொது மக்களின் சேமிப்புப் பணத்தை வைத்து விளையாடுகிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிகிறபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்ண்டிருந்த கதையை  நினைவு படுத்துகிறது இச்செயல். பெரும்பான்மையான மக்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ள கொள்கைகளை மாற்ற முயற்சிக்காமல்,  அதற்கு காரணமான பங்கு சந்தை வர்த்தகத்தை பலபடுத்த நடவடிக்கை எடுக்கிறது.

இது அமெரிக்காவில் மட்டும் நடைபெற வில்லை. உலகில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும், இதர நாடுகளிலும், இதுதான் நிலை. பெல்ஜியம் நாட்டின் வங்கிகள் சந்தித்துள்ள நெருக்கடி காரணமாக, வங்கிகளைத் தேசியமயமாக்கு என்ற குரல், அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் உள்ளது. வங்கிகள் திவாலாவதைத் தொடர்ந்து, சந்தையில் 10 முதல் 12 சதம் சரிவு ஐரோப்பிய முதலீட்டில் ஏற்படும். சரிவைத் தடுக்க, ஐரோப்பிய நிதிமூலதனத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஸ்திரப்படுத்துவதற்கான நிதியை ஸ்லோவாக்கியா போன்ற சிறிய நாடுகளில் இருந்து கைப்பற்ற முயற்சி நடைபெறுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகிதம் எந்த இடத்திலும் குறைய வில்லை. மாறாக ஆடம்பர பொருள்கள் மூலமான லாபத்தை, 2008 பொருளாதார மந்த நிலை துவங்குவதற்கு முன்பிருந்த நிலையிலேயே கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன.. சூப்பர் சுரண்டல் மற்றும் சூப்பர் லாபம் மூலம், பெருமுதலாளிகள் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வது புதிய தாராளமயமாக்கல் என்ற இக்காலத்தில் அதிகரித்து உள்ளது. உலகில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் வரிசையில் முதல் நிலையில் உள்ள நாடு, அமெரிக்கா என, ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை கூறுகிறது. சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

மொத்தத்தில் பெரு முதலாளிகளை காப்பாற்றுவதற்காக, உலகின் வளர்ந்த நாடுகள், சிறிய நாடுகளையும், உலகின் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைச் சுரண்டுவதையும் பகிரங்கமாக நியாயப்படுத்த துவங்கியுள்ளது. எனவே முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள சமூக விதிப்படி, மார்க்ஸ் சொன்ன, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான சிறிய நாடுகளின் ஒற்றுமையும், பெரும் தொழிலாளி வர்க்கத்தின், ஒற்றுமையும் கட்டமைக்கப் படுவது தவிர்க்க இயலாதது.

உதாரணம், மினோப்பலிஸ் நகரத்தில் நடைபெற்று முடிந்த, இளம் தொழிலாளர்களின் மாநாடு. ஆப்பிரிக்க தொழிலாளர்களால் துவக்கப் பட்ட இந்த அமைப்பு, படிப்படியாக, பெரும் வளர்ச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இளம் கம்யூனிஸ்ட் லீக் என்ற அமைப்பு, சிலரின் கையில் சிக்கியிருக்கும், செல்வ வளத்தையும், அதிகாரத்தையும், பெரும் பான்மையோருக்கு கிடைக்கும் வகையில் மறுபங்கீடு செய்திடு, என்ற முழக்கத்துடன், வால் தெரு போராளிகளுடன் கைகோர்த்துள்ளனர்.

சோவியத்  யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகளின் பின்னடைவைத் தொடர்ந்து, இனி சோசலிசத்திற்கு வாய்ப்பில்லை. கம்யூனிசம் முடிந்து விட்டது. முதலாளித்துவம் மட்டுமே தீர்வு. மார்க்ஸ் செய்த வியாக்கியானம் அனைத்தும் பொய்த்து விட்டது என்று, நீட்டி முழங்கினர். முதலாளித்துவம் செய்த சூழ்ச்சிகளால், மனித சமூகத்தின் பிரச்சனைகள், சமூக மாற்றத்திற்கு மாற்றாக, முதலாளித்துவதிற்குள்ளேயே, தீர்வு காணுவதை நோக்கி திசை திருப்பப் பட்டது.

தன்னார்வக் குழுக்கள் பல திட்ட மிட்டு உருவாக்கப் பட்டது. மனித சமூகம், இனம், மொழி, நிறம், பாலினம் என்ற அடிப்படையில் நுணுகி ஆராயத் தலைப் பட்டது. வர்க்கப் போரை விடவும், அவரவர் சார்ந்த பிரச்சனைக்கான போராட்டமே உடனடித் தேவை என்ற முழக்கங்களின் மூலம் அடையாள அரசியலை முன்னெடுக்க மார்க்சீயம் பேசிய சிலரும் தீவிரம் செலுத்தினர். இச்செயல்கள் ஒருவகையில் மறைமுகமாக முதலாளித்துவத்துவத்திற்கு சேவை செய்ய உதவியது. வர்க்கப் போராட்டம், திசை திருப்பல்களுக்கு, ஆளாகும் நிலையைத் திட்டமிட்டு முதலாளித்துவமும் உருவாக்கியது.

ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. அமெரிக்காவில் நடைபெறும், வால்த்தெரு ஆக்கிரமிப்பு போராட்டத்திற்கான ஆதரவு, பல மாற்றுக் கருத்துக் கொண்ட சமூகப் போராட்ட காரர்களையும், ஓரணியில் நிறுத்தும் வேலையை, அதாவது தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்பதை அங்கீகரித்துள்ளது. உதாரணம் 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட  அமெரிக்காவிற்கான கனவு இயக்கம், 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க மானவர் இயக்கம், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்டு 200 அமைப்புகள் ஒன்றினைந்துள்ளன. எனவே தான் இந்த போராட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்கள் அமைப்பின் சார்பிலான பிரகடனத்தில், சோசலிசமே மேற்படி பெரும்பான்மைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் ரீதியிலும், தீவிரவாதத்திற்கு எதிரான போர், மனித உரிமைகள் பறிக்கப் படுவதற்கு எதிரான போர், என்ற தன்மையில் அமெரிக்க செய்த அராஜகங்களும் இக்காலத்தில் அம்பலப்பட்டுள்ளது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக், டுனீசியாவில் பென் அலி, லிபியாவில் முகம்மது கடாஃபி, என்று அமெரிக்கா வளர்த்த அதிபர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர். இந்த நாடுகளில் அமெரிக்கா தனது இரட்டை வேடத்தை, அப்பட்டமாக அரங்கேற்றியது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்போது சிரியாவின் அதிபர், பாஷர் அல் அகம்மதுவை ராஜினாமா செய்யச் சொல்லி நிபந்தம் தரத் துவங்கியுள்ளது. எனவே இஸ்லாமிய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மனநிலை வளர்ந்திருப்பதை அறிய முடியும்.

துனீசியா, எகிப்து, அரபு நாடுகளில் துவங்கிய மல்லிகை புரட்சிக்கும் இந்த தொழிலாளர் போராட்டத்திற்கும், சிறு அரசியல் வித்தியாசம் இருக்கிறது. மல்லிகைப் புரட்சியில் ஜனநாயகத்திற்கான தேவை பிரதானமாக இருந்தது. தொழிலாளர் போராட்டத்தில் ஜனநாயகத்திற்கான அவசியத்துடன், சுரண்டலுக்கு எதிரான ஆவேசமும் உள்ளடங்கியிருக்கிறது. குறிப்பாக வேலையிண்மை தீவிரம் பெற்றுள்ள முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் இந்த போராட்டங்கள், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வர்க்க எழுச்சியை நினைவு படுத்துகிறது.
பாரிஸ் கம்யூன் போல், ஃபிரஞ்சு புரட்சி போல், புரட்சிகர சிந்தனைகளை துறக்க துணிந்த 1955 களின் நிலையைப் போல் அல்லது வரலாற்றில் நடந்த சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைப் போல் இந்தப் போராட்டத்தை முதலாளித்துவம் ஒடுக்கி விட முடியாது. ஏனென்றால் மார்க்ஸ் சொன்னதை போல், “முதலாளித்துவத்தின் இயல்பு அது நெருக்கடியில் சிக்கும் போது வெளிப்படுகிறது. மொத்த அமைப்புமே மக்களின் தேவைகளை அல்ல லாபத்தை மையமாகக் கொண்டு செயல் படுகிறது”. எனவே எதிர்ப்பியக்கங்களும் தவிர்க்க முடியாமல் பேரெழுச்சியாக வளர்கிறது.

அமெரிக்காவில் கலிஃபோர்னியா நர்ஸ்களின் வேலைநிறுத்தம், கார்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் போராட்டம், பிரிட்டனில் நடைபெறும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம், பல மாதங்களாக நடைபெறும், கஜகஸ்தான் ஆயில் ஒர்க்கர்ஸ் போராட்டம், எகிப்து நாட்டில் நடைபெறும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம், ஃபிஜித் தீவில் நடைபெறும் தொழிலாளர் போராட்டம், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டம், இந்தோனேசியாவில் நடைபெறும் சுரங்கத் தொழிலாளர் போராட்டம், மற்றும் ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெறும் பல தரப்பு மக்களின் ஒருங்கினைந்த போராட்டம், இந்தியாவில் மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம், தமிழகத்தில் வளர்ந்து வரும் பன்னாட்டு நிறுவன சுரண்டலுக்கு எதிரான மனநிலை ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்க உணர்வே. மேற்படிப் போராட்டங்கள் அனைத்தும், சகோதர ஆதரவை பெற்று முன்னேறி வருவது உண்மை. 


சுரண்டல் மூலமான லாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம், தன் செயல்களைத் தீவிர படுத்தியுள்ள நிலையில், சுரண்டலற்ற சமூகத்திற்கான எழுச்சி தவிர்க்க முடியாது. சோசலிச சமூகம் மட்டுமே சுரண்டலற்ற சமூகத்திற்கு வழிவகை செய்ய முடியும். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்த்திய நவம்பர் புரட்சியின் நீரு பூத்த நெருப்பு, இன்றைக்கும் கணன்று கொண்டே இருக்கிறது. போராட்ட ஆவேசத்தில் சுழன்றடிக்கும் காற்று, போராட்ட நெருப்பைப் பரப்புவதும், சமூக மாற்றத்தைக் கொணருவதும் உறுதி.

10 ஆண்டுகள் முடிந்தும் நியாயம் கிடைக்காத குஜராத் படுகொலைகள் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல், நமது ஆட்சியாளர்கள், மதம், சாதி என்ற பெயரில் உழைப்பவர்களை துண்டு துண்டாகப் பிரிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த, மதத்தைச் சார்ந்த தொழிலாளர் அல்லது எவராவது ஒரு பிரஜை ஒடுக்கப் படுவதற்கோ, அதன் பெயரில் தாக்கப் படுவதற்கோ ஆளானால், அதை எதிர்த்த போராட்டத்தில், முற்போக்குத் தொழிற்சங்கங்கள் தீவிர அக்கரை செலுத்தி வருகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை மூலமே தொழிலாளர்கள் மீது அரசும், முதலாளித்துவமும் தொடுக்கும் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியும். ஃபிப் 28, 2012 தேசம் தழுவிய வேலை நிறுத்தம் அத்தகைய ஒற்றுமையைப் பறை சாற்றக் கூடியதே. இந்தப் பின்னணியில் தான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப் பட்ட கொலை பாதகங்களும், நினைத்துப் பார்க்கப் படுகிறது. ஃபிப் 27, 2012 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் முடிந்து விட்டதை, நினைக்கத் தூண்டும் நாள். அன்று மதியமே முதல்வர் நரேந்திர மோடியின் வீட்டில் அவசரமாக அதிகாரிகள் கூட்டம் நடந்துள்ளது. அதில் நடக்கப் போகும் வன்முறைகள் குறித்து அவர்கள் கண்டு கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தப் பட்டனர். இதுவரை எந்த ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மட்டுமல்ல, சாதாரண சட்டமன்ற உறுப்பினர் கூட செய்யத் துணியாத நிகழ்வுக்கு வழி வகுத்தவர் நரேந்திரமோடி. கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் நடந்து 10 ஆண்டுகள், முடிந்து விட்டாலும், இன்னும் குஜராத் மாநில இஸ்லாமியர்கள் தாங்கள் குடியிருந்த வீடுகளுக்குத் திரும்ப வில்லை. அகதிகளாகவே தனித்து வாழ்ந்து வருகின்றனர். காணாமல் போன குழந்தைகள் 400 எனச் சொல்லப் படுகிறது. படுகொலைக்கு ஆளான குழந்தைகள் 600 எனச் சொல்லப் படுகிறது. குழந்தைகளுக்கும், ரயில் எரிப்பிற்கும் என்ன சம்மந்தம்? ரயில் எரிப்பிற்கும் பெண்களுக்கும் என்ன சம்மந்தம்? எதுவும் தெரியாது. வெறித்தனத்திற்கு ஆட்பட்ட இந்துத்துவா கும்பல் குஜராத்தில் அரங்கேற்றிய வன்முறை விடுதலை இந்தியா பார்த்திராத ஒன்று. மனித உரிமைக் குழுக்கள், நீதிமன்றங்கள் ஆகியவை தலையீடு செய்திருந்த போதும், இன்றைக்கும் முழு நிவாரணம் கிடைக்காத தீராத வலியுடன் தான், குஜராத் மாநில இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றர். இஷான் ஜாப்ரி என்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் வீட்டு வாசலில் எரித்துப் படுகொலை செய்யப் பட்டார். அவர் மனைவி, ஜாக்கியா ஜாப்ரி வழக்கு பதிவு செய்ய முயன்றாலும் காவல் துறை காக்கி உடைக்குள், இந்துத்துவா காக்கியின் அடையாளத்தியும் சேர்ந்தே கொண்டிருப்பதால், வழக்கு மிகுந்த தாமதமாகப் பதிவு செய்யப் பட்டது. இது குறித்து விசாரணையைத் துவக்கிய அதிகாரிகளிடம், முந்தைய மதக்கலவரங்களின் போது, இஷான் ஜாப்ரி துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து, நரேந்திர மோடி, புலனாய்வு நடத்திக் கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. அதாவது, மார்ச் 2, 2002 அன்று கொல்லப் பட்ட இஷான் ஜாப்ரி படுகொலை குறித்த வழக்கு கீழ் மட்ட காவல் நிலையங்கள் புறக்கணித்த நிலையில், 2006, ஜூன் 8 அன்று காவல் துறை இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளார் அவர் மனைவி ஜாக்கியா ஜாப்ரி. அதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்ற சூழலில், ஃபிப் 2007 அன்று குஜராத் மாநில நீதிமன்றத்தின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளார். இதையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபின், உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். சுமார் இரண்டு ஆண்டு கால தொடர் முயற்சிக்குப் பின்னர் தான், உச்சநீதிமன்ற தலையீட்டினால் இஷான் ஜாப்ரி வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஃபிப்ரவரி 13 வரையிலும் பல கட்ட வழக்கு விசாரனை நடந்திருந்தாலும், இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை. ஓரளவு விவரமான குடும்பம் என்பதுடன் அரசியல் பின்புலம் உள்ல குடும்பம் என்ற காரணத்தினால், வழக்குப் பதிவு செய்வதற்கும் முறையான விசாரணையைத் துவக்குவதற்கும், போராட்டத்தை நடத்த முடிந்துள்ளது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் படுகொலை செய்யப் பட்ட ஒரு மாநிலத்தில் எத்தனை பேர் இது போன்ற குடும்ப பின்னணி கொண்டிருப்பார்கள். இறந்தவர்களினால் வீட்டிற்கு வந்த வருமானம் பறிபோய் அன்றாட வாழ்க்கைக்கே மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் நீதிமன்றப் படிகளில் 10 ஆண்டு காலம் காத்துக் கிடக்க முடியுமா? ஆறாத வடுக்களுடன் பறிதவித்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் தான் நரேந்திர மோடி சத்பவன உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றார். மற்றொரு புறம் குஜராத் அரசு நியமனம் செய்த நானாவதி கமிஷன் தனது விசாரணையை முடித்து ஒப்படைக்காததால், மேலும் விசாரணையைத் தொடர 16வது முறையாக அதன் காலவரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் சஞ்சீவ் பட் போன்ற நேர்மையான காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப் பட்டோ அல்லது வேறு வகையிலான துன்பங்களுக்கோ ஆளாகியுள்ளனர். அதாவது மத சிறுபானமையினர் மட்டுமல்ல, மதசார்பற்ற பொதுமக்களும், அதிகாரிகளும் கூட இந்துத்துவா ஆட்சியாளர்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை, என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. எனவே மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மதசார்பற்ற சக்திகளின் எதிர்ப்பு வலுப்பெறவும் பெறும் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதில் தொழிலாளி வர்க்கம் மகத்தான பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கிறது. பிறப்பின் அடிப்படியிலான அடையாளாங்களைத் தூக்கி எரிந்து தொழிலாளர் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதன் மூலமே, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க முடியும்.


ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல், நமது ஆட்சியாளர்கள், மதம், சாதி என்ற பெயரில் உழைப்பவர்களை துண்டு துண்டாகப் பிரிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த, மதத்தைச் சார்ந்த தொழிலாளர் அல்லது எவராவது ஒரு பிரஜை ஒடுக்கப் படுவதற்கோ, அதன் பெயரில் தாக்கப் படுவதற்கோ ஆளானால், அதை எதிர்த்த போராட்டத்தில், முற்போக்குத் தொழிற்சங்கங்கள் தீவிர அக்கரை செலுத்தி வருகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை மூலமே தொழிலாளர்கள் மீது அரசும், முதலாளித்துவமும் தொடுக்கும் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியும். ஃபிப் 28, 2012 தேசம் தழுவிய வேலை நிறுத்தம் அத்தகைய ஒற்றுமையைப் பறை சாற்றக் கூடியதே.

இந்தப் பின்னணியில் தான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப் பட்ட கொலை பாதகங்களும், நினைத்துப் பார்க்கப் படுகிறது. ஃபிப் 27, 2012 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் முடிந்து விட்டதை, நினைக்கத் தூண்டும் நாள். அன்று மதியமே முதல்வர் நரேந்திர மோடியின் வீட்டில் அவசரமாக அதிகாரிகள் கூட்டம் நடந்துள்ளது. அதில் நடக்கப் போகும் வன்முறைகள் குறித்து அவர்கள் கண்டு கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தப் பட்டனர். இதுவரை எந்த ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மட்டுமல்ல, சாதாரண சட்டமன்ற உறுப்பினர் கூட செய்யத் துணியாத நிகழ்வுக்கு வழி வகுத்தவர் நரேந்திரமோடி.

கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் நடந்து 10 ஆண்டுகள், முடிந்து விட்டாலும், இன்னும் குஜராத் மாநில இஸ்லாமியர்கள் தாங்கள் குடியிருந்த வீடுகளுக்குத் திரும்ப வில்லை. அகதிகளாகவே தனித்து வாழ்ந்து வருகின்றனர். காணாமல் போன குழந்தைகள் 400 எனச் சொல்லப் படுகிறது. படுகொலைக்கு ஆளான குழந்தைகள் 600 எனச் சொல்லப் படுகிறது. குழந்தைகளுக்கும், ரயில் எரிப்பிற்கும் என்ன சம்மந்தம்? ரயில் எரிப்பிற்கும் பெண்களுக்கும் என்ன சம்மந்தம்? எதுவும் தெரியாது. வெறித்தனத்திற்கு ஆட்பட்ட இந்துத்துவா கும்பல் குஜராத்தில் அரங்கேற்றிய வன்முறை விடுதலை இந்தியா பார்த்திராத ஒன்று. மனித உரிமைக் குழுக்கள், நீதிமன்றங்கள் ஆகியவை தலையீடு செய்திருந்த போதும், இன்றைக்கும் முழு நிவாரணம் கிடைக்காத தீராத வலியுடன் தான், குஜராத் மாநில இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றர்.

இஷான் ஜாப்ரி என்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் வீட்டு வாசலில் எரித்துப் படுகொலை செய்யப் பட்டார். அவர் மனைவி, ஜாக்கியா ஜாப்ரி வழக்கு பதிவு செய்ய முயன்றாலும் காவல் துறை காக்கி உடைக்குள், இந்துத்துவா காக்கியின் அடையாளத்தியும் சேர்ந்தே கொண்டிருப்பதால், வழக்கு மிகுந்த தாமதமாகப் பதிவு செய்யப் பட்டது. இது குறித்து விசாரணையைத் துவக்கிய அதிகாரிகளிடம், முந்தைய மதக்கலவரங்களின் போது, இஷான் ஜாப்ரி துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து, நரேந்திர மோடி, புலனாய்வு நடத்திக் கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. அதாவது, மார்ச் 2, 2002 அன்று கொல்லப் பட்ட இஷான் ஜாப்ரி படுகொலை குறித்த வழக்கு கீழ் மட்ட காவல் நிலையங்கள் புறக்கணித்த நிலையில், 2006, ஜூன் 8 அன்று காவல் துறை இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளார் அவர் மனைவி ஜாக்கியா ஜாப்ரி. அதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்ற சூழலில், ஃபிப் 2007 அன்று குஜராத் மாநில நீதிமன்றத்தின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளார். இதையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபின், உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். சுமார் இரண்டு ஆண்டு கால தொடர் முயற்சிக்குப் பின்னர் தான், உச்சநீதிமன்ற தலையீட்டினால் இஷான் ஜாப்ரி வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஃபிப்ரவரி 13 வரையிலும் பல கட்ட வழக்கு விசாரனை நடந்திருந்தாலும், இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை.

ஓரளவு விவரமான குடும்பம் என்பதுடன் அரசியல் பின்புலம் உள்ல குடும்பம் என்ற காரணத்தினால், வழக்குப் பதிவு செய்வதற்கும் முறையான விசாரணையைத் துவக்குவதற்கும், போராட்டத்தை நடத்த முடிந்துள்ளது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் படுகொலை செய்யப் பட்ட ஒரு மாநிலத்தில் எத்தனை பேர் இது போன்ற குடும்ப பின்னணி கொண்டிருப்பார்கள். இறந்தவர்களினால் வீட்டிற்கு வந்த வருமானம் பறிபோய் அன்றாட வாழ்க்கைக்கே மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் நீதிமன்றப் படிகளில் 10 ஆண்டு காலம் காத்துக் கிடக்க முடியுமா? ஆறாத வடுக்களுடன் பறிதவித்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் தான் நரேந்திர மோடி சத்பவன உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்.

மற்றொரு புறம் குஜராத் அரசு நியமனம் செய்த நானாவதி கமிஷன் தனது விசாரணையை முடித்து ஒப்படைக்காததால், மேலும் விசாரணையைத் தொடர 16வது முறையாக அதன் காலவரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் சஞ்சீவ் பட் போன்ற நேர்மையான காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப் பட்டோ அல்லது வேறு வகையிலான துன்பங்களுக்கோ ஆளாகியுள்ளனர். அதாவது மத சிறுபானமையினர் மட்டுமல்ல, மதசார்பற்ற பொதுமக்களும், அதிகாரிகளும் கூட இந்துத்துவா ஆட்சியாளர்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை, என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

எனவே மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மதசார்பற்ற சக்திகளின் எதிர்ப்பு வலுப்பெறவும் பெறும் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதில் தொழிலாளி வர்க்கம் மகத்தான பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கிறது. பிறப்பின் அடிப்படியிலான அடையாளாங்களைத் தூக்கி எரிந்து தொழிலாளர் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதன் மூலமே, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க முடியும்.  

  
                      SEZ ல் சங்க அங்கீகாரம்

புத்தாண்டில் புதிய சிந்தனை பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு உருவானது ஆச்சரியமான விஷயம் தான். ஒரகடம் SEZ பகுதியில் அமைந்துள்ளது ஜி.கே.என் டிரைவ் லைன் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம். இங்கு 58 நிரந்தர தொழிலாளர்களும், ட்ரெய்னிங், அப்பரண்டிஸ், புரபேஷனரி என்ற பெயரில் 200 தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களை நிரந்தரப் படுத்தாத போக்கு கொண்டது தான் ஜி.கே.என் நிறுவனம். ஆனால் திடிரென ஜி.கே.என் டிரைவ் லைன் ஒர்க்கர்ஸ் யூனியனை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 31 அன்று மாலை சங்கத்தின் தலைவர்களை அழைத்து, உங்கள் அங்கீகாரம் கோரும் கடிதம் மேலிடத்தால் பரிசீலிக்கப் பட்டு, அங்கீகாரம் செய்வதென முடிவு செய்துள்ளோம், என்று சொன்னது மட்டுமல்லாமல், எழுத்துப் பூர்வமான கடிதத்தையும் கொடுத்துள்ளனர். இது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கிடைத்த உற்சாகம் தரும் வெற்றியாகும்.

கடந்த ஒரு ஆண்டாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு தொடர்பில் இருந்து வருகின்றனர். ஃபிப்ரவரி முதல் 5க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி, முதலில் பொதுத் தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யு) உடன் இனைப்பது என முடிவு செய்து பேரவை கூட்டமும் நடந்தது. அதில் நிர்வாகிகளும் தேர்வு செய்யப் பட்டனர். ஆனால் நிர்வாகம், ஜூலை மாதத்தில் தனிச்சங்கம் அமைத்து பதிவு செய்தால், அங்கீகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி தொழிலாளர்களை குழப்பியது. தொழிலாளர்களும் அதில் உடன்பட்ட நிலையில் சி.ஐ.டி.யு தலைமை, தனிச் சங்கம் பதிவு செய்து முயற்சி செய்ய முடிவெடுத்தது.

சங்கம் பதிவு செய்யப் பட்டு, நிர்வாகிகள் பட்டியல், பாதுகாக்கப் பட்ட தொழிலாளர்களுக்கான தீர்மானம் ஆகியவற்றுடன் நிர்வாகத்திற்கு, அங்கீகரித்து பேச்சு வார்த்தையைத் துவக்க வேண்டுகோள் கடிதம் அனுப்பினோம். தொடர்ந்து கௌரவத் தலைவர் பொறுப்பு இல்லாமல் வந்தால் உடனடியாக அங்கீகரிக்கிறோம், என்ற குழப்பத்தை முன் வைத்தது. இம்முறை தொழிலாளர்கள், முடியாது என தெளிவாக மறுத்து விட்டனர். அதே நேரத்தில் போனஸ், ஆயுத பூஜைபரிசு ஆகிய குறித்து பேச்சு வார்த்தை நடத்த கடிதம் கொடுக்கப் பட்டது. தொழிற் சங்கத்துடன் பேசாமல், போனஸ் 8400 ரூபாய் வழங்கியது. 1500 ரூபாய் பெறுமானமுள்ள பரிசு, ஆயுதபூஜை அன்று வழங்கப் பட்டது. தொழிற் சங்கத்தை அங்கீகரிக்காமலேயே தொழிற் சங்கம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் நிர்பந்தம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. காரணம் தொழிலாளர்களின் உற்பத்தி அளவும், உற்பத்தி திறனும் முக்கியமானதாகும்.

இரண்டாவது ஜி.கே.என் உற்பத்தியை எதிர்பார்த்து, டொயோட்டா, ஹூண்டாய், ஃபோர்டு, பி.எம் டபுள்யு உள்ளிட்ட கார் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் உற்பத்தி பரிதாபாத், தார்காரா ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகிறது. அங்கும் தொழிற்சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாகக் கூட நிறுவனம் தொழிற் சங்கத்தினை அங்கீகரிக்க முன் வந்திருக்கலாம்.

எப்படி இருந்தாலும் திருப்பெரும் புதூர் பகுதியில் தொழிற் சங்க உரிமைக்காக சி.ஐ.டி.யு நடத்தி வரும் போராட்டம் ஒரு சிறிய நிறுவனத்தில் பலன் தந்திருக்கிறது. தொடர் முயற்சி நிச்சயம் சில வெற்றிகளை தரும் என்ற நம்பிக்கையை இந்த அங்கீகாரம் அதிகரித்துள்ளது.  




   சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒரு எச்சரிக்கை மணி!!

பத்தாவது முறையாக விழுந்து விட்டாயா? கவலைப் படாதே நம்பிக்கை கொள். ஏற்கனவே ஒன்பது முறை எழுந்தவன் தானே, என்ற வரிகள் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சொல்லப் பட்ட வெற்று வார்த்தை ஜாலங்கள் அல்ல. யதார்த்த போராட்ட வரலாற்றின் உண்மையான வார்த்தைகள். 58 நாள்கள் போராட்டம். 319 நபர்கள் முதல் கட்டமாக கைது. பின் தலைவர்கள் வெளிவந்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சி.ஐ.டி.யு தலைவர்கள் அ.சவுந்தரராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட, 12 நபர்கள் மீது பிணையில் வர முடியாத வழக்கு. விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கை விலங்கு, என போராட்டங்களைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டனர். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும், என கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள். இது உண்மை என்பதை கடந்த தி.மு.க ஆட்சியில் காண முடிந்தது.

ஃபாக்ஸ்கானில் இப்படி ஒரு போராட்டம் எனில், சான்மினா எஸ்.சி.ஐ என்ற அமெரிக்க நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக வழங்கப் படாத சம்பள உயர்விற்காக, 52 நாள்கள் போராட வேண்டியிருந்தது. பாதயாத்திரை பிரச்சாரத்திற்கு கூட அனுமதிக்கவில்லை. ஃபிப் 15 2011 துவங்கிய வேலை நிறுத்தம், மார்ச் 16 2011 அன்று தொழிலாளர் துறை இணை ஆணையர் வழங்கிய, இரு தரப்பும் ஏற்றுக் கொண்ட அறிவுரையுடன் 32 நாள்கள் வேலைநிறுத்தம், முடிவுக்கு வந்தது. அறிவிக்கப் பட்ட சம்பள உயர்வை தொழிற் சங்கம் ஏற்றுக் கொள்வது. இதர கோரிக்கைகளை படிப்படியாக தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காணுவது. போராட்ட காரணத்திற்காக எந்த ஒரு தொழிலாளி மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது, என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப் பட்டன.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேலைநிறுத்த காலத்தில் புதிய தொழிலாளர் நியமனம் கூடாது என்பதை முன்வைத்து வழக்கு தொடுத்ததில், சி.ஐ.டி.யு தடையாணை பெற்றது. இதன் காரணமாக பணிக்குச் என்ற புதிய தொழிலாளர்களை, தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற வேண்டுகோளை, வேலை நிறுத்தத்தில் இருந்த தொழிலாளர்கள் நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் நிறுவன அதிகாரிகளோ தங்களின் காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள, பயன்படுத்திக் கொண்டனர். JCL ன் அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக கூறியவர்கள் உடணடியாக தற்காலிகப் பணி நீக்கமும், பின்னர், பணிநீக்கத்தையும் செய்து உத்தரவிட்டனர்.

தற்காலிக பணிநீக்க காலத்திலேயே மீண்டும் ஒரு வேலை நிறுத்த அறிவுப்பு கொடுத்த காரணத்தால், சமரச பேச்சுவார்த்தை JCL முன் நடைபெற்று வந்தது. எனவே நிர்வாகம் 4 தொழிற்சங்க தலைவர்கள் மீதான பணிநீக்க உத்தரவை JCL டம் ஒப்புதல் பெற வேண்டிய சட்டத் தேவை வந்தது. தொழிற் தகராறு சட்டம் 33(2) பி, யின் படி வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த ஜூலையில் துவங்கிய வழக்குப் பணி ஜன 18 அன்று வழங்கிய தீர்ப்புடன் முடிவுக்கு வந்ததுள்ளது.

52 சான்றாவணங்களை சமர்பித்து மிகப் பெரிய திட்டமிடலுடனும், தயாரிப்புடனும் பணி நீக்க நடவடிக்கைக்காக களம் இறங்கிய சான்மினா நிறுவனத்திற்கு, தீர்ப்பு சம்மட்டி அடி வழங்கியுள்ளது. பல லட்சம் செலவழித்து நியமித்த வழக்கறிஞர்களை சி.ஐ.டி.யு தலைவர்கள் பழனிவேலு மற்றும் ஆறுமுக நயினார் ஆகியோரின் சட்டப் பணிகள் மூலம் முறியடிக்க முடிந்தது. ஒருவேளை 4 பேர் மீதான பணி நீக்க உத்தரவுக்கு ஒப்புதல் கிடைத்திருக்குமானால், உள் விசாரணை நடத்தி, தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கும் 63 பேர்கள் மீதும் தனது பழிவாங்கும் வெறித்தனத்தை, நிர்வாகம் வெளிப்படுத்தி இருக்கும். மனித வள மேலாளராகப் பொறுப்புக்கு வந்தவர், கம்பெனியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக உயரும் அளவிற்கு, முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள், பொறுப்பில் இருக்கும் நிறுவனத்தில், கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் தொழிற்சங்க தலைவர்களை வேட்டை யாட முடியுமா? என்ற கணவில், இப்போது மண் விழுந்துள்ளது.

குற்றம் சுமத்தப் பட்டத் தொழிற் சங்கத் தலைவர்கள் தங்கள் தர்ப்பு நியாயத்தை விளக்குவதற்காக, கேட்கப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்காததும், 2வது சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காததன் காரணமாகவும், நிர்வாகத்தின் குற்றச்சட்டை ஏற்க முடியாது. இரண்டாவதாக 1963ல் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ஒப்பிட்டு இந்த 33(2)பி மீதான தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. வங்காளத்தில் உள்ள பட்டீ நிலக்கரி நிறுவனத்திற்கும், ராம் புடபேஷ் என்கிற தொழிலாளிக்கும் இடையிலான வழக்கில், மூன்று பிரதான அம்சங்கள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. 1. தொடர்புடைய விதிகள், நிலையாணை மற்றும் இயற்கை நீதிக் கோட்பாடு ஆகியவை உரிய முறையில் உள்விசாரணையின் போது பின்பற்றப் படவேண்டும். 2. குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் சட்டப்படியான சாட்சிகளுடன் உள்விசாரணையில் முன்வைக்கப் பட வேண்டும். 3. வேலை அளிப்பவர் தொழிலாளி குற்றவாளி என்ற முடிவுக்கு வருவது தொழிலாளர்களிடையே பாரபட்ச அனுகுமுறையைக் கொண்டதாகவோ, பழி வாங்கும் நோக்கம் கொண்டதாகவோ இருக்கக் கூடாது. ஆனால் சான்மினா நிறுவனத்தில் இந்த மூன்று பிரதான கடமைகளும் மீறப் பட்டிருக்கிறது.

இதேபோல், லல்லா ராம் என்கிற தொழிலாளிக்கும், டி.சி.எம். கெமிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கு 1978ல் உச்ச நீதி மன்றத்தில் நடந்துள்ளது. டிட்டாகூர் பேப்பர் மில்ஸ் லிட், ஹிண்ட் கன்ஸ்ட்ரக்சன் & எஞ்சினியரிங் கம்பனி லிட், உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய வழக்குகள் அனைத்தும் மேற்படித் தீர்ப்பில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இந்தியாவில் தொழிற்சங்கத் தலைவர்களை குரோத உணர்வுடன் அனுகும் போக்கு மூலதனத்தின், லாபவெறியுடன் இனைந்திருக்கிறது, என்பதை மேலே குறிப்பிட்ட விவரங்களில் இருந்து அறியலாம்.

அதேபோல், வேலை வழங்குபவர் பணி நீக்க உத்தரவின் போது, ஒருமாத சம்பளம் வழங்குவதற்கு அல்லது வழங்க சம்மதிப்பதற்கு முன் வர வேண்டும். பிரதான தொழிற் தாவா வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டு, நிறுவனம் தனது பணி நீக்கத்திற்கான ஒப்புதலைக் கோரும் மனுவை சமர்பிக்க வேண்டும், என்ற உச்சநீதி மன்ற வழிகாட்டுதல் இருக்கிறது. இந்த இரண்டும் திருப்தி அளிக்கும் தன்மையில் நிறுவனத்தினால் பின்பற்றப் பட்டுள்ளது, என்ற முடிவுக்கு நீதிபதி வந்தால் தான், ஒப்புதல் கொடுக்க முடியும், என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.

ஜமால் மொய்தீன் என்ற தொழிற்சங்க தலைவர் மீதான பணி நீக்க உத்தரவுடன் நிர்வாகம், 8494 ரூபாய் சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியதாக நிர்வாகம் குறிப்பிட்டு இருந்தது. இது ஜமால் பெறும் மாதாந்திர சம்பளத்தை விடவும் குறைவானது என்பதை சி.ஐ.டி.யு தனது வாதத்தில் முன்வைத்து நிரூபித்தது.   15 ஜூன் அன்று பணி நீக்கம் செய்து, 16 ஜூன் அன்று JCL அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாலும், உள் விசாரணையில் தொழிலாளர் தரப்பு இயற்கை நீதியின் அடிப்படையில் கேட்ட ஆவணங்களை தரவில்லை. பேருந்தை இயக்க அனுமதிக்க வில்லை என்ற குற்றச்சாட்டில், சாட்சிகளான செக்யூரிட்டிகளை விசாரித்த விசாரணை அதிகாரி, மூலப் புகார் தெரிவித்த பேருந்து ஓட்டுனரை விசாரிக்கவே இல்லை என்பதையும் சி.ஐ.டி.யு தனது வாதத்தில் முன்வைத்தது, இதுவும் சாதகமாக தீர்ப்பு அமைவதற்கு உதவியது.

ஹூண்டாய் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்தவர்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்பதற்காக வேலை நிறுத்தம் செய்து 52 தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியது, ஒரு அனுபவம் என்றால், சான்மினா வழக்கு மற்றொரு அனுபவம். காழ்ப்புணர்ச்சியுடனும், பகையுணர்ச்சியுடனும் தொழிலாளர்களைப் பழி வாங்கத் துடிக்கும் திருப்பெரும்புதூர் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிர்வாகங்களின் சிந்தனைக்கு மேற்படித் தீர்ப்பு எச்சரிக்கையாக அமையட்டும்.


நாகரீகமான வேலை – உண்மை ஊதியம் எப்போது?

உலகின் பல பகுதிகளில் தொழிலாளி வர்க்கம் தனது உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வது என்ற பெயரில், இரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு சலுகைகள் தந்து பாதுகாக்கும் அரசுகள் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, உழைக்கும் மக்களைக் கொள்ளை அடிப்பதில் தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தொழிற் சங்க ஊழியர்களுடனான ஆய்வுப் பட்டறையை, மக்கள் சீனத்தில், மே 13 முதல் 17 வரை, ஐந்து தினங்கள் நடத்தியது.

10 நாடுகளில் உள்ள 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளாக 24 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 11 பெண் தொழிற்சங்கத் தலைவர்களும் அடங்குவர். இந்தியாவில் இருந்து ஐ.என்.டி.யு.சி சார்பில் ஒருவரும், சி.ஐ.டி.யு சார்பில் நானும் கலந்து கொண்டோம். ஐ.எல்.ஓ அமைப்பு அரசு, தொழில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் ஆகிய மூன்று பிரிவினரையும் உள்ளடக்கியதாக செயல் பட்டு வருகிறது. தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து இந்த முத்தரப்பினரிடத்திலும் விவாதங்களை நடத்தி வருகிறது.

மக்கள் சீனத்தின் தொழிற் சங்கமான, அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (ஏ.சி.எஃப்.டி.யு), மேற்படி ஆய்வுப் பட்டறையை நடத்தித் தரும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தது. துவக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சி ஆகியவற்றையும் சேர்த்து 13 அமர்வுகள் நடத்தப் பட்டன. ”சம்பள உயர்வு – வேலை வாய்ப்பு அதிகரிப்பு – நெருக்கடியில் இருந்து மீள்தல்” என்பது பொதுவான தலைப்பு. நாகரீகமான ஊதியத்திற்கான தேவை மற்றும் சமூக நீதி குறித்த ஐ.எல்.ஓ வின் 2008 பிரகடனத்தை அமலாக்குவது குறித்து பயிற்சியின் அடித்தளம் அமைந்திருந்தது. ஊதியப் பங்கினை அதிகப் படுத்துவது, தொழிலாளர் மற்றும் முதலாளிக்கான வருவாய் இடைவெளி மிக அதிகமாக இருப்பதை குறைக்க நடவடிக்கை எடுப்பது, ஆசிய மற்றும் உலக அளவில் ஊதியம் குறித்த கொள்கைகள், அவை பொருளாதார நிலைகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை பிரதான விவாதப் பொருளாக அமைந்தது.

ஏற்றத் தாழ்வின் அடிப்படை:

கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள், அசமத்துவத்தை மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.  அசமத்துவத்தின் அளவு உயர்வதை கட்டுக்குள் வைக்க பெருமுதலாளிகள் மீதான வரிவிதிப்பில் சலுகைகள் கூடாது என்பது, மிகமுக்கியமான, ஒரு அணுகுமுறை, ஆனால் வளர்ந்த நாடுகளில் இந்த அணுகுமுறை தொடர்ந்து மீறப்பட்டுள்ளது. இதன் விளைவு பில்லியன் டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் உயர்ந்தது. குறிப்பாக தொழிலாளர் உழைத்துக் கொடுக்கும் உற்பத்தி அளவு கடந்த 1999 காலத்தில் இருந்து 2011 காலம் வரை மிகப்பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. ஆனால் ஊதிய விகிதாச்சாரம் உயரவில்லை. உதாரணத்திற்கு அமெரிக்காவில் உற்பத்தி அளவு 85 சதம் உயர்ந்துள்ளது. ஆனால் தொழிலாளி தான் பெற்ற சம்பளத்தில் 35 சதம் தான் உயர்வைப் பெற முடிந்துள்ளது. அதேபோல் ஜெர்மனியில் சுமார் 25 சதம் உயர்வு உற்பத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளி தான் 20 ஆண்டுகளுக்கு முன் பெற்ற அதே ஊதியத்தைத் தான் பெற்று வருகிறார். இது வருவாய் இடைவெளியை அதிகரித்திடப் பயன்பட்டுள்ளது.

 சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஐ.எல்.ஓ தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு. பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் என்று குறிப்பிடப்படுகிற, 16 ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கான வருவாய் சராசரி 1970 களில் 70 என்ற அளவில் இருந்து 1980 காலம் வரையிலும், சராசரி 80 என்ற அளவை நோக்கி உயர்ந்தது. ஆனால் 1980 களில் சரியத் துவங்கியது. 2010ம் ஆண்டில் தொழிலாளர்களின் வருவாய் சராசரி 60 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொழிலாளர் வருவாய் சராசரி 1970 களில் 70 என்பதில் இருந்து 1980களில் 75 என உயர்ந்து பின்னர் 2010ல், 55 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 70 ஆக இருந்த வருவாய் சராசரி, படிப்படியாகக் குறைந்து 2010ல் 53 என குறைந்துள்ளது. அதாவது, வளரும் நாடுகளின் தொழிலாளர் வருவாய் 1970 காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைய மட்டுமே செய்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல் 1970 முதல் 80 காலத்தில் ஏற்பட்ட உயர்வையும் அனுபவிக்கவில்லை என்பது துயரம் தரும் செய்தியாகும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கரீபியன் நாடுகளிலும் இந்தக் காலத்தில் தொழிலாளருக்கான ஊதியப் பங்கு குறையவில்லை. மாறாக ஓரளவு உண்மை ஊதியத்தின் தன்மையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவில் பெரும் மாற்றத்தை சந்திக்க வில்லை என்றாலும், சீனாவில் உண்மை ஊதியத்தின் தன்மையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரிகள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் வளர்ச்சி காரணம் என்றால் மிகை அல்ல.

ஆனால் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதே போல் அமைப்பு ரீதியில் திரட்டப் பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பலமடங்கு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்தினை மிகப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. 2008 ல் 6.9% மாக இருந்த வேலையின்மை, 2013 மார்ச் வரையில் மட்டும் 10.9% மாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை 23.5 சதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. காண்ட்ராக்ட் முறையின் மூலமான வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு என்று சொல்லிக் கொள்கிற வேலை வாய்ப்பும் அதிகரிக்கவும், கூட்டு பேர உரிமையைப் பறிக்கிற நிலையும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது. 

மக்கள் சீனத்தில் ஊதிய வளர்ச்சி:

சீனா மனிதவளம் நிறைந்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ள நாடு என்பது அறிந்த ஒன்று. ஆண்டு ஒன்றுக்கு, 55.4 சதமான பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்துள்ளது. 23 சதமான பட்டதாரிகள், தாங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இல்லாததால், தற்போது வேலை செய்ய விரும்பவில்லை என்பதையும், 21 சதமான பட்டதாரிகள் வேலையற்றவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். இது 2009 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தரும் தகவலாகும். மற்றொரு புறம், கடலோர மாகாணங்களிலும், புதிய தொழில் வளர்ச்சி உருவாகும் நகரப் பகுதிகளிலும் வேலைக்கான ஆள் பற்றாக்குறை உருவானது. அதேபோல் தொழில் வளர்ச்சி பகுதிகளை நோக்கி இடம் பெயர்வது அதிகரிப்பதும் இக்காலத்தில் முன்னுக்கு வந்த பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஃபாக்ஸ்கான் போன்ற மின்னனு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது, அரசுக்கும், ஏ.சி.எஃப்.டி.யு விற்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கியது.

இவைகளை எதிர் கொள்ள அரசு மற்றும் ஏ.சி.எஃப்.டி.யு ஆகியவை இணைந்து எடுத்த சில முயற்சிகள் பலன் தந்துள்ளன. வேலையாள் பற்றாக்குறை தனியார் துறையின் பெரும் நிறுவனங்களில் உருவாக அடிப்படைக் காரணம், பிழைப்பு ஊதியம் மட்டும் வழங்கும் நிலையை மாற்றி, உண்மை ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு சுட்டிக் காட்டின. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலர் (900 யுவான்) அளவிற்கு வழங்கப் பட்ட ஊதியம் 2010ல் 197 டாலராகவும் (1200 யுவான்), அடுத்த ஆண்டில், 328 டாலராகவும் (2000 யுவான்) உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதேபோல் ஹோண்டா நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து, மாதாந்திர ஊதியம் ஆண்டுக்கு 500 யுவான் (82 டாலர்) அளவிற்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இது இளம் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு சட்டரீதியில் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கவும் அதன் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்ததால் முன்னேற்றம் உருவானது. அதாவது, குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு 1200 யுவான் (197 டாலர்), (11520 ரூபாய்) என்பதாகத் தீர்மானிக்கப் பட்டது.

மேற்படி நடவடிக்கை, இளம் தொழிலாளர்களிடம் தனியார் துறையில் வேலையில் சேரும் ஆர்வத்தை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் பெருமளவில் பயன்பட்டுள்ளது. ஆசியக் கண்டத்தில் ஆண்டு சராசரி ஊதிய உயர்வு 2008ல் 2.8 ஆக இருந்தது, 2009ல் 1.5 ஆக குறைந்தது. இதில் சீனாவின் பங்களிப்பான 0.8 சதத்தை கழித்து விட்டால், ஆசியா கண்டத்தின் ஊதிய உயர்வு வளர்ச்சி விகிதம் 0.7 சதமாக மட்டுமே இருக்கும். அதாவது மக்கள் சீனத்தில் ஊதிய உயர்வு விகிதம், ஒட்டு மொத்த ஆசிய நாடுகளின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கிறது. இதற்கு சீனாவில் உள்ள தொழிற் சங்க நடவடிக்கையும் ஒரு காரணம் என்பது மிக முக்கியமானது ஆகும்.

சீனாவில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. மெட்ரோ ரயிலில் 40 கி.மீ பயணம் செய்கிற ஒரு தொழிலாளி 2 யுவான் கொடுத்தால் போதுமானது. இது இந்தியாவில் 6 மடங்கு அதிகம் ஆகும். அங்குள்ள இதர உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருக்கிறது. எனவே பெரும் பகுதி உணவுக்கு செலவிடும் நிலை இல்லை. அதே போல் வீட்டு வாடகை என்பது குறைவான தொழிலாளர்களின் செலவினமாக இருக்கிறது. பெரும்பாலும் சொந்த வீடு கொண்டவர்களாக பீஜிங் நகரவாசிகள் உள்ளனர். நகரம் முழுவதும் பரவலாகக் காணப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகள் நகர பரப்பின் மீது குறைவான ஆக்கிரமிப்பையும், இதர பயன்பாடுகளை அதிகரிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது. குறிப்பாக நீர்நிலைப் பயன்பாடுகள் புறநகர் பகுதியில் காணக் கூடியதாக இருக்கிறது. குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கும் செலவு செய்ய வேண்டிய தேவையற்றவர்களாக, சீன நாட்டுத் தொழிலாளர்கள் உள்ளதைக் கவணிக்க வேண்டியுள்ளது.

ஆக இவை அனைத்தும் சேர்ந்து சீனத் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் தொகையை சந்தையில் இதர தேவைகளுக்காக செலவிடும் வாய்ப்பைத் தருவதாக அமைந்துள்ளது. இது பொருளாதாரக் கொள்கையின் விதிப்படி, உள்நாட்டுச் சந்தை மற்றும் நுகர்வை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்படுத்திய ஏற்றுமதி வர்த்தகத்திலான சில பாதிப்பு, சீனாவின் உற்பத்தியையோ, நுகர்வையோ பாதிக்கவில்லை என்பது, ஐ. எல்.ஓ சுட்டிக்காட்டுகிற சிறப்பு அம்சமாகும்.

மக்கள் சீனத்தில் 76.4 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஏ.சி.எஃப்.டி.யு என்ற அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில், 28.9 கோடித் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1992ல் 14.2 ஆக இருந்த போது, ஊதிய வளர்ச்சி விகிதம் 6.5 ஆக இருந்தது. 2012ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.1 இருக்கும் நிலையில், ஊதிய வளர்ச்சி விகிதம் 10.2 ஆக இருக்கிறது. வேறு நாடுகளில் காணக் கிடைக்காத விவரமாக இவை அமைந்துள்ளது. இது தொழிற் சங்கத்தின் நடவடிக்கை என்பதாக இருந்தாலும், சீனாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது. அதாவது கூட்டு பேர உரிமை பெற்றுத் தந்த பரிசாகவே இந்த ஊதிய உயர்வு கருதப் படுகிறது. அனைத்து சீனத் தொழிலாளர் கூட்டமைப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மூலமான கூட்டு பேர உரிமையை பாதுகாத்து வருகிறது.

காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது, இது மிக முக்கியமானதாக ஐ.எல்.ஓ உள்ளிட்ட அமைப்புகள் பார்க்கின்றன.. வயோதிகர் பராமரிப்பு, பொதுமருத்துவச் சிகிச்சை, வேலையற்றோர் பராமரிப்பு, பணியின் போதான விபத்து, மகப்பேறு ஆகிய ஐந்து காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அக்காலத்திற்குரிய வருவாய் ஏற்பாடும் இதற்குள் அடங்கும். வேலையற்றோர் நிவாரணம் வேலையற்றோரைப் பராமரிக்கும் காப்பீடு திட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ளது. சீனாவில் நுகர்வுத் தன்மை அதிகரித்து இருந்தாலும் அது வேலை இல்லா இளைஞர்களை நுகர்வு வெறியை நோக்கித் தள்ளிடவோ அல்லது திருட்டு போன்ற குற்றச் செயல்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கவோ செய்யவில்லை. அரசு பின்பற்றுகிற கொள்கையின் வெளிப்பாடாகவே இதைக் கருத வேண்டியுள்ளது.

சீனாவின் அனுபவத்தில் இருந்து கூட்டுபேர உரிமையைப் பலப்படுத்துவதும், அதற்கான முயற்சியைத் தொழிற்சங்கங்கள் மேற்கொள்வதும் உடணடித் தேவை. இதில் உடணடி மாற்றம் காண குறைந்த பட்ச சம்பளம் குறித்த நிர்ணயிப்பில் மாற்றம் வேண்டும், என்பதை ஐ.எல்.ஓ சுட்டிக்காட்டுகிறது.

சி.ஐ.டி.யு தரப்பில் முன்வைக்கப் பட்டவை:


இந்தியாவில் பின்பற்றப் பட்டு வரும் உலகமய தாரளமயக் கொள்கைகளின் விளைவாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாதிப்புகளை இந்திய தொழிலாளி வர்க்கம் சந்தித்து வருகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து, அமைப்பு சாராத் தொழிலாளர் எண்ணிக்கை உயர்வு, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையை பாதிக்கிறது. அதேபோல், தொழிலாளர்களின் ஒன்று கூடும் சுதந்திரத்தையும், கூட்டு பேர உரிமையையும் பாதித்துள்ளது. போராட்டங்கள் மட்டுமே சில தீர்வுகளைப் பெற்றுத் தந்துள்ளது. சமீபத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற 48 மணிநேர வேலை நிறுத்தம் மற்றும் கோரிக்கைகள் முக்கியமானதாகும். குறைந்த பட்ச ஊதியத்தை 10 ஆயிரமாக உயர்த்துதல், தொழிற்சங்க அங்கீகாரம், நிரந்தரத் தொழிலில் பணிபுரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரம் செய்தல், அமைப்பு சாரா தொழிலாளருக்கான சமூக பாதுகாப்பு நிதியத்தை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகளுக்கான போராட்டம் பெருமளவு தொழிலாளர்களை ஈர்க்கத் துவங்கியுள்ளது. சி.ஐ.டி.யு தனது அகில இந்திய மாநாடு ஏப்ரலில் நடைபெற்ற போது, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தனியாகவும் கூட்டாகவும் போராடத் தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் அரசுகளின் கொள்கைகளை மாற்றிட தீவிரமான கூட்டு முயற்சி தேவை என்பதையும் வலியுறுத்துகிறது.

சென்னைப் பெரு நகரத் தொழிற் சங்க வரலாறு
ஒரு நூலின் பெருமை அது அன்றைய சமகாலத்திற்கு பொருந்துவதுடன் இணைந்தது. அத்தகைய பெருமைக்குரிய நூல்கள் சில மட்டுமே, அதில் ஒன்றாக, தொழிலாளர் போராட்டம் குறித்த வரலாற்றைப் பேரா. தே. வீரராகவன் எழுதியுள்ளார். சென்னை ..டியில் பேராசிரியராகப் பணியாற்றி சமீபத்தில் மறைந்த தே. வீரராகவன், தன்னுடைய முனைவர் பட்டத்திற்காக, மேற்கொண்ட ஆய்வு, மேற்படி நூலாக வெளிவந்துள்ளது. தமிழில் இந்நூலை 2003 ல் அலைகள் பதிப்பகம், 150 ரூபாய் விலையில் 384 பக்கங்களில் வெளிக் கொணர்ந்தது.
பேரா. தே. வீரராகவன் பார்வையற்றவர், ஆனால் மிகக் கடுமையான உழைப்பின் மூலம் நண்பர்கள் மற்றும் தோழர்கள் படிக்க உதவியதைப் பயன்படுத்தி, ஆய்வை நிறைவு செய்தார். தொழிற்சங்க உணர்வைக் கடந்து, தொழிலாளி வர்க்கத்தின் காத்திரமான அரசியலை, புரட்சிகர வர்க்க உணர்வை நோக்கி நகர்த்துவதற்கான தேவையை முன்னுறுத்தி, ஆய்வுக்கானத் தேடல்களை நிகழ்த்தி உள்ளார்.
இந்த ஆய்வு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலணி நாடாக இருந்த 1918 முதல் 1939 வரையிலான காலத்தில் சென்னை நகரில் நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டம் பற்றியது. அன்றைய சூழலில் இருந்த அரசியல், அடக்குமுறை, சங்க அங்கீகாரம் குறித்த வாதங்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பங்கேற்பு குறித்து, இன்றைய தலைமுறை புரிந்து கொள்வதற்கான தன்மையில், ஆய்வு செய்யப் பட்டுள்ளது.
ஆய்வுப் பணியில் வீரராகவன் ஈடுபட்டிருந்த நாள்களில், தமிழகத்தின்  தொழிற் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ஆகியவற்றில் தலைவர்களாக இருந்த, தோழர்கள். பி. ராமமூர்த்தி, வி.பி. சிந்தன் ஆகியோர் தமிழில் இந்த ஆய்வு, நூலாக வெளிவர விரும்பினர் என்பதை, .சீ. கண்ணன் தனது மொழிப்பெயர்ப்பாளர் குறிப்பில் எழுதி உள்ளார். இந்நூல் இன்றைய தலைமுறைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய போராட்ட வரலாற்றை நினைவு படுத்துகிறது. அதே வேளையில் புதிய போராட்டத்திற்கான உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.
சென்னை நகரில் தொழிலாளர் வளர்ச்சி:
சென்னை நகர தொழில் வளர்ச்சி குறித்த ஏராளமான புதிய தகவல்களுடன் நூல் துவங்குகிறது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதும் சென்னை யாருக்கும் தலைநகரமாக இருந்ததில்லை. பல நகரங்களைப் போல் சுரங்கம் அல்லது மிகப் பெரிய உற்பத்தி ஆலைகளைக் கொண்டு சென்னை தொழில் வளர்ச்சி பெறவில்லை. சென்னையில் துறைமுகம் இருந்ததால், அது நிர்வாக நகரமாக வளர்ச்சி பெற்றது. எனவே டிராம், அச்சகம், மெட்டல், நகராட்சி நிர்வாகம், மற்றும் பஞ்சாலை என்பது தொழிலாளர்களைப் பெரும் அளவில் கொண்டிருந்த நிர்வாகங்கள் ஆகும். இது போன்ற விவரங்கள் சென்னையின் விரிவாக்கம் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைத்துள்ளது.
சென்னை துறைமுகம் 3000 க்கும் மேற்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களுடன் கூடிய தொழிலாளர் எண்ணிக்கையை கொண்டிருந்தது. அதேபோல் ரயில்வே பட்டறையை மதராஸ்தென்மராத்தா கம்பெனி பெரம்பூரில் அமைத்தனர். இங்கு 5500 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். டிராம், மண்ணெண்ணை மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் 2000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சின்னதும் பெரியதுமான 60 அச்சகங்களில் 5000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
1910 ல் குரோம்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப் பட்டு அதில் 5000 தொழிலாளர்கள் தங்களை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டனர். பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் மில்களில் 8976 தொழிலாளர்களும், சூளை மில்லில் 2000 தொழிலாளர்களும் பணி செய்தனர். இது தவிர திருவொற்றியூரில் விம்கோ போன்ற ஆலைகள் மூலமும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்றனர். பீடித்தொழிலில் திருவல்லிக்கேணி மற்றும் ராயபுரம் பகுதிகளில் 4000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் காண்ட்ராக்ட் காரர்களில் வீடுகளில் அமர்ந்து பீடி சுற்றும் வேலைகளைச் செய்து வந்தனர். இவையன்றி கைத்தறி உள்ளிட்ட சிறு மற்றும் பாரம்பரியத் தொழில்களிலும் ஏராளமானோர் பணியாற்றினர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வேளாண் தொழிலில் இருந்து ஆலைத் தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டதையும், இத்தகையத் தொழிலாளர்கள் மிகக் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதையும் அறிய முடிகிறது.
உருவானத் தொழிற்சாலைகளின் நிர்வாகிகள், மேற்பார்வையாளர், தொழில் நுட்பர், ஆகியோர் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்துள்ளனர். பயிற்சியும், தேர்ச்சியும் கொண்ட தொழிலாளர்களிலும் குறிப்பிடத்த அளவிற்கு, ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பியர் இடம்பெற்று இருந்தனர். மற்ற அனைத்து வகை உழைப்பைச் செலுத்துவோரும் இந்தியர்களாக இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் சென்னையைச் சுற்றிய மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் ஆவர். கைவினைஞர்கள், விவசாயம் சார்ந்தோர், நிலமற்ற விவசாய கூலிகள் (பெரும்பாலும் தலித்துகள்) என, சொந்த கிராமங்களில் வறுமைக்குத் தள்ளப் பட்ட அனைவரும், சென்னைக்கு வந்தனர்.
1871ம் ஆண்டு சென்னையில் 4 லட்சம் பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 1921ல் இது 5 லட்சமாக உயர்ந்தது. ஆனாலும் வேலையின்மையும் தலைவிரித்து ஆடிய நிகழ்வுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் முதலாளித்துவ தொழில் வளர்ச்சியுடன் வேலையின்மை ஒட்டிப் பிறந்தது, என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தொழிற்சங்கம் அமைவதற்கான சூழல்:
1870 களில் ஆலைகள் உருவான பின்னணியில் வேலைத்தளத்தில் கொடுமையான சுரண்டல் முறைகள் இருந்து வந்தது. உதாரணத்திற்கு, இந்தியாவில் வேலை நேரம் குறித்த வரம்பு தீர்மானிக்கப் படவில்லை. குழந்தைகள் பெண்கள் குறைவான கூலிக்கு வேலை வாங்கப் பட்டனர். இதனால் இங்கிலாந்தின் லங்காக்ஷயரை விட குறைவான செலவில் கூடுதலான உற்பத்தி நடைபெற்றது. எனவே சந்தையில் இந்திய உற்பத்தி மலிவான விலையில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. தொடர் போராட்டங்களின்  காரணமாக, இந்தியாவில் 7 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது, என தடை விதிக்கப் பட்டது. 12 வயதுக்கு குறைவான சிறுவர்களின் வேலை நேரம் 9 மணி நேரம் என வரையறுத்து பின்னர் படிப்படியாக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 1908 ல் ஆண்களுக்கு 12 மணி நேரம் வேலை நேரம் என வரையறை செய்யப் பட்டது. 1934ல் இந்தியத் தொழிற்சாலைகள் சட்டத்தில் ஒருவாரத்தின் அதிகபட்ச வேலைநேரம் 54 மணி நேரம் எனத் தீர்மாணிக்கக்கப் பட்டது.
சென்னை நகரின் குடியிருப்பு குறித்து, ராயல் கமிஷன் சமர்பித்த அறிக்கை, சென்னை நகரின் மக்கள் தொகையில் கால்வாசி 150000 பேர், 25000 ஓரறை இருப்பிடங்களில் வசித்தனர். இதுவும் இல்லாதவர்கள் சாலையோரங்களிலும், கிடங்குகளின் திண்ணைகளிலும் படுத்துறங்கினர்”, எனக் குறிப்பிட்டு உள்ளார். இக்குடிசைகளுக்குள் காற்று போவதற்கும் வாய்ப்பில்லை. 1934 ல் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, வேலைக்குச் சென்ற, மாதாந்திர ஊதியம் பெற்ற 4736 நபர்களும், அன்றாடக் கூலிகளில் 3358 பேரும் வீடற்றவர்களாக, படுக்க இடமற்றவர்களாக வாழ்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலை செய்தனர்.
அதேபோல் குறைவான ஊதியத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தங்கள் சம்பளத்தில் பிடித்தம் என்ற தண்டனையை அனுபவித்தனர். இது டிராம்வேயில் பணிபுரிந்த தொழிலாளர்களை மிகப் பெரிய மன உலைச்சலுக்கு ஆளாக்கியது. பல்வேறு காரணங்களுக்காக அபராதம் என்பது சாதரணமாக மலிந்து போயிருந்தது. இதற்கு மேலாக நியாயவிலைக் கடை பாக்கி, ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான கட்டாய நன்கொடை பறிப்பு, போன்ற பிடித்தங்கள் போக தொழிலாளர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் மிக சொற்பமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆலைக்குள் வேலை வாங்கப் பட்ட விதம் மிகக் கொடியதாக இருந்தது. 1917ல் நடந்ததாக வீரராகவன்  பதிவு செய்த தகவல் கொடிதிலும் கொடியதாக இருக்கிறது. ஒரு தொழிலாளிக்கு அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை இயற்கை அழைப்பு கொடுத்துள்ளது. ஆனால் மேலாளர் அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் தாங்கிக் கொள்ள முடியாத தொழிலாளி, வேலைத் தளத்திலேயே மலங்கழித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மேலாளர், அந்தத் தொழிலாளியை அவ்விடத்தைச் சுத்தம் செய்யச் சொல்லி செய்த கொடுமை தாங்க முடியாததாக இருந்துள்ளது. இது போல் வேலைத்தளத்தில் தரக் குறைவாக தொழிலாளர்கள் நடத்தப் பட்டுள்ளனர், வேலையும் வாங்கப் பட்டுள்ளனர்.
தொழிலாளி கடன் வாங்குவது தவிர்க்க முடியாததாக மாறியது. குறிப்பாக சமூக கடமைகளான, திருமணம், மருத்துவம் போன்றவைகளுக்காக கடன் வாங்குவது தொழிலாளிகளிடம் அதிகரித்தது. இந்த கடனைத் திரும்ப செலுத்துவதும் ஒரு கடமையாக அதிகரிக்கிற போது, தொழிலாளர்கள் ஏராளமான தகராறுகளுக்கு ஆளாகியுள்ளனர். இவைகளை எல்லாம் கணக்கிட்டு தொழிலாளி சம்பள உயர்வு கேட்கிற போது, இந்தியத் தொழிலாளியின் திறனுக்கு இது போதும் என்ற வாதமே முன்வைக்கப் பட்டதாகத் தெரிகிறது. இந்த வாதம் பொய் என்பதை, அரசு அச்சக கண்காணிப்பாளர் கிரீன் என்பவர் தெரிவித்து உள்ளார். “ அமெரிக்க அச்சக ஊழியரைவிட, அதிக அளவு வேலை முடித்து தருபவராக இந்திய ஊழியர் இருக்கிறார். இந்தியத் தொழிலாளியின் உற்பத்தி திறன் பற்றி குறை கூற முடியாது”, எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அப்பட்டமான சுரண்டல் முறை மேற்படி பிரிட்டிஷாரின் ஆலைகளிலும், அச்சகங்களிலும், டிராம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் நடைபெற்றுள்ளது. இதை எதிர்ப்பதற்கான சூழலும் இருந்துள்ளது. ஆங்காங்கு மோதல்களும் நடைபெற்றுள்ளது. தீர்வு கிடைக்காத நிலையிலேயே சங்கம் அமைக்கும் நிர்பந்தம் தொழிலாளிக்கு ஏற்பட்டுள்ளது.
பொருந்திப் போகும் அனுபவம் அன்றும் – இன்றும்:
தொடர் போராட்டங்கள் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்தியத் தொழிற்சங்க சட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் அதை அங்கீகரித்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பது, உறுதி செய்யப் படவில்லை. இதையே இன்று வரை அனைத்து அரசுகளும், தொழிற் சங்க அங்கீகாரச் சட்டம் இயற்ற விரும்பாததைப் பார்க்க முடியும். அன்று சிம்ப்சண் வெளியாட்களுடன் பேசமுடியாது, எனக் குறிப்பிட்டதைப் போலவே, இன்று இந்தியாவில் தொழில் துவங்கியுள்ள எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்டு வருகின்றன.
1926ல் பக்கிங்காம் கர்நாட்டிக் மில்லில் வேலை நிறுத்தப் போராட்டம் பெருமளவில் நடைபெற்ற போது, நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிற் சங்கம் உருவாக்கப் பட்டு, அவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்துகிற அநாகரீகம் இருந்ததை நூல் வெளிப்படுத்துகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அச்சகத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது, ராம்நாத் கோயெங்கா, போட்டி சங்கத்தை உருவாக்கி, போராட்டத்தைச் சிதைக்க முயற்சித்து உள்ளார்.
அது இன்றளவும் இந்தியாவில் நீடித்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தில் UUHE என்ற தொழிற் சங்கத்தைப் போராடிக்கொண்டுள்ள HMIEU விற்கு எதிராக உருவாக்கி அதை அங்கீகரித்துள்ளனர். பல ஆலைகளில் வெல்ஃபேர் கமிட்டி என்ற பெயரிலும், வேறு பெயரிலும் தொழிற் சங்கத்திற்கு போட்டியான குழுக்கள் உருவாக்கப் பட்டு, தொழிலாளர் ஒற்றுமை சிதைக்கப் படுகிறது. நோக்கியா சீமென்ஸ் போன்ற நிறுவனம் ஒன்னரை ஆண்டுகள் தொழிற் சங்கத்துடன் பேசி ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கியபின், சங்கத் தலைவர்கள் கையொப்பம் இடக் கூடாது. தேவை எனில் தொழிலாளர்கள் கையொப்பம் இடட்டும், என வலியுறுத்தி, தொழிற் சங்கத்தை அடக்க முயற்சித்தனர்.
அன்று 3000 க்கும் அதிகமான, சென்னைக் கார்ப்பரேசன் தொழிலாளர்கள் ஒரு ரூபாய் சம்பள உயர்விற்காக வேலை நிறுத்தப் போராட்டம், நடத்திய போது, தொழிலாளர்களிடையே இருந்த மாலா, மாடிகா, எரிக்கலா, ஒட்டா போன்ற சாதிய வேறுபாடுகளைப் பயன் படுத்தி, போராட்டத்தை உடைக்க முயன்றுள்ளனர். இத்தனைக்கும் மேற்படி சாதிகளில், தொழில் ரீதியிலோ, சமூக ஒடுக்குமுறை ரீதியிலோ எந்த வித்தியாசமும் இல்லை. ஆனாலும் பிளவு படுத்தப் பட்டனர். இதில் அன்றைய தொழிலாளர் துறை ஆணையத்திற்கும் பங்குண்டு. இன்று வரையிலும் தமிழகத்தில் சாதிய அடையாளங்களை முனவைத்து அல்லது அரசியல் கட்சி வேறுபாடுகளை மையப் படுத்தி, தொழிலாளர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருகிற ஏற்பாடுகள் உள்ளது. இதை ஆளும் கட்சிகளின் துணை கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
வரலாறு 100 ஆண்டுகளைக் கடந்து பயணித்து வந்தாலும், சுரண்டலும், ஒடுக்கு முறையும், புதிய வடிவங்களில் தொடருகின்றன. புதிய நிறுவனங்களும், சமூகத்தில் உள்ள அடையாளங்களை கூடுதலாக முன்னுறுத்தி, தொழிலாளி வர்க்க குணத்தைப் பின்னுக்குத் தள்ள முயற்சிக்கும் இன்றைய சூழலில், இடதுசாரி ஊழியர்களும், ஒவ்வொரு தொழிற் சங்க ஊழியரும், தொழிலாளியும் வாசிக்க வேண்டிய, மிகமுக்கியமான புத்தகம்.