வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சமுக பாதுகாப்புடனான வேலை

நாம் இருக்கும் நாடு நமதென்ப தறிவோம்! இப்படி இன்று எளிதில் சொல்லித் திரிய முடியுமா? மதம், சாதி, இனம், மொழி, உள்ளூர், வெளியூர் இன்னும் பல பெயர்களில் ஆயிரம் ஆயிரம் வேற்றுமைகள் தொடருகிறது. வேற்றுமை உணர்வும், வெறுப்பும் அதிகரிக்கிற போது கையில் ஆயுதங்களுடன் முதலில் நிற்பது இளைஞன் தான். இப்போது மும்பையில் வன்முறை பயங்கரத்தை நிகழ்த்தியது 18 முதல் 28 வயதுக்குள்ளான இளைஞர்கள் தான். 60 மணி நேரம் விடாது போரிட்டு, உயிரை இழந்து தாஜ் ஹோட்டலுக்குள் இனி நுழையலாம் என வழி தந்ததும், இளைஞன் தான். எல்லா இடத்திலும் இளைஞன், நல்லது, கெட்டது என விளைவுகள் பற்றிய கவலையில்லாமல் இரைந்து கிடக்கின்றான்.
எல்லா சாதனைகளுக்குப் பின்னாலும் இளைஞர்கள் இருந்ததையும், இருப்பதையும் வரலாறு சொல்கிறது. ரோமாபுரியில் அடிமை-களை கொடுமை படுத்தியதற்கு எதிரான போர் முழக்கத்தை முன்-வைத்தது ஸ்பார்ட்டகஸ் எனும் இளைஞன், இந்தியாவில் பிரிட்டி-ஷாருக்கு எதிரான போராட்டத்தை காட்டூத் தீயைப் போல் பரவச் செய்தது, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர ஆஸாத், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், குதிராம் போஸ், கல்பனா தத், சாந்தி தேவி, பீரீதிலதா, துர்கா போன்ற இளைஞர்கள் தான்.
அறிவுக் கண்ணை சரியாகத் திறந்தால் பிறவிக் குருடனும் கண்-திறப்பான் என்று பாரதிதாசன் பாடியதைப் போல், இளைஞனுக்கு நல்லவற்றை சரியான வழியில் கற்றுக்கொடுத்தால், அதற்கான வாய்ப்புகள் கொடுத்தால் நிச்சயமாக இளைஞர்களைக் கொண்ட நாடு, நல்ல எதிர்காலத்தைக் கொண்ட நாடாக அமையும். இந்தியா 54 சதம் இளைஞர்களைக் கொண்ட நாடு (15 வயது முதல் 35 வயதிற்குள் மட்டும்) மேற்படி வயதுக்குள்ளிருக்கும் இளைஞர்கள் தமிழகத்திலும் 3 கோடிப் பேர். எனவே, இந்தியா நல்ல எதிர்-காலத்தில் பயணிக்கும் வாய்ப்பினை, மற்ற நாடுகளை விட அதிகம் கொண்ட நாடு. அதற்கு முதலீடாக உள்ள இளைஞர்களை ஆக்கப் பூர்வ-மாகப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமை.
ஒரு இளைஞன் எப்போது ஆக்கப்பூர்வமாக வளருவான்? என்ற கேள்வியினை, எழுப்பிப் பார்ப்பதன் மூலமாகவே விடை காண முடியும். அரசுக்கும், இளைஞனின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்-கிறது. அரசு செலுத்துகிற அக்கறை இளைஞனை சிறந்த வழியில் வளர்ப்பதற்கான துவக்கமாக இருக்கும். கல்வி கொடுப்பதையும், வேலை பெறும் உரிமையையும் அரசு தனது பொறுப்பாக, கடமையாக ஏற்று நிறைவேற்றினால், இளைஞனின் சமூகப் பார்வை -விரிவு பெறும். நாட்டின் மீதான பற்றுதலுடனும், வளர்ச்சிக்கு கரம் கோர்க்-கும் சக்தியாகவும், இளைஞன் இருப்பான்.
இந்தியத் துணைக்கண்டம், ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்-தில் அழுத்தப்பட்டு கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தி முதல் கம்யூனிஸ்-டுகள் வரை அடிமை இந்தியாவில் கல்வியும், வேலையும் எல்லோருக்கும் கிடைக்காது. விடுதலை பெற்ற நமது சொந்த ஆட்சி-யில்தான் இது சாத்தியம், என்று முழங்கினார்கள். இந்த முழக்கம் இளைஞர்களை ஈர்த்தது. விடுதலைக்கானப் போரில் தங்களை அர்ப்பணித்தார்கள். மாணவர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளி-யில் வந்தார்கள். தொழிலாளர்கள் ஆலைகளைப் புறக்கணித்தார்கள். விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும் தங்கள் சுய தேவையை மறந்து, விடுதலைக்காக உழைத்தார்கள்.
62 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஏன் இன்னும் வறுமை, கல்வி-யின்மை, வேலையின்மை? நமது சொந்த ஆட்சியாளர்களுக்கு 62 ஆண்டு-கள் போதாதா? மகாத்மாவின் வாரிசுகள் தானே காங்கிரஸ் ஆட்சியாளர்கள். 62 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையில் தானே ஆட்சி இருந்தது. இது வெறும் ஆட்சி மாற்றத்-துடன் மட்டும் முடிந்து போவதில்லை, கொள்கை மாற்றமும் தேவைப்-படுகிறது. ஆட்சி மாற்றத்துடன், மக்களை நேசிக்கிற கொள்கை மாற்றமும் உருவானால் தான், இது போன்ற பிரச்சனைகள் முழுமை-யாக தீர்க்கப்படும்.
வேலை இப்போது எப்படி இருக்கிறது?
சென்னை மாநகரப் பேருந்துகளிலும், ரயில் நிலையங்களிலும் தினசரி சம்பளம் 170 ரூபாய், வீட்டில் இருந்து கொண்டே மாதம் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம், இப்படி பல்வேறு வாசகங்கள், சுவரொட்டி-யாக ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடியும். இந் விளம்பரங்களைக் காணுவோர், இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகை இருந்தும், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லையா, என்று தான் கேள்வி எழுப்-புவர். மேற்படி விளம்பரங்களில் சிலர் பலன் அனுபவித்து இருக்க-லாம். ஆனால் பலர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள், என்பதே உண்மை. இது போன்ற பல விளம்பரங்களைப் பார்த்து, விண்ணப்பம் செய்து, வேலையும் பெற்று அதன் பின் பேசிய சம்பளம் கொடுக்க-வில்லை என்று புகார் செய்யும் இளைஞர் கூட்டம் அதிகரித்து வரு-கிறது. வேலை ஒப்பந்தம் செய்கிற போது, படித்த சான்றிதழ்களையும் நிறுவனங்கள் பிடுங்கிக் கொள்கின்றன. இதனால் ஓரளவு நல்ல வேலை கிடைக்கிற போது, சான்றிதழ்கள் பறிக்கப்பட்ட காரணத்-தினால், அதையும் இழக்கிற கொடுமை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஏமாந்து போகிற இளைஞர்கள் டி.ஒய்.எப்.ஐ அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, தங்களைக் காப்பாற்றும்படி கோருகிற, அவலம் அதிகரித்து வருகிறது. எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவிகள், தன் விதியை நினைத்து ஏமாற்றத்தையே வாழ்க்கையாகக் கொண்-டுள்ளனர்.
வேலை என்பது பலவிதமான அனுபவமாக இருந்து வருகிறது. மனித-குலம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. வேலை நேரம் முடிந்த-வுடன், வார விடுமுறை வந்தவுடன் (விடுமுறை வசதி இருப்-பவர்களுக்கு) களைப்பிலிருந்து விடுதலை, சோர்வு, இயந்திரத்தின் கட்டுப்பாடு, வேலை செய்யும் இடம், அல்லது நிர்வாகத்தின் கெடுபிடி போன்றவற்றிலிருந்து விடுதலை என்று சிலர் நம்புகிறார்கள். சிலர் இன்றைக்கும் இவ்வளவு வேலை இருக்கிறதே, என்று வீட்டுச் சுமையை எண்ணி களைப்படைவதும் உண்டு. இத்தகைய மன-வருத்தத்தைப் போக்குகிற வகையில் சொல்லப்பட்ட வரிகள் தான், வேலை செய்வது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியது, என்பதாகும். இது போன்ற வரிகள். சொல்பவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தான் பொருந்தும். நல்ல வேலை செய்பவன் புகழ்ச்சிக்கு உரியவன் ஆகிறான், யார் உடல் உழைப்பில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக இருக்கிறார்களோ, அவர்களிடம் இருந்து தான், இது போன்ற வரிகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமெரிக்கப் பொருளாதார அறிஞர், ஜான் கென்னத் கால்ப்ரெய்த் கூறுகிறார்.
எனவே, மனங்குளிரப் பேசி வேலை வாங்குவது என்பதும், சிரிக்க, சிரிக்கப் பேசி வேலை வாங்குவது என்பதும். சுரண்டல் சமூகத்தில் உலகம் முழுவதும் இருக்கின்ற ஒன்று, என்பதை கால்ப்ரெய்த் நினை-வூட்டுகிறார்.
இந்திய ஆட்சியாளர்களும், தமிழக ஆட்சியாளர்களும் தமது ஆட்சிக் குடையின் கீழ் வேலையின்மை என்ற கொடுமை இருப்பதாக ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை. வாரம் ஒரு முறை பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதும், அது பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் என்பதும், பத்திரிகையில் தமிழ் நாட்டு முதல்வர் வெளியிடும் செய்தி. தகவல் தொழில் நுட்ப கொள்கை என்ற பெயரிலும், தமிழக தொழில் கொள்கை என்ற பெயரிலும், தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். என்று மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அறிவிப்புகள் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பின்னரும், பயன்பெற்றவர்களை கண்டறிய இயலவில்லை. ஏனென்றால் இவை அனைத்தும் ஒப்பந்தங்கள் அவ்வளவு தான். கிராமத்தில் பேசிக் கொள்வதைப் போல் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிற கதை.
ஜான் பெர்க்கின்ஸ் என்பவர், பன்னாட்டு நிறுவனங்களுக்காக மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பந்தம் போடுவதையும், அது குறித்து பூதாகரமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு, மக்களையும், ஆட்சி-யாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியதையும், தான் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம் என்ற புத்தகத்தில் குறிப்-பிட்டுள்ளார். தமிழக அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தமும், அவர்கள் சிரித்துக் கொண்டே போடுகிற கையெழுத்தை, பத்திரிகைகள் பிரமாண்டப் படுத்துவதும் அப்படிப்-பட்டதே. இத்தகைய பிரமாண்டங்கள் சில வேலைவாய்ப்புகளைத் தந்திருக்கும். ஆனால் அவை யானைப் பசிக்கு சோளப் பொரி அவ்வளவே.
இன்னொரு புறம் வேலையின்மை என்பதை வரையறை செய்கிற போது, முழுக்க முழுக்க எந்த வேலையும் செய்யாதவர்களே, வேலை-யற்றவர், என்று அரசு குறிப்பிடுகிறது. இந்த வரையறையின் படி நாட்-டில் பிச்சை எடுப்பவர், சாலையில் படம் வரைந்து வைத்து அதன் மீது விழும் பைசாவை எடுத்துக் கொள்பவர் ஆகியோரும் வேலை-யில் இருப்பவர்களாக கருதப்படுகின்றனர். சி.டி.குரியன் என்ற பொருளாதார அறிஞர், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்து, ஒரு வேளை உண்டு, வாழ்க்கை நடத்துபவர்களையும் இந்திய அரசு வேலையில் இருக்கிறார் என்று கணக்கெடுப்பு செய்திருக்கிறது, என வருத்தத்தோடு குறிப்பிட்டார். தேசிய சாம்பிள் சர்வே என்ற அமைப்பு 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 4சதமானோர் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர், என அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழகத்திலோ வெறும் 2 சதமானோர் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனக் குறிப்பிடுகின்றனர். இத்தகைய தவறான தகவல்களில் இருந்து, கணக்கெடுப்புகளும், புள்ளி-விவரங்களும் பொய் அறிக்கைகளே தவிர வேறில்லை, என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அரைவயிறு உணவோடு, தெருவில் பிழைப்பு நடத்தும் மக்களை இரக்கமற்ற முறையில், இவர்களெல்லாம் வேலையில் இருக்கிறார்கள் என்ற அறிவிப்புகள் மூலம் ஆட்சியாளர்கள் அகம் குளிர வாய்ப்பு இருக்கிறதேயொழிய, நாட்டின் கௌரவம் மதிக்கத் தக்கதாக இருக்-காது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்தியா சென் குறிப்பிடுவதைப் போல், வேலை என்பது, ஒரு சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
1. வருமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
2. உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
மேற்படி முப்பரிமானங்களைக் கொண்டது தான் வேலை, என்று குறிப்பிட்டால், இந்தியாவில் உள்ள 92 சதமான மக்கள் பாது-காப்பான வேலையில் இல்லை என்றே அர்த்தமாகும். இந்திய நாடாளு-மன்றத்தில் அர்ஜூன் சென் குப்தா கமிட்டி, 83.77 சதமான மக்களின் வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.20 என்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. ஆக இப்போது இந்தியாவில் உள்ள வேலை சமூக பாதுகாப்பற்ற வேலை மட்டுமே. முறைசாராத் தொழில்கள்:
உலகிலேயே அதிகமான மக்கள் பிரிவினர் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு இருப்பது ஆசியா கண்டம் என்றும் அதிலும் இந்தியாவில் தான் அதிகம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது இடம் பெயர்வோர், சொந்தத் தொழில் செய்வோர், கைத்-தறி, விசைத்தறி ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடி, பெரும் தொழிற்-கூடங்கள் வந்ததாலும், விவசாய வளர்ச்சி இல்லாததாலும் நிலத்தை இழந்தோர் போன்ற அனைவரும், தங்களின் வாழ்க்கைத் தேவைக்காகச் செய்யக்கூடிய அன்றாட வேலைகளே முறைசாராத் தொழில் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நேரடி அரசு ஊழியர்கள், சுரங்கம், ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ் உள்-ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வோரை விட, முறைசாராத் தொழில்களில் இருப்போரின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகம்.
உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்குப் பின், அரசுத்துறை மற்றும் தனியாரிடம் இருக்கும் அடிப்படை உற்-பத்தித் துறைகளில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட காரணத்-தினால், ஆட்குறைப்பு செய்யப்பட்டது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்-படுவதில்லை. தேவைப்படும் நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில், வேலைக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இத்தகைய காண்ட்-ராக்ட் ஊழியர்களாகத் தான், பொறியியல் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் வேலை பெற முடிகிறது. இது நிரந்தரமற்றதாக இருப்பதால், தொடர்ந்து வேலை தேடுவோராகவே இளைஞர்கள் உள்ளனர்.
பஞ்சாலைகள் நசிவைச் சந்தித்துப் பின்னர் மீண்டும் முன்னேற்றம் கண்ட போது, நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக, ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிகம் நியமிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக இளம் பெண்கள், கூடுதலாகப் பணியில் அமர்த்தப்பட்டனர். சுமங்-கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம், கேம்ப் கூலி உள்ளிட்ட பெயர்-களில் பல ஆயிரம் எண்ணிக்கையிலான பெண்கள் 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டனர். இத்தொழில் கூடங்களில் உணவு, தங்குமிடம் இல்லாமல் சம்பளம் பேசப்படுவதும், பின்னர் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் சம்பளத்தில் பிடித்துக் கொண்டு மீதியைக் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது. உடல் நலம் இல்லை என்றாலும் கூட வேலை வாங்குவதும், பாலியல் சீண்டல்களும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவதும் கேம்ப் கூலி முறையில் நடைபெறுகிற கொடுமைகள் ஆகும்.
உலகமயமாக்கல் கொள்கையின் காரணமாக வளர்ச்சி பெற்ற தொழில்கள் கட்டுமானம் (51 லட்சம் பேருக்கு வேலை) ஹோட்டல் மற்றும் நிதித்துறை உள்ளிட்ட சேவைத் துறை ஆகும். இவற்றில் கட்டு-மானம், ஹோட்டல் போன்றவற்றில் படிக்காத, இடம்பெயர்ந்த மக்கள் வேலை பெற்று வந்தனர். படித்த இளைஞர்கள் நிதித்துறை சார்ந்த வங்கிகளிலும், மொபைல் ஃபோன் சேவைகளிலும், வேலை பெற்றனர். அதே போல் தகவல் தொழில்நுட்பத் திறன் காரணமாக மென்பொருள் நிபுணர்களாகவும், ஙிறிளி (ஙிவீஸீமீ ஜீக்ஷீஷீநீமீ ஷீஷீக்ஷீநீவீஸீரீ) மூலமான வேலைகளையும் பெற்று வந்தனர்.
மேற்படி வேலைகளுக்கும், அரசுத் துறையில் பணியாற்றுகிற வேலைகளுக்குமான வித்தியாசத்தை நம்மில் பலர் உணரவில்லை. பாதுகாப்பான வேலை என்பதில் அரசுத்துறை முதலிடத்தில் இருக்-கிறது. அதில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல், அப்-ப-டியே விட்டு வைப்பதும், தனியார் துறைகளில் நிரந்தரமற்ற வேலை வாய்ப்பைப் பெருக்குவதும், முறை சாராத் தொழில்களில் இளைஞர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ லிணீதீஷீக்ஷீ ளிக்ஷீரீணீஸீவீணீவீஷீஸீ) இயக்குனர், உலக வேலைவாய்ப்பு மங்கி வருகிறது. மேலும் மேலும் மங்குகிறது. தொடர்ந்து உயரும் வேலையின்மையும் தகுதி குறைவு வேலைகளும், இளைஞர்களை, பெரியவர்களை, திறன் குறைந்தோரை, ஊனமுற்றோரை, சிறுபான்மை இனக்குழுவினரை, சமூகத்தில் ஓரம் கட்டுகிறது என்று குறிப்பிட்டார். இது இன்றைய இந்தியாவில் நிகழும் சம்பவங்களுடன் இணைத்துப் பார்த்தால் சரியென்றே புலப்படும்.
அரசின் கொள்கைகளும் வேலை வாய்ப்பும்:
இந்தியாவின் முதலாளித்துவ பொருளாதார மேதைகள், உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாகத் துவங்கிய போது, உற்பத்தி பெருகும் வேலையின்மை தீரும் என்றெல்லாம் கூறினார்கள். இந்த மாயை சில சாகசங்களை நிகழ்த்திக் காட்டியது. படித்த பெரும் கூட்டம் இந்த மாயையை நம்பியது. இடதுசாரிகளின் எதிர்ப்பை ஏற்கவில்லை. இடதுசாரிகள், முதலாளித்துவத்தின் அடிப்படை விளைவு வேலையின்மை, என்று கூறினர். பொருளாதார விதியின் படி, உழைப்பு சந்தையில் வேலையற்றவர்கள் அதிகம் இருப்ப-தால் தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமை வலுவிழக்கும். உண்மை ஊதிய விகிதம் சரியும். வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க உரிமைகளை கடுமையாகப் பாதிக்கும். வேலையற்றோரை, முதலாளிகள், தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். எனவேதான் வேலையின்மை என்பது முதலாளித்துவத்திற்குத் தேவைப்படுகிறது. மேலே குறிப்பிட்டபடி முறைசாராத் தொழிலாளர்-களை உருவாக்குவதும் இப்படித்தான். டி.ஒய்.எப்.ஐ உலகமயமாக்கல் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி மற்றும் வேலையிழப்பு வளர்ச்சி என்று குறிப்பிட்டது. பலர் ஏற்க-வில்லை. ப.சிதம்பரம் போன்றோர் 8- சத வளர்ச்சி, 9 சத வளர்ச்சி, பங்கு சந்தை ஏற்றம், இறக்கம் என மக்களுக்குப் புரியாத மொழிகளில் பேசிக் கொண்டிருந்தனர்.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தி, வளர்ச்சி பெற்றால், உற்பத்திக்கேற்ப வேலைவாய்ப்பு கூடும். இந்தியாவில் இது நடைபெறவில்லை. பொருளாதார விதி ஏன் இந்தியாவில் அமலாக-வில்லை என்ற கேள்வியை எழுப்பிய போது, தொழிற்சங்கங்கள் தான் காரணம் என்றனர். ஆனால், இலாபத்தின் தேவைக்காக வேலை-யில் அமர்த்துவதும், எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பு-வதும் முதலாளிகளின் அல்லது நிறுவனங்களின் விருப்பமாக நீடிக்-கிறது. மிகச் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் 1900 பேரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டதும், கிங் ஃபிஷர் விமான நிறுவனம் சம்பளக் குறைப்பு செய்ததும், இன்போசிஸ் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு அறிவிப்பு செய்து, பின் சம்பளக் குறைப்பு செய்ததும் உதாரணங்களாகும்.
2001இல் இருந்து மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு 2 சதம் பேரை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை, மத்திய அரசு பணிகளில் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசுத்துறையிலும், அதேபோல் ஆசிரியர் பணியிடங்-களும் காலியாக உள்ளன. ரயில்வேயில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் இருந்ததாகவும் சில ஆயிரம் மட்டுமே சமீபத்தில் பூர்த்தியானதாகவும் தகவல்கள் உள்ளன. வங்கித் துறையில் விருப்ப ஓய்வு அடிப்படையில் வெளியேறிய ஊழியர்களின் பணியிடங்கள் சுமார் ஒரு லட்சம் காலியாக உள்ளது. இதுபோல் பல பொதுத்துறை நிறுவனங்கள் குறித்தும் தகவல்கள் உள்ளன. (ஆதாரம் 2005 பிஸினஸ் ஸ்டாண்டர்டு) சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி பாரத் மிகு மின் நிறுவனத்திடம் (ஙிபிணிலி) சில கேள்விகளை எழுப்பி தொழிலாளிக்குச் சாதகமான தீர்ப்பினை வழங்கியது. ஐ.டி.ஐ முடித்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும், பயிற்சி பெற்ற பிறகு திறன் பெற்றவராக மாறிய தொழிலாளியின் திறமையும், பயன்-படுத்தப்படாமல் இருப்பது சரியல்ல, என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஙிபிணிலி ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். பொதுத்துறையே இவ்வளவு பலவீனத்துடன் இருந்தால், தனியார் துறையை யார் நிர்பந்திப்பது?
உலக வேலை நிலைமைகள் 2005 என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையில், வேலை இழந்தவர்கள் மற்றும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 20 கோடிக்கும் அதிகம் எனக் குறிப்பிட்-டுள்ளது. இதில் 15 முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள் எண்-ணிக்கை 14.4 சதமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய விவரம். தற்போதைய விவரங்கள் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. அமெரிக்-காவில் 2008 ஆகஸ்டில் ஒன்னரை லட்சம் வங்கி மற்றும் நிதித்-துறை ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் காரண-மாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பனியன் மற்றும் ஆயத்த ஆடைகள் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் திருப்பூரில் உற்பத்தி தேக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய நிதிச்சேவைகள், பி.பி.ஓ.; கே.பி.ஓ. நிறுவனங்கள், ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதிகள், வாகனங்கள்துறை ஆகியவை பாதிக்கப்-பட்டுள்ளன. கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் 30 சதவீத பணி-நியமனம் நடைபெறுகிறது. மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் 50 சதம் பணிநியமனம் நடைபெறுகிறது. ஜவுளி, ஆயத்த ஆடை துறை-களில் 7 லட்சம் வேலைகள் இந்தியா முழுவதும் பறிபோன தகவலை 30 நவம்பர் 2008 நாணய விகடன் பதிவு செய்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த சேவைகள் உலகளாவிய சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பணிநியமனத்தை பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட பலர் பணி நியமன உத்தரவுக்காக 8 மாதங்களாக காத்திருக்கின்றனர். 100 பேருக்கு வாய்ப்புக்கிடைத்த ஐ.டி துறையில், இனி 10 பேருக்கு வேண்டுமானால் வாய்ப்புக் கிடைக்கும் என்று டாக்டர் அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வு-பெற்றுள்ள ஒபாமா, தன் கொள்கையை அறிவித்த பின்னரே ஐ.டி. துறையின் இதர பாதிப்புகள் வெளியாகும் என்றும் சொல்லப்-படுகிறது. 80 சதவீத வங்கிப் பணிகள் இந்தியாவில் பொதுத்துறையாக இருப்பதால், இந்தத் துறை தப்பியது. ஆனால் சரிவு காரணமாக 21 சதமான பணிநியமனம் குறையும் என்றும், பணி நீக்கம் அதிகரிக்கும் என்றும், நவ 2008 இந்தியா டுடே கூறுகிறது. செப். 2008இல் மோட்-டார் தொழிலின் வளர்ச்சி _6 % வீழ்ச்சியடைந்தது என பேரா.சி.பி.-சந்திரசேகர் குறிப்பிடுகிறார்.
உலகமயமாக்கல் கொள்கையைத் தமிழக அரசும் தீவிரமாகப் பின் பற்றத் துவங்கிய காரணத்தால், தமிழக உள்ளாட்சித்துறை துவக்கு-வதாக அறிவித்த கிராம நூலகங்களுக்கு, ஓய்வு பெற்றவர்களை நியமன-மிக்க அரசாணை எண் 177 பிறப்பிக்கப்பட்டது. தமிழக உயர்கல்வித்-துறை, அரசுக் கல்லூரிகளில் உள்ள 3025 காலிப்பணியிடங்களை ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நிரப்பலாம் என அரசாணை எண் 274 (04.07.08) வெளியிடப்பட்டது. மாநில அரசு அறிவித்த வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள 250 காலிப்-பணியிடங்களை நிரப்பக் கோரி, மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மீது டி.ஒய்.எப்-.ஐ சார்பில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும், என வழிகாட்டுதல் (ஞிமிஸிணிசிஜிமிளிழி) கொடுத்தது. 20.11.07 அன்று மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை டி.ஒய்.எப்.ஐக்கு, காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடிதம் எழுதியது. ஆனால் இதுவரை செயல்படவில்லை. இந்நிலை-யில் மாநில அரசு 2.5 லட்சம் காலிப்பணியிடங்களை அரசுத்துறையில் பூர்த்தி செய்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான எந்த பொதுத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. பகிரங்கமாக என்னென்ன வழிகளில் பூர்த்தி செய்தோம் என்கிற வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயாரில்லை.
2005 பிப்ரவரில், மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினார். அதில் நிதி நெருக்கடியினை எதிர் கொள்கிற தேவைக்காக, மாநில அரசுத் துறையில் உள்ள காலிப்-பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டாம். அறிவிக்கப்படாத வேலை நியமன தடைச்சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இதை எதிர்த்து டி.ஒய்.எப்.ஐ கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா என பல வடிவங்களில் நாடு முழுவதும் போராடியுள்ளது. இன்று வரை விடிவு இல்லை. இத்தகைய செயல்பாடுகள் மூலம், அரசும், தனியார் துறையும் நிதி நெருக்கடியில் முழ்கியுள்ளது தெளி-வாகிறது. நெருக்கடியில் இருந்து மீள வேலை வாய்ப்புகளுக்கு வழி-விடாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை மத்திய, மாநில அரசுகள் சூறையாடியுள்ளது.
இப்போது நமது ஆட்சியாளர்களிடம் அமெரிக்காவின் பொருளா-தார நெருக்கடி, இந்தியாவைப் பாதிக்குமா? என கேள்வி கேட்டால் ஆமாம். லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பதிலளிக்கிறார்-கள். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நாயகி அடி அடியென்று அடித்து விட்டு வலிக்கிறதா என்று கேட்பார், ச்ச் என்று, வலிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டுவார். பின் வடிவேலுவை குனிய வைத்து முரட்டுத் தனமாக தாக்கி விட்டு, இப்ப என்று கேட்பார், அதற்கு வடிவேலு லைட்டா என்று பதிலளிப்பார். படம் பார்க்கும் அனைவரையும் இக்காட்சி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இதே போல் தான் நமது ஆட்சியாளர்கள், ஒன்றும் செய்யாது என்று பேசி வந்தவர்கள், இப்போது லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என முனு முனுக்கத் துவங்கியுள்ளனர். பாவம் இவர்களும் எவ்வளவு காலம் தான் வலிக்கா-தது போலவே நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் மன்-மோகன் சிங் மற்றும் சிதம்பரம் வகையறாக்களுக்கு வலி ஏற்பட, 18 ஆண்டு கால பிரச்சாரமும், போராட்டமும் தேவைப்பட்டிருக்கிறது.
சமூகப் பாதுகாப்புடனான வேலையின் அவசியம்
அன்றாடக் கூலி வேலை செய்பவர் துவங்கிக் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர் வரை எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம், என்ற நிலை இருப்பது ஆபத்தானது. அமெரிக்காவில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவுடன், தன் மொத்த குடும்பத்தையும் சுட்டுக் கொலை செய்து விட்டு, தானும் சுட்டு இறந்து போகும் இளை -ஞர்கள் அதிகரித்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியர்களும் இதில் அடக் கம். இந்தியாவிலும் தற்கொலைகள் ஆங்காங்கே அதிகரித்துள்ளது.
உலகப் பொருளாதாரச் சரிவின் தொடர்ச்சியாக, இந்திய நிறு-வனங்கள் சுமார் 10 லட்சம் பேரை வேலை நீக்கம் செய்துள்ளதாக நவம்பர் 2008 இந்தியா டுடே பத்திரிகை தெரிவிக்கிறது. குளோபல் லாஜிக் என்கிற நிறுவனம் 95 பேரை திடீரென நீக்கியுள்ளது. இவர்-களில் ஒருவர், அசோக் ஜெய்ஸ்வால் ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இப்போது வேலை நீக்க உத்தரவினால், வீட்டுக் கடனை எப்படி அடைப்பது என திண்டாடிக் கொண்டு இருக்கிறார், என இந்தியா டுடே கவலைப் படுகிறது. மாதம் ஒன்னரை லட்சம் ரூபாய் வாங்குபவரே இவ்வளவு கவலைக்கு ஆளானால், அன்-றாடம் சம்பளம் வாங்குகிற, அல்லது இந்தியாடுடே குறிப்பிட்ட ஜவுளித் துறையில் நீக்கப்பட்ட ஊழியர்கள் 7 லட்சம் பேரின் வாழ்க்கை எதிர்காலம் என்னவாகும்?
எவ்வளவு நிதி நெருக்கடிகள் இருந்தாலும், முதலாளிகள் பாதிக்கப்-படுவதில்லை. ஏனென்றால், முதலாளி ஆட்குறைப்பு மூலமாகவோ, சம்பளக் குறைப்பு மூலமாகவோ தனது லாபத்தை தக்க வைத்துக் கொள்கிறார். நெருக்கடியை தொழிலாளிகளுக்கு பகிர்ந்து கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சமூகம், முதலாளியை அனுமதிக்-கிறது. ஆனால் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி நிலை? ஏற்கனவே இந்திய சமூகத்தில் வேலை நிறுத்தம் கூடாது, முதலாளி-களை எதிர்க்கக் கூடாது, தொழிற்சங்கம் கூடாது, என பேசியவர்கள் கூட தங்கள் குரலை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்-ளது. தொழிற் சங்க உரிமை, பேரம் பேசும் உரிமை எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம், நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை தூக்கி எறிய முடியாது, என்பது நிரூபனமாகி உள்ளது.
காண்ட்ராக்ட் என்ற பெயரில் வளர்ச்சி பெற்றுள்ள தொழிலாளர் எண்ணிக்கையும், முறை சாராத் தொழிலாளிகளாக குவிந்துள்ள கோடிக் கணக்கான தொழிலாளிகளும், தகவல் தொழில் நுட்பம், உள்-ளிட்ட பல்வேறு சேவைத் துறைகளில் பணியாற்று வோரும், தொழிற் சங்கம் அமைத்துக் கொள்ள முன் வருவதே முதல் கட்ட சமூகப் பாதுகாப்பு ஆகும். இரண்டாவது ஜவுளித்துறை உள்ளிட்ட எல்லாத் தொழில்களிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு, தொழிலாளர் நலச் சட்ட உரிமைகள் அமலாக வேண்டும். பிரா-விடண்ட் ஃபண்டு, கிராஜூவிடி, வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, ஓய்வூதியம் ஆகிய அடிப்படைத் தேவைகள் எல்லாத் துறையிலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், எவ்வளவு அதிக-மான சம்பளம் கொடுக்கப்பட்டாலும், நுகர்வு கலாச்சாரம் ஒவ்வொரு இளைஞனையும் வழிப்பறி செய்யாத குறையாக பணத்தை சூரையாடிச் செல்வதில் இருந்து தப்பிக்க முடியாது. மூன்றாவது ஓய்வு நேரம் மிக முக்கியமானது. 1899ஆம் ஆண்டு தோர்ஸ்டீன் வெப்லன் என்ப-வர் ஓய்வை நன்கு அனுபவிப்பர்கள் குறித்து, சுகவாசி வர்க்கத்தின் கோட்பாடு எனும் நூலை எழுதினார். ஏழைகளுக்கு தான் வேலை அவசியம். பணக்காரர்களுக்கு வேலையில் இருந்து விடுதலை என்பது பாராட்டுக்குரியது என்றார். ஏழைகளுக்கு ஒய்வு நேரம் என்பது பணச்செலவு, என வரையறை செய்தது. எவ்வளவு கொடுமையானது. 110 ஆண்டுகள் ஆன பின்னும் இதே கருத்து நமது ஊரிலும் நிலவு-கிறது. நமது மக்கள் ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்-தாலும், ஓய்வு என்பது வசதியானவனுக்கே என்ற பொதுப்புத்திக்கு ஆட்பட்டுள்ளனர். ஆகவே தான் 12 மணி நேரமானாலும், கேள்வியே கேட்காமல் உழைக்கிறார்கள். ஒரு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் கல்லறையில் எழுதி வைக்கப்பட்ட வாசகம், நமது உழைப்பாளர்-களுக்கும் பொருந்தும்.
நண்பர்களே, எனக்காக வருந்தாதீர்கள்
எனக்காக எப்போதும் அழவும் வேண்டாம்
ஏனெனில் நான் இனி எப்போதும், எதுவும் செய்யப் போவதில்லை.
ஏனென்றால் நான் பிணம்.
மேற்படி வரிகளைப் போல், நாம் கேள்வி கேட்காமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். சாவு மட்டுமே நமக்கு ஒய்வு கொடுக்கும் நிலை இருக்கிறது. இதற்கு முடிவு காண வேண்டுமானால், சமூகப் பாதுகாப்புடனான வேலை வேண்டும்.
ஒரு மனிதன் பிறப்பில் துவங்கி இறப்பு வரை உயிர் வாழ காற்று, நீர், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய ஐந்தும் தேவை. இதில் காற்றைத் தவிர (இப்போதைக்கு) மற்ற அனைத்தும் விலை பேசப்-படுகிறது. ஒரு மனிதனால் 18 வயது முதல் 60 வரை உழைக்க முடி-யும். எஞ்சிய வாழ்நாளுக்கும் தேவையானவற்றை இந்த சமூகம் உறுதி செய்ய வேண்டும். அதை அந்த மனிதன் வாழ்கிற சமூகம் தருகிற கல்வியிலும், சமூகப் பாதுகாப்புடனான வேலையிலும் தான் உறுதி செய்ய முடியும். இந்தியாவில் 15 சதமான மக்களுக்கே இத்தகைய வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. 85 சதமான பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை உறுதியானதல்ல. எனவே சமூகப் பாதுகாப்-புடனான வேலை என்ற கோரிக்கை, இந்தியாவின், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கை பெரும்பான்மை மக்கள் கொதித்தெழுந்து போராடுவது தவிர்க்க இயலாது.
வேலையின்மைப் பிரச்சனை:
வேலையின்மை என்ற நிலை சமூகத்தினை பின்நோக்கி இழுத்துச் செல்வதாக அமையும். வறுமை, பட்டினிச்சாவு, தற்கொலை, வழிப்பறி, கொள்ளை போன்றவை பெருகும். ஆள்கடத்தல் கூலிப்படை அமைத்து செயல்படுதல் போன்றவை உரமிட்டு வளர்க்கப்படும். கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் போன்ற துயரங்கள் அதிகரிக்கும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், சமூகத்தில் புறக்கணிக்கப் படுவதாலும், அங்கீகாரம் அற்றவர்களாகவும் மாறுவ-தால் எளிதில் சீர்குலைவு சக்திகளினால் ஈர்க்கப்படுகிறார்கள். இனம், சாதி, மதம் ஆகியவற்றின் பெயரில் தீவிர செயல்பாட்டுக்கு உள்ளா-வதும், சில நேரங்களில் தீவிரவாதிகளாகவும் மாறுகின்றனர்.
முதலாளித்துவம் உருவாக்குகிற வேலையின்மை என்ற கொள்கை நடவடிக்கை, மக்களின் நியாயமான தேவைகளுக்கான போராட்டத்தில் இருந்து, திசை திருப்புவதற்கு உதவி செய்கிறது. மற்றொரு புறம், வேலையில் இருப்போரின் உரிமைகளை பறிக்கவும் வேலையற்ற இளைஞர்கள் என்கிற படையை முதலாளித்துவம் பயன்படுத்துகிறது. ஆகவே வேலையின்மையை முதலாளித்துவம் திட்டமிட்டு வளர்க்-கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வறிக்கை, 21ஆம் நூற்-றாண்டில் வேலையின்மை பொருளாதாரப் பிரச்சனையாக இருப்பதை விட, பெரும் சமூகப் பிரச்சனையாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளது. அஸ்ஸாமில், பீகாரிகளுக்கு எதிரான வன்முறையும், மும்பையில் ராஜ்தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனா வின், மராத்-தியர்கள் தவிர்த்த வட இந்தியர்கள் மீதான தாக்குதலும், மேற்படி தாக்குதல்களுக்கு எதிராக, லாலு பிரசாத் யாதவ், அமர்சிங் ஆகி-யோரின் செயல்களும் உதாரணங்களாகும். அதாவது முதலாளித்துவ வேலையின்மையை தனது பொருளாதார லாபத்திற்காக உரு-வாக்கியதுடன் வேலையற்ற இளைஞர்கள் ஒன்று சேருவதை தடுக்கிற வகையில், இன மோதல்களையும் உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளவும் செய்கிறது. இறுதியில் மோதிக் கொள்பவர்களை சமரசம் செய்து வைக்கிற பெயரில், பஞ்சாயத்து உரிமையையும் முதலாளித்துவம் பெற்றுக் கொள்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
வேலையின்மை என்கிற பிரச்சனை தீர, முதலில் சமூக நலத் திட்டங்களை இன்றைய அரசு விரைவு படுத்த வேண்டும். அதன் மூலம் ஏற்படும் பணப்புழக்கம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்-கும். அதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்-பனை ஆகும். புதிய உற்பத்திக்கான தேவை உருவாகும். வேலை வாய்ப்-பும் கிடைக்கும். 2002ஆம் ஆண்டு கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டிக்கு முன்பு கையேந்தி நின்றதும், பின்னர் அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர், கல்லூரி மாணவர்-கள் ஆகியோர் கைத்தறி புடவை மற்றும் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்ததும் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
நாடு முழுவதும் விவசாய வேலை நாட்களின் எண்ணிக்கை குறைந்து, இடம் பெயர்தல் அதிகரித்த போது, இடதுசாரிகளின் வலி-யுறுத்தலால், மத்திய அரசு முன்மொழிந்த கிராமப்புற வேலை உத்திரவாதச் சட்டம் 2005 ஆகும். 2004 செப்டம்பரில் 150 மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், 2005இல் சட்ட-மாகியது. 250 என உயர்ந்து, இப்போது எல்லா மாவட்டங்களுக்கும் பொருந்துவதாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் மூலம் கிராமப்புற குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 8 ஆயிரம் ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 நாள் வேலைகள் செய்வதன் மூலம் கிராமத்தின் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்-படுகிறது. ஒரு குறிப்பிட்ட திட்டம் ஒரே நேரத்தில் மக்களின் வாங்-கும் சக்தியை அதிகப்படுத்துவதால், தேங்கி கிடக்கும் பொருள் விற்-பனை-யும், கிராம கட்டமைப்பு வலு பெற்றதால், வேறு பல விவசாயப் பணிகளில் புதிய வேலை வாய்ப்பும் பெருகியது, என்பதை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, கேரளா, மே.வங்கம், ஆந்-திரா ஆகிய மாநில அனுபவங்கள் நிரூபித்துள்ளன. தமிழகத்தில் இத் திட்டம் போதுமான செயலாக்க வடிவம் பெறவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி, இருப்பு இருப்பதாக, அரசு விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற சட்டங்களுக்கு, மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யுமானால், கூடுதல் நன்மையை உருவாக்க முடியும்.
சேதுகால்வாய்:
பேராசிரியர்கள் ஜெயதி கோஷ் மற்றும் சி.பி.சந்திரசேகர் ஆகி-யோர், நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும், என்று குறிப்பிடுகின்றனர். 80-களில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள், சாலை வசதிகளின் வளர்ச்சி, நாட்டின் தொழில் மந்தத்தில் இருந்து விடுதலை பெற உதவி செய்-துள்ளது, என்பதை உதாரணமாக குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேறுவதன் மூலம் சில தொழில் வாய்ப்புகள் பெருகும்.
சின்னதும், பெரியதுமான துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும். கட்டமைப்பு வேலைகள் பெருகும். சில பாரம்பரிய தொழில்கள் பாதிப்பு அடைந்தாலும், கல்வியும், தொழில்திறனும் அதிகரிக்கும். கடலோரங்களில் உருவாகும், தொழிற்சாலைகள் வேலை-வாய்ப்பினை கொண்டு வரும். இவை இடம் பெயர்தலைக் குறைக்கும், என்பதுடன் முறைசார்ந்த மற்றும் முறைசாரா தொழில்கள் இரண்-டிலும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உதவி செய்யும். இதன் காரணமாக துறைமுகம் உருவாகும் மாவட்டங்களிலும், 13 தென் மாவட்டங்களிலும் பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக மதுரைக்கு தெற்கே தொழில் வளம் இல்லை என்பது, பெரும் பிரச்சனையாக உள்ள நிலைக்கு, மாற்றினை உரு-வாக்க முடியும். இம்மாவட்டங்களில் ஏற்படும் வளர்ச்சி, சமூகரீதியான பதட்டத்தை தனிக்க பேருதவி செய்யும். இதை நீதிபதி மோகன் தலை-மையிலான குழு 1997இல், தென்மாவட்ட சாதிக் கலவரத்தை ஆய்வு செய்த போது தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே சேது கால்வாய்த் திட்ட நிறைவேற்றம், வேலை வாய்ப்பிற்கான கதவுகளைத் திறந்து விடும் என்பதில் ஐயம் இல்லை.
வேலையின்மையைப் போக்கிட நிலச்சீர்த்திருத்தம் மிக முக்கியப் பங்காற்றும். நிலம் குவிந்து இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட நில உச்ச வரம்பு சட்டங்கள் சரிவர அமலாகாத காரணத்தால், நிலக்குவி-யல் தகர்க்கப்படவில்லை. தற்போது இருக்கிற உபரி நிலங்களையோ அல்லது ஒரு சதமானம் கூடுதல் நிலங்கள் எடுக்கப்பட்டு நில உச்ச-வரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டாலோ 1--0 கோடி கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்று இந்திய இடதுசாரிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலமே, முதலாளித்துவ கொள்கை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இருக்க முடியும் என்பதை அமர்த்தியா சென் போன்ற பொருளாதார நிபுணர்கள் குறிப்-பிடுகின்றனர்.
இருக்கிற அரசு நிறுவனங்களையும், வேறு சில நிறுவனங்களையும் விலை பேசுகிற, நிதி மூலதனத்தின் வளர்ச்சி நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக புதிய தொழிற்சாலைகள் உற்பத்தித்துறையில் ஈடு-படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு தமிழகத்தில் மின்பற்றாக்-குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. புதிய உற்பத்திப் பிரிவுகள் துவக்கப்படாததே காரணம். அரியலூர் மாவட்டம் ஜெயங்-கொண்டத்தில் கிடைக்கும் நிலக்கரியை பயன்படுத்தி, இன்னுமொரு நெய்வேலி அனல் மின் நிலையப் பணிகளை உருவாக்க முடியும். பல ஆயிரம் நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கிடலாம். நிதிக் கொள்கைகள், உற்பத்தித் துறையில் முதலீடுகளை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சூதாட்டப் பொருளாதாரத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் என்று சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் குறிப்பிடுகிறார். அரசு இத்தகைய தொழில் துறையை வளர்ப்பதற்கான முதலீடுகளை அதிகப்படுத்த முன்வர வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
மத்திய அரசு தனது ஏற்றுமதி_இறக்குமதி (ணிஜ்வீனீ றிஷீறீவீநீஹ்) கொள்கை-களை மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரியத் தொழில்-களை, முடமாக்குகிற இறக்குமதி பொருள்களை நிறுத்த வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பெரும் நிறு-வனங்களின் வருகை போன்றவை காரணமாக, சிறுவணிகர்கள் பாதிக்-கப்படுவது நடைபெறுகிறது. இதை தடுக்கிற வகையில் கொள்கை மாற்றம் தேவை.
அரசுத்துறையில் உள்ள சுமார் 50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவதும், புதிய அரசுப் பணிகளை உருவாக்குவதும், மிக அவசிய-மான ஒன்றாகும். இதற்கு பணமில்லையே என்று சிலர் தொடர்ந்து வாதிடுகின்றனர். சமீபத்தில் குமுதம் வார இதழ், 3 லட்சம் கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்-யப்பட்டு இருப்பதாக சொல்கிறது. நமது நாட்டு முதலாளிகள் ரூ.1.3 லட்சம் கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்திய வங்கிகள் அமைப்பின் தலைவர் கூறுகையில், சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக நீடிக்கிறது. இத்தகைய கடனைப் பெற்றவர்கள் பெரு முதலாளிகள் என்கிற தகவலை தெரிவித்துள்ளார். எனவே வேலை காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்திடவோ, வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்பதை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கோ பணம் பிரச்சனை அல்ல. கொள்கை தான் பிரச்சனை.
இப்படி நிறைய மாற்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இருக்-கிறது, மாற்றம் தான் நடைபெறவில்லை. மாற்றம் ஏற்பட்ட எல்லா நாடு-களிலும் இளைஞர்கள் தங்களின் பங்களிப்பை சரியான முறையில் செய்துள்ளனர். இந்தியாவிலும், தமிழகத்திலும் அத்தகைய மாற்றங்கள் நிகழ இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.
சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்விமுறையே!
குழந்தைகள் சமூக வயப்படுதல் இரண்டு பிரதான நிறுவனங்கள் மூலம் நடைபெறுகிறது. ஒன்று குடும்பம், மற்றொன்று கல்வி நிறு-வனம். குடும்ப உறவுகளில் முழுமையாக வணிகக்குணம் ஆக்கிரமிக்க-வில்லை. ஆனால், அத்தகைய ஆபத்து இருக்கிறது. பள்ளி உறவுகள் முழுமையாக வணிக உறவாக மாறிவிட்டது. சமூக வயப்படுதல் என்பது, சமூகம் பின்பற்றுகிற ஒழுக்கம், பண்பாடு, வளர்ச்சி, பொரு-ளாதார கொள்கை போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
கடந்த 30 அல்லது 35 ஆண்டுகளாக தமிழ் சமூகத்தில் பின்பற்றப்-பட்டு வரும் கல்விக் கொள்கை, வணிக மயத்தை வளர்த்தி ருக்கிறது, பண்பாட்டின் செழுமையை பாதித்து இருக்கிறது, லஞ்சம் என்ற வார்த்தையை நன்கொடை என மொழிபெயர்ப்பு செய்து எதிர்ப்-புணர்வை மழுங்கச் செய்திருக்கிறது. இப்படி அடுக்கிக் கொண்டே இருக்கலாம். எல்.கே.ஜி அல்லது ஃப்ரி.கே.ஜி என்கிற முன்பள்ளிக் காலத்திலேயே குழந்தை, பணம் செலுத்திப் படிக்கும் மனநிலையில் வளர்க்கப்படுகிறது. இதை சமூக அநீதியாக, படித்த நடுத்தர வர்க்க குடும்பங்களும், கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களும் பார்ப்பதற்குப் பதிலாக, பெருமையாகக் கருதிட, பழக்கப்படுத்தப்பட்டது. எல்.கே.ஜி. முதல் உயர்கல்வி வரை பணம் கொடுத்துப் பழகிப்போன குழந்தை, லஞ்சம், ஊழல் போன்ற ஒழுக்கம் இல்லாத வார்த்தைகளை சாதாரண-மாக ஏற்றுக் கொள்ளத் துவங்கிவிட்டன.
இதன்காரணமாக தமிழ் சமூகத்தில் புதிய தலைமுறை உருவாகி-யுள்ளது. ஏழைக் குடும்பங்கள் துவங்கி பணக்காரக் குடும்பங்கள் வரை கல்வியை காசு கொடுத்து கற்க வேண்டும், என்ற புரிதலில் வளர்க்கப்பட்ட தலைமுறையாக இருக்கிறது. இது தமிழ் சமூகத்தை அழிக்கும் விஷத்தன்மை கொண்ட புரிதல் என்பதை, எதிர்க்கும் இயக்கங்-கள் பேசி வந்தாலும் அது சமூகக் கருத்தாக மாறவில்லை. ஏனென்-றால் தமிழகத்தில் அரசுப் பள்ளி களை விடவும் அதிக எண்ணிக்கையில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் மத் திய கல்வித் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் உள்ளன. இவைகளில் இருந்து வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கையும், வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்த எண்ணிக்கை உயர்வு சமூக கருத்தாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, என்ற உண்மை-யில் இருந்தே, நாம் மேலே சுட்டிக்காட்டிய புரிதல் ஆகும்.
சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, சோவியத் யூனியனுக்குச் சென்று வந்த ரவீந்திரநாத் தாகூர், பெரியார், நேரு ஆகியோர் சொன்னதாக அரசியல் இயக்கப் பிரமுகர்கள் மேடைகளில் பேசிவந்த-னர். சோவியத் பள்ளிக் குழந்தையிடம் இரண்டு ரூபாய்க்கு உணவுப் பொருள் பெற்று அதை மூன்று ரூபாய்க்கு விற்றால் என்ன கிடைக்-கும், என்று கேட்ட தாகவும், அதற்கு அந்தக் குழந்தை இரண்டு ஆண்டு சிறைவாசம் கிடைக்கும், என்று பதிலுரைத்ததாகவும் கூறுவர்.
இந்த பதிலுரை சோவியத் நாட்டில் இருந்த பாடத்திட்டத்தை வெளிப்-படுத்துகிறது. பண்பாட்டு மேன்மையை புரியவைக்கிறது. லாபம் என்கிற சிந்தனையை குழந்தைகளிடத்தில் இருந்து தனிமைப்படுத்திய பாடத் திட்டமாக, சோவியத் பாடத்திட்டமும், பள்ளி முறையும் இருந்-தது. இன்றைக்கும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படுகிற ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளிலும் இதர வளர்ந்த நாடு-களிலும், பாடத்திட்டத்தில் சோவியத் மாதிரியைப் பின்பற்றவில்லை என்றாலும், பள்ளிக் கல்வியை அரசின் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டது. குறிப்பாக அருகாண்மைப் பள்ளி அல்லது அரு-காண்மை பொதுப் பள்ளி என்ற ஒரே முறையை இன்றைக்கும் பின்-பற்றி வருகிறது. இந்தியாவைவிட நிலப்பரப்பிலும், மக்கள் தொகையி-லும், பெரும் வித்தியாசத்தைக் கொண்ட சீனாவில் இதுபோன்ற பள்ளிக் கல்வி முறை அமலில் உள்ளது. கியூபா என்கிற சின்னஞ்சிறு நாட்டிலும், வளர்ந்து வரும் நாடுகள் என்றழைக்கப்படுகிற பிரேசில், வெனிசுலா, இஸ்ரேல், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பொதுப் பள்ளி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியத் துணைக் கண்டத்-திலும், தமிழகம் தவிர இதர மாநிலங்களில் மத்திய அரசு பாடத்-திட்டம், மாநிலப் பள்ளி வாரியம் ஆகிய இரண்டு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் 4 அல்லது 5 வாரியங்கள் உள்ளன.
இவை நாம் விவாதித்த சமூகவயமாதல் என்ற பண்பாட்டு வளர்ச்-சியைத் தடுக்கிறது. ஏழைக்கு அரசுப் பள்ளி, வசதியானோ ருக்கு தனியார் பள்ளி என்ற வேறுபாட்டை வளர்க்கிறது. அரசின் பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் சமூக நீதியை மெல்ல மெல்ல அழிக்கிறது. உதாரணத்திற்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று பிற்படுத்தப்பட்ட இளைஞர்களிலும், தலித் இளைஞர்களிலும் உள்ள சிலர் கூறு வதை கேட்க முடிகிறது. இந்த குறிப்பிட்ட சிலர், பணம் கொடுத்து படிப்பதை பழக்கமாக கொண்டவர்களாகத் தான் இருக்க முடியும். சாதிய ஒடுக்குமுறை, சமூக வளர்ச்சியிலும், பொரு-ளாதார வளர்ச்சியிலும் பெரும்பான்மை இந்திய மக்களை பின்னுக்குத் தள்ளியது என்ற சமூக வரலாறை அறியாத இளைஞர் கூட்டத்தின் வார்த்தைகள் இவை. எனவே, இத்தகைய பாகுபாடுகள் கல்வித் துறை-யில் தொடருவது தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மக்களுக்கான கல்வி வாய்ப்பை மேலும் பின்னுக்குத் தள்ளும் நிலை இருக்கிறது. ஏனென்றால், அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்தது என்று செயற்கையாக உருவாக்கப்படும் கருத்தாக்கம், தனியார் பள்ளிகளை வளர்க்கவும், அரசுப் பள்ளிகளைப் புதைக்கவும்தான் பயன்படும். நாளடைவில் தரம்-தாழ்ந்த அரசுப் பள்ளிகளில், பொருளாதார வசதியற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த குழந்தைகளே கல்வி கற்கும். இத்தகைய சமத்துவமற்ற வாய்ப்பும் அல்லது கல்விச் சூழலும் ஒரு சமூக ஒடுக்கு முறையே ஆகும்.
ஆகவே, தற்போதைய தமிழக அரசு அறிவித்தபடி சமச்சீர் கல்விக்-கான குழுவின் பரிந்துரை குறித்து திறந்த விவாதம் நடத்த வும், வரு-கிற கல்வியாண்டிலேயே அமலாக்கத்தைத் தருவதும் நல்ல தலை-முறையை, சமூக மேன்மைக்கான இளைஞர்களை வளர்க்க உதவும். செய்யுமா தமிழக அரசு? என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்-பதை விட, செய்ய வைப்பதன் மூலம் முன்மாதிரி தமிழகத்தை உரு-வாக்குவதே அனைவரின் கடமை.
தீண்டாமை இன்னும் தொடர்வது ஏன்?
இனரீதியான ஒதுக்கல் முறையோ, சாதி ரீதியான தாக்குதலோ இன்னும் அடங்கவில்லை. நமது ஊடகங்களின் ஆதரவு இல்லாமல் மேற்படி தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. மஹா-ராஷ்ட்ரா மாநிலம் கயர்லாஞ்சியில், பையாலால் போட்மாங்கேயின் மனைவி, மகள், மகன் ஆகியோர் தலித் நிலம் வைத்திருப்பதா? என கேள்விக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர். காவல்துறை இது-குறித்த புகாரை ஏற்றுக்கொள்ள நான்கு நாள் வெளி உலகம் அறி-வ-தற்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. ஆனால் ஷில்பா ஷெட்டி என்ற நடிகை லண்டனில் நடைபெற்ற டி.வி. நிகழ்ச்சியில் கருப்பர் என்கிற வார்த்தை மூலம் அவமானப் படுத்தப்பட்டார் என்ற செய்தி கண் இமைக்கும் நேரத்தில் தீயைப் போல் பரவியது. நாம் இந்த செய்தியை பெரிதாக சொல்ல வில்லையானால் ஒதுக்கப்பட்டு விடு-வோமோ? என்ற அச்சத்தில் ஊடகங்கள் போட்டி போட்டு, ஷில்பா ஷெட்டி படங்களை வெளியிட்டன. இந்த அணுகுமுறை தேச அளவில் மட்டுமல்ல, நமது மாநிலத்தில் நிறைய இருக்கிறது. உத்தப்புரத்தில் 600 மீட்டர் நீள சுவர் 19 வருடங்களாக கட்டி வைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்து வைத்ததையோ அல்லது 1 கி.மீ தூரம் தேவையற்று நடக்க வேண்டி இருந்த கொடுமையையோ, தமி-ழக ஊடகப் புலிகள் வெளிக் கொணரவில்லை. ஆனால் இடித்ததை எதிர்த்து மலைக்குப் போன கூட்டத்தின் ஆவேசத்தை, தொலைக்-காட்சி ஊடகங்கள் வாரக்கணக்கில் ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. இதை ஒடுக்கு முறைக்கு ஆதரவான ஊடகம் என புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவில் ஒபாமா என்ற கருப்பு மனிதன் அதிபராக தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடுகிறோம். ஆனால் கருப்பு தோல் அடையாளத்திற்குள் இருக்கிற வேதனை நிறைந்த சாதிய பாகுபாடுகள், வெளி உலகத்தை அக்கறை கொள்ளச் செய்யவில்லை. தமிழகத்திலும், இந்திய துணைக் கண்டத்திலும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் துவங்கி 200 ஆண்டுகளாகி-விட்டது. ஆனாலும், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராட்ட உணர்வு ஏற்படுத்தப்படவில்லை. காரணம் இவை அனைத்-தும் சீர்திருத்த கருத்துக்களே, மாற்றத்திற்கான கருத்துக்கள் அல்ல. அதனால்தான், இன்றளவிலும் அறிவிக்கப்பட்ட நலத்-திட்டங்கள் கூட முழுமையாகப் போய்ச் சேரவில்லை.
தீண்டாமை ஒரு பாவச் செயல்
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம் _ ----------என்ற வார்த்தைகளைப் படிக்கிற மாணவர்கள் கூட, தீண்டாமைக் கொடுமையை பின்பற்றுவதற்கான காரணம், மேற்படி வாசகங்கள், வேஷத்திற்காக பின்பற்றப்படுபவை. உத்தப்புரத்தில் இருக்கும் சுவரில் 16 அடி அகலம் 2008, மே --_ 6ஆம் தேதி இடிக்கப்பட்டு, பாதை அமைக்கப்பட்ட பின்னரும், ஒடுக்கப்-பட்ட மக்கள் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. என்ன காரணம்? அரசு தலையிட்டு ஏற்படுத்திய பாதையை பயன்படுத்த அரசு இயந்-திரம் என்ன செய்தது? அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்கிற அளவில் தான், சீர்திருத்த சிந்தனைகளின் செயல் இருக்கிறது. மாற்றத்திற்கான சிந்தனை அரசு இயந்திரத்தில் உருவாக்கப்பட்டு இருந்தால், உத்தப்புரத்தில், 1 அக்.2008 அன்று இரவு காவல் துறை புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்காது. இறந்தவரை ஊரில் உள்ள பெண்கள் மட்டும் எடுத்துச் சென்று சவ அடக்கம் செய்த மனிதாபிமானத்தின் மீதான கொலை அரங்கேறி இருக்காது. திண்ணியத்தில் மலத்தினை திண்ண வைத்த கொடியவர்களை நீதிமன்றம் விடுவித்து இருக்காது. ராம-நாதபுரம் மாவட்டம் அருவுத்தி கிராமத்தின் கல்தூணில் கட்டி-வைக்கப்பட்டு 4 இளைஞர்களை சித்திரவதை செய்திருக்க மாட்டார்-கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், இரு தரப்பினர் மீதும் வழக்கு போடுகிற நடைமுறை இருக்காது. சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகாய்ச்சி-யேந்தல் ஆகிய ஊர்களில், 10 ஆண்டுகள் நடைபெறாத பஞ்சாயத்து தேர்தலை அரசு நடத்தி முடித்து விட்டது. இடஒதுக்கீடு கிராம ஆட்சி நிர்வாகத்தில் வெற்றிகரமாக அமலாகி விட்டது, என்று எண்ணி பூரிப்படைவதற்குள், நெல்லை மாவட்டத்தில் நக்கல முத்தன் பட்டி, மருதன் கிணறு பஞ்சாயத்து தலைவர்கள் தலித் என்பதற்காக கொல்லப்பட்டு விட்டனர். எனவே சீர்திருத்தம் மட்டும் போதாது. சிந்தனையில், அணுகுமுறையில், செயலில் மாற்றம் வேண்டும். தமிழ-கம் அதற்கு முன்னோடியாக இருக்கிற வகையில், அரசே குறிப்பிட்ட 7000 கிராமங்களில் தீண்டாமை இருக்கிறது, என்ற எண்ணிக்கை-களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரவுகள் போதாது, கண்காணிப்பு குழுக்கள் அமைத்து உறுதியாக அமலாக்க வேண்டும். எல்லா வகையான தீண்டாமையையும் மாநிலத்தில் ஒழிக்க வேண்டும்
இந்திய சுதந்திரத்திற்கு ஆபத்து?
இன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தினை நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள மின்பற்றாக்குறைக்கு அணு சக்தி ஒப்பந்தமே தீர்வு என்று வாதிடுகின்றனர். இந்தியாவில் அணு சக்தி மூலமும் மின் உற்பத்தி செய்யப் படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்-கள் இல்லை. 1969இல் இருந்தே தாராப்பூர் துவங்கி 17 மையங்களில் அணு மின் உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இப்-போது உற்பத்தி ஆகும் 1 லட்சம் மெகாவாட் மின்சாரத்தின் அணு-மின்சார அளவு 3.8 சதம் மட்டுமே, இப்போது அமெரிக்காவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் 2026இல் தான் நிறைவேறும் அப்போது அணு மின் உற்பத்தி தேவை 2.5 லட்சம் மெகாவாட் என்றும், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் மின்-சாரத்தையும் சேர்த்து அணு மின்சாரத்தின் அளவு 7 சதம் தான் இருக்கும் என்பதையும், இந்திய அணு சக்தி நிறுவனம் ஒப்புக்-கொள்கிறது. தேவை மலை அளவு இருக்கையில் துளி அளவு மின்-சாரத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாயை, அமெரிக்க அரசிற்கு கொடுப்-பது அவசியமா? இதில் 30 சதம் ரூபாயை செலவு செய்தால், நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் அனல் மின்சாரம், நீர் மூலம் உற்பத்தியாகும் புனல் மின்சாரம் போன்றவற்றில் முதலீடு செய்தால், மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும். வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்த முடியும். இதை இடதுசாரிகள் முன்வைக்கிற போது, இதன் நியாயத்தை காங்-கிரஸ் ஏற்கவில்லை.
இரண்டாவது இந்த ஒப்பந்தம் பணம் சார்ந்தது மட்டுமல்ல. இந்திய அரசின் சுயமான செயல்பாட்டுடன் இணைந்தது. ஒப்பந்தம் அமலாகும் போது இந்திய அரசு, அமெரிக்காவின் 123 சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். 123 சட்டம், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்பவர்கள், அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இந்த சட்டம் 1956இல் அமெரிக்கா நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. இடையில் அமெரிக்க செனட்டர் ஹைடு என்பவர் மேற்படி சட்டத்தினை அமலாக்காத நாடுகளுக்கு அணு ஒப்பந்தத்தின் படி கொடுக்க வேண்டிய, அணு எரிபொருள்களைக் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்தின் நிறைவேற்றம் குறித்த தணிக்கை அறிக்கை முன்வைக்கப்பட்டு, ஒப்புதல் பெற்ற பிறகே, அடுத்த கட்ட உதவியை தொடர வேண்டும், என்று ஹைடு சட்டம் குறிப்பிடுகிறது. இச்சட்டத்தின் படி இந்தியாவுக்கு அமெரிக்காவின் உதவி 2026 வரை தேவை. இந்த 18 ஆண்டுக் கால இடைவெளியில், அமெரிக்-காவின் கைப்பாவையாக நமது மக்களாட்சி இருக்க வேண்டும். இது இந்தியாவின் சுயாதிபத்தியத்திற்கு ஆபத்து தரக்கூடியது.
மூன்றாவது, வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அணுசக்தி முகமை என்ற அமைப்பு. இதில் 45 நாடுகள் உறுப்பினர்கள். ஒரு நாடு அணுசக்தி உற்பத்தி செய்ய வேண்டு-மானால், மேற்படி கழகம் ஒப்புதல் தருவதுடன், அணுவை, ஆயுத உற்-பத்திக்கு பயன்படுத்துகிறார்களா? என்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்யும்.
அதன்படி, சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவின் அணு உலைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்வர். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்-தம் நிறைவேற, சர்வதேச அணுசக்தி முகமையின் ஒப்புதல் தேவை என்பதால், இந்தியா, 14 அணு உலைகளை எப்போது வேண்டு-மானாலும் பார்வையிட்டுக் கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்து விட்டதாக பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது. இந்த வெளிநாட்டு சக்திகளின் தாராள வருகை மற்றும் ஆய்வு நமது இறையாண்மையைப் பாதிக்கும்.
மேற்படி முக்கியமான மூன்று பிரச்சனைகள் காரணமாகவே இந்திய இடதுசாரிகள், காங்கிரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க இந்த விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸ் கையெழுத்து போடுகிறதே, என்பது-தான். ஏற்கனவே பா.ஜ.க ஆட்சி இருந்த போதே எடுக்கப்பட்ட முயற்சிதான். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம். எனவே மத- வெறி கொண்ட பா.ஜ.க இந்தியாவின் சுயாதிபத்தியத்தையும், இறை-யாண்மையையும், செல்வ வளத்தினையும் பாதுகாக்காது என்பது தெளிவு.
நிறைவாக:
இந்தப் போர் எங்களால் துவக்கப்படவும் இல்லை எங்களோடு முடியப் போவதும் இல்லை, என்று தூக்குக் கயிறுக்கு முன்பு நின்று கொண்டு, சாவின் விளிம்பிலும், விடுதலைப் போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய இளைஞர்கள், பகத்சிங், ராஜ்-குரு, சுகதேவ் ஆகியோரின் வார்த்தைகள், நமது தலைமுறைக்கும் பொருந்தும். போராடுவோம், போராட்டம் இல்லாமல் உலக வரலாறு எழுதப்படவில்லை. நாமும் போராடுவோம். விடுதலையைக் காக்க, வேலை, கல்வி, சுகாதாரம் பெற, தீண்டாமை அழிக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக