கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 நவம்பர், 2015

சமச்சீர் கல்வி சில கேள்விகள்

கண்ணைகட்டிக் காட்டில் விட்டதைப் போல் இருக்கிறது என்ற பழமொழிக்கான பொருளை இப்போது தெளிவாக உணரமுடிகிறது. சமச்சீர் கல்வி தமிழகத்தில் வருமா? வராதா? எந்த பாடதிட்டத்தை படிப்பது? 3 வார காலத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலையில் தமிழக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உள்ளனர். சமச்சீர் கல்வி என்கிற விவாதம் கடந்த ஐந்தாண்டுகாலம் தீவிரமாக  இருந்தது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் விவாதத்தை மேலும் நீடிக்க செய்வதாக அமைந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலத்தில்  முனைவர். . முத்துக்குமரன் அவர்கள் தலைமையில் பல்வேறு விவாதங்களை. கருத்தறிதல்களை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைத்தவைகளிருந்து ஒரு சிலவற்றை மட்டுமே கடந்த திமுக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் நான்கு வாரியங்களை களைத்து ஒன்றாக இணைக்கும் ஆற்றலை திமுக அரசு கொண்டிருக்கவில்லையென்றும் கல்வியாளர் தரப்பு திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தது. மேலும் அதை எதிர்த்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தனர். இந்த விமர்சனங்களும், வெறுப்புகளும் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கையால், அதிமுக வின் மீது திருப்பி விடப்பட்டிருக்கிறது என பெற்றோர்கள் பரவலாக பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது.

   முனைவர். முத்துக்குமரன் குழு பரிந்துரைகள் அனைத்தையும் அப்படியே ஏற்று அமலாக்க வேண்டுமென, தமிழக பெற்றோர்கள் எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லை. ஆனால் பாடத்திட்ட அளவில் வந்துவிட்ட அமலாக்கத்தை முழுமையாக நிறுத்தி வைத்து, புதிய குழுவை அமைத்து புதிய வகையில் தரம் உயர்த்தப்போவதாக தற்போதைய மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளும், சட்டதிருத்தமும் பெற்றோர்களை 10ஆம் வகுப்பு மாணவர்களை கல்வியாளர்களை சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது.

தற்போது உச்சநீதி மன்றம் 3 வாரக்காலத்திற்கு பள்ளிகள் திறந்து இருக்கலாம் எந்த பாடத்திட்டமும் நடத்தப்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அமலுக்கு வந்துவிட்ட கல்வியாண்டை கணக்கில் கொண்டு மாநில அரசு தரம் உயர்த்துவதற்கான குழுவை மட்டும் நியமித்திருந்தால், கல்வியாளர்கள் பலரும் ஏகோபித்த வரவேற்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஏன் என்றால் கடந்த திமுக ஆட்சியின்போது பாடத்திட்டங்களை மட்டும் ஒருங்கிணைத்து ஒன்றாக்குவதை சமச்சீர் கல்வி என்கிற சாதனை பட்டியலுக்குள் அடைக்கப்பார்த்தது. இந்நிலையில் பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்கிற நம்பிக்கையோடு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாடப் புத்தகங்களை படிக்க துவங்கிவிட்டனர். உளவியல் ரீதியில் இதுதான் பாடப் புத்தகம் என்ற மன நிலைக்கு வந்துவிட்ட மாணவர்கள் தற்போதைய அரசின் அறிவிப்பால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

கல்வி குறித்த விவாதத்தில் ஐரோப்பிய நாடுகளை விடவும் நாம் பின்தங்கி இருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே காந்தி, விவேகானந்தர், அம்பேத்கர், ரவீந்திரநாத் தாகூர், பெரியார், பாரதியார் என பல இந்திய அறிஞர் பெருமக்கள் கல்வி குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தையும் உள்வாங்கியதாக இந்திய கல்விமுறை இன்னும் மாற்றம் பெறவில்லை. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 முதல் 5 வரை தமிழ்மொழி கல்வி அவசியம்  சட்டத்தை அறிமுகம் செய்த நேரத்தில், அன்றைய நீதிமன்றம் தலையீடு செய்து அதற்கு தடை விதித்தது.  அன்றைக்கு பெற்றோர்களும் ஆங்கில அறிவு இல்லாமல் உயர்கல்வி செல்வது, புரிதலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரச்சாரம் செய்யப்பட்டனர். அன்றைக்கும், இன்றைக்கும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடியவர்கள் தமிழக தனியார் பள்ளி உரிமையாளர்கள் ஆவர். உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் அருகாண்மை பொதுப்பள்ளி முறையை அமலாக்கி வருகின்றனர். இந்தியாவில் உள்ள பலர் தங்களின் வாத தேவைக்காக அமெரிக்காவை முன்னுதாரம் காட்டுவது உண்டு. அத்தகைய அமெரிக்காவில் அருகாண்மை பொதுப்பள்ளிகள் தான் அமலில் உள்ளன. நம்முடைய தமிழகத்தில் இத்தகைய பள்ளிமுறை வருவதை எதிர்க்கும் நோக்கம் புரியாததாகவே உள்ளது.

குடிக்கும் தண்ணீரை கூட பணம் கொடுத்தும் வாங்கும் பண்பாடு வளர்ந்து விட்ட நம் தேசத்தில், கல்வி பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது உயர்ந்த தரமான கல்வியென மதிப்பீடு செய்யப்படுகிறது. கல்வி பெறுவதை உரிமையாக அளிப்பதற்கு பதிலாக வணிக பொருளாக ஆட்சியாளர்கள் மாற்றியிருப்பது அவலத்தை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வும், போராட்டங்களும், காலவரையற்ற உண்ணாவிரதங்களும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் கல்வி வணிகமாவது ஏன் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை? பள்ளி கல்வியை முடிப்பதற்கு பல லட்சங்களை செலவிடும் மாணவரும், பெற்றோரும் அந்த செலவினத்தை எதிர்காலத்தில் அடைவதற்காக தவறு செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஊழல் எதிர்ப்பில் முன்னின்று கருத்துக்களை தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்களே. ஊழலுக்கான ஊற்று கண்ணாக கல்வி வணிகம் அமைந்திருப்பதை கணக்கில் கொள்ளலாதது வியப்பளிக்கிறது. இன்று தமிழகத்திலும் மத்திய ஆட்சி பொறுப்பிலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு கல்லுரிகளையும், பள்ளிகளையும் நடத்தும் தாளாளர்கள் என்பதை மறுக்க இயலாது. இன்றைக்கு அரசியலுக்கு வருகின்ற பணத்தில் கனிசமான பங்கு சுயநிதி கல்லுரிகளிலும், பள்ளிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கல்வியாளர் முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். எனவே இன்று ஊழலின் ஊற்றுகண்ணாக இருக்கிற கல்வி வணிகத்தை தடுப்பது குறித்து தீவிர கருத்து பிரச்சாரம் அவசியப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் சமவாய்ப்பை அளிக்கிற சமச்சீர் கல்வி அமலாக்கத்தை வலியுறுத்துவதில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த பெற்றோர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் உருவான பிறகு கரண்சி, வர்த்தக பரிமாற்றம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பொது கல்விமுறை உருவாக்கத்தையும் அமலாக்குவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர். அதற்காக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் மாணவர்களை கொண்டு கல்வித்துறையில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் நோக்கம் ஏற்கெனவே பெற்ற வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதை தவிர வேறில்லை. அதே நேரத்தில் இந்திய போன்ற நாட்டில் யுனேஸ்கோ குறிப்பிட்ட கருத்தை உள்வாங்கி கொள்வது தேவையாகி இருக்கிறது.  தரமான கல்வி என்பது குறித்து பல்வேறு வரையறைகள் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் கல்வியின் தரம், குடும்பத்தின் பங்களிப்பு, வழிகாட்டுதல், உள்ளுர் வளம், பண்பாடு ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற கல்வி குறிப்பிட்ட பகுதி மக்களின் பண்பாட்டை குறைத்து மதிப்பிடுவதாகவும் அதை தனிமைப்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. குழந்தைகளை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. எனவே இவைகுறித்து தீவிர விவாதங்களிலிருந்து தரமான கல்வியை அடைவதற்கு முயற்சிக்க வேண்டுமென, யுனேஸ்கோ ஆய்வு அறிக்கை (2008) தெரிவிக்கிறது.

       ஒரு வாதத்திற்காக கூறுவது என்றால், அனைத்து விதமான அரசுகளும் தங்களுக்கு என்று சாதகம் உள்ள அமைப்பு ரீதியாக ஏற்பாடுகளை கொண்டிருக்கத்தான் செய்கின்றன. கல்வித்துறை, பாடத்திட்டம் இதற்கு விதிவிலக்கல்ல, என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலாக்கத்தை பொறுத்த வரையில் அத்தகைய சாதக அம்சங்களை கொண்ட தன்மையில் அமைய வேண்டும் என விருப்பம் கொண்டவர்களாக திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி எழுதிய பாடல் இடம் பெற்றிருப்பதை ஆளும் கட்சி விவாதம் ஆக்கவில்லை என்றாலும் கருணாநிதி அவர்கள் வலிய முன்வந்து பாடலை அகற்றகோரி இருப்பது ஏற்கமுடியாத அரசியல். இப்போது சொல்வதை கடந்த ஆண்டே எடுத்திருந்தால் ஒரு வேளை பாராட்டுக்குரியவராக இருந்திருப்பார். இன்னொரு வகையில் பார்க்கின்றபோது யார் எழுதியது என்பதை விட என்ன எழுத்தப்பட்டது என்ற கோணத்தில் புரிந்துகொள்ளுகின்ற அரசியல் பண்பாடு தேவையாக இருக்கிறது. இதுபோன்ற பெருந்தன்மை குறைவினால் தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்திற்கு ஆட்பட்டிக்கிறார்கள்.

3 வார காலம் 1 மற்றும் 6 வகுப்புகளை தவிர மற்ற மாணவர்கள் தேவையற்ற காத்திருப்பிற்கு ஆளாகியுள்ளனர். இக்காலத்தில் ஆரம்ப பள்ளி  மாணவர்களுக்கான செயல்வழி கல்வித் திட்டம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. அடிப்படை கணிதம், அறிவியல் துறைகளில் உயர் கல்வி மாணவர்களுக்கும்கூட சில பயிற்சிகளை அளிப்பது குறித்து ஆசிரியர் சமுகம் திட்டமிட வேண்டும். செய்முறை கல்வி, கல்வி சுற்றுலா, நுலகத்தை பயன்படுத்துதல், விளையாட்டு மற்றும் எழுத்து துறைகளில் மாணவர்களை மேம்படுத்த இக் கால அவகாசம் பயனளிக்கலாம். ஆட்சியாளர்களுக்கு நமது வேண்டுகோள் 3 வாரத்தோடு இந்த ஆண்டிற்கான பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே.

                                                                     

வியாழன், 12 நவம்பர், 2015


எழுத்தறிவு தினத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி!!!

செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம். 1946ம் ஆண்டு, யுனெஸ்கோவின் முதல் பொது மாநாடு நடைபெற்ற போது, உலக அளவில் கல்விக்கான சிறப்புக் கவனம் தேவை என்ற விவாதம் எழுந்தது. ஆனால் 1965ம் ஆண்டில் டெஹ்ரானில் நடைபெற்ற பொது அமர்வில் தான், செப்டம்பர் 8 ஐ உலக எழுத்தறிவு தினமாக கடைப் பிடிப்பது என முடிவெடுக்கப் பட்டது. முடிவு பொன்விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், எழுத்தறிவு தினத்தின் தேவைகள் மற்றும் தொடர் கவனம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உலக அளவில் எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காகக் கூடிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப் பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் அளவு சற்று உயர்ந்தது. இருந்தாலும் இன்றைய தேவைக்கு அது முன்னேறவில்லை, என்பதனால், தற்போது தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. உலக எழுத்தறிவு தினக் கொண்டாட்ட உணர்வு கூட மங்கி வருவதாக யுனெஸ்கோவை சார்ந்த அலுவலர்கள் குறிப்பிட்டு உள்ளனர். எழுத்தறிவு என்பதுடன் சமூக அறிவு குறித்த புரிதலும், அதன் மீதான அக்கறையும் உயரும் போது தான், கல்வி பெற்றவருக்கும், கல்வி பெறாதவருக்குமான வேறுபாடுகள் தெரியவரும்
கொண்டாட வேண்டிய உலக எழுத்தறிவு தினம்:

இன்றும் இந்தியாவில் எழுத்தறிவற்ற மக்கள் உள்ளனர், என்பதை அரசுகள் கவணிக்க வேண்டும். இந்திய எழுத்தறிவு விகிதம் 2001ல் 64.83%ஆக இருந்தது 2011ல் 73.04% ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் உள்ள எழுத்தறிவு விகிதாச்சாரத்துடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி விகிதத்தில் 10 சதம் இந்தியா பின்தங்கி உள்ளது. இதற்கு காரணங்களாக யுனெஸ்கோ, “இந்தியாவின் நகர் பகுதிகளில் உள்ள 6 லட்சம் குடிசைப் பகுதிகளில் பகுதி நேர ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். குடிநீர், கழிவறை, வகுப்பறை ஆகிய இல்லாமைகள் ஒரு காரணம். 1:42 என்ற விகிதாச்சாரத்தில் ஆசிரியர் மாணவர் உள்ளனர். இது வகுப்பறையை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள உதவாது”, எனக் கூறுகிறது. மேலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட  சுமார் 6 கோடி குழந்தைகள் பள்ளிகளில் இல்லை, என்றும் கூறுகிறது.
  
தமிழகம் இந்தியாவில் 14 வது இடத்தில் 80.33% என எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதாச்சாரத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் 2001ல் 73.45% என்ற விகிதத்தில் 13வது இடத்தில் இருந்து 14 வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 6.88% விகித வளர்ச்சியை மட்டுமே தமிழகத்தில் பெற முடிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விகிதாச்சாரம் 9.28% என்ற வளர்ச்சிக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் எங்கே தவறிழைத்தது, என்பதைக் கண்டறிய வேண்டும்.

மதிய உணவு, சத்துணவு ஆகிய திட்டங்களை அமலாக்கம் செய்து தமிழகம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் முன்னோடியாக விளங்கினாலும், தமிழகத்தை விடவும் 13 மாநிலங்கள் முன்னேறிய நிலையில் உள்ளன, என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மேற்படி நலத்திட்டங்கள் கடந்து மேலும் செயலாற்ற வேண்டிய இடத்தைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி சட்ட அமலாக்கம், குறித்த அக்கறை, தீவிரமாக வெளிப்பட வேண்டிய தருணம்.

இதற்கு உலக எழுத்தறிவு தினம் போன்ற நாட்களைக் கொண்டாடுவது, மிக அவசியத் தேவை. வேறுபல தினங்களுக்குக் கிடைக்கிற கவர்ச்சியோ, விளம்பரமோ எழுத்தறிவு தினத்திற்குக் கிடைப்பதில்லை. அரசு எடுக்கும் முயற்சி மட்டுமே எதிரொலித்துள்ளது. இந்த அனுபவத்தில் இருந்து எழுத்தறிவு தினத்தை முன்னிலும் கூடுதலாக கடைப்பிடிக்கவும், செயல்படுத்தவும் பல இயக்கங்களை அரசு முயற்சியில் ஒருங்கிணைக்க முடியும். 

கட்டாயக் கல்வி சட்டம்:

தமிழகமோ அல்லது இந்திய அரசோ மேற்கொள்ள வேண்டிய கடமை பின்தங்கிய மாவட்டங்களில், மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது ஆகும். உதாரணத்திற்கு கன்னியாகுமரி 92.14% அதிக எழுத்தறிவு உள்ள மாவட்டமாக உள்ள நிலையில், தருமபுரி 64.71% என கடைசியாக பட்டியலில் உள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்னகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளில் 59 சதமானோர் பாதியில் நின்றவர்கள். அப்படி நின்றவர்களில் 80 சதக் குழந்தைகள் குழந்தை உழைப்பாளர்களாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தலித் குழந்தைகள் ஆவர். இந்த தகவலை CRY போன்ற அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒருபகுதி தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய வளர்ச்சியைப் பெற்று இருந்தாலும் சமூக வளர்ச்சியைப் பெறவில்லை. மற்றொரு பகுதி பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய இரண்டையும் பெறவில்லை என்பதைக் காணமுடியும். எனவே இங்கு அரசு கட்டாய இலவசக் கல்வி வழங்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் இங்குதான் மிக அதிகமான தனியார் பள்ளிகளும் உள்ளன. அதில் 25 சத இடஒதுக்கீட்டை கட்டாய இலவசக் கல்விக்காக அரசு உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் கையாள வேண்டும்.

மாநிலத்திற்குள்ளேயே இடம்பெயரும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. வேலைச்சூழல் இதர சமூகப் பிரச்சனைகளின் போது, ஏன் வெளியேறுகிறோம்?, என்பதை அறியாமலேயே பெற்றொருடன் கிராமங்களை விட்டு, குழந்தைகளும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய சூழலைக் கையாள நமது நிர்வாக அமைப்பு குறிப்பாக பள்ளி கல்வித் துறை, குழந்தைகளின் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு நடவடிக்கைகளை உருவாக்கிட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ்

ஞாயிறு, 30 மே, 2010

தனியார் பள்ளி கட்டணம் நிஜமா? நாடகமா?

தனியார் பள்ளி கட்டணம் நிஜமா? நாடகமா?
-எஸ். கண்ணன்

தமிழ்நாடு அரசு நியமனம் செய்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, பள்ளிக் கட்டணம் குறித்த பரிந்துரையை அர சிடம் வழங்கியுள்ளது. அரசு அதை ஏற்று அறி விப்பு வெளியிட்டுள்ளது. இது சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்க, தனியார் பள்ளி உரி மையாளர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ள னர். குழு பரிந்துரைத்த கட்டணம், பள்ளிகளை நிர்வாகம் செய்ய போதாது, என்ற வாதத்தை பகிரங்கமாக முன்வைக்கின்றனர். மிகத் தாரா ளமாக தங்களது விருப்பப்படி நடத்திவந்த வசூல் வேட்டையைத் தடுக்க அரசு, நீதித் துறை எதுவும் முயற்சிக்க கூடாது என துணிந்துவிட்டனர்.

மலிந்துவிட்ட ஊழல்

தனியார் பள்ளி உரிமையாளர்களின் போராட்டம் அல்லது அறிவிப்பு அரசு தன் கட மையில் இருந்து விலகிக் கொள்ள வழி செய்து, அரசை பஞ்சாயத்துதாரராக மாற்றுகிறது. நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரை மிக நியாயமானது, என நடுத்தர வர்க்கத்து மனிதர்களும் பேசத் தலைப்படுவதால், பொது மக்களும் பரவாயில்லையே! கல்விக் கொள் ளை தடுக்கப்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வர நிர்பந்திக்கப்படுகிறார்கள். எந்த ஒரு சமூக மானாலும், அது வளர்க்கப்படும் விதத்தில் தான், அறுவடை வெளிப்படும். இன்று நமது நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்கும், கேதன் தேசாய் 2500 கோடி ரூபாய் ஊழல், ஐ.பி.எல். கிரிக்கெட் பல ஆயிரம் கோடி ஊழல், தொலைபேசித் துறையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என பட்டியல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. புதிய ஊழல், வெளிப்படும் போது, இன்றைய ஊழல் புதை குழிக்குள் மறைந்து விடுகிறது.

மசோதா வரலாறு

நூறு ஆண்டுகளாக கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற விவாதம், நமது நாட் டில் நடைபெற்று வருகிறது. நூறு ஆண்டு களாக மசோதா வடிவில், பட்டாம் பூச்சி போல் வந்து வந்து, வேடிக்கை காட்டுகிறது. 1911ல் கோகலே அவர்களால் கொண்டு வரப்பட்ட தொடக்கக் கல்விக்கான மசோதா, பணக்காரர் கள் மற்றும் நிலப்பிரபுக்களால் அன்றைய தினம் நிராகரிக்கப்பட்டது. தர்பங்கா பகுதியின் ராஜா 11 ஆயிரம் பேரிடம் கையெழுத்து இயக் கம் நடத்தி, கோகலே முன்வைத்த கல்வி மசோதாவை நிறுத்த செயல்பட்டார்.

பின் 1950ல் இந்திய அரசியலமைப்புச் சட் டம் வடிவமைக்கப்பட்ட போது ஷரத்து 45ன் படி அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளில், 14 வயதுக்குட்பட்ட அனை வருக்கும், கட்டாய இலவச கல்வி வழங்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

1992ல் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகட னத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என அறிவித்தது. அதன் படி, 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகள், இவர்களுக்கு கட் டாய இலவச கல்வி பெற உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டது.

1993 பிப்ரவரியில், நீதிபதி குல்தீவ்சிங் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் உன்னி கிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக் கில், இந்திய அரசியல் சாசனத்தின் வரைய றைப் படி ஷரத்து 21 வாழும் உரிமையை வரை யறை செய்கிற போது கல்வி பெறும் உரிமை யும் வாழும் உரிமையுடன் இணைந்தது என குறிப்பிட்டது.

பின் 2002ல், 86-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம், 2005-ல் கல்வி உரிமைச் சட் டம் குறித்த விவாதம், 2009ல் சட்ட மசோதா முன்மொழிவு, 2010 ஏப்ரலில் சட்டம் நிறை வேற்றம், என கல்வி உரிமை மசோதா நூற் றாண்டு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பலன் எளிய மக்களைச் சென்ற டைய விடாமல் தடுக்கிற செயல்களில் ஆளும் கட்சிகளின் ஆதரவு சக்திகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டம் (6-14வயது கொண்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி) அமலாகும் என்றும் அறிவிப்பு வெளி யாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் 2010ஆம் ஆண்டு, பள் ளிக் கல்வி மானியக் கோரிக்கையிலும், இந் திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 21 குறிப்பிட்ட படி, 6 முதல் 14 வயது கொண்ட அனைவருக்கும், இலவச கட்டாய கல்வி வழங்க நடவடிக்கை எடுப்போம் என பிரக டனம் செய்துள்ளது. மேலும் கல்வி உரிமை சட்ட மசோதா 2009ஐ நிறைவேற்ற எல்லா வித முன் முயற்சியும் மேற்கொள்வோம், என குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியா, 63 ஆண்டு கால சுதந்திர ஆட்சி அதிகார வர லாற்றில், வெறும் கையாலேயே முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்களேயல்லா மல், செயலில் எதையும் நிறைவேற்றவில் லை. நம்மை விட சிறிய, சமூக பொருளாதாரத் தில் பின்தங்கிய நாடுகளான வங்கதேசம், இலங்கை போன்றவை கூட கட்டாய இலவச கல்வி சட்டத்தை பல பத்து ஆண்டுகளாக அமலாக்கி வருகின்றன. அந்த நாடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி பெறும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலுக்கும் காவல்

பூனைக்கும் தோழன்

இந்திய கல்வி உரிமைச் சட்டம் 2011-ல் அமலாகும் என அறிவித்து இருந்தாலும், நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தை மாநில அரசு களின் தலையில் சுமத்த முயற்சிக்கிறது. மாநில அரசுகள் ஆக்கபூர்வமாக செயல்ப டுமா? என்பது முடிவுக்கு வர இயலாதது ஆகும். உதாரணத்திற்கு தமிழ்நாடு அரசு சமச் சீர் கல்வி அமலாகும் என அறிவித்தது. அதே நேரத்தில் நான்கு வாரியங்களும் தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தனி யார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர்களுடன் சமரசம் பேசினார். பாலுக்கும் காவல், பூனைக் கும் தோழன் என்பதாகவே மாநில அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. விளைவு, நீதி மன்றம் வாரியங்கள் தொடரலாம் என்றால் பாடத்திட்டம் ஏன் ஒன்றாக இருக்க வேண் டும்? என கேள்வி எழுப்பி ஒரே பாடத்திட் டம் என்ற முயற்சியையும் முடக்கிவிட்டது.

அதே போல் தான் இப்போது நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கல்விக் கட்டணம் குறித்த பரிந்துரையின் மீதான தமிழக அரசின் செயலும் அமைந்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக் கையில் கல்வி உரிமைச் சட்டத்தை நிறை வேற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள் வோம் என பிரகடனம் செய்த கையோடு, நீதி பதி கோவிந்தராஜன் குழுவின் கட்டணத்தை தனியார் பள்ளிகள் அமலாக்க வேண்டுமென அறிவித்ததும் நியாயமற்றது. சமச்சீர் கல்வி அறிவிப்பு சொதப்பல் நிலையை அடைந்தது போல், இந்த கல்விக் கட்டண அறிவிப்பும் மாற வேண்டும் என தனியார் பள்ளி உரி மையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் இயக்கங்கள் முயற்சித்தால், இது போன்ற குளறுபடிகளைத் தடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள 1500க்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகளில் சுமார் 74 லட்சம் மாண வர்கள் படிக்கிறார்கள். ஒரு பள்ளியில் சராசரி 4900 மாணவர்கள் என தீர்மானிக்கலாம். இதி லிருந்து வரும் லாபம் கொள்ளை லாபம் என் பதே உண்மை. இவையன்றி சீருடை, புத்த கம் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் வருமானம் என்பதெல்லாம் குறைத்து மதிப்பிட கூடிய தல்ல. ஏதாவது ஒருவர் அல்லது இருவர் நல்ல நோக்கத்தில் பள்ளிக் கூடங்கள் நடத் தியிருக்கலாம், அது விதிவிலக்கு.

ஆக இப்போது நடைபெறுவது, கல்விக் கட்டணம் குறித்த நாடகம் 1911ல் கோகலே முன்வைத்த மசோதாவை மன்னர்களும், பணக்காரர்களும், வெள்ளைய ஆட்சியாளர் களும் நிராகரித்து இருக்கலாம். இன்று 2010ல் நடைபெறும் மக்களாட்சி நிறைவேற்றி உள்ள கல்வி உரிமைச் சட்டத்தை, தனியார் பள்ளி உரிமையாளர்கள் என்னும் கல்வி முதலாளி கள் தடுத்துவிட அனுமதிக்கக் கூடாது.