ஞாயிறு, 30 மே, 2010

தனியார் பள்ளி கட்டணம் நிஜமா? நாடகமா?

தனியார் பள்ளி கட்டணம் நிஜமா? நாடகமா?
-எஸ். கண்ணன்

தமிழ்நாடு அரசு நியமனம் செய்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, பள்ளிக் கட்டணம் குறித்த பரிந்துரையை அர சிடம் வழங்கியுள்ளது. அரசு அதை ஏற்று அறி விப்பு வெளியிட்டுள்ளது. இது சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்க, தனியார் பள்ளி உரி மையாளர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ள னர். குழு பரிந்துரைத்த கட்டணம், பள்ளிகளை நிர்வாகம் செய்ய போதாது, என்ற வாதத்தை பகிரங்கமாக முன்வைக்கின்றனர். மிகத் தாரா ளமாக தங்களது விருப்பப்படி நடத்திவந்த வசூல் வேட்டையைத் தடுக்க அரசு, நீதித் துறை எதுவும் முயற்சிக்க கூடாது என துணிந்துவிட்டனர்.

மலிந்துவிட்ட ஊழல்

தனியார் பள்ளி உரிமையாளர்களின் போராட்டம் அல்லது அறிவிப்பு அரசு தன் கட மையில் இருந்து விலகிக் கொள்ள வழி செய்து, அரசை பஞ்சாயத்துதாரராக மாற்றுகிறது. நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரை மிக நியாயமானது, என நடுத்தர வர்க்கத்து மனிதர்களும் பேசத் தலைப்படுவதால், பொது மக்களும் பரவாயில்லையே! கல்விக் கொள் ளை தடுக்கப்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வர நிர்பந்திக்கப்படுகிறார்கள். எந்த ஒரு சமூக மானாலும், அது வளர்க்கப்படும் விதத்தில் தான், அறுவடை வெளிப்படும். இன்று நமது நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்கும், கேதன் தேசாய் 2500 கோடி ரூபாய் ஊழல், ஐ.பி.எல். கிரிக்கெட் பல ஆயிரம் கோடி ஊழல், தொலைபேசித் துறையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என பட்டியல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. புதிய ஊழல், வெளிப்படும் போது, இன்றைய ஊழல் புதை குழிக்குள் மறைந்து விடுகிறது.

மசோதா வரலாறு

நூறு ஆண்டுகளாக கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற விவாதம், நமது நாட் டில் நடைபெற்று வருகிறது. நூறு ஆண்டு களாக மசோதா வடிவில், பட்டாம் பூச்சி போல் வந்து வந்து, வேடிக்கை காட்டுகிறது. 1911ல் கோகலே அவர்களால் கொண்டு வரப்பட்ட தொடக்கக் கல்விக்கான மசோதா, பணக்காரர் கள் மற்றும் நிலப்பிரபுக்களால் அன்றைய தினம் நிராகரிக்கப்பட்டது. தர்பங்கா பகுதியின் ராஜா 11 ஆயிரம் பேரிடம் கையெழுத்து இயக் கம் நடத்தி, கோகலே முன்வைத்த கல்வி மசோதாவை நிறுத்த செயல்பட்டார்.

பின் 1950ல் இந்திய அரசியலமைப்புச் சட் டம் வடிவமைக்கப்பட்ட போது ஷரத்து 45ன் படி அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளில், 14 வயதுக்குட்பட்ட அனை வருக்கும், கட்டாய இலவச கல்வி வழங்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

1992ல் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகட னத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என அறிவித்தது. அதன் படி, 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகள், இவர்களுக்கு கட் டாய இலவச கல்வி பெற உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டது.

1993 பிப்ரவரியில், நீதிபதி குல்தீவ்சிங் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் உன்னி கிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக் கில், இந்திய அரசியல் சாசனத்தின் வரைய றைப் படி ஷரத்து 21 வாழும் உரிமையை வரை யறை செய்கிற போது கல்வி பெறும் உரிமை யும் வாழும் உரிமையுடன் இணைந்தது என குறிப்பிட்டது.

பின் 2002ல், 86-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம், 2005-ல் கல்வி உரிமைச் சட் டம் குறித்த விவாதம், 2009ல் சட்ட மசோதா முன்மொழிவு, 2010 ஏப்ரலில் சட்டம் நிறை வேற்றம், என கல்வி உரிமை மசோதா நூற் றாண்டு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பலன் எளிய மக்களைச் சென்ற டைய விடாமல் தடுக்கிற செயல்களில் ஆளும் கட்சிகளின் ஆதரவு சக்திகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டம் (6-14வயது கொண்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி) அமலாகும் என்றும் அறிவிப்பு வெளி யாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் 2010ஆம் ஆண்டு, பள் ளிக் கல்வி மானியக் கோரிக்கையிலும், இந் திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 21 குறிப்பிட்ட படி, 6 முதல் 14 வயது கொண்ட அனைவருக்கும், இலவச கட்டாய கல்வி வழங்க நடவடிக்கை எடுப்போம் என பிரக டனம் செய்துள்ளது. மேலும் கல்வி உரிமை சட்ட மசோதா 2009ஐ நிறைவேற்ற எல்லா வித முன் முயற்சியும் மேற்கொள்வோம், என குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியா, 63 ஆண்டு கால சுதந்திர ஆட்சி அதிகார வர லாற்றில், வெறும் கையாலேயே முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்களேயல்லா மல், செயலில் எதையும் நிறைவேற்றவில் லை. நம்மை விட சிறிய, சமூக பொருளாதாரத் தில் பின்தங்கிய நாடுகளான வங்கதேசம், இலங்கை போன்றவை கூட கட்டாய இலவச கல்வி சட்டத்தை பல பத்து ஆண்டுகளாக அமலாக்கி வருகின்றன. அந்த நாடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி பெறும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலுக்கும் காவல்

பூனைக்கும் தோழன்

இந்திய கல்வி உரிமைச் சட்டம் 2011-ல் அமலாகும் என அறிவித்து இருந்தாலும், நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தை மாநில அரசு களின் தலையில் சுமத்த முயற்சிக்கிறது. மாநில அரசுகள் ஆக்கபூர்வமாக செயல்ப டுமா? என்பது முடிவுக்கு வர இயலாதது ஆகும். உதாரணத்திற்கு தமிழ்நாடு அரசு சமச் சீர் கல்வி அமலாகும் என அறிவித்தது. அதே நேரத்தில் நான்கு வாரியங்களும் தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தனி யார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர்களுடன் சமரசம் பேசினார். பாலுக்கும் காவல், பூனைக் கும் தோழன் என்பதாகவே மாநில அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. விளைவு, நீதி மன்றம் வாரியங்கள் தொடரலாம் என்றால் பாடத்திட்டம் ஏன் ஒன்றாக இருக்க வேண் டும்? என கேள்வி எழுப்பி ஒரே பாடத்திட் டம் என்ற முயற்சியையும் முடக்கிவிட்டது.

அதே போல் தான் இப்போது நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கல்விக் கட்டணம் குறித்த பரிந்துரையின் மீதான தமிழக அரசின் செயலும் அமைந்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக் கையில் கல்வி உரிமைச் சட்டத்தை நிறை வேற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள் வோம் என பிரகடனம் செய்த கையோடு, நீதி பதி கோவிந்தராஜன் குழுவின் கட்டணத்தை தனியார் பள்ளிகள் அமலாக்க வேண்டுமென அறிவித்ததும் நியாயமற்றது. சமச்சீர் கல்வி அறிவிப்பு சொதப்பல் நிலையை அடைந்தது போல், இந்த கல்விக் கட்டண அறிவிப்பும் மாற வேண்டும் என தனியார் பள்ளி உரி மையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் இயக்கங்கள் முயற்சித்தால், இது போன்ற குளறுபடிகளைத் தடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள 1500க்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகளில் சுமார் 74 லட்சம் மாண வர்கள் படிக்கிறார்கள். ஒரு பள்ளியில் சராசரி 4900 மாணவர்கள் என தீர்மானிக்கலாம். இதி லிருந்து வரும் லாபம் கொள்ளை லாபம் என் பதே உண்மை. இவையன்றி சீருடை, புத்த கம் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் வருமானம் என்பதெல்லாம் குறைத்து மதிப்பிட கூடிய தல்ல. ஏதாவது ஒருவர் அல்லது இருவர் நல்ல நோக்கத்தில் பள்ளிக் கூடங்கள் நடத் தியிருக்கலாம், அது விதிவிலக்கு.

ஆக இப்போது நடைபெறுவது, கல்விக் கட்டணம் குறித்த நாடகம் 1911ல் கோகலே முன்வைத்த மசோதாவை மன்னர்களும், பணக்காரர்களும், வெள்ளைய ஆட்சியாளர் களும் நிராகரித்து இருக்கலாம். இன்று 2010ல் நடைபெறும் மக்களாட்சி நிறைவேற்றி உள்ள கல்வி உரிமைச் சட்டத்தை, தனியார் பள்ளி உரிமையாளர்கள் என்னும் கல்வி முதலாளி கள் தடுத்துவிட அனுமதிக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக