ஞாயிறு, 30 மே, 2010

தனியார் பள்ளி கட்டணம் நிஜமா? நாடகமா?

தனியார் பள்ளி கட்டணம் நிஜமா? நாடகமா?
-எஸ். கண்ணன்

தமிழ்நாடு அரசு நியமனம் செய்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, பள்ளிக் கட்டணம் குறித்த பரிந்துரையை அர சிடம் வழங்கியுள்ளது. அரசு அதை ஏற்று அறி விப்பு வெளியிட்டுள்ளது. இது சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்க, தனியார் பள்ளி உரி மையாளர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ள னர். குழு பரிந்துரைத்த கட்டணம், பள்ளிகளை நிர்வாகம் செய்ய போதாது, என்ற வாதத்தை பகிரங்கமாக முன்வைக்கின்றனர். மிகத் தாரா ளமாக தங்களது விருப்பப்படி நடத்திவந்த வசூல் வேட்டையைத் தடுக்க அரசு, நீதித் துறை எதுவும் முயற்சிக்க கூடாது என துணிந்துவிட்டனர்.

மலிந்துவிட்ட ஊழல்

தனியார் பள்ளி உரிமையாளர்களின் போராட்டம் அல்லது அறிவிப்பு அரசு தன் கட மையில் இருந்து விலகிக் கொள்ள வழி செய்து, அரசை பஞ்சாயத்துதாரராக மாற்றுகிறது. நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரை மிக நியாயமானது, என நடுத்தர வர்க்கத்து மனிதர்களும் பேசத் தலைப்படுவதால், பொது மக்களும் பரவாயில்லையே! கல்விக் கொள் ளை தடுக்கப்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வர நிர்பந்திக்கப்படுகிறார்கள். எந்த ஒரு சமூக மானாலும், அது வளர்க்கப்படும் விதத்தில் தான், அறுவடை வெளிப்படும். இன்று நமது நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்கும், கேதன் தேசாய் 2500 கோடி ரூபாய் ஊழல், ஐ.பி.எல். கிரிக்கெட் பல ஆயிரம் கோடி ஊழல், தொலைபேசித் துறையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என பட்டியல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. புதிய ஊழல், வெளிப்படும் போது, இன்றைய ஊழல் புதை குழிக்குள் மறைந்து விடுகிறது.

மசோதா வரலாறு

நூறு ஆண்டுகளாக கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற விவாதம், நமது நாட் டில் நடைபெற்று வருகிறது. நூறு ஆண்டு களாக மசோதா வடிவில், பட்டாம் பூச்சி போல் வந்து வந்து, வேடிக்கை காட்டுகிறது. 1911ல் கோகலே அவர்களால் கொண்டு வரப்பட்ட தொடக்கக் கல்விக்கான மசோதா, பணக்காரர் கள் மற்றும் நிலப்பிரபுக்களால் அன்றைய தினம் நிராகரிக்கப்பட்டது. தர்பங்கா பகுதியின் ராஜா 11 ஆயிரம் பேரிடம் கையெழுத்து இயக் கம் நடத்தி, கோகலே முன்வைத்த கல்வி மசோதாவை நிறுத்த செயல்பட்டார்.

பின் 1950ல் இந்திய அரசியலமைப்புச் சட் டம் வடிவமைக்கப்பட்ட போது ஷரத்து 45ன் படி அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளில், 14 வயதுக்குட்பட்ட அனை வருக்கும், கட்டாய இலவச கல்வி வழங்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

1992ல் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகட னத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என அறிவித்தது. அதன் படி, 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகள், இவர்களுக்கு கட் டாய இலவச கல்வி பெற உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டது.

1993 பிப்ரவரியில், நீதிபதி குல்தீவ்சிங் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் உன்னி கிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக் கில், இந்திய அரசியல் சாசனத்தின் வரைய றைப் படி ஷரத்து 21 வாழும் உரிமையை வரை யறை செய்கிற போது கல்வி பெறும் உரிமை யும் வாழும் உரிமையுடன் இணைந்தது என குறிப்பிட்டது.

பின் 2002ல், 86-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம், 2005-ல் கல்வி உரிமைச் சட் டம் குறித்த விவாதம், 2009ல் சட்ட மசோதா முன்மொழிவு, 2010 ஏப்ரலில் சட்டம் நிறை வேற்றம், என கல்வி உரிமை மசோதா நூற் றாண்டு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பலன் எளிய மக்களைச் சென்ற டைய விடாமல் தடுக்கிற செயல்களில் ஆளும் கட்சிகளின் ஆதரவு சக்திகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டம் (6-14வயது கொண்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி) அமலாகும் என்றும் அறிவிப்பு வெளி யாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் 2010ஆம் ஆண்டு, பள் ளிக் கல்வி மானியக் கோரிக்கையிலும், இந் திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 21 குறிப்பிட்ட படி, 6 முதல் 14 வயது கொண்ட அனைவருக்கும், இலவச கட்டாய கல்வி வழங்க நடவடிக்கை எடுப்போம் என பிரக டனம் செய்துள்ளது. மேலும் கல்வி உரிமை சட்ட மசோதா 2009ஐ நிறைவேற்ற எல்லா வித முன் முயற்சியும் மேற்கொள்வோம், என குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியா, 63 ஆண்டு கால சுதந்திர ஆட்சி அதிகார வர லாற்றில், வெறும் கையாலேயே முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்களேயல்லா மல், செயலில் எதையும் நிறைவேற்றவில் லை. நம்மை விட சிறிய, சமூக பொருளாதாரத் தில் பின்தங்கிய நாடுகளான வங்கதேசம், இலங்கை போன்றவை கூட கட்டாய இலவச கல்வி சட்டத்தை பல பத்து ஆண்டுகளாக அமலாக்கி வருகின்றன. அந்த நாடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி பெறும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலுக்கும் காவல்

பூனைக்கும் தோழன்

இந்திய கல்வி உரிமைச் சட்டம் 2011-ல் அமலாகும் என அறிவித்து இருந்தாலும், நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தை மாநில அரசு களின் தலையில் சுமத்த முயற்சிக்கிறது. மாநில அரசுகள் ஆக்கபூர்வமாக செயல்ப டுமா? என்பது முடிவுக்கு வர இயலாதது ஆகும். உதாரணத்திற்கு தமிழ்நாடு அரசு சமச் சீர் கல்வி அமலாகும் என அறிவித்தது. அதே நேரத்தில் நான்கு வாரியங்களும் தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தனி யார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர்களுடன் சமரசம் பேசினார். பாலுக்கும் காவல், பூனைக் கும் தோழன் என்பதாகவே மாநில அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. விளைவு, நீதி மன்றம் வாரியங்கள் தொடரலாம் என்றால் பாடத்திட்டம் ஏன் ஒன்றாக இருக்க வேண் டும்? என கேள்வி எழுப்பி ஒரே பாடத்திட் டம் என்ற முயற்சியையும் முடக்கிவிட்டது.

அதே போல் தான் இப்போது நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கல்விக் கட்டணம் குறித்த பரிந்துரையின் மீதான தமிழக அரசின் செயலும் அமைந்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக் கையில் கல்வி உரிமைச் சட்டத்தை நிறை வேற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள் வோம் என பிரகடனம் செய்த கையோடு, நீதி பதி கோவிந்தராஜன் குழுவின் கட்டணத்தை தனியார் பள்ளிகள் அமலாக்க வேண்டுமென அறிவித்ததும் நியாயமற்றது. சமச்சீர் கல்வி அறிவிப்பு சொதப்பல் நிலையை அடைந்தது போல், இந்த கல்விக் கட்டண அறிவிப்பும் மாற வேண்டும் என தனியார் பள்ளி உரி மையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் இயக்கங்கள் முயற்சித்தால், இது போன்ற குளறுபடிகளைத் தடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள 1500க்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகளில் சுமார் 74 லட்சம் மாண வர்கள் படிக்கிறார்கள். ஒரு பள்ளியில் சராசரி 4900 மாணவர்கள் என தீர்மானிக்கலாம். இதி லிருந்து வரும் லாபம் கொள்ளை லாபம் என் பதே உண்மை. இவையன்றி சீருடை, புத்த கம் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் வருமானம் என்பதெல்லாம் குறைத்து மதிப்பிட கூடிய தல்ல. ஏதாவது ஒருவர் அல்லது இருவர் நல்ல நோக்கத்தில் பள்ளிக் கூடங்கள் நடத் தியிருக்கலாம், அது விதிவிலக்கு.

ஆக இப்போது நடைபெறுவது, கல்விக் கட்டணம் குறித்த நாடகம் 1911ல் கோகலே முன்வைத்த மசோதாவை மன்னர்களும், பணக்காரர்களும், வெள்ளைய ஆட்சியாளர் களும் நிராகரித்து இருக்கலாம். இன்று 2010ல் நடைபெறும் மக்களாட்சி நிறைவேற்றி உள்ள கல்வி உரிமைச் சட்டத்தை, தனியார் பள்ளி உரிமையாளர்கள் என்னும் கல்வி முதலாளி கள் தடுத்துவிட அனுமதிக்கக் கூடாது.

வியாழன், 27 மே, 2010

அரசு - வேலை - உரிமை 1

அரசு - வேலை - உரிமை 1

எஸ்.கண்ணன் வியாழன், 20 மே 2010 17:42

மின்னஞ்சல்அச்சிடுகPDF

ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவீடு செய்ய வேலை வாய்ப்பும், வேலையின்மையும் பிரதான அளவு கோலாகும். ப.சிதம்பரம் போன்ற முதலாளித்துவ அரசியல் வாதிகளும், முதலாளித்துவ சமூகமும், பொருளாதார வளர்ச்சியை, சமூக வளர்ச்சி, என குறிப்பிடுகின்றனர். அதனால் தான், இந்திய சமூகத்தின் வேலையின்மை, கல்வியின்மை, பட்டினிச்சாவு, தற்கொலைகளின் அளவு, காசநோய், குழந்தைகளின் இறப்பு விகிதம், எடைகுறைந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், எடைகுறைந்த குழந்தைகள் போன்ற சமூகப் பிரச்சனைகள் முதலாளித்துவ சிந்தனையாளர்களின் கண்களுக்கு தெரியவில்லை. “செலக்டிவ் அம்னீசியா” எனும் நோயைப் போல் (தெரிந்தெடுந்த விஷயங்களை மறந்து விடுவது) இந்த அரசியல் வாதிகளின் கண்கள் “செலக்டிவ் பிளைண்ட்னெஸ்” எனும் நோய்க்கு ஆளாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு விவரம் செய்தித்தாள்களில் உலா வந்தது. “இந்தியாவில் கழிவறை உள்ள வீடுகளை விட,செல்போன் வைத்திருப்போர் அதிகம்’’ என்பதே செய்தியின் சாரம். இந்த செய்தி, மக்களின் அறிவியல் சிந்தனையை வளர்த்திருக்கிறது, என்ற முடிவுக்கு வர முடியுமா? வரமுயும் என்றால் செல்போனைப் பயன் படுத்துவது அறிவியல் வளர்ச்சியா? கழிவறையைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் மலம் கழிப்பது அறிவியல் வளர்ச்சியா? ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்துவது நமது நோக்கமல்ல. அடிப்படையில் கல்வியும், அதைத் தொடர்ந்து நல்ல, சமூகப் பாதுகாப்புடனான «வைலயும் ஒரு சமூகத்தில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியம்,சுகாதாரம் நோய்த்தடுப்பு போன்றவை வளரும். இன்று நமது மக்கள் கல்வி, வேலை தங்கள் தலைமுறைக்கும் வாரிசுகளுக்கும் கிடைக்காததற்கு காரணம், தலை விதி என்று எண்ணிக் கொண்டுள்ளனர்.

ஒரு சமூகத்தில் வேலையின்மை அதிகரிக்கும் போது, அரசு மீதும் ஆள்வோர்மீதும், அரசியல், ஜனநாயக இயக்கங்களின் மீதும் நம்பிக்கை குறையும். குறிப்பாக இளம் தலைமுறை இது போன்ற நம்பிக்கையின்மைக்கு விரைவில் சென்றடைவர். அத்தகைய இளைஞர்களை அதிதீவிரவாத இயக்கங்களும், மதவெறி அடிப்படை வாதிகளும், சாதிய சக்திகளும் ஈர்த்திடும் வாய்ப்பும் உருவாகும். மதம்,சாதி, இனம், மொழி, பிராந்தியம் என்ற தன்மையிலான உணர்வுகள் தலைதூக்கி, நாட்டின் ஜனநாயகத்திற்கும் மக்களின் நல்லிணக்கத்திற்கும் சவால் விடும்.

இன்று இந்தியாவில் லஷ்கர்இதொய்பா தொடங்கி அனைத்துவித அடிப்படை வாதிகளின் வளர்ச்சிக்கும், அஸ்ஸாமின் தீவிரவாத, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் செயல்படும் பிரிவினைவாத இயக்கங்களின வளர்ச்சிக்கும், மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் இயங்கி வரும் அதிதீவிர இடதுசாரிகளின் செயல்களுக்கும் இந்தியாவில் உள்ள வேலையின்மை, கல்வியின்மை, சமமற்ற வளர்ச்சி ஆகியவை தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? தெலங்கானாப் போராட்டத்தின் தீவிரமும் அதைத் தான் சுட்டிக் காட்டுகிறது.

தமிழகத்தில் 1995_96 களில் தொடர்ந்து நடைபெற்று வந்த சாதி கலவரத்தின பின்னனியை, தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. தென் மாவட்டங்கள் முழுவதும் பயணம் சென்று விவரம் சேகரித்த நீதிபதி வேலையின்மை, வளர்ச்சியின்மை பிரதானக் காரணம் என்பதைக் கண்டறிந்து அரசிடம் சமர்ப்பித்தார் இந்த பரிந்துரைக்கு முன்னதாக நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின ஒரு பகுதியாக, பட்டினிக்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை இந்தியாவின் எழுத்தாளர்கள் பதிவு செய்து உள்ளனர். ஆனந்த மடம் நாவலின் ஆசிரியர் பங்கிம் சட்டர்ஜி, நிலம் மாடு,வண்டி, வீடு என அனைத்தையும் விற்றாகி விட்டது இனி மனிதர்கள் மட்டும் தான் உயிரோடு இருக்கிறார்கள் என குறிப்பிடுகிறார் இத்தகைய கொடிய நிலையைத் தொடர்ந்தே கொலைகளும் கொள்ளைகளும் நடைபெற்றதாக எழுதுகிறார்.

மதுரையின் வரலாற்றை ஆய்வு செய்த மானுடவியல் அறிஞர்கள் பலரும் சமீபத்தில் வெளிவந்த சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலும் சமூகப் பிரச்சனைகளை முன் வைக்கிறது குறிப்பாக திருமலை மன்னன், “மதுரையைச் சுற்றியிருந்த கள்ளர்கள் களவு செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்களையே காவல்காரர்களாக மாற்றிவிட்டால் களவு நின்றுவிடும் என திட்டமிட்டு மதுரையை காவல் காக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைக்கிறான் மன்னன் நிலப்பிரபுத்துவ சமூகத்தின பிரதிநிதி என்பதால் தன் கருவூலத்தில் இருந்து நிதி வெளியேறாமல் மக்களிடம் காவல் பணத்தை பெற்றுக் கொள்ளவும் வழி செய்கிறான். இன்றைய நவீன சமூகத்து இளைஞர்களோ வேலை கொடுப்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்தத் தயங்குகிற போது 400 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களுக்கு அரசு ஏன் வேலை தரவில்லை? என்று கேட்கிற விழிப்புணர்வு இருந்திருக்க நியாயம் இல்லை தான்.

இன்று முல்லைப் பெரியாறு அணை கேரளா, தமிழ்நாடு அரசு மற்றும் மக்களின் சர்ச்சைக்கு உரிய செயலாக மாறி இருக்கிறது. ஆனால் முல்லைப் பெரியாறின் வரலாறு மானுடவியல் அணுகு முறை சார்ந்தது மதுரை, தேனி, திண்டுக்கல்லின் ஒரு பகுதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதராரம் சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்த ஆங்கிலேயே அரசு, முல்லைப் பெரியாறு அணை திட்டத்திற்கு வழிவகை செய்தது குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்த ஜனநாயகப் போராட்டம், அணை கட்டி தண்ணீர் பாய்ந்த நிலம், விளைச்சல் காட்டத் துவங்கிய பின்பே எழுந்தது.

குற்றங்கள் குறையவும், ஜனநாயகச் சிந்தனை, வளர்ச்சி ஆகியவை உருவாகவும்,வேலை என்பது அடிப்படை அவசியமாகும். இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நேரத்தில் லண்டன் நகரில் இருந்த வேலையின்மையை வறுமையை கார்ல் மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். ஒரு தாய்க்கும், குழந்தைக்குமான உரையாடலாக இதை படம் பிடிக்கிறார் மார்க்ஸ் குளிர் தாங்க வில்லை அம்மா, கொஞ்சம் பொறுத்துக்கொள், அப்பா வேலைக்கு சென்றவுடன் நம்முடைய வீட்டிட்ல் கரி அடுப்பை எரித்து வெப்பம் உருவாக்கிக் கொள்ளலாம் அப்பா ஏன் வேலைக்கு செல்ல வில்லை? அப்பா வேலை செய்த நிறுவனத்தை மூடி விட்டனர். ஏன் மூடி விட்டனர்? அந்த நிறுவனத்தில் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட கரி விற்பனை ஆகவில்லை? மக்களிடம் கரி வாங்கப் பணம் இல்லை. ஏன் பணம் இல்லை? ஏனென்றால் வேலையில்லை. இந்த உரையாடல் நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டதால் சமூக விளைவை வெளிப்படுத்துகிறது.

கரியும், இரும்பும் இருக்கிறது. கரி தேவைப்படும் குடும்பங்களும் இருக்கிறது. ஆனால் வேலை இல்லாததால் குடோனும் காலியாக வில்லை. அடுப்பும் எரியவில்லை. இப்படி நாய் காத்த வைக்கோல் போராக நமது செல்வம் சிலரிடம் குவிந்தும் பெரும்பான்மையோரிடம் எதுவும் இல்லாமலும் இருக்கிறது. இது வளர்ச்சி அல்ல. யானைக்கால்

வெள்ளி, 14 மே, 2010

தெலுங்கானா கோரிக்கை அவசியமா?

தெலுங்கானா கோரிக்கை அவசியமா?

மின்னஞ்சல்அச்சிடுகPDF

தெலுங்கானா தனி மாநிலம் என அறிவிக்கப்படுமா? இல்லை போராட்டங்கள் மட்டுமே தொடருமா? என்பது தான் இப்போதையக் கேள்வி. இந்தியாவில் 500க்கும் அதிகமான சிறு சிறு நாடுகள் இருந்ததாகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவைகளை ஒருங்கிணைத்ததாகவும், பிரிட்டிஷாருக்கு எதிரான தேசிய எழுச்சி இந்தியா என்கிற ஒருங்கிணைந்த நாடாக அமைவதற்கு வழிகோலியது என்பதையும் நாம் அறிந்த உண்மை. ஒருங்கிணைந்த இந்தியாவிற்குள் அசமத்துவமான வளர்ச்சி காரணமாக மொழியை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களும், இனத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களும் பிராந்தியத்தை (regional) அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களும் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளது. உதாரணத்திற்கு தமிழ்நாடு, ஜம்மு _ காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களை குறிப்பிட முடியும். இவைகளில் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்திலும், பஞ்சாப் ஒரு குறிப்பிட்ட காலத்திலும் பிரிவினையை கைவிட்டன. ஆனால் ஜம்மு _ காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள போராட்ட அமைப்புகள் தங்கள் பிரிவினை கோரிக்கையை கைவிட்டதாக கூறமுடியாது. ஒருங்கிணைந்த இந்திய அரசு, தனது அசமத்துவமான கொள்கை காரணமாக மேற்படி பிரிவினை கோரிக்கைகளை உருவாக்கி உள்ளது, என்பதை இன்னும் கூட உணர்ந்ததாக கூறமுடியாது.

இன்றைக்கு தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடுகிற,ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் மாணவர்களும், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற உணர்வையே பிரதிபலிக்கின்றனர். ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்திற்குள், “தெலுங்கானா பிராந்தியா புறக்கணிக்கப்படுகிறது. அல்லது ஆந்திரக் கடலோர முதலாளிகளோ, வேறு பிராந்திய முதலாளிகளோ மேலாதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களுடன் இணைந்து நடுத்தர வர்க்கமும் பலனடைந்து இருக்கிறது.’’ என குற்றம் சுமத்துகின்றனர். தெலுங்கானா அறிவு ஜீவிகள் அமைப்பின் (ஜிணிலிணிழிநிகிழிகி மிழிஜிணிலிலிசிஜிஹிகிலி திளிஸிஹிவி) பிரதிநிதி, உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் பேரா. எஸ். சிம்ஹாத்ரி வேலையின்மை மாணவர்களை கவலையடையச் செய்துள்ளது இவர்களில் பெரும்பான்மையினர் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்களில் முதல் தலைமுறையினர் அல்லது இரண்டாம் தலைமுறையினர். எனவே, தனி மாநிலம் உருவாக்கப்பட்டால் தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்புகின்றனர்’’ என்கிறார். 1969இல் சென்னா ரெட்டி தெலுங்கானா மாநிலத்திற்கான போராட்டத்தை துவக்கிய போதும் மாணவர்கள் பேரா. சிம்ஹாத்ரி குறிப்பிட்டதைப் போன்ற நம்பிக்கையுடன் முன்நின்று போராட்டம் நடத்தி உள்ளனர். அதே அனுபவத்தைத் தான் இன்றைய தெலுங்கானா மாநில கோரிக்கையாளர்களும் முன் வைக்கின்றனர்.

1971இல் தெலுங்கான பிரஜா சமிதி, தெலுங்கானா மாநிலத்திற்கான போராட்டதை கைவிட்ட போது, தெலுங்கானா பிராந்தியத்தைச் சார்ந்த பி.வி. நரசிம்மராவ் (முன்னாள் பிரதமர்) முதல்வராக்கப்பட்டார். தெலுங்கானா பிராந்தியத்தைச் சார்ந்த அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் அந்த பிரதேசத்தில் வாழ்ந்தவருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென 1919இல் நிஜாம் மன்னன் காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையை அமலாக்க வேண்டும், என்றும் போராட்டக்குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். இத்தகைய அறிவிப்புகளும் செயல்களும் சுமார் 40 ஆண்டுகளாக மேற்படி கோரிக்கை நீடிக்கிறது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

மேற்படி 40 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் 25 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. தெலுங்கு தேசம் சுமார் 15ஆண்டு காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. இன்றைய தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் இருந்தவர்தான் அமைச்சர் பதவி தரவில்லை என்பதால், தனிக்கட்சி துவக்கி பிராந்திய உணர்வுகளைப் பயன்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி மூன்று கட்சிகளும் தெலுங்கானா என்கிற பிராந்திய உணர்வை தங்களின் வாக்கு வங்கி பாதுகாப்பிற்காக பயன்படுத்தி உள்ளனர். மேற்படி உணர்வுக்கு காரணமான, வளர்ச்சியின்மையை போக்கிடவோ, வேலைவாய்ப்பை பெருக்கிடவோ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

தனி மாநிலம் தான் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்பது ஆளும் வர்க்கம் உருவாக்கிய திட்டமிட்ட சதி. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான சக்திகளைப் பிரிக்க மேற்படி பிரிவினைக் கோரிக்கைகள் நீண்ட நாளாக இந்திய மண்ணில் பயன்பட்டுள்ளது. ஜார்கண்ட், சட்டிஸ்கர், உத்தர்காண்ட் போன்ற மாநிலங்களைப் பிரித்து உருவாக்கிய பெருமை பா.ஜ.க விற்கு உண்டு, என பா.ஜ.க தலைவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். சினிமாவில் சிரிப்பு நடிகர் வடிவேல் தான் செய்த செயலை தானே பாராட்டிக் கொள்ளும் விதமாக, “கைப்பிள்ளை கலக்கிட்டய்யா’’என்று பாராட்டிக் கொள்வார். அதுபோல் தான் பா.ஜ.க வின் செயலும் இருக்கிறது. மேற்படி மூன்று மாநிலங்கள் 1999இல் உருவாக்கப்பட்ட பின் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் மேற்படி மாநிலங்களில் உருவாகியுள்ளது.

தெலுங்கானா கோரிக்கையை முன்வைக்கும் பலர் பிராந்திய அளவில் தனி பண்பாடு இருக்கிறது என்றும் அதைப் பராமரிக்க தனி நிர்வாகம் தேவை என்றும் வாதிடுகின்றனர். இதுவும் தவறான வாதம். ஏனென்றால் இந்தியாவில் யாரோடும் இணையாத பண்பாட்டு அடையாளங்களை பழங்குடியினர் தான் அதிகம் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தளவில் 600க்கும் அதிகமான பழங்குடி பிரிவுகள் (நன்கு தெரிந்தது) உள்ளன. வெளியுலகு அறியாமல் வரையறுக்க முடியாமல் 1000க்கும் அதிகமான குழுக்கள் உள்ளன. இவை நிர்வாகம் காரணமாகவே பராமரிக்கப்படும் என கருதினால் 1000க்கும் அதிகமான மாநிலங்களை உருவாக்க வேண்டிய தேவை வரும்.

தெலுங்கானாவைத் தொடர்ந்து கூர்க்காலாந்து, பண்டல்காண்ட, விதர்பா, ஹரித் பிரதேஷ் இப்படி பல்வேறு புதிய கோரிக்கைகள் உருவாகின்றன. காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறை மேற்படி கோரிக்கைகளைத் தூண்டி விட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க சி.பி.ஐ உள்ளிட்ட தேசிய கட்சிகளும் பல்வேறு மாநில கட்சிகளும் தனி மாநில கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது தவறான சிந்தனைகளை மேலும் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்க்க மட்டுமே உதவும். ஆளும் வர்க்க அரசியல் பொருளாதார அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் உருவாக்க உதவாது.

இன்றைய ஆந்திர பிரதேசம் 1951இல் பொட்டி ஸ்ரீராமுலுவும், தமிழகத்தில் சங்கரலிங்கனாரும் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட பின் உருவாக்கப்பட்ட மொழிவாரி அமைந்த மாநிலமாகும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 1956இல் இப்படி தான் உருவாக்கப்பட்டன. நிர்வாகத்தை உள்ளாட்சிகள் மூலமும், சமூக அரசியல் பொருளாதார கொள்கைகளில் மாற்றத்தை உருவாக்கி வளர்ச்சியற்ற பிரதேசங்களுக்கு முன்னுரிமை தருவதும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அணுகுமுறையை ஆளும் வர்க்கம் மேற்கொள்வதும் தான் இது போன்ற மாயைகளுக்கு தீர்வளிக்கும்.


சாதியத்திற்கு எதிரான இ.எம்.எஸ் சிந்தனைகள்

சாதியத்திற்கு எதிரான இ.எம்.எஸ் சிந்தனைகள்

மின்னஞ்சல்அச்சிடுகPDF

சாதி’’ இந்திய சமூகத்தை, “மேலும் ஆய்வை நோக்கிச் செல்’’ என நிர்பந்திக்கிற வார்த்தை. கார்பன் பரிசோதனையோ,வேறு பரிசோதனைகளோ, “சாதி’’ என்கிற வார்த்தை மீது செல்லுபடி ஆவதில்லை. இ.எம். சங்கரன் என்கிற இ.எம்.எஸ் மார்க்சியத் தத்துவத்தை இந்திய மண்ணில், மண்ணுக்கேற்ற மார்க்சியமாக வளர்ப்பதற்கு முயற்சித்த தத்துவவாதி. ஒருமுறை இ.எம்.எஸ் நான் முதலில் சீர்திருத்தவாதி, பின் இடதுசாரி, பின் கம்யூனிஸ்ட்’’ என்று, தன் வளர்ச்சியை, தன் சிந்தனை வளர்ச்சியுடன் ஒப்பிட்டு வரையறை செய்திருக்கிறார். கேள்விக் கணைகள் மூளையை கசக்கியதாலேயே,இ.எம்.எஸ் என்கிற மனிதன் மார்க்சியவாதியாக மலர்ந்திருக்கிறார்.

இ.எம்.எஸ் பிறந்த, வளர்ந்த குடும்பப் பின்னணியை விளக்குவது கட்டுரையின் நோக்கமன்று, ஆனாலும் அவர்,நிலையில் உயர்ந்ததாகக் கூறப்படுகிற சாதியில் பிறந்தவர், நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இளம் வயதில் தன் வாழ்க்கை மீது அவர் எழுப்பிய கேள்விகளின் விளைவு தான், வேதங்களின் நாடு, இந்திய வரலாறு ஆகிய புத்தகங்கள். சிலர் மார்க்சிஸ்ட் இயக்கத்தை விமர்சிக்க இ.எம்.எஸ். ஏன் நம்பூதிரிபாட் என்ற சாதிய வார்த்தையை பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்? மார்க்சிஸ்ட் கட்சி இ.எம்.எஸ் போன்ற பிராமணர்களால் தலைமை தாங்கப்படும் கட்சி என்று வினாக்களை பயன்படுத்துவது உண்டு.

தன் பெயரில் நம்பூதிரியை வைத்துக் கொண்டு, சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுடனான வாழ்க்கையுடன் இணைந்ததால், ‘நம்பூதிரிஎன்கிற வார்த்தை மீதான மரியாதையை உடைக்கப் பயன்படுத்தினார். என ஏற்க, மேற்படி கேள்வியாளர்கள் முன்வரவில்லை. இரண்டாவதாக, தனது குடும்பப் பின்னணி காரணமாக, தான் கற்க நேர்ந்த வேதங்களை கேள்விக்குட்படுத்தியதால், இந்திய பிராமணீயத்தை, சாதிய மேலாதிக்க வரலாற்றை அம்பலப்படுத்த முயற்சி எடுத்தார். என்பதையும் ஏற்கவில்லை.

இந்தியாவில் சாதிய படிநிலையை, அகமண முறையை ஒவ்வொரு சாதியும் சமஸ்கிருதமயமாக்கலுக்குள் சிக்கி,தன்னை உயர்வான சாதியாக வெளிப்படுத்தும் வரலாறுகளை முதலில் எழுத்து வடிவத்தில் இந்திய மக்களுக்கு தந்தவர்கள் வெளிநாட்டவரே. அதன் பின் அப்பணியை திறம்பட செய்தவர் இ.எம்.எஸ் என்பது வரலாற்று உண்மை. 1960களின் இறுதியில் அவர் எழுதிய வேதங்களின் நாடு, 1975 இல் சற்று விரிவாக எழுதிய இந்திய வரலாறு ஆகிய இரு நூல்களும், அவருடைய இந்திய சமூகம் குறித்த ஆய்வை தெளிவு படுத்துகின்றன.

நாம் விமர்சனங்களை வரவேற்று இ.எம்.எஸ் எழுத்துக்களை கற்றுணர்வதன் மூலம் உண்மையை உணர முடியும். இல்லை என்றால், இ.எம்.எஸ் என்கிற கம்யூனிஸ்ட் அல்லது பொருள் முதல்வாதி புனிதப் படுத்தப்பட்டு விடுவார். சாதியப் பிரிவினை இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்ற, சொல்லப்பட்ட காரணங்கள் 1. ஆரியர் வருகை, 2. வேதங்கள், 3. மனு ஸ்மிருதி, 4. வேலைப் பிரிவினை போன்றவை ஆகும். இ.எம்.எஸ் இதைப் படிப்படியாக தெளிவுபடுத்துகிறார். இந்திய சமூகத்தில் இருந்த பொருளாதார மாற்றங்கள் சாதியத்தை நிலைநிறுத்த அல்லது உறுதிப்படுத்த எந்தெந்த வகைகளில் உதவி செய்தது என்பதை எல்லா அத்தியாயங்களிலும் குறிப்பிடுகிறார்.

நிலம், சாதி, வர்க்கம் என்ற புத்தகத்தை எழுதிய சமூகவியலாளர் கெய்ல் ஓம்லெட், ஆரியர் வருகையினால் தான் சாதி வந்தது என்றால், ஆரியர் என்கிற நாடோடி இனம் சென்று குடியமர்ந்த இதர நாடுகளில் ஏன் சாதி உருவாகவில்லை?என்ற கேள்வியை முன்னிறுத்தி இந்திய சமூகப் பின்னணியை விவரிக்கிறார். ஆரியர்களைப் பிராமணர்களாய் பார்ப்பதும், வேத காலம் தொடங்கி, இன்றுவரை சமூக ஒடுக்குமுறையை நிகழ்த்துகிற பிராமணீயம் மீது, இருக்கிற கோபம் காரணமாகவும் கெய்ல் ஓம்லெட் எழுப்புகிற கேள்வியை சிலரின் சிந்தை ஏற்க மறுக்கிறது.

இ.எம்.எஸ் எழுதிய இந்திய வரலாறும், சோவியத் எழுத்தாளர்கள் எழுதிய இந்திய வரலாறும், ஆரியர்களுக்குள் இருந்தகோத்ரம்’’ என்ற நடைமுறையும், அதே போல் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்த சமூக அமைப்பும், வேலைப் பிரிவினைகளைக் கொண்டிருந்தது எனக் குறிப்பிடுகின்றனர். பேராசிரியர் காஞ்ச அய்லையா மேலை நாடுகளிலும் வேலைப் பிரிவினை இருந்தது அந்த வேலைப் பிரிவினை காரணமாக அவர்களில் தீண்டத் தகாதவர்கள் என யாரும் உருவாகவில்லை, ஆனால் ஐரோப்பியர்களின் பெயர்களில் இணைந்தே இருக்கிறது என்று வாதிடுகிறார். உதாரணத்திற்கு POTTER (பானை செய்பவர்), FULLER(சலவையாளர்) உள்ளிட்ட பெயர்களையும் காஞ்ச அய்லையா குறிப்பிடுகிறார்.

அதே போல் உலகில் ரோமாபுரியின் வரலாறு, கிரேக்கத்தின் வரலாறு ஐரோப்பாவின் இதர பகுதிகளின் வரலாறு அனைத்தும் அடிமை முறை இருந்ததை பதிவு செய்திருக்கிறது. அமெரிக்கா மிக சமீபத்திய உதாரணம், அதாவது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கறுப்பினத்தவரை ஏலம் போட்டு விற்பனை செய்த அடிமை முறை’’ என்கிற கொடுமையை நிகழ்த்திய நாடு என்பதை அறிய முடிகிறது. இப்படி உலகின் பிற நாடுகளில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய போது இருந்த அடிமை முறை இந்தியாவில் இல்லை என்று தான் நமது ஆட்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கூறிக் கொள்ள விரும்புகின்றனர்.

இ.எம்.எஸ் இந்தியாவில் அடிமை முறை என்பது வருண அடிப்படையில் மக்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யக்கூடியதாக அமலானது’’ என குறிப்பிடுகிறார். சரித்திர முற்கால கட்டத்தின் இறுதியிலும், சரித்திர காலத்தின் துவக்கத்திலுமாக, இதர அநேக நாடுகளில் இருந்து மாறுபட்ட வளர்ச்சிப் போக்கு இந்தியாவிற்குள் ஏற்பட்டது. வர்க்கங்கள் உருவாகி, வர்க்க மோதல்கள் நடைபெற்ற போது, இந்தியாவிற்கே உரித்தான வடிவத்தைப் பெற்றது என இந்திய வரலாறு (பக்கம், 20) இல் இ.எம்.எஸ் எழுதி உள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் குறித்த அகழ்வாய்வுகளில் கிடைக்கப் பெற்ற தடயங்கள், சமூக அநீதிகள் இருந்ததையும் வெளிப்படுத்துகிறது. இந்திய வரலாறு பக், 23இல் பணக்காரர்களுடையதென்று கருதப்படக் கூடிய வீடுகளின் அமைப்பு ஏராளமான சொத்துக்கள் பாதுகாப்பதற்கும், திருடர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அவைகளைப் பாதுகாக்கவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு நேர்மாறாக அடிமைகளோ அல்லது அடிமைகளை விடச் சற்றுக் குறைவான சுரண்டலுக்கு இறையானவர்களோ அல்லது வேலைக்காரர்களோ குடியிருக்கும் தன்மை கொண்ட வீடுகளின் தடயங்களும் கிடைத்தது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வரிகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏற்றம் இறக்கம் இருந்ததைக் குறிப்பிடுகிறது.

அதேபோல் ஆரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிற போது பக், 29இல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் அனைவரும்,ஒரே கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர் இந்தக் கோத்திர சமுதாயங்களுக்கு இடையில் மோதல்கள் நடந்து வந்தன. தங்கள் வாழ்க்கைக்காகவும், வளர்த்த ஆடு, மாடுகளுக்காகவும் அவர்களுக்குள் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். என்பதைக் காணலாம். இத்தகைய சிறு, சிறு வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் கூட்டம் தான், பின்னர் இந்தோ ஆரிய கலப்பினமாக உருவாகிறது. மோதலில் ஆரியர்கள், சிந்து சமவெளி மக்களை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து, தங்களை மேலானவர்களாக முன்னிறுத்தி இருக்க வேண்டும். கூடவே, சிந்து சமவெளி பகுதிக்குள் வருவதற்கு முன்னதாகவே ஆரியர்கள் இலக்கியங்களை, குறிப்பாக வேதங்களில் முதலாவதான ரிக்வேதம் உருவாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. நான்கு வருண முறைகளும், ஆண்டான், அடிமை ஆகிய இரு வர்க்கங்களின் மோதல் உருவாவதற்கு பதிலாக, படிநிலை அதிகாரங்களும், சுரண்டலுக்கான வாய்ப்புகளும் உருவானதாக இ.எம்.எஸ் ஆய்வு செய்கிறார். இந்தப் படிநிலை தொடர்ந்து பல காவியங்களாலும், கதைகளாலும் அடுத்தடுத்த தலைமுறையின் மீது நிலை நிறுத்தப் படவும் செய்கிறது. இதில் தீட்டு என்கிற ஒதுக்கல் முறை மூலம் இந்திய ஆளும் வர்க்கத்தினால் சுரண்ட முடிந்ததையும், தீட்டுக்குரியவர்களாகப் பிறந்தது முன் பிறவிப் பயன் என்ற கருத்தாக்கத்திற்கு ஆட்பட்ட உழைக்கும் வர்க்கம், பிறவிப் பயன் கழிக்க உழைத்துக் கொட்டியதையும் அறிய முடியும். எனவே தான் இந்தியாவில் சாதியே,வர்க்கமாக பிரிந்து கிடக்கிறது என இடதுசாரிகள் கூறுகின்றனர்.

சாதியே வர்க்கம் என்றால், “தலித் காலனிக்குள்ளும், இதரர் ஊருக்குள்ளும் குடியிருப்பது ஏன்?’’ என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இ.எம்.எஸ்.சோ (அ) இடதுசாரிகளோ மேற்படி கேள்விக்கு காரணமான சூழலை நியாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் இந்த நிலை சில நூறு ஆண்டுகளில் வளர்ந்த அவலம். சாதிப் படிநிலையில் தான் உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிற, பிராமணீய சிந்தனை (சமஸ்கிருதமயமாக்கல்)யின் வளர்ச்சி ஆகும். இந்த உயரத்தை அடைவதற்காக, பிராமண சாதியினரின் நடவடிக்கையை இதரர்களும் பின்பற்றுகிற போக்கு கடந்த இரு நூற்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றமாகவே இதைக் கொள்ள முடியும். அம்பேத்காரியவாதி என குறிப்பிடப்படுகிற ஆனந்த் டெல்டும்டே, சென்னை எழுத்தளார் சங்க மாநாட்டில் பேசுகிற போது, இதே கருத்தை முன்வைக்கிறார். இன்றைய சாதியம் முதலில் நாம் பார்த்தத் தொன்மையான சாதியத்தில் இருந்து மிகவும் மாறுபட்டது. தொன்மையான சாதியம் பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாதவர்களுக்கும் இருந்து வந்தது. இன்று அது வருண அமைப்பிற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்கும் நடந்து வருகிறது. அதாவது தலித்துகளுக்கும், தலித் அல்லாதோருக்கும் இடையிலான போராட்டமாக இன்றைய சாதியம் இருக்கிறது.’’ என ஆனந்த் டெல்டும்டே கூறுகிறார். இந்த வேறு பாட்டையும் இ.எம்.எஸ் இந்திய அரை நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சிமுறை குறித்து விளக்குகிற போது குறிப்பிடுகிறார்.

மேற்படி விவரங்களில் இருந்து இ.எம்.எஸ் கருத்து ரீதியில் சரியான அணுகுமுறை கொண்டிருந்தார். செயல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறாரா? என்றால், ஆம் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இடதுசாரிகளை பொருத்தளவில் செய்யப்பட்ட செயல்கள், தனி நபர் சாதனையாக குறிப்பிடுவது இல்லை. இருந்தாலும், விடுதலைக்கு முன்பு கேரளத்தில் நடைபெற்ற சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் இ.எம்.எஸ் பங்கு வகித்தார். 1957இல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான அரசுக்கு, கம்யூனிஸ்ட் அரசிற்கு தலைமை ஏற்றார். அப்போது, ஜமீன்தாரிகளின் கூலி ஆட்களாக குடியமர்த்தப்பட்டு இருந்த தலித் மக்களுக்கு வீட்டுமனையும், நிலமும் உறுதி செய்யப்படும், என்ற சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1967இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், தீவிர நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அமலாக்கியபோது, தலித்துகள் பயனடைந்ததை மறுக்க முடியாது. இன்று தமிழகத்தில் இருப்பது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் கேரளத்தில் நிகழவில்லை. காரணம் நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எனக் குறிப்பிடலாம். மக்களின் திட்டமிடல் People's plan என்ற முறையை கிராமப் பஞ்சாயத்துகள் வரை அறிமுகம் செய்வதற்கு காரணமாக இருந்தவர் இ.எம்.எஸ் இத்தகைய செயல்கள் மூலம், இந்திய சமூகத்தில் சாதியச் சிந்தனை, சுரண்டல் உருவாக காரணமானவற்றை வேரறுக்க முனைப்பு காட்டினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.


வியாழன், 13 மே, 2010

தலித் உரிமை மனித உரிமையே!

தலித் உரிமை மனித உரிமையே!

பிறமலைக் கள்ளர் என்கிற சாதியினர் அதிகம் வாழும் பகுதி மதுரை மாவட்டம். எட்டு நாடுகளைக் கொண்டதாக சொல்லப்படும் இந்தப் பகுதியில், செக்கானூரணியை அடுத்த கொக்குளம் முக்கியமானது. இது ஒரு நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த மக்களின் பிரதான வழிபாட்டு மரியாதை, பேய்க்காமன் என்கிற நாட்டார் தெய்வத்திற்கு வழங்கப்படு கிறது. இத்தெய்வத்திற்கு பூசை புனஸ் காரங்களை நிகழ்த்துபவர் ஒரு பறையர். கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு. இக்கோவிலின் நான்காம் நாள் திரு விழா பறையர்களுக்கானது, என்று லூயிஸ் டூமாண்ட் என்ற பிரெஞ்சு நாட்டு மானுவியல் அறிஞர், தனது பிரமலைக் கள்ளரின் சமூக அமைப்பு மற்றும் மதம் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். லூயிஸ் டூமாண்ட் தனது ஆய்வினை பிரமலைக் கள்ளர் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும், சுமார் 2 ஆண்டு காலம் (1957-59) தங்கியிருந்து ஆய்வு நடத்தி தெரிவித்த தகவல்களில் ஒன்றுதான், மேலே நாம் குறிப்பிட்டது. இன்றைய நிலை குறித்து விசாரித்த போதும், ஆமாம், பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் பூசை செய்து தருகிற பொருள் களை பக்தியோடு கள்ளர் சாதியைச் சார்ந்த மனிதர்கள் பெற்றுக் கொள்வதைப் பார்க்க முடியும், என்கிறார்கள். இது நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப் பட்டுவரும் உண்மை என்பதை தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாதது.
சாதிய ஆதிக்கத்தின் மிக பிரதானமான ஒரு மையத்தில் சாதிப் பெயரில், மனுஸ்மிருதி அல்லது வர்ணாசிரமம் குறிப்பிட்ட தீட்டு தூக்கி எறியப்பட்டு இருக்கும் நிலையில், பிற பகுதியில், அதே சமூகத்தவரும், இதரரும் பின் பற்றுவது ஏன்? என கேள்வி எழுகிறது. இந்தியாவில், சமூகக் கொடுமைகள் மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போர் தொடுத்த பெருமை தமிழகத்திற்கு நூற் றாண்டு காலமாக இருந்து வந்தாலும், இன்னும் அழிக்கப்படாமலேயே இருக்கிறது. எனவே, அவ்வப்போது, இத்தகைய சமூக அவலங் களை எதிர்க்கும் மக்கள் இயக்கம் தேவைப் படுகிறது. இதன்மூலம் இரண்டு பணிகள் நடைபெறுகிறது. ஒன்று-அவலத்திற்கு எதி ரான நிலையான, தொடர் போராட்டம். மற் றொன்று, அடுத்தடுத்த தலைமுறைக்கு போராட்ட பாரம்பரியத்தைக் கற்றுத் தருவது.

சம்பவம் 1: சென்னையில் ஓடிய டிராம் வண்டிகளில், பணியாளர் நியமனத்தின் போது, பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் தூய்மையான சாதி என்றழைக்கப் பட்டவர்களில் இருந்து நடத்துனர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இதை அயோத்தி தாசர் கண்டித்துள்ளார். காசு வாங்கும் போது ஏன் தீட்டாக கருதவில்லை, என கேள்வி எழுப்பி உள்ளார்.

சம்பவம் 2: 1924இல் சென்னை மாகாண அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்துப் பொது இடங்களையும் பயன்படுத்த உரிமை உடை யவர்கள் என்றும், பொதுச்சாலையில் எவரொருவரும் நடப்பதை தடுக்கும் நபருக்கு ரூ. 100/- அபராதம் விதிக்கப்படும், என்ற பிரிவும் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

சம்பவம் 3: இதே 1924இல் கரூருக்கு அருகில் உள்ள ஆண்டாங் கோயில், ஊரில் இருந்த அக்ரஹாரத்தின் வழியே, குதிரை சவாரி செய்த மாணவர் சி.ஆர். நடேசன் என் பவர் குதிரையில் இருந்து இறங்கி நடந்து செல் லாமல், குதிரை மீது சவாரி சென்றது, குற்றம் என்ற காரணத்தால், விசாரணை நடத்தி, பின் பெரியவர்கள் வருத்தம் தெரிவித்த காரணத் தால் மன்னிக்கப்பட்டார் என்று ஆஐனுளு நிறு வனத்தில் இயக்குனராக இருந்த பேரா. எஸ். நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் 4: 1969 ஜனவரியில் (வெண்மணி படுகொலை நடந்த 20 நாள்களில்), தஞ்சை மாவட்டம் காருகுடியில், தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்கு சுடுகாடு கேட்டு நடத்திய போராட்டத்தை வரலாறு பதிவு செய்திருக் கிறது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சுடுகாட் டிற்கு தனி வழி இல்லாத காரணத்தாலும், இதர சாதியினர் குடியிருப்பு வழியே பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காததாலும், வயல் வழியே சென்றுள்ளனர். இந்த சாவு ஊர்வலம் காரணமாக, 125 கலம் நெல் பாழாகிவிட்டது, என்று அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப் பட்டதாக மைதிலி சிவராமன், வெண்மணி காலத்தின் பதிவு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் மேலே குறிப்பிட்ட 4 சம்பவங்கள், தமி ழகத்தில் ஏற்கெனவே நடந்த சமூக கொடுமை யின் உதாரணங்கள், மூன்று தலித்துகளுக்கு எதிராகவும், ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு எதிராகவும் இருந்துள்ளது. பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எதிரான சமூகத் தடைகள், இன்று முற்றாக ஒழிந்து விட்டது. ஆனால், தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நீடிக்கிறது. அன்றைய சாதி முரண்பாடு பிரா மணர் மற்றும் பிராமணர் அல்லாதோருக்கு இடையில் இருந்தது. இன்றைய வடிவம் தலித் மற்றும் தலித் அல்லாதோருக்கு இடை யில் இருக்கிறது, என்று டாக்டர். ஆனந்த் டெல்டும்டே கூறியதை உண்மையாக்கும் விதத்தில்தான் 4 சம்பவங்களின் வளர்ச்சி உள்ளது.

தமிழகத்தில் ஆலய நுழைவு மட்டும் தீட் டாக கருதப்படவில்லை. ஒரே முடிதிருத்தகத் தில், முடி திருத்திக் கொள்வது, செருப் பணிந்து நடப்பது, துணிகளை சலவை செய் வது போன்ற வடிவங்களிலும், தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. இன்றைய அறிவியல், தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் வேக வளர்ச்சி, சமூக வளர்ச்சியில் பிரதிபலிக் கச் செய்ய வேண்டும். அரசின் பாத்திரம் இதில் மிக கூடுதலாக இருப்பதை, அரசு உணரும் போது மட்டுமே சமூகத்தில் பின்தங்கியிருக் கும் மக்கள் உணர முடியும். அசமத்துவ வளர்ச் சிக்கு வித்திடும் இந்த முதலாளித்துவ அரசு எளிதில் செய்துவிடாது.

வேலைப் பிரிவினையை மையமாகக் கொண்டு மனித சமூகம் செயல்பட்ட காலத் தில், பழங்குடியினரிடத்தில், மேய்ப்பர்களிடத் தில், விவசாயிகளிடத்தில், நெசவாளர் களிடத்தில், சலவையாளர்களிடத்தில், நாவிதர்களிடத்தில் பல்வேறு தொழில் நுட்ப உணர்வு இருந்ததை மனித குல வரலாறு குறிப் பிட்டுள்ளது. அதே தொழில் நுட்பங்களின் காரணமாக இந்திய சமூகம், அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கியது. பிற நாடுகளில் அத்தகைய தன்மை உருவாக வில்லை என்பதை அறிய முடிகிறது. உதாரணத்திற்கு துணிகளை சலவை செய்த தொழிலாளர்களை, சுத்தமற்ற சாதி என முத்திரை குத்தியது, வர்ணாசிரமமும், மனுஸ் மிருதியும் ஆகும். உவர்மண், சலவைத் தூள், சோடா உப்பு உள்ளிட்ட பொருள்களைக் கையாளத் தெரிந்திருந்த தொழிலாளர்களுக்கு நவீனக் கல்வி கொடுக்காதது மட்டுமல்லா மல், சலவைத் தொழிலாளர், பள்ளர், பறையர், சக்கிலியர் சாதி மனிதர்களுக்கும் துணி துவைக்கக் கூடாது, என போதிக்கவும் செய் துள்ளது. இன்றுவரை அமலில் இருக்கிறது. சின்னப் பிரச்சனையாக மட்டுமே இது போன்ற மனித உரிமை மறுப்புகளை மதிப்பீடு செய்கின்றனர். இவை ஏற்படுத்தும் மன உளைச்சல், வலி போன்ற பாதிப்புகள் மதிப்பீடு செய்யப் படுவதில்லை. இத்தகைய குறைபாடு களுடைய ஆட்சியாளர், தங்கள் செயல்பாடின் மையினால் மனுவின் கருத்திற்கு வலுச்சேர்க் கின்றனர். மேலும் ஆட்சியாளர்கள், தாங்கள் இயற்றிய சட்டம் குறித்து பூரிப்படைகின்றனர். சட்டங்களை அமல்படுத்த மக்கள் இயக்கங் களின் போராட்டமே உதவியிருக்கிறது.

காலங்கள் உருண்டோடினாலும், பேய்க் காமனுக்கு தலித் பூசை செய்து கொடுத்தாலும், மாறாத இச்சமூகத்தில் தொடர் போராட்டம் தேவைப்படுவதை இடதுசாரி இயக்கம் மட்டுமே உணர்ந்திருக்கிறது. தனது கடந்த காலப் போராட்டங்கள் மூலம், செருப்பணிய வும், சைக்கிள் ஓட்டவும், குளத்தில் குளிக்க வும், ஆலயங்களில் வழிபடவும், முடிதிருத்த வும், துணி தேய்த்து அணிவதற்கும், மயானத் திற்கு பாதையை பெறவும், தலித் மக்களுக்கும் உரிமை உண்டு என்பதை நிலைநாட்டிய இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். தமிழகத்தில் இதற்கான கருத்தை வலுப்படுத் தும் வகையில் மீண்டும் டிசம்பர் 25 ஐ தேர்வு செய்துள்ளது.

டிசம்பர் 25, 1968 இல் வெண்மணியில் 44 மனித உயிர்கள் (19 குழந்தைகள், 20 பெண்கள், 3 வயோதிகர்கள் உட்பட) எரித்து கொல்லப்பட்ட நாள். அதே டிசம்பர் 25, 1927 இல் ஈ.வே.ரா தன் பெய ருக்கு பின்னால் நாயக்கர் என்ற தனது சாதிப் பெயரை, இனிப் பயன்படுத்த மாட்டேன் என மறுத்த நாள். நானே நல்ல மேய்ப்பர் என்ற இயேசு பிறந்ததாக சொல்லப்படும் நாளும் டிசம்பர் 25 தான். அத்தகைய வரலாற்று முக் கியத்துவம் பெற்ற நாளில் தீண்டாமைக்கு எதி ராக, மனித உரிமைகளை நிலைநாட்டுவதற் காக ஒன்றிணைவோம், சமூக கொடுமை ஒழிப்போம்!


This was published in theekkathir on 22 DEc.2009

மாவோயிஸ்டுகள்

இவர்கள் மாவோயிட்டுகள் அல்ல; மம்தாயிட்டுகள்


நாடு முழுவதும் வன்முறைக்கு எதிரான கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது அவசியம். இந்தியாவில் அதிகரித்துள்ள மாவோயிஸ்டுகளின் வன்முறையை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 75க்கும் அதிக மான நக்சலைட் குழுக்கள் செயல்படுகின் றன. ஜார்கண்டில் மட்டும் 30 குழுக்கள் செயல்படுகின்றன. இவைகளில் சற்று பெரிய குழு மாவோயிஸ்டுகள். 7 மாநிலங்களில் வன் முறையை அரங்கேற்றும் நக்சலைட்டுகளின் செயல்களைவிட மேற்குவங்கத்தின் 3 மாவட் டங்களில், அதுவும் ஜார்கண்ட் எல்லையை சாதகமாகப் பயன்படுத்தி நடத்துகின்ற அராஜ கம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகிறது. மேற்குவங்க நலனில் இருந்தோ, மேற்கு வங்க அரசை அக்கறையுடன் விமர்சிக்க வேண்டும் என்றோ, பெரிது படுத்தும் பணி நடைபெறவில் லை. மாறாக, மேற்குவங்க இடது முன்னணி அரசை பலவீனப்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடனேயே, மேற்படி செய்திகள் பிர சுரிக்கப்படுகின்றன. சில கேள்விகளை முத லாளித்துவ ஊடகங்களுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் முன்வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஒன்று, மாவோயிஸ்டுகளின் தாக்குதல், 2009 மே 18 தேர்தல் முடிவுகள் இடதுசாரி களுக்கு சாதகமாக இல்லை என்பதை அடிப் படையாகக் கொண்டு அதிகரித்ததா? இரண்டு, மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு பற்றிய விவா தம் அகில இந்திய அளவில் நடைபெறுகிற போதெல்லாம், மேற்கு வங்க முதலமைச்சர், நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதை மத்திய காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளாதது ஏன்? மூன்று, மேற்கு வங்கத்தின் காவல்துறை மட்டும் எப்படி இரண்டு மாநில எல்லைகளைப் பயன்படுத்தும் மாவோயிஸ்டுகளைக் கட்டுப் படுத்த முடியும்? நான்கு, திரிணாமுல் காங்கிர ஸின் தலைவரும், மத்திய அமைச்சருமான மம்தா பானர்ஜி, மத்திய கமாண்டோ படைகளை அனுப்பக் கூடாது, என்று சொன்னதன் மர்மம் என்ன? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் கேள்விகள் மத் திய அரசுடனும், மம்தா பானர்ஜியின் உள்நோக்க அரசியலுடனும் இணைந்து இருப்பதால், ஊடகங்கள் பெரிது படுத்துவதில்லை.

மக்கள் பேரெழுச்சியாகக் கலந்து கொண்டு, இடது முன்னணியை எதிர்க்கிறார்கள் என்கிற சித்திரம், நந்திகிராமம் பிரச்சனையில் இருந்து வரையப்படுகிறது. அன்றைய நில ஆக்கிரமிப் புக்கு எதிரான மக்கள் குழுவும், இன்றைய காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக் கள் குழுவும் ஒரே தன்மை கொண்டதே. இவை இரண்டையும் உருவாக்கியதில் திரிணாமுல் காங்கிரசிற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் பங்கு உண்டு. இந்தக் கட்சிக்காரர்களே மேற்படி போர்வையில் இயங்குகின்றனர். மக்கள் குழுவைச் சார்ந்தவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல், மாநில முதலமைச் சர் செல்கிற பாதை, இதர அமைச்சர்கள் செல்கிற பாதைகளை வெட்டி பாழ்படுத்தியது ஏன்? முதலமைச்சர் சென்ற பாதையில் கண்ணி வெடி வைத்து கொல்ல (நவ, 2, 2008) முயன்றது ஏன்? இது மக்களிடம் இருந்து அந் நியப்பட்டுப் போனவர்களின் செயல். இத்த கைய செயல்களுக்கு உடந்தையாக ஊடகங் களும், சில அறிவுஜீவிகளும் இருப்பது ஆபத் தை தூண்டுவதற்கு ஒப்பானது ஆகும். 1998இல் இருந்து கைது செய்யப்பட்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பின் பிரதிநிதிகளை விடுவிப்பதற்கு, இந்த இயக்கங்களின் செயல் களும் நபர்களின் வாதமும் துணை புரிந்துள்ளது.
இன்னொரு புறம், மாவோயிஸ்டுகள் தனி வரி வசூல் நடத்துவது வெளிப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வசூல் செய்யப் படுவதாக, அரசு வெளியிட்ட செய்தி நவம்பர் 15 அன்று வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் மாநி லத்தின் முன்னாள் முதல்வர் மதுகோடா, மாவோயிஸ்டுகளுக்கு தாராளமாக நிதி வழங் கிய செய்திகள் வெளிப்படுகிறது. மேற்கு வங் கத்தின், மேற்கு மிட்னாப்பூர், பங்குரா, புரூலியா மாவட்டங்களில் செய்யப்பட்டு வரும் சாலைப் பராமரிப்புப் பணிகளின் காண்ட்ராக்ட் காரர்க ளிடம், சட்ட விரோதமான முறையில், மாதம் மாதம் 8 லட்சம் ரூபாய் பறித்து வந்துள்ளனர். ஒரிசாவின் மயூரி பன்ஜி காடுகளிலுள்ள ரயில்வே ஊழியர்களிடம் மாதா மாதம் ஒன் னரை லட்சம் ரூபாய் வசூலித்து வந்துள்ளது அம்பலப்பட்டுள்ளது. இத்தகைய செயல் களை எந்த மக்கள் குழுக்கள் செய்ய முடியும்? வேறு மாநிலங்களில் இத்தகைய அனுபவம் இல்லையே ஏன்? ஏறத்தாழ கொள்ளையடிக் கும் செயல்களை, அறிவுஜீவிகளும், தனிநபர் களும் விமர்சிக்காதது ஏன்?

அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரும், ஊடகங்களும், மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் உள்ள பழங்குடி இன மக்களின் வளர்ச்சியை சற்று கவனிக்க வேண்டும் என் கின்றனர். 2000 முதல் 2003 வரையில் 16,280 ஹெக்டேர் அளவுள்ள நிலங்களை நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து, அதை மறு விநியோகம் செய்தது மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு. இந்தியப் புள்ளி விவரத்துறையின் மூத்த ஆய்வாளர், அபராஜ்த பக்ஷி, நான் ஆராய்ச்சி செய்த ஜார் கிராம் வட்டார கிராமத்திலுள்ள குடியிருப்பாளர்களில் 75 சதத்தினர் நிலச் சீர்திருத்த பயனாளர்கள். சீர்திருத்தத்தின் விளைவாக பழங்குடியினரில் 70 சதமானோர் விவசாய நிலங்களையும், 90 சதமானோர் வீட்டுமனை நிலத்தையும் பெற்றுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இதன் மூலமான வளர்ச்சி, இந்தியாவின் இதர பழங்குடியின மக்கள் குடியிருப்பை விட அதிகம் என்பதை விமர்சிப்பவர்கள் கவனிக்க வேண்டும்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணா முல், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அம்ரித் ஹன்ஸ்டா 2,92,345 வாக்குகள் வித்தியாசத் தில் சிபிஎம் வேட்பாளர் புலின் பிஹார் பாஸ் கியிடம் தோற்றுப் போனார். மக்கள்குழு என்று சொல்லிக்கொள்பவர்கள் (யீளதெஉ) ஏன் பழங் குடியினரை சிபிஎம்-க்கு எதிராக வாக்களிக்க வைக்க முடியவில்லை? 2007இல் திட்டமிட்டு நந்திகிராமத்தில் செயல்பட்ட திரிணாமுல், மாவோயிஸ்டு கூட்டணி, லால்கார் பிரதேசத் தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே, சிபிஎம் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற பகுதிகளைப் பாழ் படுத்த மத்திய அமைச்சர், அதிகாரம், ஊடகம், அறிவுஜீவி என அனைவரையும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். மக்களவைத் தேர்தலுக்கு பின் 120 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். இதில் 95 சதமானோர் சிபிஎம் ஊழியர் கள். லால்கார் பகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம், மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து நேர்மையான விவாதத்தை நடத்தி, நாங்கள் எங்கள் செல்வாக்கை இழந்திருக்கிறோம். எதிர்காலத்தில், எங்களை சரிசெய்து முன் னேறுவோம் என கூறியுள்ளது.

மாவோயிஸ்டுகள் தேர்தல்களை புறக்க ணிக்க வேண்டுகோள் விடுக்கின்றனர். அது ஏன் லால்கார் பகுதியில் செல்லுபடியாகவில் லை. மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, ஆந்திரா, ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில், இவர்களின் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தோற்றுப் போய்விட்டது. வாக்குப் பதிவு சதவீதம் அதிகம் என சுமந்தா பானர்ஜி (சாரு மஜூம் தாருடன் இருந்தவர்) குறிப்பிடு கிறார் (EPW oct.19, 2009). இந்த ஆதாரம் மாவோ யிஸ்ட்டுகள் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டவர்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

சில அறிவு ஜீவிகளும், மனித உரிமைக் காவலர்களும், மாவோயிஸ்டுகளை கண் மூடித்தனமாக ஆதரிக்கிறபோது, மாவோ யிஸ்டுகளின் மனித உரிமை மீறலை கண்டு கொள்வதில்லை. உதாரணம் ஜார்கண்ட் மாநிலம் ஹெகடாவில், ராஜதானி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை கடத்தல் என மாவோயிஸ்டுகள் கூறிக் கொள்ளவில்லையாம். கடத்தினாலும், நிறுத்தி னாலும், நேர இழப்பு, இழப்பு தானே. அந்த ரயிலில் இருந்த நோயாளிகள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள் என பலரும், 4 மணி நேரத் தாமதத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்களே! இந்த மனித உரிமை மீறலை, மனித உரிமைக் காவலர்கள் ஆசீர் வதிப்பதன் உள்நோக்கம் என்ன? நக்சலைட் இயக்கத்தில் கனுசன்யால் முக்கியமானவர். அவர் வெளியிட்ட தெனாய் அறிக்கையில், அழித் தொழிக்கும் திட்டத்தின் விளைவாக, நேர்மை யற்ற, நியாயமற்ற கும்பல் இயக்கத்திற்குள் நுழையும் நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டுள் ளார் (1980). இதை அறிவுஜீவிகள் உணர மறுப் பது ஏன்? அழித்தொழிக்கும் கொள்கையி னால், சில இளைஞர்களையும், நடுத்தர வர்க் கத்தினரையும், ரவுடிகளையும் பொறுக்கி களையும் தான் கவர முடிந்தது என்று ஆஷிம் சட்டர்ஜி என்ற நக்சலைட் 1971 லேயே குறிப்பிட்டுள்ளார்.
20 தினங்களுக்கு முன்பு இறந்த நக்ச லைட் ஆதரவாளர் கே. பாலகோபால், மாவோ யிஸ்டுகளின் செயலை விமர்சித்து இருக் கிறார். இவர் மக்கள் யுத்தக்குழுவில் இருந்து செயல்பட்ட, இன்றைய மாவோயிஸ்டு இயக்க பொறுப்பாளரான வரவரராவ் மூலம் கவரப்பட்ட வர், என்பது குறிப்பிடத்தக்கது. நமது செயல் பாடு இப்போதுள்ள பூர்ஷ்வா அரசுக்கு மாறாக, உண்மையான, ஜனநாயக தன்மையுடையதாக இருக்க வேண்டும். தன்னிச்சையாக தண் டனை வழங்குதல், சாதாரண மக்கள், அர சாங்க அலுவலர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும் எனும் தர்க்கத்தின் அடிப்படையில் பாலகோபால் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இன்றைய மாவோயிஸ்டுகளின் அழித் தொழிப்புக் கொள்கை சிபிஎம் ஊழியர்களை குறிவைத்துள்ளது. 1975களில் சித்தார்த்த சங்கர் ரேயுடன் கைகோர்த்த நக்சலைட் இயக்கத்தவர், இன்று மாவோயிஸ்டு என்ற பெயரில் மம்தா பானர்ஜியுடன் கை கோர்த்துள் ளனர். நவம்பர் 12 அன்று புதுதில்லியில் மம்தா கொடுத்த அறிக்கையில், முன்னாள் நக்ச லைட்டுகள் திரிணாமுல் கட்சியில் இணைந்து செயல்படுவது உண்மையே எனக் கூறியுள் ளார். பகிரங்கக் கொலை செயலுக்கு திரிணா முல் காங்கிரஸ் உதவுகிறது. மாவோவின் பெயரையும், சித்தாந்த வரிகளையும், மம்தா பானர்ஜிக்கு வால்பிடிக்க பயன்படுத்துவது பரிதாபமானதுதான்.
தண்ணீருக்குள் வாழும் மீனைப் போல், மக்களோடு இணைந்து நிற்போம் என்ற மாவோவின் வரிகளை முன்நிறுத்துவதே கம் யூனிஸ்ட்டுகளின் பணியாக இருக்க முடியும்.

This was published on Nov 23. 2009

புதன், 12 மே, 2010

பெரும் சுரண்டலை சந்திக்கும் சமூகத்தில் நினைவுகள் அழிவதில்லை

பெரும் சுரண்டலை சந்திக்கும் சமூகத்தில் நினைவுகள் அழிவதில்லை

மின்னஞ்சல்அச்சிடுகPDF

கையூர், 1940களில் உலக கம்யூனிஸ்டுகளால் பேசப்பட்ட ஊர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கி எடுத்த விடுதலைப் போராட்ட வரலாற்றில், உழைக்கும் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்திய போராட்டங்கள் சில மட்டுமே, தெபாங்கா விவசாயிகளின் எழுச்சி, தெலங்கானா விவசாயிகளின் எழுச்சி, வோர்லி பழங்குடி மக்களின் வீரம் மிக்க போராட்டம், புன்னைப்புரா, வயலார் விவசாயத் தொழிலாளிகளின் போராட்டம், கப்பற்படை எழுச்சி என்ற போராட்ட வரிசையில், கையூர் விவசாயத் தொழிலாளிகளின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறும் இடம் பெறும்.

1940களில் பொதுவாக இந்தியாவில் இருந்த நிலப்பிரபுக்களின் ஆதிக்கம், சுரண்டல், ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கொண்டு நடத்திய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களே, நாம் மேலே பட்டியலிட்டவை. மிகப் பெரிய விவசாய எழுச்சி, நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான கூட்டணியை போராட்ட களத்தில் அம்பலப்படுத்தியது. அன்றைய சென்னை ராஜதானிக்கு உட்பட்ட, வடக்கு மலபார் பகுதியில் அமைந்த கையூர் கிராம விவசாயிகளும் மேற்படி போராட்ட வரலாற்றை அரங்கேற்றினர்.

நிறைந்த, நீரோடு, அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தேஜஸ்வினி நதிக் கரையில் அமைந்தது கையூர் கிராமம். செழிப்பான விவசாயத்திற்கு அன்றைக்கும், இன்றைக்கும் வாய்ப்பு இருக்கும் பகுதி. இன்றைக்கே இந்தியாவில், நிலம் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆள்வோர் தலையசைக்க மறுக்கிற போது, அன்றைக்கு எப்படி சம்மதிப்பார்கள்? அன்றைக்கு நிலச்சீர்திருத்தம் என கோரிக்கை கூட வைக்க இயலாத, வாயற்ற ஜீவன்களாக, விவசாயத் தொழிலாளர்கள் கையூரில் இருந்தார்கள். அவர்களுக்கு பேசும் சக்தியையும், கேள்வி கேட்கும் திறனையும், போராட்ட உணர்ச்சியையும் கொடுத்தது, கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாய சங்கமும் ஆகும். அந்த காலத்தில், புரட்சிக்காரர்கள் என்ற வார்த்தையை சிறுவர் முதல் பெரியவர் வரை அறிமுகம் செய்திருந்தார்கள். இளைஞர்கள், “புரட்சிக் காரர்களுக்குரிய நற்குணங்கள் தங்களுக்கு உண்டு என்பதைத் தெரிந்து கொண்ட போது பெரும் மகிழ்ச்சியடைந்து பரவசப்பட்டு இருக்கிறார்கள்’’ குறிப்பாக கையூர் பகுதி நிலப்பிரபுக்களை எதிர்த்து போராட முடியும் என்கிற நம்பிக்கையை மிகப் பெரிய அளவில் முன்னிறுத்தியவர்கள் இளம் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர். மிகக் குறைவான கூலியைப் பெற்று, அதிகமான நேரம் உழைக்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டத்தை பின்பற்றினார்கள் கூலித் தொழிலாளர்கள். மனிதனுக்குரிய எந்த உரிமையும் பெற முடியாத விவசாயத் தொழிலாளர்களுக்கு, இளம் கம்யூனிஸ்டுகள் தான், அடிப்படை மனித உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.

ஆனால் வரலாறு, மனித உயிர்களைக் குடிக்காமல் உரிமைகளை கொடுத்ததில்லை. கையூர் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளும் பலி பீடத்திற்கு பின்னர்தான் பெறக்கூடியதாக அமைந்தது.

மடத்தில் அப்பு,

சிருகண்டன்,

குஞ்ஞம்பு,

அபுபக்கர்

ஆகிய நால்வரின் உயிரை அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரக்கமற்று குடித்தது. “அந்தப் போலிஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள், இந்தக் கோர்ட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும் தான் பொறுப்பாளிகள் என்று கூறி, செஷன்ஸ் நீதிபதி அவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனையை விதித்தார்.’’ சென்னை உயர்நீதி மன்றமும் அந்த தண்டனையை ஊர்ஜிதம் செய்தது. இந்தியாவின் விடுதலைப் போரில் எண்ணற்ற இளைஞர்கள் தூக்கு கயிற்றிற்கு இரையாகி இருந்த போதிலும், இந்த நால்வருக்கும் கொடுக்கப்பட்ட தண்டனையை, உலகம் முழுவதிலும் இருந்த மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், பிரிட்டிஷாரும், நிலப்பிரபுக்களும் உறுதியாக இருந்தனர்.

இருபத்தைந்து வயதுக்குட்பட்ட அந்த நால்வரின் தூக்கு தண்டனையை எதிர்த்து, கம்யூனிஸ்ட் இயக்கம், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வைசிராயும், பிரிவி கவுன்சிலும் நிராகரித்த போது, நால்வரும் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில்,’’ ...... சிறையில் ஒவ்வொரு நிமிடமும தேசிய கீததங்களைப் பாடி வருகிறோம். பகத்சிங்கைப் போன்ற தேச பக்தர்களின் வீரம், எங்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியைப் புரட்சியின் மூலம் நிர்மூலம் ஆக்குவதற்கு முன்னே, தோழர். லெனின் அனுபவித்த சிரமங்களையும் நாங்கள் மறக்கவில்லை’’. எனக் குறிப்பிட்டுள்ளனர். இக்கடிதம் அன்றைய கம்யூனிஸ்ட் இதழான ஜனசக்தியில் (13.01.1943) பிரசுரமாகி உள்ளது.

நால்வரின் செயலும் 29.03.1943ல் தூக்கிலிடப்படும் வரை, இதயத்துடிப்பு நிற்கும் வரை அப்படியே இருந்துள்ளது அதாவது சாவின் விளிம்பிலும் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே வித்தியாசம் இன்றி வாழ்ந்த நால்வரும் மிக முக்கியமானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மார்ச் மாதம் 29ஆம் தேதி தோழர்கள் அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு, அபுபக்கர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்ட காலத்தில் நீலீஸ்வரத்தில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தவர் நிரஞ்சனா. பள்ளிக் கல்வியை முடித்த பின், விவசாயிகளின் போராட்டத்தை தன் இளம் பருவத்தில் கண்டதை, நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து அறிந்ததை வைத்து சிரஸ்மரணா என்ற நாவலை 1955இல் கன்னட மொழியில் வெளியிட்டார். ‘நினைவுகள் அழிவதில்லை’’ என்ற பெயரில் தமிழில் 1977இல் வெளிவந்தது. அதன் பின் கடந்த 33 ஆண்டுகளில் எட்டு பதிப்புகளை, தமிழில் சவுத் விஷன் புத்தக நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பல ஆயிரம் புத்தகங்களை தமிழில் கண்ட வரலாறு, கையூர் தியாகிகளின் வீர வரலாறு ஆகும். இது தமிழ் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இடதுசாரி இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் ஆகும். 2005ஆம் ஆண்டு, டி.ஒய்.எப்.ஐ யின் வெள்ளி விழா ஆண்டில், விருதுநகரில் 11வது மாநில மாநாடு நடைபெற்ற போது, நினைவுகள் அழிவதில்லை நாவல் மீண்டும் வெளியிடப்பட்டது. டி.ஒய்.எப்.ஐ தனது மாநில மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகக் குறிப்பிடும் அளவிற்கு, நினைவுகள் அழிவதில்லை நாவலின் முக்கியத்துவத்தை டி.ஒய்.எப்.ஐ உணர்ந்து இருக்கிறது.

கடந்த பிப்ரவரி 17, 2010 அன்று சென்னை நகரில் இன்னும் ஒரு சிறப்பு காட்சியைக் காண முடிந்தது. இதுவரை பல மொழிகளில் நாவலாக வளம் வந்த கையூர் தியாகிகளின் போராட்ட வரலாறு, தற்போது திரைக் காவியமாக தமிழில் வெளிவர இருக்கிறது. அதற்கான தீவிர உழைப்பின் துவக்க நிகழ்ச்சியே, சென்னை மாநகரில் கடந்த பிப்ரவரி 17 அன்று நடைபெற்றது.

மலையாளத்தில் நாடகமாக, மீனம் மாசத்தில் சூரியன் எனும் திரைக் காவியமாக வெளிவந்து சிறப்பு பெற்ற, வரலாறு தமிழகத்தில் புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்பதே நமது விருப்பம். வரலாறு தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்படுவது, சுரண்டல் நிறைந்திருக்கும் சமூகத்தில் மிக அவசியமானது.

67 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள போராட்ட வரலாற்றின் களத்தில் கடந்த ஜனவரி 23, அன்று கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேஜஸ்வினி ஆற்றின் கரையில், கம்பீரமாக நிற்கும் நினைவு ஸ்தூபி, நினைவுகள் அழிவதில்லை நாவல் முழுவதையும் மறுவாசிப்பு செய்ய வைக்கிறது. கையூர் சீமேனி கிராமப் பஞ்சாயத்தில் 2 கிராமக் கமிட்டிகளை கொண்ட டி.ஒய்.எப்.ஐ 12 கிளைகளையும், 8000 உறுப்பினர்களையும், கொண்டிருக்கிறது. 850 யுவதாரா (கேரள டி.ஒய்.எப்.ஐயின் மாதப் பத்திரிகை) சந்தா தாரர்கள் இருக்கிறார்கள். மிக ஆச்சர்யமான விஷயம், 12 கிளைகளில், 9 கிளை, அந்த கிளைக்கு உள்பட்ட பகுதிகளில் 100 சதமான இளைஞர்களையும் டி.ஒய்.எப்.ஐயில் உறுப்பினராகி உள்ளனர். இது வரலாற்றை சரியாக கற்ற உழைக்கும் மக்களின் கூட்டம் என்பதை உணர்த்தினார்கள்.

மிகச் சிறந்த பெரும் கட்டடம் வளர்ந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி என்ன என்ற போது, நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் என்றார்கள். ஆம் கையூர் வரலாற்றை ஆய்வு செய்ய, கற்றுக் கொள்ள, அன்றைய உழைக்கும் மக்கள் ஆயிரம் ஆயிரம் படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளனர். வரலாற்றைக் கற்போம். முன்னேறுவோம்.

ஞாயிறு, 2 மே, 2010

உங்களுக்கு இருக்கிறதா வேலை?

உங்களுக்கு இருக்கிறதா வேலை?
வேலை இல்லை என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சென்னையில், கோவையில் இதர பெரு நகரங்களில் வேலைக்கு ஆள் இல்லை எனச் சொல்-கிறார்கள். இந்தியாவின் அனைத்துப் பெரு நகரங்களிலும் “வேலைக்கு ஆள் தேவை” என்கிற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. எது உண்மை, வேலை இல்லை என்பது உண்மையா? வேலைக்கு ஆள் தேவை என்பது உண்மையா?

மத்திய அரசின் நிறுவனம் NSSO(National Sample Survey Organization) எடுத்த 52வது சுற்று சர்வே, தேசிய அளவில் வேலையின்மையில் இருப்போர் 7 சதம் என்றும், தமிழகத்தில் 3 சதம் என்றும் சொல்கிறது. 2008ஆம் ஆண்டு கணக்குப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 5.52 கோடி, தமிழகத்தில் 58 லட்சம் பேர். இந்த இரண்டு அரசு விவரங்களும் வேலையின்மை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. NSSO ஆய்வுப்படி எண்ணிக்கை குறைவாகவும், வேலைவாய்ப்பு அலுவலகக் கணக்குப்படி எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

நமது தேசத்தில், “நிரந்தர வேலை கிடைக்கும் வரை, வேறு வேலைக்கு செல்லமாட்டேன்”, என யாரும் சும்மா இருக்க வாய்ப்பில்லை. உலகின் பல நாடுகளில், வேலையில்லாக் காலத்தில் நிவாரணம் வழங்குகிற சமூகப் பாதுகாப்பு இருக்கிற காரணத்தால் நல்ல வேலை கிடைக்கும் வரை நிதானமாக காத்திருக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி இருந்தால், பட்டினிச்சாவு பட்டியல் அதிகரித்து விடும். வேலையில்லாக் கால நிவாரணம் தரப்படும் மாநிலங்-களிலும் மிக சொற்பத் தொகை தான் தரப்படுகிறது. ஆகவே தான் ழிஷிஷிளி கணக்குப்படி வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
அட்டவணை-1

எண் நோய் ஆண்டு ஒன்றுக்கு இறப்பு எண்ணிக்கை
1. டி.பி 4.5 லட்சம் மனிதர்கள்
2. காலரா 15 லட்சம் குழந்தைகள்
3. நிமோனியா 75 லட்சம் குழந்தைகள் 5 வயதுக்கு கீழ்

ஆதாரம்: உலக சுகாதார மையம்

அட்டவணை 1-இன் படி காசநோய், காலரா, நிமோனியா உள்ளிட்ட நோய்கள் அதிகம் இருப்பது உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் என சொல்லப்படுகிறது. நல்ல போஷாக்கான உணவு உண்கிற வசதியானவர்களுக்கு, இத்தகைய நோய்கள் வருவது இல்லை. மாறாக ஏழைகள், உழைப்பாளிகள் தான் இது போன்ற நோய்களுக்கு இரையாகின்றனர். எனவே, நமது நாட்டு உழைப்பாளிகள் போஷாக்கான உணவு உண்டு வாழ, வருமானம் இடம் தரவில்லை என்பது தெளிவாகிறது.

அட்டவணை - 2

சரியான எடை இல்லாமல் எடை குறைவாக உள்ள குழந்தைகள்
5 வயதுக்கு கீழ்.

எண் நாடுகள் சதவீதம்

1 பாகிஸ்தான் 5%
2 பங்களாதேஷ் 5%
3 நைஜீரியா 5%
4 இந்தியா 42%
5 இதர நாடுகள் 43%

ஆதாரம் WHO- 2009

அட்டவணை - 3

இந்தியக் குழந்தைகள் உட்கொள்ளும் போஷாக்கான உணவு நிலை

எண் 3வயதுக்கு கீழானகுழந்தைகள் நகரம் கிராமம் அகில இந்திய அளவில்

1 குறைவான உயரம் உடையவர்கள் 37% 47% 45%
2 புரதச் சத்தற்ற எலும்பும்
தோலுமானவர்கள் 19% 24% 23%
3 எடை குறைந்தவர்கள் 30% 44% 40%

“வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்றே வாழ்ந்து வருகின்றனர். அட்டவணை 2 மற்றும் 3 இதையே குறிப்பிடுகிறது.

ஆகவே தான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், எல்லோருக்கும் வேலை என்று முழங்கினாலும், சமூகப் பாதுகாப்புடனான வேலை என்ற கோரிக்கையையும் இணைத்தே முன்வைக்கிறது. வேலையில் இருப்போரின் ஊதியம், விடுப்பு, பஞ்சப்படி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டை முன்வைக்கிறது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவின் சராசரி இறப்பு வயது 61 என சொல்கிறார்கள். திருப்பூர் போன்ற பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளிலும், பஞ்சாலைகளிலும் 40 அல்லது 45 வயதில் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். மத்திய அரசு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தத் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. தமிழக திமுக அரசு ஓய்வு பெற்றோரை பணியில் அமர்த்தி இளைஞர்களின் கனவை சிதைக்கிறது. அதாவது தனியார் நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பை கரும்பைப் பிழிவது போல் பிழிந்து விட்டு 45 வயதில் கரும்பு சக்கையைப் போல் எறிந்து விடுகிறார்கள். அரசு இளைஞனுக்கு வாய்ப்புத் தரவே மறுக்கிறது. இந்தியாவில் சுமார் 54 கோடிப்பேர் 15 முதல் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் என்று விவரம் தெரிவிக்கிறது. இளம் மனித வளம் நிறைந்திருக்கும், நமது நாட்டில் இளைஞர்களை தனியார் நிறுவனங்கள் சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதிப்பதும் அரசு முற்றாக நிராகரிப்பதும் அநியாயத்திலும் அநியாயமானது.

அட்டவணை - 4

குற்றம் குறித்த விவரம் தமிழ்நாடு.

எண் ஆண்டு கொலைகள் கொள்ளைகள் கூலிப்படை (எல்லாவிதமும்) கொலைகள்
1 2005 1365 20,099 74
2 2006 1273 17,496 89
3 2007 1521 17,517 102
4 2008 1630 19,630 105
5 2009 1644 21,174 123

ஆதாரம்: தமிழ்நாடு காவல்துறை 2009

தமிழகக் காவல்துறை அளித்திருக்கும் தகவல் படி நாட்டில்
கொலைகள், கொள்ளைகள் குறையவில்லை. மாறாக உயர்ந்திருக்கிறது. இதில் படித்த படிக்காத இரண்டு தரப்பு இளைஞர்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் வேலையில்லாத அல்லது சமூகப் பாதுகாப்பு இல்லாத பணிகளில் ஈடுபடும் இளைஞர் கூட்டம் இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டம் மூலம் தண்டித்து ஒழுங்கு செய்வது ஒருபுறம், அரசு மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படுத்தி திருத்துவது மற்றொரு புறம். அரசு தண்டிக்கும் செயலை மட்டும் செய்கிறதே ஒழிய நம்பிக்கை ஏற்படுத்துகிற வழியைச் செய்ய வில்லை.

அதே நேரத்தில் நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு பட்டுக் கம்பளம் விரித்து, பணிவிடைகள் செய்கிற மத்திய, மாநில அரசுகளின் கொள்கை, நுகர்வுக் கலாச்சாரத்தை, நுகர்வு வெறிக் கலாச்சாரமாக வளர்த்திருக்கிறது. சமீபத்தில் சென்னையில் தச்சு (கார்பெண்டர்) பணியில் ஈடுபட்டு வந்த இளைஞன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். காரணம் அவன் ஏராளமான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டான் என்பதாகும். தச்சுப் பணி செய்யும் இந்த இளைஞனுக்கு எந்த வகையில் பணம் வருகிறது? எப்படி விலை உயர்ந்த செல் போன், வாகனம், அணிகலன்களைப் பயன்படுத்த முடிகிறது? என்ற கேள்விகள் எழுந்தாலும், பலரும் கேட்கவில்லை. விளைவு சிறையில் அடைக்கப்பட்டான் என்ற செய்தி.

இந்த நிகழ்வு இரண்டு உண்மைகளை சமூகத்திற்கு சொல்கிறது. ஒன்று நுகர்வுக் கலாச்சாரத்தினால் சம்பாத்தியம் போதாத இளைஞன் கொள்ளை அடித்து, பன்னாட்டு நுகர் பொருளை விலை பேசுகிறான். இரண்டு, இளைஞன் சம்பாத்தியம் அனைத்தையும், நுகர்வுக் கலாச்சாரத்தினால் பன்னாட்டு நிறுவனத்தின் கையில் கொடுத்து விட்டு, வெறும் கையோடு வீட்டிற்கு செல்கிறான். இரண்டின் மூலமும் லாபம் பன்னாட்டு நிறுவனங்களுக்கே. இந்த வகையில் தான், நமது ஆட்சியாளர்கள் நவீன தாராளமயமாக்கல் கொள்கை மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவைபுரிகிறார்கள். இதே கொள்கை விவசாயத்துறையை நாசப்படுத்தியதால் இடம்பெயர்தல் அதிகரித்து, நகர்மயமாதலில் தமிழகம் இரண்டாவது பெரிய மாநிலமாக வளர்ந்து நிற்கிறது. கிராமத்தையும், வாழ்க்கை முறையையும் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி என்ற பெயரில் சிதைத்து வருகிறது.


II


“எங்கே வாழ்வது என்பதைத் தீர்மானிப்பது
மனித குலத்தின் அடிப்படை அறிவு”

என்று 2009இல் வெளியிடப்பட்ட மனித வள மேம்பாட்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிறந்த ஊர், உறவினர், நண்பர் ஆகிய மிக நெருக்கமாக, நேசித்த அனைவரையும் உதறிவிட்டு பிழைப்பிற்காக, பொருளீட்டுவது என்ற பெயரில் இடம் பெயர்ந்து செல்வது, சமீபத்தில் அதிகரித்து வருகிறது. தொழில் நுட்பம் கற்றவர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வதை புலம் பெயர்தல் எனச் சொல்லுகிறார்கள். பழங்குடியினர், மேய்ப்பர், தோல்பொருள் கலைஞர், மண்பொருள் வினைஞர் நெசவாளர், சலவையாளர் போன்ற பழங்கால தொழில் நுட்ப வல்லுனர்களும், விவசாயிகளும் தங்கள் ஊரில் பிழைக்க முடியாமல் இடம் பெயர்கின்றனர். இந்த உழைப்பாளர் கூட்டம் அறிவியலும், தொழில் நுட்பமும் வளருவதற்கு முன்னே, தங்களின் மூளையைப் பயன்படுத்தி தொழில் நுட்பத்திற்கும், அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் விதையிட்டவர்கள் அன்றைய அறிவியல் விஞ்ஞானிகள்.
ஆனால், நமது சமூகத்தின் அல்லது அரசியல் அமைப்-பின் கொள்கைகள், மேற்படி அறிவியல் விஞ்ஞானிகளை வெறும் உழைப்பாளிகளாக மட்டுமே வைத்திருந்தது. இத்த-கைய தொழில்களில் ஈடுபட்டவர்களை, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி கட்டத்தில், திறனற்றவர்கள் என சொல்லி நிராகரிக்கவும் செய்கிறது. இன்றைக்கு கிராமங்களில் பிழைக்-கும் சூழல் இல்லாத போது இடம் பெயரும் நிர்பந்தம் இந்த உழைப்பாளிகள் மீது திணிக்கப்படுகிறது. எனவே, தமிழ்-நாட்டின் உழைக்கும் மக்கள் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும், இதர வட மாநில உழைப்பாளிகள் தமிழகத்தின் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கும் இடம் பெயர்கின்றனர்.

பசியும், குழந்தைகளின் மரண ஓலங்களும் உழைக்கும் மக்களை இடம் பெயரத் தூண்டுகிறது. சென்ற இடத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் சம்மதிக்கிறது. ஒரு நாடு வளர்ச்சி பெறுகிற போது இது போன்ற சமூக அவலங்களை கடந்து தான் முன்னேற முடியும் என சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் ஏன் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் பொருந்துவதில்லை? ஒரு நாடு வளர்ச்சி பெறும் போது ஏழைகளையும், உழைக்கும் வர்க்கத்தையும் மட்டுமே பாதிக்குமானால், அந்த வளர்ச்சி ஏழைகளை நிராகரித்த வளர்ச்சியாக மட்டும் தான் இருக்க முடியும். இன்று நமது நாடு அடைகிற வளர்ச்சியும், ஏழைகளை புறக்கணிக்கிற வளர்ச்சி தான்.
இன்னொரு வாதத்தையும் இடம்பெயர்தலின் போது முன் வைக்கிறார்கள். அதாவது இடம் பெயர்தல் காரணமாக, சாதிய பாகுபாடுகள் குறைகிறது என குறிப்பிடுகின்றனர். இது மிக மிகக் குறைவான பலனைத் தந்திருக்கலாம். படித்தவர் அல்லது தொழில் நுட்பத்திறன் பெற்றவர் வேண்டுமானால், இத்தகைய சாதிய பாகுபாடுகளில் இருந்து தப்பியிருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தின் தற்போதைய இடம்பெயர்தல் குறித்து ஆய்வு செய்தால், சாதியத்தை தக்க வைக்கிற முறையில் இடம் பெயர்தல் நடைபெறுவதை அறியமுடியும். நன்கு அறிமுகமான ஒருவரின் தொடர்பை பயன்படுத்தி குடும்பம் குடும்பமாகவும், கும்பலாகவும் இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இடம் பெயர்ந்த இடத்தில் சில புதிய தகவல்களை அல்லது விவரங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பழைய அழித்தொழிக்க வேண்டிய சாதிய வேர்களை பாதுகாக்கின்றனர்.

உலகமயமாக்கலுக்குப் பின் இடம்பெயர்தல்:

உலகமயமாக்கல் என்பது நவீன தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகளின் விளைவு ஆகும். சுதந்திரச் சந்தை அல்லது கட்டுப்பாடற்ற சந்தை முறையை உரமிட்டு வளர்க்கும் செயலை உலகமயமாக்கல் கொள்கை திட்டமிட்டு அமலாக்குகிறது. இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நாடுகள், உலகமயமாக்கலின் இறக்குமதிக் கொள்கைக்கு கட்டுப்பட வேண்டி இருப்பதால், உள்நாட்டு உற்பத்தியில் சரிவை சந்திக்கிறது. வேளாண்துறை துவங்கி, எல்லாத் துறைகளிலும் உற்பத்தி சரிவு ஏற்படுவதால், கிராமப்புற வேலை வாய்ப்பு மற்றும் சிறு தொழில்கள் மூலம் கிடைத்து வந்த வேலைகளில், மிகப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பிழைப்பிற்கும், உணவிற்கும் வழியின்றி தவிக்கும் நிலைக்கு, உழைக்கும் மக்கள் தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாக இடம்பெயர்ந்து காலத்தை ஓட்டுகிற தேவைக்கான சூழல் உருவாகிறது.

இன்னொருபுறம் இடம்பெயரும் தொழிலாளிகளை வேலைக்கு வைப்பதன் மூலம் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் முதலாளிகள் பெரும் லாபம் ஈட்ட முடிகிறது. இடம் பெயரும் தொழிலாளிகள் உள்ளூர் தொழிலாளிகளை விட, குறைவான ஊதியம் பெருகின்றனர். கேள்வி கேட்காமல் அதிக நேரம் உழைக்கின்றனர். இதன் காரணமாக உழைப்பாளிகள் மீதான சுரண்டல் மிகக் கொடுமையாக அரங்கேற்றப்படுகிறது.“உள்ளூரில் வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை” என்ற பிரச்சாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்திற்குள் அடங்கிக் கிடங்கும், “சுரண்டல்,” என்கிற கொள்ளையை யாரும் வெளிப்படுத்துவதில்லை. சமீபத்தில் சென்னை நகரில் தொழிலாளர் முகாம்கள், திடீர் திடீரென உருவாவதைக் காண முடியும். தகரக் கொட்டகைகளைக் கொண்ட இந்த முகாம்களில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள், அதிகாலையில் வேலையைத் துவங்கி இரவு 10 மணி வரை கடுமையாக உழைக்கின்றனர். இந்த அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கும் தொழிலாளர்கள் மூலம் ஒப்பந்தக்காரர்களும், பணக்கார முதலாளிகளும் அடைகிற கொள்ளை லாபத்தை யாரும் வெளிப்படுத்துவதில்லை.

தனியார் நிறுவனங்கள் மட்டும் இது போன்ற கொள்ளைகளில் ஈடுபடவில்லை. அரசுத் துறைகளும் கூட இது போன்ற கொள்ளைகளுக்கு துணை போகின்றன. உதாரணத்திற்கு கடந்த 2010 மார்ச்சி-ல் திறக்கப்பட்ட தமிழக சட்டமன்றத்தின் புதிய கட்டடம். இதில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளிகளுக்கு முதல்வர் பகிரங்கமாக விருந்து கொடுத்த போது அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டலை ஒரு வார்த்தையில் கூட குறிப்பிடவில்லை. மாறாக, வேறு மொழி பேசுபவருக்கு கூட இரக்கப்பட்டு வேலை தரும் கொள்கை, என சுய பீற்றல் வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.

சாலைகள், தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. இதில் தனியார் ஈடுபடுத்தப்பட்டனர். மிகக் கொடுமையான அந்தப்பணிகளில், ஒப்பந்த அடிப்படையில் கிராமப்புற உழைப்பாளிகள் மிகக் குறைந்த ஊதியத்துக்கு ஈடுபடுத்தப்பட்டனர். புது டில்லியிலும், தற்போது சென்னையிலும் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கான கட்டுமானப் பணியாளர்கள் கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். இதன் மூலம் கிடைக்கும் கூலியால் உயிர் வாழும் நிலையை “வேலை” என அரசு பெருமைப் பட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் இருந்து இடம் பெயரும் தொழிலாளர்கள் கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற அவலங்களும், துன்பங்களும் நிறைந்த பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். ஆக மொத்தத்தில், இடம் பெயரும் தொழிலாளர் கூட்டம் சாலைகள் போடுவது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, செங்கல் சூளைப் பணிகளில் ஈடுபடுவது, கரும்பு வெட்டுவது, கல்குவாரி பணிகளில் ஈடுபடுவது போன்ற மிகக் கடுமையான உழைப்பை செலுத்த வேண்டிய துறைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் கூடுதலாக பஞ்சாலை, கார்மெண்ட்ஸ், உணவுப் பதப்படுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

திறனற்ற தொழிலாளர்களுக்கு (Unskilled labour) வேறு என்ன வேலை தர முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். மிகப் பெரிய தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும், கடுமையான உடலை வருத்தும் பணிகளுக்கு, திறனற்ற தொழிலாளரைப் பயன்படுத்துவது என்ற கொள்கை, லாபத்திற்காக உருவானது. ஆம் திறன் கொண்ட இயந்திரங்களை விட, மனித உழைப்பு மலிவாக இருக்கும் காரணத்தால் உருவானது. என்பதை யார் அம்பலப் படுத்துவது? இரண்டாவதாக, உலகமயமாக்கல் கொள்கை கிராமப்புற உழைப்பாளர்களின், திறனை அபகரித்து நிராயுதபாணியாக நகர்புறத்திற்கு விரட்டியுள்ளது என்பதை யார் பேசுவது?

தொழிலாளருக்கு எதிராக தொழிலாளர்:

பெண்களுக்கு எதிராக பெண்களே கொடுமைக்காரர்கள் என சொல்லப்படுவது ஆணாதிக்க சிந்தனை எனக் குறிப்பிடப்படுகிறது. அதேபோல், வேலையின்மையை பயன்படுத்தி, தொழிலாளருக்கு எதிராக தொழிலாளியை நிறுத்துவது, முதலாளித்துவச் சுரண்டல் சமூகத்தின் சிந்தனையே. லண்டன், பாரீஸில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய தொழிலாளருக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுவது உலகளவிலான உதாரணம். இந்தியா வில், அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நீண்ட நாள்களாக இருந்து வரும் பிரச்சனை. இதன் மூலம் இனப் பிரச்சனை உரு-வாக்கப்படுவதும், நீண்ட பகையாக வளர்க்கப்படுவதும், இந்திய முத-லாளித்துவ ஆட்சியாளர் களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பிரச்-சனை ஆகும்.

III


மறுபுறம் இடம் பெயர்ந்த தொழி-லாளி, குறைந்த கூலிக்கு உழைக்க சம்மதிப்பது நிகழ்கிறது. எனவே, உள்ளூர் தொழிலாளியை விட வெளி-யூர் தொழிலாளி சுரண்டலை மேம்-படுத்த பயன்படுவார் என்பதால் முத-லாளித்துவம் திட்டமிட்டு வளர்க்கிறது.
உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கும், நோய்களில் குழந்தைகள் மடிவதற்கும், கொலைகளும், கொள்-ளைகளும் அதிகரிப்பதற்கும், இடம்-பெயர்தலுக்கும் அடிப்படைக் கார-ணம் வேலை இல்லை என்பதாகும். 2004இல் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை தோற்கடித்து காங்-கிரஸ் தலைமையிலான மாற்றுக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த போது, இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அதன் காரணமாக உருவாக்கப்பட்ட குறைந்த பட்ச பொதுத்திட்டம், தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை கொணர்ந்-தது. இந்தியாவின் பல்வேறு மாநி-லங்-களில், இந்த திட்டம் ஓரளவு இடம்பெயர்தலை தடுத்துள்ளது. வாங்கும் சக்தியை சற்று உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 50 சதமான கிராம ஊராட்சிகளில் மட்டுமே, ஓர-ளவு அமலாகியுள்ளதாக தேசிய ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ள விவரங்கள் குறிப்பிடுகிறது. 21.03.2010 வரை 1.5 லட்சம் குடும்பங்கள் மட்டுமே தமிழகத்தில் நடப்பு ஆண்டில் வேலை பெற்றுள்-ளனர்.

அட்டவணை - 5

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்
எண் நாள்கள் வேலை பெற்றோர் எண்ணிக்கை
1 10 நாள்கள் 10,55,990
2 20 நாள்கள் 7,09,754
3 30 நாள்கள் 5,55,357
4 40 நாள்கள் 4,37,184
5 50 நாள்கள் 3,43,389
6 60 நாள்கள் 2,70,699
7 70 நாள்கள் 2,15,514
8 80 நாள்கள் 1,80,306
9 90 நாள்கள் 3,35,307

ஆதாரம்: ஊரக வளர்ச்சி - இணையதளம்

அட்டவணை 5இன் படி 90 நாள்கள் வேலை பெற்றவர்கள் 3,35,307 பேர். ஆனால், தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தோர் சுமார் 66 லட்சம் குடும்பங்கள். இவர்களில் 42 லட்சம் குடும்பங்கள் வேலை கோரியதாகவும் 41,03,500 குடும்பங்களுக்கு வேலை கொடுத்ததாக மாநில அரசு விவரம், 2009--_2010 நிதியாண்டு குறித்த விவரங்களைத் தெரிவிக்கிறது. கூலி 50 ரூபாய்க்கு கீழ் வழங்கப்பட்ட ஊராட்சிகளும் இருக்கிறது. மத்திய அரசு 2009-_10 ஆம் ஆண்டு தேவைக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய தொகை சுமார் 230 கோடி ரூபாய் மட்டுமே என சொல்லப்படுகிறது, இதற்குள்-ளேயே முடிந்து விட்டது. காரணம் கூலியை குறைத்தும், அட்டவணைப்-படி வேலை நாள்களை குறைத்தும் மாநில அரசு மக்களுக்கு துரோகம் செய்-கிறது. எனவே தான் தேசிய கிராமப்புற உறுதி சட்டத்தை முறையாக அம-லாக்கு என வலியுறுத்த வேண்டியுள்ளது.

நகர்புற வேலை உறுதி சட்டம்:

மத்திய அரசு நகர்புற மக்களுக்காக வறுமையை ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அட்டவணை 3 நகர்புறத்தில் வசிக்கிற, 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின், பரிதாப நிலையை சுட்டிக் காட்டுகிறது. சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில், பட்டினியில் வதைப்படும் குழந்தைகளின் படத்தை பார்த்த போது, நமது நாட்டில் உள்ள பரிதாப நிலையை நாம் அறிய-வில்லை. நமது நாட்டில், நகர்புறத்தில் உள்ள குழந்தைகளில் 19 சதமான குழந்தைகள், சும்மா உயிரை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் அவலத்தை நாம் அறியவில்லை. 30 சதமான குழந்தைகள் 3 வயதில் இருக்க வேண்டிய எடையுடன் இருப்பதில்லை. 30 சதமான குழந்தைகள் எடை குறைவாக வாழ்கின்றனர். 37 சதமான குழந்தைகள் உரிய உயரத்துடன் இருப்பதில்லை என்பதை அட்டவணை 3 சுட்டிக் காட்டுகிறது.

நகர்புறத்தில் நிரந்தர வேலைகள் இருப்பதில்லை. போதிய ஊதியம் கிடைப்பதில்லை. விலைவாசி உயர்வு காரணமாக வரவை மிஞ்சிய செலவு போன்ற காரணங்களால், மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். எனவே, நகர்புற மக்களுக்கும், குறைந்த பட்ச ஆண்டு வருமானத்தை உருவாக்கித் தருவது அரசின் கடமையாகும். நகர்புற வேலை உறுதிச்சட்டமும், அதற்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் அவசியம்.
மாநில அரசும் சில முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இடதுமுன்னணி ஆட்சியில் உள்ள கேரளா, திரிபுராவில் தற்போது நகர்ப்புற வேலை உறுதிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதை தமிழ்நாடு அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூகப் பாதுகாப்புடனான வேலை:

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 92 சதமான உழைப்பாளிகள், முறைசாரா தொழில்களைச் செய்பவர் என குறிப்பிடுகிறது. கட்டுமானம், ஹோட்டல், சாலை போடுபவர், கடை ஊழியர், வீட்டு வேலை, செங்கல் சூளை போன்ற கடுமையான உடலுழைப்பு பணியில் ஈடுபடுவோரும் மற்றவர்களும் இதில் அடங்குவர். தொழிலாளர்களில் 8 சதமானோர் மட்டுமே வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, கடன்வசதி, பென்சன், கிராஜீவிடி, உரிய காலத்தில் சம்பள உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெற முடிகிறது. 92 சதமான தொழிலாளருக்கு இவை எதுவுமே இல்லை. தமிழில் சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்-டிருக்கும் “அங்காடித் தெரு” படத்தின் நாயகியைப் போல், நாயகனைப் போல் உழைக்கும் இளைஞர் கூட்டம் தமிழகத்தில் பல லட்சம். அந்த நாயகிக்கு ஏற்படுகிற அவமானம், பாலியல் துன்புறுத்தல் என்பது நடிப்பு. ஆனால், பலர் அனுபவிக்கிற கொடுமையைச் சொன்ன உண்மை படபிடிப்பு.

நமது ஆட்சியாளர்கள் 20 ஆண்டுகளாக பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை, சிறு தொழில்களை படிப்படியாக மூடு விழா நடத்தி அழித்து வருகிறது. அங்கே பணியாற்றிய தொழிலாளிகள், இன்று ரிலையன்ஸ் ஃபிரெஷ், மோர் ஃபார் யூ, ஸ்பென்சர் எக்ஸ்பிரஸ், பிக் பஜார் உள்ளிட்ட பெரும் முதலாளிகளின் கடைகளில் ஊழியராகி உள்ளனர். ஒன்று இல்லை என்றால் இன்னொன்று, என 50 வயதுவரை தான் ஓடலாம். அதன் பிறகு? எனவே தான் சமூகப் பாதுகாப்புடனான வேலை என்ற தேவையை சட்ட வடிவம் கொடுத்து அமலாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாகியுள்ளது. சிலர் முதி-யோர் பென்-ஷன் நலவாரிய நடவடிக்கைகளில் திருப்தி கொள்கின்றனர். முழு நடவடிக்கை இதன் மூலம் இல்லை என்-பதை தாலுகா அலுவலகங்களுக்கு சென்றால் அறிந்து கொள்ளலாம்.

சேதுகால்வாய் திட்டம்:

தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டுக் கால கனவு, 13 கடலோர மாவட்டங்களில் சிறியதும், பெரியதுமாக 13 துறைமுகங்கள் அமையும் என்ற எதிர்பார்ப்பு, உட்புற மாவட்-டத்து இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை, சில லட்சங்களில் திட்டமிடப்பட்ட செலவு, இப்போது பல ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என சொல்லப்படுகிறது. தோண்டுவது, கட்டுவது என்ற திட்ட முன்மொழிவுகள் வந்தால், உலகிலேயே அதிக மகிழ்ச்சி கொள்வது நமது ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள். திட்ட மதிப்பீடும், துவக்கமும் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். அதன் பின் திட்டத்தின் முழுமை குறித்து ஆட்சியாளர்கள் ஒரு போதும் கவலை கொள்வதில்லை. அப்படி கவலை-யளிக்காத திட்டமாக, தமிழகத்தில் சேது கால்வாய்த் திட்டம் இருந்து வருகிறது. சுமார் 2400 கோடி ரூபாய் கடலில் கொட்டி செலவிடப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் போட்ட வழக்கினால், உச்சநீதி மன்றத் தடையினால், சேது கால்வாய் திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், அவை சார்ந்த உப தொழில்கள் மற்றும் வாணிபம் ஆகியவை செழிக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழகம் 1. கிழக்குக்கரை 2. கொல்லத்துறை 3. எயிற்பட்டினம் 4. அரிக்கமேடு 5. காவிரி பூம்பட்டினம் 6. தொண்டி 7.மருங்கூர்பட்டினம் 8. கொற்கை 9. குமரி ஆகிய துறைமுகங்களை வங்காள விரிகுடாவில் கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. தமிழன் யார் தெரியுமா? என்று அடிக்கடி கேள்வி கேட்டு, விளக்கம் சொல்லும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டிருப்பது, வேலைவாய்ப்பை முடக்கும். இடம் பெயர்தலில் சிறு தடுப்பு அரணாக இருக்கும் சேது கால்-வாய் திட்டத்தை நிறைவேற்றுவது மிக அவசியம். தமிழகத்தின் பரவலான வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

அரசு வேலையும் _- கொள்கைகளும்:

அரசு எப்படி எல்லோருக்கும் வேலை தர முடியும்? சுய வேலைவாய்ப்பு, தனியார் துறை இவற்றை பயன்படுத்த வேண்டியது தானே? என்று நமது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கேட்கிறார்கள். இந்தியா விடுதலை பெற்ற பின், உருவாக்கப்பட்ட பொரு-ளாதாரக் கொள்கை, சுரங்கம், இரும்பு, மின்சாரம், ரயில்வே, சாலை, கப்பல், விமானம் ஆகிய அதிக முதலீட்டை கொண்ட துறைகளை அரசு துவக்குவது என்றும், சிறிய தொழிற்சாலைகளை தனியார் நடத்தலாம் என்றும் முடிவெடுத்தது. இதன் காரணமாக அரசு முதலீட்டின் அவசியத்தை அன்றைய முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் வலியுறுத்தினர். இன்று அதே முதலாளிகளும், நிலப்பிரப்புகளும் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறிய பின் அரசு நிறுவனங்களை “என்னிடம் கொடு” என்கிறார்கள் அது போல் தான் நடுத்தர வர்க்கம், அரசு வேலை குறித்து முன் வைக்கிற வாதமும் உள்ளது.

அரசு நிர்வாகம் என்பது நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், காவல்துறை, ராணுவம் என்பதாக சுருக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கின்றனர். இவைகளைத் தாண்டி நிர்வாகம் மிக முக்கியமானது. எளிய மக்களைச் சென்ற-டைகிற வகையில் நிர்வாக ஏற்பாடுகள் அமைய வேண்டும்.
ரேசனில் வரிசை, மின்சாரக் கட்டணம் செலுத்த, ரயிலில் டிக்கட் எடுக்க, வங்கியில் பணம் எடுக்க, போட, பேருந்துகளில் உள்ள நெருக்கடி என அனைத்திலும் வரிசை அல்-லது கூட்டம் அலைமோதுகிறது. இது பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ற நிர்வாக ஏற்பாடு இல்லை, என்பதனால் உருவான அவலம். ஆனால், நமது தனியார்மயமாக்கல் பிரியர்கள், தனியாரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டால், இந்த வரிசைகள் இருக்காது என குறிப்பிடுகின்றனர். நிர்வாகத்தை அரசு முன்வந்து மேம்படுத்துவதன் மூலம்தான் பல லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாகும்.

மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி 2 லட்சத்-திற்கும் அதிகமான பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக இருப்பதாக அறிவித்தார். மிக சமீபத்தில் இரவு 12 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்கு காத்திருந்த போது, பிளாட்பாரத்தில் ஒரே ஒரு பெண் காவலர், நவீன ஆயுதங்கள் இன்றி, கையில் ஒரு தடியுடன் பாதுகாப்பு பணியில் நின்றிருந்தார். இவரால் யாரைப் பாதுகாக்க முடியும்? இவரைப் பாதுகாப்பதே பெரிய விஷயமாக இல்லையா?
ரயிலிலேறி, சைதாப்பேட்டை நிறுத்தத்தை அடைந்தால் ஒரே ஒரு பெண் அதிகாரி, கையில் சமிக்ஞை (signal) காட்டும் கருவியுடன் நின்றிருந்தார். ஒரு உதவியாளர் கூட இல்லை. இத்தகைய அவலங்களை கணக்கில் சேர்க்காமல் தான் மம்தா 2 லட்சம் என குறிப்பிட்டிருந்தார். நமக்கு கிடைத்த தகவல் படி அகில இந்திய அளவில் சுமார் 38 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. 2 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என முதல்வர் ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 2010 ஏப்_11 அன்று நடைபெற்ற TNPSC தேர்வில், 1231 பணியிடங்களுக்கு 4.19 லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதி உள்ளனர். எனவே, சிறந்த நிர்வாகத்திற்கு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதே போல் புதிய வேலை வாய்ப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களின் தேவைகள் அதிகமாகும். அது உற்பத்தியை அனைத்து துறையிலும் அதிகரிக்கும். அது மேலும் வேலை வாய்ப்பை உருவாக்கும். எனவே, அரசு உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு செய்யாமல் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.
இதற்கு நிதி வேண்டாமா? என்ற கேள்வி புரிகிறது. மத்திய அரசு, மாநில அரசு பட்ஜெட்டில் மறைமுக வரி வருவாய் அதிகமாகவும், நேரடி வரிவருவாய் குறைவாகவும் முன்மொழியப்பட்டது. நித்தியானந்தர் போன்ற காவியுடை காமுகர்களுக்கும் கூட வரி சலுகைகள் வழங்கப்பட்டது, நிலம் ஒதுக்கப்பட்டது. வங்கிகள் வாராக்கடன் என்ற பெயரில் ஒன்னரை லட்சம் கோடி ரூபாய் என அறிவிப்பு செய்-துள்ளது. கடன் பெற்றோர் அனைவரும் பணக்காரர்கள். இவை குறித்து கேள்வி கேட்காதது ஏன்? மத்திய அரசு பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை சலுகையாக அறிவித்துள்ளது. இதை ஏன் யாரும் கேட்கவில்லை?

மக்களுக்கான கல்வி, வேலை, சுகாதாரம் குறித்து பேசினால், நிதிப் பற்றாக்குறை முன்னிறுத்தப்படுகிறது. இத்தகைய போலித்தனமான பற்றாக்குறைக்கு முடிவு கட்டவும் கூட சிறந்த நிர்வாகம், மக்களுக்கான நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்.


IV

காலம் காலமாக நடைபெறும் இத்தகைய அவலங்-களுக்கு முடிவு கட்ட முடியுமா? பணக்காரனை ஏழை என்ன செய்து விட முடியும்? என்ற நம்பிக்கையற்ற கேள்விகள் நமது இளைஞர்களின் பெரும்பான்மையோரை அமைதி காக்கச் செய்கிறது. அமைதி காக்கவும், அடங்கிக் கிடக்கவும் மானுடம் பிறக்கவில்லை. பிறந்த ஒவ்வொருவரும் ஒரு வரலாறை உருவாக்குகிறோம். அமைதியாக இருந்தால் அடிமை வரலாறு, எழுச்சி கொண்டு போராடினால் போராட்ட வரலாறு. போராட்ட வரலாற்றிற்கு சொந்தக்-காரர்-களாகவே இளைஞர் கூட்டம் இருக்க விரும்புகிறது. மாற்றுக் கொள்-கையை முன்வைத்த அரசியல், பொருளாதார சமூக ஒடுக்கு முறைகளை மாற்றுகிற போராட்டம் இன்றைய தேவை.

நாம் மேலே விவரித்த துன்பங்களும், கொடுமைகளும் நிறைந்த உழைப்பாளிகள் வாழ்க்கை நிலை மாற வேண்டும். அதற்கு

1. நிலச்சீர்திருத்தத்தை அமலாக்குவது, பாசன வசதியை மேம்படுத்தி - விவசாய உற்பத்தியை பெருக்குவது.

2. மத்திய, மாநில அரசுகள் தற்போது இருக்கிற காலிப் பணியிடங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து , இட ஒதுக்கீடு பயன்தரும் வகையில் பின்னடைவு பணியிடங்களையும் நிரப்புவது.

3. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அரசு தலையிட்டு நிரப்புவது. பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்துவது.

4. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய மற்றும் தேவையான அரசு நிர்வாக அலுவலகங்களை உருவாக்குவது.

5. சமூகப் பாதுகாப்புடனான பணியினை உறுதி செய்யும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றுவது.

6. தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை மேலும் விரிவு செய்ய நாள்களையும் கூலியையும் உயர்த்துவது.

7. நகர்புற மக்களும் பயன்பெறும் வகையில் வேலை உறுதி சட்டத்தை உருவாக்கி அமலாக்குவது.

8. சேதுகால்வாய்த் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளை, நூற்றி ஐம்பது ஆண்டுகளாக முடக்கி வைத்து இருப்பதை விரைந்து அமலாக்குவது.

9. வேலையில்லாக் கால நிவாரணத்தை படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கூட்டாக வழங்குவது, வழங்குகிற மாநிலங் களில் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது.

10. உழைக்கும் மக்களின் துன்பத்திற்கு காரணமான, உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை முற்றாக விலக்கிக் கொள்வது.

11. முறைசாரா பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகளின் திறனை வளர்க்க பயிற்சி மையங்களை உருவாக்கி பயிற்சி அளிப்பது.

12. கேம்ப் கூலி, சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட பெண்களை உழைப்பு ரீதி யாகவும், பாலியல் ரீதியாகவும் சுரண்டுகிற திட்டங்களை, தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ், கேம்ப் கூலி முறையில் இல்லாமல் செயல்படுத்துவது.

ஆகிய செயல் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றினால் எல்லோருக்கும் சமூகப் பாதுகாப்புடனான வேலை சாத்தியம். கொடுமை-களுக்கும், சுரண்டல் மூலமான கொள்ளை லாபத்திற்கு முடிவு காண முடியும்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இத்தகைய மாற்றுக் கொள்கைகளுடன், இளைஞர்களைத் திரட்டிப் போராடி வருகிறது. அரசை நிர்பந்திக்க அல்லது கொள்கையை உருவாக்கும் மாற்றத்தை உருவாக்கிட, அனைத்துப் பகுதி இளைஞர்களும் ஒன்று சேராமல் முடியாது. காலமும் கடமையும் அழைக்கிறது. ஒன்றிணைவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மே 3இல் சட்டமன்றம் நோக்கிப் பேரணி நடைபெறுகிறது.