வியாழன், 13 மே, 2010

மாவோயிஸ்டுகள்

இவர்கள் மாவோயிட்டுகள் அல்ல; மம்தாயிட்டுகள்


நாடு முழுவதும் வன்முறைக்கு எதிரான கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது அவசியம். இந்தியாவில் அதிகரித்துள்ள மாவோயிஸ்டுகளின் வன்முறையை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 75க்கும் அதிக மான நக்சலைட் குழுக்கள் செயல்படுகின் றன. ஜார்கண்டில் மட்டும் 30 குழுக்கள் செயல்படுகின்றன. இவைகளில் சற்று பெரிய குழு மாவோயிஸ்டுகள். 7 மாநிலங்களில் வன் முறையை அரங்கேற்றும் நக்சலைட்டுகளின் செயல்களைவிட மேற்குவங்கத்தின் 3 மாவட் டங்களில், அதுவும் ஜார்கண்ட் எல்லையை சாதகமாகப் பயன்படுத்தி நடத்துகின்ற அராஜ கம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகிறது. மேற்குவங்க நலனில் இருந்தோ, மேற்கு வங்க அரசை அக்கறையுடன் விமர்சிக்க வேண்டும் என்றோ, பெரிது படுத்தும் பணி நடைபெறவில் லை. மாறாக, மேற்குவங்க இடது முன்னணி அரசை பலவீனப்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடனேயே, மேற்படி செய்திகள் பிர சுரிக்கப்படுகின்றன. சில கேள்விகளை முத லாளித்துவ ஊடகங்களுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் முன்வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஒன்று, மாவோயிஸ்டுகளின் தாக்குதல், 2009 மே 18 தேர்தல் முடிவுகள் இடதுசாரி களுக்கு சாதகமாக இல்லை என்பதை அடிப் படையாகக் கொண்டு அதிகரித்ததா? இரண்டு, மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு பற்றிய விவா தம் அகில இந்திய அளவில் நடைபெறுகிற போதெல்லாம், மேற்கு வங்க முதலமைச்சர், நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதை மத்திய காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளாதது ஏன்? மூன்று, மேற்கு வங்கத்தின் காவல்துறை மட்டும் எப்படி இரண்டு மாநில எல்லைகளைப் பயன்படுத்தும் மாவோயிஸ்டுகளைக் கட்டுப் படுத்த முடியும்? நான்கு, திரிணாமுல் காங்கிர ஸின் தலைவரும், மத்திய அமைச்சருமான மம்தா பானர்ஜி, மத்திய கமாண்டோ படைகளை அனுப்பக் கூடாது, என்று சொன்னதன் மர்மம் என்ன? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் கேள்விகள் மத் திய அரசுடனும், மம்தா பானர்ஜியின் உள்நோக்க அரசியலுடனும் இணைந்து இருப்பதால், ஊடகங்கள் பெரிது படுத்துவதில்லை.

மக்கள் பேரெழுச்சியாகக் கலந்து கொண்டு, இடது முன்னணியை எதிர்க்கிறார்கள் என்கிற சித்திரம், நந்திகிராமம் பிரச்சனையில் இருந்து வரையப்படுகிறது. அன்றைய நில ஆக்கிரமிப் புக்கு எதிரான மக்கள் குழுவும், இன்றைய காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக் கள் குழுவும் ஒரே தன்மை கொண்டதே. இவை இரண்டையும் உருவாக்கியதில் திரிணாமுல் காங்கிரசிற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் பங்கு உண்டு. இந்தக் கட்சிக்காரர்களே மேற்படி போர்வையில் இயங்குகின்றனர். மக்கள் குழுவைச் சார்ந்தவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல், மாநில முதலமைச் சர் செல்கிற பாதை, இதர அமைச்சர்கள் செல்கிற பாதைகளை வெட்டி பாழ்படுத்தியது ஏன்? முதலமைச்சர் சென்ற பாதையில் கண்ணி வெடி வைத்து கொல்ல (நவ, 2, 2008) முயன்றது ஏன்? இது மக்களிடம் இருந்து அந் நியப்பட்டுப் போனவர்களின் செயல். இத்த கைய செயல்களுக்கு உடந்தையாக ஊடகங் களும், சில அறிவுஜீவிகளும் இருப்பது ஆபத் தை தூண்டுவதற்கு ஒப்பானது ஆகும். 1998இல் இருந்து கைது செய்யப்பட்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பின் பிரதிநிதிகளை விடுவிப்பதற்கு, இந்த இயக்கங்களின் செயல் களும் நபர்களின் வாதமும் துணை புரிந்துள்ளது.
இன்னொரு புறம், மாவோயிஸ்டுகள் தனி வரி வசூல் நடத்துவது வெளிப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வசூல் செய்யப் படுவதாக, அரசு வெளியிட்ட செய்தி நவம்பர் 15 அன்று வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் மாநி லத்தின் முன்னாள் முதல்வர் மதுகோடா, மாவோயிஸ்டுகளுக்கு தாராளமாக நிதி வழங் கிய செய்திகள் வெளிப்படுகிறது. மேற்கு வங் கத்தின், மேற்கு மிட்னாப்பூர், பங்குரா, புரூலியா மாவட்டங்களில் செய்யப்பட்டு வரும் சாலைப் பராமரிப்புப் பணிகளின் காண்ட்ராக்ட் காரர்க ளிடம், சட்ட விரோதமான முறையில், மாதம் மாதம் 8 லட்சம் ரூபாய் பறித்து வந்துள்ளனர். ஒரிசாவின் மயூரி பன்ஜி காடுகளிலுள்ள ரயில்வே ஊழியர்களிடம் மாதா மாதம் ஒன் னரை லட்சம் ரூபாய் வசூலித்து வந்துள்ளது அம்பலப்பட்டுள்ளது. இத்தகைய செயல் களை எந்த மக்கள் குழுக்கள் செய்ய முடியும்? வேறு மாநிலங்களில் இத்தகைய அனுபவம் இல்லையே ஏன்? ஏறத்தாழ கொள்ளையடிக் கும் செயல்களை, அறிவுஜீவிகளும், தனிநபர் களும் விமர்சிக்காதது ஏன்?

அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரும், ஊடகங்களும், மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் உள்ள பழங்குடி இன மக்களின் வளர்ச்சியை சற்று கவனிக்க வேண்டும் என் கின்றனர். 2000 முதல் 2003 வரையில் 16,280 ஹெக்டேர் அளவுள்ள நிலங்களை நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து, அதை மறு விநியோகம் செய்தது மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு. இந்தியப் புள்ளி விவரத்துறையின் மூத்த ஆய்வாளர், அபராஜ்த பக்ஷி, நான் ஆராய்ச்சி செய்த ஜார் கிராம் வட்டார கிராமத்திலுள்ள குடியிருப்பாளர்களில் 75 சதத்தினர் நிலச் சீர்திருத்த பயனாளர்கள். சீர்திருத்தத்தின் விளைவாக பழங்குடியினரில் 70 சதமானோர் விவசாய நிலங்களையும், 90 சதமானோர் வீட்டுமனை நிலத்தையும் பெற்றுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இதன் மூலமான வளர்ச்சி, இந்தியாவின் இதர பழங்குடியின மக்கள் குடியிருப்பை விட அதிகம் என்பதை விமர்சிப்பவர்கள் கவனிக்க வேண்டும்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணா முல், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அம்ரித் ஹன்ஸ்டா 2,92,345 வாக்குகள் வித்தியாசத் தில் சிபிஎம் வேட்பாளர் புலின் பிஹார் பாஸ் கியிடம் தோற்றுப் போனார். மக்கள்குழு என்று சொல்லிக்கொள்பவர்கள் (யீளதெஉ) ஏன் பழங் குடியினரை சிபிஎம்-க்கு எதிராக வாக்களிக்க வைக்க முடியவில்லை? 2007இல் திட்டமிட்டு நந்திகிராமத்தில் செயல்பட்ட திரிணாமுல், மாவோயிஸ்டு கூட்டணி, லால்கார் பிரதேசத் தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே, சிபிஎம் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற பகுதிகளைப் பாழ் படுத்த மத்திய அமைச்சர், அதிகாரம், ஊடகம், அறிவுஜீவி என அனைவரையும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். மக்களவைத் தேர்தலுக்கு பின் 120 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். இதில் 95 சதமானோர் சிபிஎம் ஊழியர் கள். லால்கார் பகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம், மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து நேர்மையான விவாதத்தை நடத்தி, நாங்கள் எங்கள் செல்வாக்கை இழந்திருக்கிறோம். எதிர்காலத்தில், எங்களை சரிசெய்து முன் னேறுவோம் என கூறியுள்ளது.

மாவோயிஸ்டுகள் தேர்தல்களை புறக்க ணிக்க வேண்டுகோள் விடுக்கின்றனர். அது ஏன் லால்கார் பகுதியில் செல்லுபடியாகவில் லை. மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, ஆந்திரா, ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில், இவர்களின் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தோற்றுப் போய்விட்டது. வாக்குப் பதிவு சதவீதம் அதிகம் என சுமந்தா பானர்ஜி (சாரு மஜூம் தாருடன் இருந்தவர்) குறிப்பிடு கிறார் (EPW oct.19, 2009). இந்த ஆதாரம் மாவோ யிஸ்ட்டுகள் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டவர்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

சில அறிவு ஜீவிகளும், மனித உரிமைக் காவலர்களும், மாவோயிஸ்டுகளை கண் மூடித்தனமாக ஆதரிக்கிறபோது, மாவோ யிஸ்டுகளின் மனித உரிமை மீறலை கண்டு கொள்வதில்லை. உதாரணம் ஜார்கண்ட் மாநிலம் ஹெகடாவில், ராஜதானி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை கடத்தல் என மாவோயிஸ்டுகள் கூறிக் கொள்ளவில்லையாம். கடத்தினாலும், நிறுத்தி னாலும், நேர இழப்பு, இழப்பு தானே. அந்த ரயிலில் இருந்த நோயாளிகள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள் என பலரும், 4 மணி நேரத் தாமதத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்களே! இந்த மனித உரிமை மீறலை, மனித உரிமைக் காவலர்கள் ஆசீர் வதிப்பதன் உள்நோக்கம் என்ன? நக்சலைட் இயக்கத்தில் கனுசன்யால் முக்கியமானவர். அவர் வெளியிட்ட தெனாய் அறிக்கையில், அழித் தொழிக்கும் திட்டத்தின் விளைவாக, நேர்மை யற்ற, நியாயமற்ற கும்பல் இயக்கத்திற்குள் நுழையும் நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டுள் ளார் (1980). இதை அறிவுஜீவிகள் உணர மறுப் பது ஏன்? அழித்தொழிக்கும் கொள்கையி னால், சில இளைஞர்களையும், நடுத்தர வர்க் கத்தினரையும், ரவுடிகளையும் பொறுக்கி களையும் தான் கவர முடிந்தது என்று ஆஷிம் சட்டர்ஜி என்ற நக்சலைட் 1971 லேயே குறிப்பிட்டுள்ளார்.
20 தினங்களுக்கு முன்பு இறந்த நக்ச லைட் ஆதரவாளர் கே. பாலகோபால், மாவோ யிஸ்டுகளின் செயலை விமர்சித்து இருக் கிறார். இவர் மக்கள் யுத்தக்குழுவில் இருந்து செயல்பட்ட, இன்றைய மாவோயிஸ்டு இயக்க பொறுப்பாளரான வரவரராவ் மூலம் கவரப்பட்ட வர், என்பது குறிப்பிடத்தக்கது. நமது செயல் பாடு இப்போதுள்ள பூர்ஷ்வா அரசுக்கு மாறாக, உண்மையான, ஜனநாயக தன்மையுடையதாக இருக்க வேண்டும். தன்னிச்சையாக தண் டனை வழங்குதல், சாதாரண மக்கள், அர சாங்க அலுவலர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும் எனும் தர்க்கத்தின் அடிப்படையில் பாலகோபால் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இன்றைய மாவோயிஸ்டுகளின் அழித் தொழிப்புக் கொள்கை சிபிஎம் ஊழியர்களை குறிவைத்துள்ளது. 1975களில் சித்தார்த்த சங்கர் ரேயுடன் கைகோர்த்த நக்சலைட் இயக்கத்தவர், இன்று மாவோயிஸ்டு என்ற பெயரில் மம்தா பானர்ஜியுடன் கை கோர்த்துள் ளனர். நவம்பர் 12 அன்று புதுதில்லியில் மம்தா கொடுத்த அறிக்கையில், முன்னாள் நக்ச லைட்டுகள் திரிணாமுல் கட்சியில் இணைந்து செயல்படுவது உண்மையே எனக் கூறியுள் ளார். பகிரங்கக் கொலை செயலுக்கு திரிணா முல் காங்கிரஸ் உதவுகிறது. மாவோவின் பெயரையும், சித்தாந்த வரிகளையும், மம்தா பானர்ஜிக்கு வால்பிடிக்க பயன்படுத்துவது பரிதாபமானதுதான்.
தண்ணீருக்குள் வாழும் மீனைப் போல், மக்களோடு இணைந்து நிற்போம் என்ற மாவோவின் வரிகளை முன்நிறுத்துவதே கம் யூனிஸ்ட்டுகளின் பணியாக இருக்க முடியும்.

This was published on Nov 23. 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக