புதன், 27 ஏப்ரல், 2022

 நவீன கொத்தடிமை முறை!!! ஒரு காட்சியும், சில அடையாளங்களும்…

எஸ். கண்ணன்

 

2007 ஆம் ஆண்டு, மன்னார்குடி நகரத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளம் பெண்களுக்கான சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டின் தலைப்பு, சுமங்கலி திட்டம் என்ற பெயரில் நடைபெறும் உழைப்பு சுரண்டலுக்கு எதிரானது ஆகும். இன்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என பிரிந்து இருந்தாலும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் ஆகும். அதேபோல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களையும் சேர்த்து கொள்ளலாம். இந்த பகுதி நெல் விளையும், செழிப்பான விவசாயம் கொண்டது ஆகும். இதற்கு நேர் எதிரானது, கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மாட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல்லின் ஒரு பகுதி. இந்தமாவட்டங்களில் பஞ்சாலை தொழில் நூற்றாண்டு காலமாக வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பை கொண்டுள்ளது. 

 

விவசாய பாதிப்பு, இளம் தலைமுறைக்கு விவசாய வேலைகளில் நம்பிக்கை இன்மை உருவாக்கியது. மற்றொரு புறம் கிராமத்தில் சாதிய மேலாதிக்கம், சமூக அழுத்தம் சேர்ந்து வேறு இடங்களுக்கு புலம் பெயர இளைஞர்களை தூண்டியது. இளம் பெண்களுக்கு இருந்த சமூக கொடுமைகளான வரதட்சனை போன்ற பிரச்சனைகள் எல்லாம் சேர்ந்து மூலதனத்திற்கு, உழைப்பு படையை அணி திரட்ட உதவியது என்றால் மிகையல்ல. 

 

நெற்களஞ்சியத்திற்கும், தென் இந்தியாவின் மான்செஸ்ட்டருக்கும் மையமான நகரமாக திருச்சி இருக்கிறது. திருச்சி பேருந்து நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பகுதி பேருந்துகள் வந்து நிற்கு இடத்தில் இருந்து, கோவை,கரூர், திருப்பூர் செல்லும் பேருந்துகளை நோக்கி இளம் பெண்கள் அணி வகுத்து செல்வர். இவர்களை ஏஜெண்டுகள் சிலர் அழைத்து செல்வதைக் காண முடியும். பல இளம் பெண்கள் பேருந்து நிலையத்தில் குமுறி அழும் கொடுமைகளும் நிகழும். வாழ்விழந்த பெண்கள் சூழ்ந்து நின்று, வலுவற்ற அந்த இளம் பெண்ணை தேற்றுவதையும் காணமுடியும். 

 

இந்த பெண்கள் மூன்றாண்டு காலம் பணி அமர்த்தப்படுவர். வாரம் ரூ 500 கூலி தரப்பட்டதாக அன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டி.ஒய்.எப்.ஐ அமைப்பும் இந்த தகவல்களை திரட்டியது. மூன்றாண்டு முடிவில் ரூ30 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை மொத்தமாக அளிக்கப்பட்டு அனுப்பப்படுவர். இதன் மூலம் வேலை வாய்ப்பு துண்டிக்கப்படும். அடுத்து புதிய நபர் இந்த வேலையை பெறுவார். இது ஒரு தொடர் ஓட்டம் போல் இயங்கி கொண்டிருக்கிறது. 

 

இந்த உழைப்பு சுரண்டலை எதிர்த்து டி.ஒய்.எப்.ஐ, சி.ஐ.டி.யு, அனைத்திந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராட்டங்களை கூட்டாக நடத்தியது உண்டு. பல தன்னார்வ குழுக்களும் இந்த போராட்டங்களில் ஈடுபட்டன. அக்பர் அலி எனும் நீதியரசர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டு, குறைந்த பட்ச கூலி, பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது. விளைவு, கேம்ப் கூலி எனும் நடைமுறை படிப்படியாக குறைந்தது. 


இன்று வட மாநிலத்தவர்:

 

உலகம் இன்று சுருங்கி விட்டதாக பலர் கூறுவதை யதார்த்தமாக காண முடிகிறது. உலகில் பலநாடுகளில் முதலாளிகளின் லாப குவிப்பிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள், பெரும் பங்களிப்பை செய்கின்றனர். அமெரிக்காவில் கருப்பர்கள் எனக் கொண்டால், மேற்கு ஆசியாவின் பல நாடுகளில் நம் தமிழர்கள் உள்ளிட்டு இந்தியர்கள் குறைந்த கூலிக்கான உழைப்பு படையாக கருதப் படுகின்றனர். 

 

கேம்ப் கூலி அல்லது நவீன கொத்தடிமை முறை ஒருவழியாக கட்டுக்குள் வந்தாலும், அது வேறு வடிவத்தில் வேறு நபர்கள் மூலம் அவதரிக்கும் நிலையை, மூலதனம் உருவாக்கி வருகிறது. போக்குவரத்து வளர்ச்சி ஒரு ஊரில் இருந்து பல ஊர்களை சுற்றி பார்க்க கூடிய வசதிகளை மட்டும் உருவாக்குவதில்லை. மாறாக மூலதனத்திற்கான மூலப்பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லவும் பயன் படுகிறது. நிலக்கரியை போல், பருத்தியை போல், சிமெண்ட்டைப் போல், இரும்பை போல், இன்று மனிதர்களும் மூலப்பொருள்களாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். 

 

ஹவுராவில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் பயணித்த போது, மேற்படி மூலப்பொருள்களுகளுடன் பயணிக்கிறோம் என்ற உணர்வு தோன்றவில்லை. ஆனால் ரயில்  நள்ளிரவு நேரம் திருச்சியை அடைந்த போது, அதை உணர முடிந்தது. ரயில் நிலையத்தின் வெளியே ஈரோடு, கரூர், கோவை செல்லும் அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததும், அதில், ரயிலில் வந்த அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வந்த இளம் தொழிலாளர் படை அந்த வாகனங்களில் ஏரி சென்றதும், மேற்படி உணர்தலை வலி மிகுந்ததாக மாற்றியது.  

 

அதோடு முடியவில்லை. ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கிலான ஆணும், பெண்ணுமான இளம் உழைப்பு படை, திருச்சி பேருந்து நிலையத்தை நோக்கி பேரணியாக அணி வகுத்தனர். அங்கிருந்த தேநீர் கடை அல்லது ஆட்டோ போன்ற வாகன ஓட்டிகள் யாரும் இதை பொருட்டாக கருதவில்லை. அதன் பின் அந்த ஊர்வலத்தில் சென்ற இளைஞருடன் பேசிய போது தான் தெரிந்தது. இது தினமும் ஹவுராவில் இருந்து திருச்சி வரும் ரயிலில் இருந்து வரும் பயணிகளின் அன்றாட நிகழ்வு என்று. வேலை மட்டும் பழகிக் கொள்வதில்லை. மக்கள் காட்சிகளுக்கும் பழகிக் கொள்கின்றனர், என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

 

தமிழகத்தில் இன்று வடமாநில தொழிலாளர்கள்::

 

சில ஆண்டுகளுக்கு முன் விமர்சனத்திற்கு உள்ளான சுமங்கலித் திட்டம் இல்லாமல் போனது. ஆனால் புதிய கேம்ப் கூலி முறை வடகிழக்கு மாநில தொழிலாளர்களால் தமிழகத்தில் அரங்கேற்றப்படுகிறது. சுரண்டல் மிகுந்த சமூகத்தில், வலி மிகுந்த வாழ்க்கையை வாழும் போராட்டமாக, புலம் பெயர்தல் உள்ளதை காணமுடியும். விவசாய தொழிலாளியாக சுரண்டப்படும் போது, ஏற்படும் அதிருப்தியை, எதிர்க்கும் வடிவமாக புலம் பெயர்ந்து ஆலைகளில் காண்ட் ராக்ட், பயிற்சி போன்ற தொழிலாளர்களாக பணியாற்றுவதில் ஒரு சமாதானம் கிடைக்கிறது. இதை மூலதனம் பயன் படுத்தி கொள்கிறது. தனக்கான மூலதன திரட்சிக்கு இத்தகைய உழைப்பு சுரண்டலைப் பயன்படுத்தி கொள்கிறது. 

 

உள்ளூர் தொழிலாளிக்கு நியாயமான ஊதியம் வழங்க மறுக்கும் தொழிலதிபர், புலம் பெயர் தொழிலாளர் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுகிறார். சட்டபடியான வேலைநேரம், குறைந்த பட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற எதுவும் அற்ற தொழிலாளர்களை காலம் தோறும் முதலாளித்துவம் பயன்படுத்தி கொள்கிறது. நிலமற்ற மக்கள், காடுகளுக்கு உள்ளிருந்து வெளியேற்றப் படும் பழங்குடியினர் திறனற்ற தொழிலாளர்கள் அல்ல. கேள்வி கேட்கும் திறனற்றவர்களாக, பேச்சற்றவர்களாக, குரல் தொலைத்தவர்களாக, புலம் பெயர்ந்து, அடைக்கலம் தேடிய இடத்தில் வாழ்வது, மூலதனத்திற்கு உகந்த ஒன்றாக உள்ளது. 

 

இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் என்ற கட்டுரையை, ஏங்கெல்ஸ் எழுதினார். விவசாயம் பொய்த்து போன போது, நிலமற்ற தொழிலாளர்கள் எப்படி பஞ்சாலைகளில் உரிஞ்சப்பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி இருப்பார். அதை இன்று நமது மாநிலத்தில் காண முடிகிறது. அயர்லாந்து தொழிலாளர்களை, பிரிட்டிஷ் முதலாளிகள் சுரண்டியது, பின்னர் இந்தியா போன்ற நாடுகளின் தொழிலாளர்களையும் சுரண்டும் மூலதனமாக வளர்ச்சி பெற்றதைப் போலவே, இன்று தமிழக கிராமப் புறத் தொழிலாளர்களை சுரண்டிய ஆலைகளின் வளர்ச்சி, பிற மாநில தொழிலாளர்களைச் சுரண்டும் பெரும் ஆலைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் பஞ்சாலை தொழில் படுத்துக் கிடக்கிறது, என்ற ஒப்பாரி ஓயவில்லை. தொழில் முதலாளிகளின் முகாரி ராகம், நம் புலம்பெயர் தொழிலாளர்களின் வலியை, இழப்பை, ஆதரவற்ற நிலையை நிராகரிக்க முயல்கிறது. இதை அனுமதிக்க முடியாது. எதிர்த்த போராட்டங்கள் பல வகையில் அதிகரித்து வருகிறது. வரும் மார்ச் 28,29 தேதிகளிலும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்த அறைகூவலை விடுத்துள்ளன. ஜனநாயக அமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

 

மாநிலத்திற்குள்ளேயே இடம் பெயர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்த இளம் பெண்கள் மீது நடத்தபட்ட சுரண்டலை பொருத்து கொள்ள முடியாமல் போராடிய அனுபவத்தை தமிழகம் கண்டது. குறைந்த சம்பளம், தங்கும் விடுதி, உணவு ஆகியவற்றில் நடத்தப்பட்ட கொள்ளையை எதிர்த்த போராட்டமாக அது இருந்தது. 

 

உள்ளூர் தொழிலாளர்களின் கூலி அதிகம், அதிக நேரம் உழைப்பதில்லை என்பது முதலாளிகளின் மற்றுமொரு வாதம். இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தான், மோடி தலைமையிலான மோடி அரசு, சட்டத்திருத்தங்களை மேற்கொள்கிறது. கார்ப்பரேட் பெரு நிறுவன மற்றும் அரசுகளின் கூட்டு கொள்ளை தொழிலாளர்களை சுரண்டி மேலும் மூலதனமாக கொழுத்து வருவதைக் காண முடியும். இந்த கொடுமையின் வேகத்தை கட்டுப்படுத்தவே, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை வலியுறுத்துகின்றன. வேலை நேரம் உயர்த்தப் படக் கூடாது என உறுதி படத் தெரிவிக்கின்றன. இதை கோரிக்கைகளாக, முழக்கங்களாக சொல்லும் போது அரசுகளும், முதலாளிகளும் கேட்பதில்லை, என்பதாலேயே, வேலைநிறுத்தம் என்ற உற்பத்தி முடக்கத்திற்கு தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் செல்ல வேண்டியுள்ளது. வெல்லட்டும் வேலைநிறுத்தம்

 

இன்று வட மாநிலத்தவர்:

 

உலகம் இன்று சுருங்கி விட்டதாக பலர் கூறுவதை யதார்த்தமாக காண முடிகிறது. உலகில் பலநாடுகளில் முதலாளிகளின் லாப குவிப்பிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள், பெரும் பங்களிப்பை செய்கின்றனர். அமெரிக்காவில் கருப்பர்கள் எனக் கொண்டால், மேற்கு ஆசியாவின் பல நாடுகளில் நம் தமிழர்கள் உள்ளிட்டு இந்தியர்கள் குறைந்த கூலிக்கான உழைப்பு படையாக கருதப் படுகின்றனர். 

 

கேம்ப் கூலி அல்லது நவீன கொத்தடிமை முறை ஒருவழியாக கட்டுக்குள் வந்தாலும், அது வேறு வடிவத்தில் வேறு நபர்கள் மூலம் அவதரிக்கும் நிலையை, மூலதனம் உருவாக்கி வருகிறது. போக்குவரத்து வளர்ச்சி ஒரு ஊரில் இருந்து பல ஊர்களை சுற்றி பார்க்க கூடிய வசதிகளை மட்டும் உருவாக்குவதில்லை. மாறாக மூலதனத்திற்கான மூலப்பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லவும் பயன் படுகிறது. நிலக்கரியை போல், பருத்தியை போல், சிமெண்ட்டைப் போல், இரும்பை போல், இன்று மனிதர்களும் மூலப்பொருள்களாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். 

 

ஹவுராவில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் பயணித்த போது, மேற்படி மூலப்பொருள்களுகளுடன் பயணிக்கிறோம் என்ற உணர்வு தோன்றவில்லை. ஆனால் ரயில்  நள்ளிரவு நேரம் திருச்சியை அடைந்த போது, அதை உணர முடிந்தது. ரயில் நிலையத்தின் வெளியே ஈரோடு, கரூர், கோவை செல்லும் அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததும், அதில், ரயிலில் வந்த அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வந்த இளம் தொழிலாளர் படை அந்த வாகனங்களில் ஏரி சென்றதும், மேற்படி உணர்தலை வலி மிகுந்ததாக மாற்றியது.  


இந்த உழைப்பு சுரண்டலை எதிர்த்து டி.ஒய்.எப்.ஐ, சி.ஐ.டி.யு, அனைத்திந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராட்டங்களை கூட்டாக நடத்தியது உண்டு. பல தன்னார்வ குழுக்களும் இந்த போராட்டங்களில் ஈடுபட்டன. அக்பர் அலி எனும் நீதியரசர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டு, குறைந்த பட்ச கூலி, பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது. விளைவு, கேம்ப் கூலி எனும் நடைமுறை படிப்படிய

பயணம் அல்ல... பின் தொடர்வதற்கான தடம்....

எஸ். கண்ணன்

 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்கப்படும் போது, எல்லோருக்கும் வேலை என்ற முழக்கத்தை முன் வைத்தது. அதெப்படி சாத்தியம் என்ற கேள்வி அமைப்பை நோக்கி துரிதகதியில் ஏவப்பட்டது. சலைக்காமல் பதில் சொன்னது, அதற்கான கொள்கை உருவாக்குவது. சமூகத்தை சமப்படுத்துவது. எதுவும் அற்ற தொழிலாளர் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு நிலம் வழங்குவது, சமூகபாதுகாப்பை உறுதி செய்வது, என அடுக்கிய போது, அப்படியானால், இப்போது இல்லை, என எகத்தாளம் பேசினர். டி.ஒய்.எப்.ஐ விடவில்லை. படித்த, படிக்காத, திறன் பெற்ற, திறன் குறைந்த, ஆண் அல்லது பெண் என்ற பாகுபாடுகளை கடந்து, பெரும் பிரச்சாரத்தை முன் எடுத்து போராடி வருகிறது.

 

மாநிலப் பிரச்சாரங்கள்:

 

1978 குமரி, மற்றும் கோவை ஆகிய இரு முனைகளில் இருந்து தோழர்கள் என். நன்மாறன் மற்றும் கே.சி.கருணாகரன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்த சைக்கிள் பிரச்சாரம், எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த அரசை அசைத்தது. வேலை இல்லா கால நிவாரணம் முதல் முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் ஆனது. அடுத்து கோவையில் முடிந்த 6 வது மாநிலமாநாட்டு அறைகூவல் படி, 1992 ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு பயணம் அதே குமரி, மற்றும் கோவையில் இருந்து, தோழர்கள் டி.ரவீந்திரன் மற்றும் ஏ. பாக்கியம் தலைமையில் துவங்கியது. பழனியில் இருந்து என். பாண்டி தலைமையிலும், தேனியில் இருந்து டி.ஏ. இளங்கோவன் தலைமையிலும் துணை பிரச்சாரங்களும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் ராமசந்திரா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற போராட்டம் வீரியமாக நடந்து, கைது, அடக்குமுறைகள் அரங்கேறி வந்த நேரம். சைக்கிள் பிரச்சாரப் பயணம், போராட்ட அனலை காட்டு தீயாக பரவ செய்தது. தமிழக அரசியல் கட்சிகள் ஒரு சேர பந்த் போராட்டம் நடத்தும் அளவிற்கான அழுத்தத்தை, மாணவர் போராட்டமும், வாலிபர் பிரச்சாரமும் அளித்தது என்றால் மிகையல்ல. 

 

1999 தமிழ்நாட்டில் தாராளமய பொருளாதரக் கொள்கையின் தாக்கம் தீவிரமாகி, தனியார்மயம், வேலைக்கு ஆள் எடுக்க தடை, போன்ற தாக்குதல் அரங்கேறி, சாதிய மோதல்களையும் விசிறி விட்ட, முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலோங்கிய காலமாக இருந்தது. கோவை மாநகரில் மத மோதல்கள் குண்டுகளாக வெடித்து கொண்டிருந்தது. இளைஞர்களின் வேலைக்கான பிழைப்பு  சாதனங்களை, முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் அரசுகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை, தங்களின் சாதிய, மத பெருமிதங்களுக்குள் சிறைப்படுத்தும் நதிகளை செய்தது. அனுமதிக்க முடியாது என்ற முழக்கத்துடன், நான்கு எல்லைகளில் இருந்து, இருசக்கர வாகன பிரச்சாரத்தை வாலிபர் இயக்கம் திருச்சியை நோக்கி அணிவகுக்க செய்தது. தோழர்கள் என். குணகேகரன், கோவையிலிருந்தும், எஸ்.கே. மகேந்திரன் குமரியில் இருந்தும், சி. திருவேட்டை சென்னையில் இருந்தும், இ.சங்கர் காஞ்சிபுரத்தில் இருந்தும் தலைமையேற்றனர். 

 

2008 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் விழுப்புரம் நகரில் டி.ஒய்.எப்.ஐ யின் 12 வது மாநில மாநாடு, எழுச்சியோடு நடந்தது. டிசம்பர் மாதம் தமிழகத்தில் வேலைக்கான பிரச்சாரம் மற்றும் போராட்ட நடவடிக்கைகள் என அறைகூவல் அமைந்தது. அக்டோபரில் உலக முதலாளித்துவம், திவாலாகி, அமெரிக்கா அம்பலப் பட்டு நின்றது. முதலாளித்துவம் சமூக கொடுமைகளுக்கு தீர்வல்ல, என்பதை வாலிபர் இயக்கம் தீர்க்கமாக, உலகம் முழுவதும் முன் வைத்து போராடிய காலம். திவாலான வங்கி க்கு மாற்று, பொதுத்துறை வங்கிகள், திவாலான காப்பீடு நிறுவனங்களுக்கு மாற்று பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் என்பதை அறுதியிட்டு பேசும் வாய்ப்புகள் அதிகரித்தது. இந்தியாவில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வேலைக்கு மாநில அரசுகளும் ஆள் எடுக்க கூடாது, நிதி சிக்கனம் முக்கியம், என சுற்றறிக்கை அனுப்பி, இளைஞர்களின் கனவுகளை சிதைத்து கொண்டிருந்தது. இந்த பின்னணியில் டி.ஒய்.எப்.ஐ மாநாட்டு அறைகூவல், சைக்கிள் பிரச்சாரமாக ஆர்ப்பரித்தது. குமரி, கோவை, ராமேஸ்வரம் ஆகிய மூன்று எல்லைகளில் இருந்து சென்னை நோக்கி 14 நாள்கள் பிரச்சாரம், ஒவ்வொரு குழுவும் 1000 கி.மீ என பயணித்தது. தோழர்கள், எஸ். கண்ணன், எஸ்.ஜி. ரமேஷ் பாபு, ஆர். வேல்முருகன் ஆகியோர் தலைமையேற்றனர். நிறைவு நாள்களில் அன்றைய முதல்வர் கலைஞர், முரசொலியில் பிரச்சாரத்திற்கு விளக்கமளித்து, குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

அதைத் தொடர்ந்து 2012 ல் எட்டு எல்லைகளில் இருந்து திருச்சியை நோக்கி நடைபயண பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை, புதுச்சேரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோவை, குமரி, தேனி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து தோழர்கள் ஆர். வேல்முருகன், எஸ். முத்துக்கண்ணன், எஸ். பாலா, இல. சண்முகசுந்தரம், எம். செந்தில், பிரபாகரன் மற்றும் ஏ.ஆர்.பாபு, ஸ்டாலின் ஆகிய தோழர்கள் தலைமையேற்று வழிநடத்தினர். 

 

1994 ல் ஜெயலிதா ஆட்சி வேலையில்லா கால நிவாரணத்தை ரத்து செய்து. தொடர்ந்து 12 ஆண்டுகள் நடத்திய போராட்டம், 2006 ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தார். , எஸ்.கே. மகேந்திரன், எஸ். கண்ணன், டி.பிரகாஷ், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மற்றும் ஆர்.வேல் முருகன் ஆகியோர், நேரில் சந்தித்து விடுத்த வேண்டுகோளின் போது, அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் இது இடம் பெற ஆவண செய்கிறேன் என்றார். அதுபடி அறிவிப்பும் வந்தது. 

 

பதட்டங்களைத் தனித்த பிரச்சாரங்கள்:

 

எல்லாக்  காலங்களிலும், சாதியின் பெயரில் ஒருவரை ஒடுக்குவது, வன்முறை செய்யும் அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிப்பது, மதரீதியிலான வன்முறை, அபகரிப்பு, பாலியல் பலாத்காரம், என சமூகத்தை, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு, ஆதிக்கம் செலுத்துகிறது. சமூகத்தை பிரித்து வைத்து, மூலதனத்தை குவித்து கொண்ட நிலபிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்பு, இளைஞர்களின் வாழ்வை, கனவை, லட்சியத்தை அவமதிக்கிறது. இல்லை விடமாட்டோம், எங்கள் உரிமை, கல்வி பெறுவது, வேலை பெறுவது, சமூக அந்தஸ்த்தை, மனித உரிமையை பாதுகாத்துக் கொள்வது, என்பதை நிலைநாட்ட தீவிர பங்களிப்பை இளைஞர் இயக்கங்கள் மேற்கொண்டுள்ளன. அந்த பணியை தமிழக வாலிபர் இயக்கமும் தொடர்ந்து முன் எடுத்து வருகிறது. 

 

சேதுகால்வாய் திட்டம் 2005 ல் துவங்கிய போது, அதை நீதிமன்றத்தின் துணை கொண்டு நிறுத்தியது ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவாரக் கூட்டம். ராமர் பாலம் என, அறிவியலுக்கு புறம்பாக முன்வைத்தது ஆர்.எஸ்.எஸ். நாசா ஆய்வுகூடப் புகைபடங்கள் என மக்களை திசைதிருப்பிய போது, டி.ஒய்.எப்.ஐ ராமேஸ்வரத்தை மையப் படுத்தி, ஒரு பிரச்சாரத்தை நடத்தியது. 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சைக்கிள் மற்றம் வேன் என பிரச்சாரம் அமைந்தது. தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை மையப் படுத்தி எழுச்சி மிக்க ஒன்றாக பிரச்சாரம் அமைந்தது. தோழர்கள் எஸ். கே. மகேந்திரன், எஸ். கண்ணன், எஸ்.ஜி. ரமேஷ் பாபு மற்றும் ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமையில், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் நோக்கியதாகவும், ராமேஸ்வரத்தில் எழுச்சி மிக்க பொதுக்கூட்டத்துடனும் நிறைவு பெற்றது.



அதேபோல் 1995 ல் கொடியங்குளம் தாக்குதல், தென் மாவட்டங்களில் மோதல் அதிகரிப்பு உருவான போது, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தார் துவங்கி, நெல்லை மாநகரம் வரை நடைபயணப் பிரச்சாரம் குறிப்பிடத்தக்கது. அடுத்து, 1998 சாதிக் கலவரங்களுக்கும், தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரிப்பிற்கும், வேலையின்மையும், ஆதிக்க உணர்வுகளும் காரணம் என்பதை டி.ஒய்.எப்.ஐ முன் வைத்தது. அது போலவே நீதிபதி மோகன் தலைமையிலான ஆய்வு குழுவும் குறிப்பிட்டது. மேற்படி சமூக ஒடுக்குமுறை கைவிடப்பட்டு ஜனநாயக எண்ணம் வளரவும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் சமூக நடவடிக்கை தேவை என்பதை முன் வைத்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டக்களில் நடந்த மேற்படி சமூக பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தது. ஶ்ரீவில்லிப்புத்தூரில்  எழுச்சி மிக்க நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர்கள் எஸ்.கே.மகேந்திரன், என். குணசேகரன், கே. சாமுவேல் ராஜ், . விக்கிரமன், கே. பி.பெருமாள், சேவியர், கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் தலைமையேற்றனர். 

 

வேண்டாம் சாதிய மோதல், வேண்டும் வேலை என்ற முழக்கத்துடன், 1998 நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி, நடந்த சாதிய மோதலை கட்டுப்படுத்தவும், தனி தொகுதி, தலித் மக்களுக்கான வாக்குரிமை ஆகியவற்றை பாதுகாக்கவுமான பிரச்சாரம் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாவட்ட பிரச்சனை என கருதாமல் சமூக பிரச்சனையில் வேலையின்மை உருவாக்கும் தாக்கம் என்பதை மைய கருவாக கொண்டு பிரச்சாரம், வெற்றி பெற்றது. தோழர்கள், என். குணசேகரன், எஸ். கே. மகேந்திரன், எம்.ஜெயசீலன், எஸ். ஜி. ரமேஷ் பாபு, ஆர். லெனின் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று வழிநடத்தினர். 

 

அதேபோல் 1998 ல், நாடாளுமன்றத் தேர்தல், மதமோதல், குண்டு வெடிப்பு காரணங்களால் கோவை பெரும் பதட்டத்திற்குள்ளானது. வணிகம், தொழில் அனைத்தும் முடங்கி வேலைவாய்ப்பு பெரும் கேள்விக்குரியதானது. கேரளம், தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து வேலைக்காக கோவையில் அடைக்கலம் புகுந்தோர் அதிகம். ஆனால் இந்துத்துவ சங் பரிவார் அமைப்புகளின் பிரச்சாரம், பெரும் பாதிப்பை உருவாக்கியது. அமைதியான, மோதலற்ற, வேலை மற்றும் வளர்ச்சிக்கான  கோவை, என்ற முழக்கத்துடன் நடைபயணம் மாநகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. தோழர்கள் என். குணசேகரன், யு.கே. சிவஞானம், வி.ராமமூர்த்தி, ஆர். வேலுச்சாமி ஆகியோர் வழிநடத்தினர். 

 

கடல் அலையுடன் போட்டியிட்ட சி.சி.ஏ.யு: 

 

1990 பிப்ரவரியில் உருவான அமைப்பு சி.சி.ஏ.யு ( Campaign Committee Against Unemployment) வேலையின்மைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு. தோழர். ஆர். உமாநாத் அதன் கன்வீனர் பொறுப்பை ஏற்றார். மூன்று மாத ஆயத்த பணிகளைத் தொடர்ந்து நான்கு எல்லைகளில் இருந்து வாகன பிரச்சாரப் பயணம் துவங்கியது. தோழர்கள் கே.ரமணி நீலகிரி குழுவிற்கும், தோழர். ஜி. வீரையன் ராமேஸ்வரம் குழுவிற்கும், தோழர். டி.கே.ரங்கராஜன் ஓசூரில் இருந்து புறப்பட்ட குழுவிற்கும், தோழர். ஏ.கே. பத்மனாபன் குமரியில் துவங்கிய குழுவிற்கும் தலைமையேற்றனர். 

 

இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், காப்பீடு ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சம்மேளனம், ஆசிரியர் அமைப்புகள் என பத்து அமைப்புகள் கூட்டாக முன்னெடுத்த மாபெரும் இயக்கம். தோழர். சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய பிரசுரம் பல லட்சம் விற்பனையானது. நிறைவு நாளான ஜூன் 9, மாலை சென்னை அண்ணாசாலை காயிதேமில்லத் பெண்கள் கல்லூரி வாயிலில் இருந்து காட்டாறு போல் அணிவகுத்த பேரணியும், கடற்கரையில் அலைகளுடன் போட்டியிட்ட எழுச்சி மிக்க பொதுக்கூட்டமும், மறக்க முடியாதது. 

 

வேலையின்மை முதலாளித்துவத்திற்கு மூலதனத்தை குவிக்கவும், மேலும் மேலும் லாபம் ஈட்டவும் பயன்படும். வேலை குடும்பத்தை நாகரீகமாக வழிநடத்த உதவும் பிழைப்பு சாதனம். அதை எல்லாக் காலத்திலும் பறிக்கவே ஆட்சியாளரும், முதலாளித்துவம் முயற்சிக்கிறது. எங்கள் உரிமை எங்கள் பிழைப்பு என்பதை முன் வைத்தே சுரண்டுவோருக்கு எதிராக சமூகம் போராடி வருகிறது. இன்று சூழலும், காலமும் மாறி இருக்கலாம். சுரண்டல் நீடிக்க தான் செய்கிறது. வேலையின்மை அதற்கு பெரும் தீனியாய் அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகளும், சாதிய மேலாதிக்க உணர்வுகளும், வேலையில்லா இளைஞர்களை, அடியாள் பட்டாளமாகவே கையாளுகிறது. ஒன்றுபட்ட போராட்டம், இந்த சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைகளை வீழ்த்திடும் வலுவான ஆயுதம் என்பதை, உணர்த்தி வருகிறோம். மீண்டும் உணர்த்தும் வகையில் டி.ஒய்.எப்.ஐ நடத்த இருக்கும், திருச்சியை நோக்கி, சென்னை, குமரி, கோவை, புதுச்சேரி ஆகிய நான்கு எல்லைகளில் இருந்து, ஏப்ரல் 21 முதல் மே 1 வரையான சைக்கிள் பிரச்சாரம் வெல்லட்டும்.  நாம் நடத்துவது பயணங்கள் அல்ல… தலைமுறைகள் பின் தொடர்வதற்கான அழுத்தமான தடங்கள்….

 வெறும் நிகழ்வல்ல… போராட்டங்களில் துளிர்த்த மரம்…

எஸ். கண்ணன்


நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரஷ்ய நாவல் தாய், மார்க்சீம் கார்கி எழுதியது. தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் உற்சாகமாகி, தமிழில் 2000 ஆண்டு துவக்கத்தில் கவிதையாக படைத்த நூல். காரணம் கொடிய சுரண்டல்கள் அரங்கேறிய ஆலைகளில், நீதி கேட்கும் போராட்டங்களும், அதற்கு காராணமானவர்கள் தண்டிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது வாடிக்கையாக மாறிய சூழல், நாவலில் இடம் பெறும் அந்த நாவலின் கதாநாயகன் பாவெல், அவன் தாய் பெலகய்யா நீலவ்னா, இருவரின் பணியும், புரட்சிகர செயல்பாட்டாளர்களுக்கு மிகுந்த உணர்ச்சியையும், வேகத்தையும், அறிவுப் பூர்வமான துணிவையும் அளித்ததாக கதை போக்கு இருக்கும். 


எத்தனையோ தாய்கள் தங்கள் மகன் அல்லது மகள் நடத்தும் போராட்டங்களில் உளவியல் ரீதியில் தாக்கம் ஏற்படுத்துவதுடன், போராடுவதற்கான திடத்தை வழங்கி வருகின்றனர். அண்மையில் அமெரிக்க நாட்டின் பெரிய வணிக நிறுவனம் அமேசான், அதன் முதலாளி ஜெப் பெசோ வளிமண்டலத்தை 11 நிமிடங்களில் சுற்றுலா பயணியாக சுற்றி வந்தவர். அதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டவர். அதைத் தொடர்ந்து வளிமண்டல சுற்றுலாவை நடத்தும் பெரும் நிறுவனமாக மாறியுள்ளது. கொரானா காலத்தில் பல லட்சம் கோடி லாபம் ஈட்டிய நிறுவனம் அமேசான். ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதல்பெரும் நிறுவனமாக, உலகெங்கும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது.  16, 08,000 தொழிலாளர்கள் இங்கு பணி புரிகின்றனர். 


இங்கு அமேசான் தொழிலாளர் சங்கம் (Amazon Labour Union) உருவானதும், அதை ஒடுக்க நிறுவனம் முயற்சித்ததும் பெரும் செய்தியாக ஓராண்டுக்கு மேல் வலம் வந்தது. தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்த ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கம் போல் முதலாளித்துவம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்றியது. தொழிற்சங்க ஆதரவு, எதிர்ப்பு என்ற சிந்தனையை, தொழிலாளர்களிடம் விதைத்தது. கருப்பு, வெள்ளை நிறவெறி உள்ளிட்டு ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அதன் காரணமாக ஜே.எப்.கே.8 என்ற ஒரு இடத்தில் உள்ள குடோனை மையப் படுத்தி செயல்படும் தொழிலாளர்களுக்குள் நடத்திய வாக்கெடுப்பில், சுமார் 6000 தொழிலாளர்களில், 4785 தொழிலாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவர்களில் 2654 பேர் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நெடிய போராட்டத்தின் வெற்றியாக வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்றுள்ளது. 


இதன் முக்கிய காரணகர்த்தாவான கிரிஸ்து ஸ்மால் என்ற இளைஞர். அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டு, மன உலைச்சலுக்கு ஆளானார். அவரின் மன உலைச்சலுக்கு ஆறுதல் தந்து, போராடும் ஊக்கத்தை அளித்தவர், அவர் தாய். தாய் நாவல் நூறாண்டுகளை கடந்து வேறு தளத்தில், வேறு தொழிலில், வேறு அடையாளத்தில் பயணிப்பதைக் காண முடிகிறது. 


ஸ்டார் பக்ஸ் காபி ஷாப்:


மறைந்த தோழர். வி.பி.சிந்தன் ஓட்டல் தொழிலாளர்களிடம் பேசிய காணொளிக் காட்சியை அண்மையில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேசிய ஐந்து நிமிடங்களில் ஓட்டல் தொழிலாளர்களை சென்னை நகரில், அணி திரட்டிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறையும், தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய போராட்ட களமும் ஓட்டல் தொழிலாளர்களை தொடர்ந்து அணி திரட்ட தடையாக இருந்தது என்பதை பதிவு செய்கிறார். 


அமெரிக்காவின் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும், 32660 கடைகளை கொண்ட பெரும் காபி மற்றும் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமாக உள்ளது. 3,80,000 ஊழியர்கள் உலகம் முழுவதும் பணி புரிகின்றனர். இந்தியாவில் 1200 ஊழியர்கள் பணிபுரிவதாக விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிறுவனத்திலும் தொழிற்சங்கம் துவங்கி பெரும் அடக்கு முறையை சம்மந்தப் பட்ட தொழிலாளர்கள் எதிர் கொண்டு வருகின்றனர். 


அமெரிக்காவில் கடந்த டிசம்பர் முதல் தொழிற்சங்கம் அமைக்கவும் அதை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டு, தொழிலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். 1965 காலத்தில் தொழிற்சங்கம் வேண்டும், அது அங்கீகரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கைகளுக்காக, 68 சதம் பேர் அன்று போராடினார்கள். இன்று அதே கோரிக்கைக்காக 77 சதம் போராடுவதாக நிலை உள்ளது, என்று வரலாற்று பேராசிரியர் ஜோசப் மெக்கார்ட்டின், ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் இது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். புதிய தலைமுறை இளைஞர்கள் நாங்கள் U (U for Union) விற்குபின் அணிவகுப்போம் என்கின்றனர். இந்த அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் பெண்கள் என்பதும் கவனிக்க தக்கது. ஏனென்றால் 70 சதம் தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர். 


ஒரு மணி நேரத்திற்கு 17 அமெரிக்க டாலர் ஊதியம் (1258 ரூபாய்) பல காப்பீடு, கல்வி உதவி போன்றவை இருந்தாலும், தொழிற்சங்கம் அவசியம் எனக் கூறுகின்றனர். நிரந்தர வேலை இல்லை, பல நிறுவனங்களில் பணி புரியும் உதிரி பாட்டாளிகளாக மற்றப் பட்டு இருக்கிறோம். இவை மிகுந்த மன உலைச்சல் தருவதாக உள்ளது எனக் கூறுகின்றனர். நிதி மற்றும் வாழ்க்கை உத்தரவாதம் பாதுகாப்பற்றதாக உள்ளது என்கின்றனர். என்னுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை. வேலைக்கும் வீட்டிற்கும் சென்று வருகிறேன், என லியோ ஹெர்னாண்டஸ் என்ற இளம் தொழிலாளி கூறுகிறார். 


நிறுவனம் தொழிற்சங்கமாக ஊழியர்கள் ஒன்று சேர்வதை விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை துரத்தும் அவர்களின் எண்ணம் ஈடேறாமல் போகும். எங்களை ஜனநாயக ரீதியில் நடத்தினாலும் அல்லது நல்ல ஊதியம் அளித்தாலும் அது நிரந்தரமல்ல என்பது பிரச்சனை தானே, என்கிறார். நியான் பேனட் என்ற 22 வயது பெண் ஊழியர். இது தான் இன்றைய மூலதன சுரண்டல் அளிக்கும் வேலை வாய்ப்பாக உள்ளது. 


ஏன் மேற்படி இரு தொழிற்சங்கங்களும் கொண்டாட படுகின்றன?


தமிழகத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு ஆலைகளில் சங்கம் வைத்த போதும், இது போன்ற பாதிப்புகளை நமது தொழிலாளர்கள் சந்தித்துள்ளனர். அடக்கு முறைக்கும், வேலைநீக்கத்திற்கும் ஆளாகி உள்ளனர். நாம்  வெற்றியும் பெற்றுள்ளோம். இது நிலபிரபுத்துவ ஆட்சியாளர்களையும் நிர்வாகங்களையும் கொண்ட நாடு. நாம் சந்தித்த அடக்குமுறை இந்த அளவு வெளி உலகில் பேசப் படவில்லையோ என கருத தோன்றுகிறது. 


ஆனால் தனி மனித உரிமை, இன்னும் நாகரீக சமூகம் என பல வகையில் அமெரிக்க அரசு சொல்லிக் கொள்கிறது. அங்குள்ள உரிமைகள் பெரிய விஷயமாக நமது நாட்டில் பேசப்பட்டாலும், அங்கு தொழிலாளர் உரிமை பறி போவது அநாகரீகத்தின் உச்சம் தானே என்பதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. சுதந்திர தேவியின் சிலை நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதியசங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு மணி நேர வேலைக்கான மே மாத போராட்டம், அடக்க பட்ட அதே 1886 ஆண்டு, அக்டோபர் மாதம் சுதந்திர தேவி சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது அன்றைய அமெரிக்காவின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அது போல் தான் இன்றும் ஒரு புறம் அனைத்து உரிமைகளும் உள்ளது. மறுபுறம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட மறுக்கப் படுவதும், ஒடுக்கப்படுவதும், வேலை நீக்கம் செய்யப் படுவதும் அமெரிக்காவில் அரங்கேறுகிறது. இதை அம்பலப் படுத்தும் போராட்டங்களாக அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைக்கும் பணி பார்க்கப் படுகிறது.


இது உலகம் முழுவதும் நடைபெறும் கருத்து வெளிப்பாடுகளாக பார்க்க முடியும். இந்திய ஆட்சியாளர்களின் வளர்ச்சி முழக்கம், இரட்டைத் தன்மை கொண்டது. அது முதலாளிகளின் வளர்ச்சிக்கானது என்பது அம்பலபட்டு உள்ளது. சமூகத்தை வளர்த்தெடுத்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வளர்ச்சி, என தொழிற்சங்க போராட்டங்கள் நிருபித்துள்ளன. அதேபோல் திராவிட மாடல் என்ற வியாக்கியானங்களும் ஒரு சில சமூக போராட்டங்களை பாதுகாத்தாலும், ஒரு எல்லையில் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கருவியாகவே இருக்கும். முதலாளித்துவ உழைப்பு சுரண்டலை நியாய படுத்தும் வகையிலேயே, புதிய முழக்கங்கள், நாகரீகமான சொல்லாடல்கள் கையாள படுகின்றன. 


மற்றொரு புறம் மூலதன குவிப்பு, நிரந்தரமற்ற வேலை வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆலைகளில் வேலை வாய்ப்பை குறைத்து காண்ட் ராக்ட் போன்ற உதிரி பாட்டாளி வர்க்க எண்ணிக்கையை அதிகப் படுத்துகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களாக படித்த நவீன தொழிலாளர்கள் உள்ளனர். யார் முதலாளி? எங்கிருக்கிறார்? நாம் தனித்தனியே வேலை செய்கிறோம், குறைவான எண்ணிக்கையில் இங்கு உள்ளோம் போன்ற கருத்துக்களால், அணிசேர்வது தள்ளிப் போகும் நிலையை அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் போராட்டங்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறது. 


முதலாளிகளால் சிதறடிக்கப் பட்ட தொழிலாளி வர்க்கம், முதலாளிகளின் அடக்குமுறைகளால் ஒன்று சேர்க்கப் படும் என்ற கூற்று உண்மையாகி உள்ளது. அமேசான் தொழிலாளர்கள் மிக நீண்ட போராட்டத்தை நடத்தி உள்ளனர். அவர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்ட போது, உலகம் முழுவதும் அமேசான் மூலம் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, நிறுவனத்திற்கு நெருக்கடியை உருவாக்கியது, போன்ற பல போராட்டங்கள் நமக்கு ஒரு பாடமாக உள்ளன. வெறும் தொழிற்சங்கம் அமைக்கும் நிகழ்வல்ல. போராட்டங்களில் துளிர்த்த மரம், தொழிலாளி வர்க்கம் கொண்டாடுவோம்.