புதன், 27 ஏப்ரல், 2022

 நவீன கொத்தடிமை முறை!!! ஒரு காட்சியும், சில அடையாளங்களும்…

எஸ். கண்ணன்

 

2007 ஆம் ஆண்டு, மன்னார்குடி நகரத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளம் பெண்களுக்கான சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டின் தலைப்பு, சுமங்கலி திட்டம் என்ற பெயரில் நடைபெறும் உழைப்பு சுரண்டலுக்கு எதிரானது ஆகும். இன்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என பிரிந்து இருந்தாலும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் ஆகும். அதேபோல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களையும் சேர்த்து கொள்ளலாம். இந்த பகுதி நெல் விளையும், செழிப்பான விவசாயம் கொண்டது ஆகும். இதற்கு நேர் எதிரானது, கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மாட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல்லின் ஒரு பகுதி. இந்தமாவட்டங்களில் பஞ்சாலை தொழில் நூற்றாண்டு காலமாக வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பை கொண்டுள்ளது. 

 

விவசாய பாதிப்பு, இளம் தலைமுறைக்கு விவசாய வேலைகளில் நம்பிக்கை இன்மை உருவாக்கியது. மற்றொரு புறம் கிராமத்தில் சாதிய மேலாதிக்கம், சமூக அழுத்தம் சேர்ந்து வேறு இடங்களுக்கு புலம் பெயர இளைஞர்களை தூண்டியது. இளம் பெண்களுக்கு இருந்த சமூக கொடுமைகளான வரதட்சனை போன்ற பிரச்சனைகள் எல்லாம் சேர்ந்து மூலதனத்திற்கு, உழைப்பு படையை அணி திரட்ட உதவியது என்றால் மிகையல்ல. 

 

நெற்களஞ்சியத்திற்கும், தென் இந்தியாவின் மான்செஸ்ட்டருக்கும் மையமான நகரமாக திருச்சி இருக்கிறது. திருச்சி பேருந்து நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பகுதி பேருந்துகள் வந்து நிற்கு இடத்தில் இருந்து, கோவை,கரூர், திருப்பூர் செல்லும் பேருந்துகளை நோக்கி இளம் பெண்கள் அணி வகுத்து செல்வர். இவர்களை ஏஜெண்டுகள் சிலர் அழைத்து செல்வதைக் காண முடியும். பல இளம் பெண்கள் பேருந்து நிலையத்தில் குமுறி அழும் கொடுமைகளும் நிகழும். வாழ்விழந்த பெண்கள் சூழ்ந்து நின்று, வலுவற்ற அந்த இளம் பெண்ணை தேற்றுவதையும் காணமுடியும். 

 

இந்த பெண்கள் மூன்றாண்டு காலம் பணி அமர்த்தப்படுவர். வாரம் ரூ 500 கூலி தரப்பட்டதாக அன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டி.ஒய்.எப்.ஐ அமைப்பும் இந்த தகவல்களை திரட்டியது. மூன்றாண்டு முடிவில் ரூ30 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை மொத்தமாக அளிக்கப்பட்டு அனுப்பப்படுவர். இதன் மூலம் வேலை வாய்ப்பு துண்டிக்கப்படும். அடுத்து புதிய நபர் இந்த வேலையை பெறுவார். இது ஒரு தொடர் ஓட்டம் போல் இயங்கி கொண்டிருக்கிறது. 

 

இந்த உழைப்பு சுரண்டலை எதிர்த்து டி.ஒய்.எப்.ஐ, சி.ஐ.டி.யு, அனைத்திந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராட்டங்களை கூட்டாக நடத்தியது உண்டு. பல தன்னார்வ குழுக்களும் இந்த போராட்டங்களில் ஈடுபட்டன. அக்பர் அலி எனும் நீதியரசர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டு, குறைந்த பட்ச கூலி, பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது. விளைவு, கேம்ப் கூலி எனும் நடைமுறை படிப்படியாக குறைந்தது. 


இன்று வட மாநிலத்தவர்:

 

உலகம் இன்று சுருங்கி விட்டதாக பலர் கூறுவதை யதார்த்தமாக காண முடிகிறது. உலகில் பலநாடுகளில் முதலாளிகளின் லாப குவிப்பிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள், பெரும் பங்களிப்பை செய்கின்றனர். அமெரிக்காவில் கருப்பர்கள் எனக் கொண்டால், மேற்கு ஆசியாவின் பல நாடுகளில் நம் தமிழர்கள் உள்ளிட்டு இந்தியர்கள் குறைந்த கூலிக்கான உழைப்பு படையாக கருதப் படுகின்றனர். 

 

கேம்ப் கூலி அல்லது நவீன கொத்தடிமை முறை ஒருவழியாக கட்டுக்குள் வந்தாலும், அது வேறு வடிவத்தில் வேறு நபர்கள் மூலம் அவதரிக்கும் நிலையை, மூலதனம் உருவாக்கி வருகிறது. போக்குவரத்து வளர்ச்சி ஒரு ஊரில் இருந்து பல ஊர்களை சுற்றி பார்க்க கூடிய வசதிகளை மட்டும் உருவாக்குவதில்லை. மாறாக மூலதனத்திற்கான மூலப்பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லவும் பயன் படுகிறது. நிலக்கரியை போல், பருத்தியை போல், சிமெண்ட்டைப் போல், இரும்பை போல், இன்று மனிதர்களும் மூலப்பொருள்களாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். 

 

ஹவுராவில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் பயணித்த போது, மேற்படி மூலப்பொருள்களுகளுடன் பயணிக்கிறோம் என்ற உணர்வு தோன்றவில்லை. ஆனால் ரயில்  நள்ளிரவு நேரம் திருச்சியை அடைந்த போது, அதை உணர முடிந்தது. ரயில் நிலையத்தின் வெளியே ஈரோடு, கரூர், கோவை செல்லும் அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததும், அதில், ரயிலில் வந்த அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வந்த இளம் தொழிலாளர் படை அந்த வாகனங்களில் ஏரி சென்றதும், மேற்படி உணர்தலை வலி மிகுந்ததாக மாற்றியது.  

 

அதோடு முடியவில்லை. ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கிலான ஆணும், பெண்ணுமான இளம் உழைப்பு படை, திருச்சி பேருந்து நிலையத்தை நோக்கி பேரணியாக அணி வகுத்தனர். அங்கிருந்த தேநீர் கடை அல்லது ஆட்டோ போன்ற வாகன ஓட்டிகள் யாரும் இதை பொருட்டாக கருதவில்லை. அதன் பின் அந்த ஊர்வலத்தில் சென்ற இளைஞருடன் பேசிய போது தான் தெரிந்தது. இது தினமும் ஹவுராவில் இருந்து திருச்சி வரும் ரயிலில் இருந்து வரும் பயணிகளின் அன்றாட நிகழ்வு என்று. வேலை மட்டும் பழகிக் கொள்வதில்லை. மக்கள் காட்சிகளுக்கும் பழகிக் கொள்கின்றனர், என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

 

தமிழகத்தில் இன்று வடமாநில தொழிலாளர்கள்::

 

சில ஆண்டுகளுக்கு முன் விமர்சனத்திற்கு உள்ளான சுமங்கலித் திட்டம் இல்லாமல் போனது. ஆனால் புதிய கேம்ப் கூலி முறை வடகிழக்கு மாநில தொழிலாளர்களால் தமிழகத்தில் அரங்கேற்றப்படுகிறது. சுரண்டல் மிகுந்த சமூகத்தில், வலி மிகுந்த வாழ்க்கையை வாழும் போராட்டமாக, புலம் பெயர்தல் உள்ளதை காணமுடியும். விவசாய தொழிலாளியாக சுரண்டப்படும் போது, ஏற்படும் அதிருப்தியை, எதிர்க்கும் வடிவமாக புலம் பெயர்ந்து ஆலைகளில் காண்ட் ராக்ட், பயிற்சி போன்ற தொழிலாளர்களாக பணியாற்றுவதில் ஒரு சமாதானம் கிடைக்கிறது. இதை மூலதனம் பயன் படுத்தி கொள்கிறது. தனக்கான மூலதன திரட்சிக்கு இத்தகைய உழைப்பு சுரண்டலைப் பயன்படுத்தி கொள்கிறது. 

 

உள்ளூர் தொழிலாளிக்கு நியாயமான ஊதியம் வழங்க மறுக்கும் தொழிலதிபர், புலம் பெயர் தொழிலாளர் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுகிறார். சட்டபடியான வேலைநேரம், குறைந்த பட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற எதுவும் அற்ற தொழிலாளர்களை காலம் தோறும் முதலாளித்துவம் பயன்படுத்தி கொள்கிறது. நிலமற்ற மக்கள், காடுகளுக்கு உள்ளிருந்து வெளியேற்றப் படும் பழங்குடியினர் திறனற்ற தொழிலாளர்கள் அல்ல. கேள்வி கேட்கும் திறனற்றவர்களாக, பேச்சற்றவர்களாக, குரல் தொலைத்தவர்களாக, புலம் பெயர்ந்து, அடைக்கலம் தேடிய இடத்தில் வாழ்வது, மூலதனத்திற்கு உகந்த ஒன்றாக உள்ளது. 

 

இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் என்ற கட்டுரையை, ஏங்கெல்ஸ் எழுதினார். விவசாயம் பொய்த்து போன போது, நிலமற்ற தொழிலாளர்கள் எப்படி பஞ்சாலைகளில் உரிஞ்சப்பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி இருப்பார். அதை இன்று நமது மாநிலத்தில் காண முடிகிறது. அயர்லாந்து தொழிலாளர்களை, பிரிட்டிஷ் முதலாளிகள் சுரண்டியது, பின்னர் இந்தியா போன்ற நாடுகளின் தொழிலாளர்களையும் சுரண்டும் மூலதனமாக வளர்ச்சி பெற்றதைப் போலவே, இன்று தமிழக கிராமப் புறத் தொழிலாளர்களை சுரண்டிய ஆலைகளின் வளர்ச்சி, பிற மாநில தொழிலாளர்களைச் சுரண்டும் பெரும் ஆலைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் பஞ்சாலை தொழில் படுத்துக் கிடக்கிறது, என்ற ஒப்பாரி ஓயவில்லை. தொழில் முதலாளிகளின் முகாரி ராகம், நம் புலம்பெயர் தொழிலாளர்களின் வலியை, இழப்பை, ஆதரவற்ற நிலையை நிராகரிக்க முயல்கிறது. இதை அனுமதிக்க முடியாது. எதிர்த்த போராட்டங்கள் பல வகையில் அதிகரித்து வருகிறது. வரும் மார்ச் 28,29 தேதிகளிலும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்த அறைகூவலை விடுத்துள்ளன. ஜனநாயக அமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

 

மாநிலத்திற்குள்ளேயே இடம் பெயர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்த இளம் பெண்கள் மீது நடத்தபட்ட சுரண்டலை பொருத்து கொள்ள முடியாமல் போராடிய அனுபவத்தை தமிழகம் கண்டது. குறைந்த சம்பளம், தங்கும் விடுதி, உணவு ஆகியவற்றில் நடத்தப்பட்ட கொள்ளையை எதிர்த்த போராட்டமாக அது இருந்தது. 

 

உள்ளூர் தொழிலாளர்களின் கூலி அதிகம், அதிக நேரம் உழைப்பதில்லை என்பது முதலாளிகளின் மற்றுமொரு வாதம். இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தான், மோடி தலைமையிலான மோடி அரசு, சட்டத்திருத்தங்களை மேற்கொள்கிறது. கார்ப்பரேட் பெரு நிறுவன மற்றும் அரசுகளின் கூட்டு கொள்ளை தொழிலாளர்களை சுரண்டி மேலும் மூலதனமாக கொழுத்து வருவதைக் காண முடியும். இந்த கொடுமையின் வேகத்தை கட்டுப்படுத்தவே, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை வலியுறுத்துகின்றன. வேலை நேரம் உயர்த்தப் படக் கூடாது என உறுதி படத் தெரிவிக்கின்றன. இதை கோரிக்கைகளாக, முழக்கங்களாக சொல்லும் போது அரசுகளும், முதலாளிகளும் கேட்பதில்லை, என்பதாலேயே, வேலைநிறுத்தம் என்ற உற்பத்தி முடக்கத்திற்கு தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் செல்ல வேண்டியுள்ளது. வெல்லட்டும் வேலைநிறுத்தம்

 

இன்று வட மாநிலத்தவர்:

 

உலகம் இன்று சுருங்கி விட்டதாக பலர் கூறுவதை யதார்த்தமாக காண முடிகிறது. உலகில் பலநாடுகளில் முதலாளிகளின் லாப குவிப்பிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள், பெரும் பங்களிப்பை செய்கின்றனர். அமெரிக்காவில் கருப்பர்கள் எனக் கொண்டால், மேற்கு ஆசியாவின் பல நாடுகளில் நம் தமிழர்கள் உள்ளிட்டு இந்தியர்கள் குறைந்த கூலிக்கான உழைப்பு படையாக கருதப் படுகின்றனர். 

 

கேம்ப் கூலி அல்லது நவீன கொத்தடிமை முறை ஒருவழியாக கட்டுக்குள் வந்தாலும், அது வேறு வடிவத்தில் வேறு நபர்கள் மூலம் அவதரிக்கும் நிலையை, மூலதனம் உருவாக்கி வருகிறது. போக்குவரத்து வளர்ச்சி ஒரு ஊரில் இருந்து பல ஊர்களை சுற்றி பார்க்க கூடிய வசதிகளை மட்டும் உருவாக்குவதில்லை. மாறாக மூலதனத்திற்கான மூலப்பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லவும் பயன் படுகிறது. நிலக்கரியை போல், பருத்தியை போல், சிமெண்ட்டைப் போல், இரும்பை போல், இன்று மனிதர்களும் மூலப்பொருள்களாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். 

 

ஹவுராவில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் பயணித்த போது, மேற்படி மூலப்பொருள்களுகளுடன் பயணிக்கிறோம் என்ற உணர்வு தோன்றவில்லை. ஆனால் ரயில்  நள்ளிரவு நேரம் திருச்சியை அடைந்த போது, அதை உணர முடிந்தது. ரயில் நிலையத்தின் வெளியே ஈரோடு, கரூர், கோவை செல்லும் அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததும், அதில், ரயிலில் வந்த அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வந்த இளம் தொழிலாளர் படை அந்த வாகனங்களில் ஏரி சென்றதும், மேற்படி உணர்தலை வலி மிகுந்ததாக மாற்றியது.  


இந்த உழைப்பு சுரண்டலை எதிர்த்து டி.ஒய்.எப்.ஐ, சி.ஐ.டி.யு, அனைத்திந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராட்டங்களை கூட்டாக நடத்தியது உண்டு. பல தன்னார்வ குழுக்களும் இந்த போராட்டங்களில் ஈடுபட்டன. அக்பர் அலி எனும் நீதியரசர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டு, குறைந்த பட்ச கூலி, பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது. விளைவு, கேம்ப் கூலி எனும் நடைமுறை படிப்படிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக