சனி, 19 மார்ச், 2011

பெண் மட்டுமல்ல!


விழிப்புணர்ச்சிக்கு எது

அளவு கோல்

தீர்மானிக்க முயற்சித்தால்

குற்ற உணர்வே எஞ்சி நிற்கும்.

இன்பமும் துன்பமும்

இனைந்தது தான் வாழ்க்கை

துளி இன்பம் கிடைத்தால்

பேரின்பத்தின் எல்லையாக

இருக்கக் கூடும் அவளுக்கு.

தொழிலாளியாகவும் மாறிவிட்டால்

பாவம் குழந்தைகள்

என்ன செய்கிறதோ

என்பதே மனநிலை.

நடுத்தர வர்க்கம் என்பதால்

கிடைத்தது கொஞ்சம் கல்வியும்

விழிப்புணர்வும்.

தெரித்து விழுகிறது வார்த்தைகளாய்

ரணத்தின் அவஸ்த்தைகள்.

இனைந்து வாழ்வது உன்பொறுப்பு

ஏனென்றால் அவள்

பெண் மட்டுமல்ல! தொழிலாளியும் கூட.

சனி, 12 மார்ச், 2011

தொழில் நுட்பக் கூட்டணி

சம்மன்களே சம்பாஷனைகள் ஆனதால்

திரைமறைவு பேரங்கள்

முடிவுக்கு வந்தது.

உயர் மட்டக் குழுவின் முடிவினால்

இனிப்பு வழங்கியவர்கள்

முடிந்து விட்ட பேரத்தினால்

இளிப்பைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

வீரமணிகளின் வீரவசனமும்

திருமாவளவன்களின் வேண்டுகோள்களும்

நாடகங்களுக்குள் நடந்த

உபகதைகளே.

63 முடியாது என்றவர்கள்

இப்போது ஒப்புக் கொண்டதற்கு

ரகசியங்கள் ஏதுமில்லை.

ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தி.மு.க.வை

நிர்பந்தித்தது புரிகிறது.

பா.ம.க.வும், முஸ்லீம் லீக்கும்

குறைத்து கொண்டதன் ரகசியம் என்ன?

கூட்டணி தர்மமா?.

நாடு நஷ்ட்டப் பட்ட

ஒன்னேமுக்கால் லட்சம் கோடியை

இன்னொரு நஷ்ட்டமான

இரண்டு லட்சம் கோடி நிர்பந்திக்கிறது.

2ஜி ஐ விட எஸ் பேண்டு

தொழில் நுட்பம்

மிக நுட்பமானது என்பதாலா?

ஆனாலும் உறுதியானது

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி.

நாட்டின் கஜானாவைக் காலிசெய்ய

கற்றுக் கொண்ட தொழில் நுட்பம்

உதவி செய்வதால்.