சனி, 12 மார்ச், 2011

தொழில் நுட்பக் கூட்டணி

சம்மன்களே சம்பாஷனைகள் ஆனதால்

திரைமறைவு பேரங்கள்

முடிவுக்கு வந்தது.

உயர் மட்டக் குழுவின் முடிவினால்

இனிப்பு வழங்கியவர்கள்

முடிந்து விட்ட பேரத்தினால்

இளிப்பைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

வீரமணிகளின் வீரவசனமும்

திருமாவளவன்களின் வேண்டுகோள்களும்

நாடகங்களுக்குள் நடந்த

உபகதைகளே.

63 முடியாது என்றவர்கள்

இப்போது ஒப்புக் கொண்டதற்கு

ரகசியங்கள் ஏதுமில்லை.

ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தி.மு.க.வை

நிர்பந்தித்தது புரிகிறது.

பா.ம.க.வும், முஸ்லீம் லீக்கும்

குறைத்து கொண்டதன் ரகசியம் என்ன?

கூட்டணி தர்மமா?.

நாடு நஷ்ட்டப் பட்ட

ஒன்னேமுக்கால் லட்சம் கோடியை

இன்னொரு நஷ்ட்டமான

இரண்டு லட்சம் கோடி நிர்பந்திக்கிறது.

2ஜி ஐ விட எஸ் பேண்டு

தொழில் நுட்பம்

மிக நுட்பமானது என்பதாலா?

ஆனாலும் உறுதியானது

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி.

நாட்டின் கஜானாவைக் காலிசெய்ய

கற்றுக் கொண்ட தொழில் நுட்பம்

உதவி செய்வதால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக