வியாழன், 13 மே, 2010

தலித் உரிமை மனித உரிமையே!

தலித் உரிமை மனித உரிமையே!

பிறமலைக் கள்ளர் என்கிற சாதியினர் அதிகம் வாழும் பகுதி மதுரை மாவட்டம். எட்டு நாடுகளைக் கொண்டதாக சொல்லப்படும் இந்தப் பகுதியில், செக்கானூரணியை அடுத்த கொக்குளம் முக்கியமானது. இது ஒரு நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த மக்களின் பிரதான வழிபாட்டு மரியாதை, பேய்க்காமன் என்கிற நாட்டார் தெய்வத்திற்கு வழங்கப்படு கிறது. இத்தெய்வத்திற்கு பூசை புனஸ் காரங்களை நிகழ்த்துபவர் ஒரு பறையர். கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு. இக்கோவிலின் நான்காம் நாள் திரு விழா பறையர்களுக்கானது, என்று லூயிஸ் டூமாண்ட் என்ற பிரெஞ்சு நாட்டு மானுவியல் அறிஞர், தனது பிரமலைக் கள்ளரின் சமூக அமைப்பு மற்றும் மதம் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். லூயிஸ் டூமாண்ட் தனது ஆய்வினை பிரமலைக் கள்ளர் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும், சுமார் 2 ஆண்டு காலம் (1957-59) தங்கியிருந்து ஆய்வு நடத்தி தெரிவித்த தகவல்களில் ஒன்றுதான், மேலே நாம் குறிப்பிட்டது. இன்றைய நிலை குறித்து விசாரித்த போதும், ஆமாம், பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் பூசை செய்து தருகிற பொருள் களை பக்தியோடு கள்ளர் சாதியைச் சார்ந்த மனிதர்கள் பெற்றுக் கொள்வதைப் பார்க்க முடியும், என்கிறார்கள். இது நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப் பட்டுவரும் உண்மை என்பதை தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாதது.
சாதிய ஆதிக்கத்தின் மிக பிரதானமான ஒரு மையத்தில் சாதிப் பெயரில், மனுஸ்மிருதி அல்லது வர்ணாசிரமம் குறிப்பிட்ட தீட்டு தூக்கி எறியப்பட்டு இருக்கும் நிலையில், பிற பகுதியில், அதே சமூகத்தவரும், இதரரும் பின் பற்றுவது ஏன்? என கேள்வி எழுகிறது. இந்தியாவில், சமூகக் கொடுமைகள் மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போர் தொடுத்த பெருமை தமிழகத்திற்கு நூற் றாண்டு காலமாக இருந்து வந்தாலும், இன்னும் அழிக்கப்படாமலேயே இருக்கிறது. எனவே, அவ்வப்போது, இத்தகைய சமூக அவலங் களை எதிர்க்கும் மக்கள் இயக்கம் தேவைப் படுகிறது. இதன்மூலம் இரண்டு பணிகள் நடைபெறுகிறது. ஒன்று-அவலத்திற்கு எதி ரான நிலையான, தொடர் போராட்டம். மற் றொன்று, அடுத்தடுத்த தலைமுறைக்கு போராட்ட பாரம்பரியத்தைக் கற்றுத் தருவது.

சம்பவம் 1: சென்னையில் ஓடிய டிராம் வண்டிகளில், பணியாளர் நியமனத்தின் போது, பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் தூய்மையான சாதி என்றழைக்கப் பட்டவர்களில் இருந்து நடத்துனர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இதை அயோத்தி தாசர் கண்டித்துள்ளார். காசு வாங்கும் போது ஏன் தீட்டாக கருதவில்லை, என கேள்வி எழுப்பி உள்ளார்.

சம்பவம் 2: 1924இல் சென்னை மாகாண அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்துப் பொது இடங்களையும் பயன்படுத்த உரிமை உடை யவர்கள் என்றும், பொதுச்சாலையில் எவரொருவரும் நடப்பதை தடுக்கும் நபருக்கு ரூ. 100/- அபராதம் விதிக்கப்படும், என்ற பிரிவும் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

சம்பவம் 3: இதே 1924இல் கரூருக்கு அருகில் உள்ள ஆண்டாங் கோயில், ஊரில் இருந்த அக்ரஹாரத்தின் வழியே, குதிரை சவாரி செய்த மாணவர் சி.ஆர். நடேசன் என் பவர் குதிரையில் இருந்து இறங்கி நடந்து செல் லாமல், குதிரை மீது சவாரி சென்றது, குற்றம் என்ற காரணத்தால், விசாரணை நடத்தி, பின் பெரியவர்கள் வருத்தம் தெரிவித்த காரணத் தால் மன்னிக்கப்பட்டார் என்று ஆஐனுளு நிறு வனத்தில் இயக்குனராக இருந்த பேரா. எஸ். நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் 4: 1969 ஜனவரியில் (வெண்மணி படுகொலை நடந்த 20 நாள்களில்), தஞ்சை மாவட்டம் காருகுடியில், தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்கு சுடுகாடு கேட்டு நடத்திய போராட்டத்தை வரலாறு பதிவு செய்திருக் கிறது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சுடுகாட் டிற்கு தனி வழி இல்லாத காரணத்தாலும், இதர சாதியினர் குடியிருப்பு வழியே பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காததாலும், வயல் வழியே சென்றுள்ளனர். இந்த சாவு ஊர்வலம் காரணமாக, 125 கலம் நெல் பாழாகிவிட்டது, என்று அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப் பட்டதாக மைதிலி சிவராமன், வெண்மணி காலத்தின் பதிவு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் மேலே குறிப்பிட்ட 4 சம்பவங்கள், தமி ழகத்தில் ஏற்கெனவே நடந்த சமூக கொடுமை யின் உதாரணங்கள், மூன்று தலித்துகளுக்கு எதிராகவும், ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு எதிராகவும் இருந்துள்ளது. பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எதிரான சமூகத் தடைகள், இன்று முற்றாக ஒழிந்து விட்டது. ஆனால், தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நீடிக்கிறது. அன்றைய சாதி முரண்பாடு பிரா மணர் மற்றும் பிராமணர் அல்லாதோருக்கு இடையில் இருந்தது. இன்றைய வடிவம் தலித் மற்றும் தலித் அல்லாதோருக்கு இடை யில் இருக்கிறது, என்று டாக்டர். ஆனந்த் டெல்டும்டே கூறியதை உண்மையாக்கும் விதத்தில்தான் 4 சம்பவங்களின் வளர்ச்சி உள்ளது.

தமிழகத்தில் ஆலய நுழைவு மட்டும் தீட் டாக கருதப்படவில்லை. ஒரே முடிதிருத்தகத் தில், முடி திருத்திக் கொள்வது, செருப் பணிந்து நடப்பது, துணிகளை சலவை செய் வது போன்ற வடிவங்களிலும், தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. இன்றைய அறிவியல், தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் வேக வளர்ச்சி, சமூக வளர்ச்சியில் பிரதிபலிக் கச் செய்ய வேண்டும். அரசின் பாத்திரம் இதில் மிக கூடுதலாக இருப்பதை, அரசு உணரும் போது மட்டுமே சமூகத்தில் பின்தங்கியிருக் கும் மக்கள் உணர முடியும். அசமத்துவ வளர்ச் சிக்கு வித்திடும் இந்த முதலாளித்துவ அரசு எளிதில் செய்துவிடாது.

வேலைப் பிரிவினையை மையமாகக் கொண்டு மனித சமூகம் செயல்பட்ட காலத் தில், பழங்குடியினரிடத்தில், மேய்ப்பர்களிடத் தில், விவசாயிகளிடத்தில், நெசவாளர் களிடத்தில், சலவையாளர்களிடத்தில், நாவிதர்களிடத்தில் பல்வேறு தொழில் நுட்ப உணர்வு இருந்ததை மனித குல வரலாறு குறிப் பிட்டுள்ளது. அதே தொழில் நுட்பங்களின் காரணமாக இந்திய சமூகம், அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கியது. பிற நாடுகளில் அத்தகைய தன்மை உருவாக வில்லை என்பதை அறிய முடிகிறது. உதாரணத்திற்கு துணிகளை சலவை செய்த தொழிலாளர்களை, சுத்தமற்ற சாதி என முத்திரை குத்தியது, வர்ணாசிரமமும், மனுஸ் மிருதியும் ஆகும். உவர்மண், சலவைத் தூள், சோடா உப்பு உள்ளிட்ட பொருள்களைக் கையாளத் தெரிந்திருந்த தொழிலாளர்களுக்கு நவீனக் கல்வி கொடுக்காதது மட்டுமல்லா மல், சலவைத் தொழிலாளர், பள்ளர், பறையர், சக்கிலியர் சாதி மனிதர்களுக்கும் துணி துவைக்கக் கூடாது, என போதிக்கவும் செய் துள்ளது. இன்றுவரை அமலில் இருக்கிறது. சின்னப் பிரச்சனையாக மட்டுமே இது போன்ற மனித உரிமை மறுப்புகளை மதிப்பீடு செய்கின்றனர். இவை ஏற்படுத்தும் மன உளைச்சல், வலி போன்ற பாதிப்புகள் மதிப்பீடு செய்யப் படுவதில்லை. இத்தகைய குறைபாடு களுடைய ஆட்சியாளர், தங்கள் செயல்பாடின் மையினால் மனுவின் கருத்திற்கு வலுச்சேர்க் கின்றனர். மேலும் ஆட்சியாளர்கள், தாங்கள் இயற்றிய சட்டம் குறித்து பூரிப்படைகின்றனர். சட்டங்களை அமல்படுத்த மக்கள் இயக்கங் களின் போராட்டமே உதவியிருக்கிறது.

காலங்கள் உருண்டோடினாலும், பேய்க் காமனுக்கு தலித் பூசை செய்து கொடுத்தாலும், மாறாத இச்சமூகத்தில் தொடர் போராட்டம் தேவைப்படுவதை இடதுசாரி இயக்கம் மட்டுமே உணர்ந்திருக்கிறது. தனது கடந்த காலப் போராட்டங்கள் மூலம், செருப்பணிய வும், சைக்கிள் ஓட்டவும், குளத்தில் குளிக்க வும், ஆலயங்களில் வழிபடவும், முடிதிருத்த வும், துணி தேய்த்து அணிவதற்கும், மயானத் திற்கு பாதையை பெறவும், தலித் மக்களுக்கும் உரிமை உண்டு என்பதை நிலைநாட்டிய இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். தமிழகத்தில் இதற்கான கருத்தை வலுப்படுத் தும் வகையில் மீண்டும் டிசம்பர் 25 ஐ தேர்வு செய்துள்ளது.

டிசம்பர் 25, 1968 இல் வெண்மணியில் 44 மனித உயிர்கள் (19 குழந்தைகள், 20 பெண்கள், 3 வயோதிகர்கள் உட்பட) எரித்து கொல்லப்பட்ட நாள். அதே டிசம்பர் 25, 1927 இல் ஈ.வே.ரா தன் பெய ருக்கு பின்னால் நாயக்கர் என்ற தனது சாதிப் பெயரை, இனிப் பயன்படுத்த மாட்டேன் என மறுத்த நாள். நானே நல்ல மேய்ப்பர் என்ற இயேசு பிறந்ததாக சொல்லப்படும் நாளும் டிசம்பர் 25 தான். அத்தகைய வரலாற்று முக் கியத்துவம் பெற்ற நாளில் தீண்டாமைக்கு எதி ராக, மனித உரிமைகளை நிலைநாட்டுவதற் காக ஒன்றிணைவோம், சமூக கொடுமை ஒழிப்போம்!


This was published in theekkathir on 22 DEc.2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக