ஞாயிறு, 18 மார்ச், 2012

கைகொடுப்பதில்லை


ஞாயிற்றுக் கிழமை…
ஆற…. அமர….
எண்ணெய் தேய்த்து
தலை குளிக்க வைத்து
ஈரம் தங்காமல் உலர்த்தி
சிணுங்க சிணுங்க சிக்கெடுத்து
’ட்ரிம்’ செய்ய
’பார்லர்’ அழைத்துப் போகையில்

”அம்மா…..    
எனக்கும்
உன்னை மாதிரியே
முதுகு வரைக்கும்
முடி வேணும்மா”

பிஞ்சு நெஞ்சம்
கரம் பற்றி கெஞ்சுகையில்
வேலைக்கு செல்லும் அம்மாவுக்கு
எந்த ’கிளினிக் ப்ளஸ்’ சும்
கைகொடுப்பதில்லை
சாக்லெட்டைத் தவிர
.
               எஸ். பிரேமலதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக