மரம் பொய் சொல்வதில்லை
வெட்டுகிறோம்.
மண் பொய் சொல்வதில்லை
மிதிக்கின்றோம்.
மந்திரி பொய் சொல்கிறார்
ஆனால் மாலையிடுகிறோம்.
_கவிஞர் கந்தர்வன்வார்த்தைகளை நினைவில் கொண்டு, மீண்டும் கேள்விகள் கேட்க முடிவதில்லை. நினைவில் கொண்டிருப்பவர்கள், எளியவர்கள் என்ப-தால், வாக்குறுதி கொடுத்தவர்களை மீணடும் சந்திப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பின் எவ்விதம் ஒலிபெருக்கி முன், பேசிய வார்த்தை-களை நினைவில் கொள்வது. அதுவும் தேர்தல் வாக்குறுதிகள், கொடுக்-கப்படும் விதமும், வெற்றி பெற்ற பின் செயல்படுத்தப்படும் விதமும் நமது அரசியலில், முன் பின் முரணானவை. முதலாவது வாக்காளர்கள் வாக்குறுதிகளை முழுமையாகப் பரிசீலித்து, அதன் பின் வாக்களிக்கும் அளவிற்கான அரசியல் மற்றும் பண்பாட்டு முன்னேற்றத்தைக் கொண்-டிருக்கவில்லை. இரண்டாவது, அத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் நடுத்தர வர்க்கத்தில் பெரும்பான்மையோர், வாக்குச் சாவடிக்கு செல்வதே இல்லை. இந்த இரண்டு காரணங்களும், இந்-தி--யாவின் அரசியலில், முதலாளித்துவ கட்சிகளின் தலைவர்களின் பொய் வாக்குறுதிகளை தட்டிக் கேட்கத் தடையாக இருக்கிறது.
இலவச கலர் டிவி, செல்போன், லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற தொழில்-நுட்ப கருவிகளும், 2ஏக்கர் நிலம், 1கோடி பேருக்கு வேலை, ஆண்டுக்கு லட்சம் பேருக்கு வேலை என்ற வாழ்வியல் தேவைக்கான வாக்குறுதிகளும், தேர்தலின் போது, பெரும் புழுதியை கிளப்புகின்றன. ஆனால், தேர்தல் காலத்திற்குப்பின் வாழ்வியல் தேவை குறித்த வாக்-குறுதிகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. இலவசங்களைக் கொடுப்-பதில் சில சதவிகிதம் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் வாழ்வியல் தேவை, குடும்பத்தின் தற்சார்புகளில் வேலை வாய்ப்பு மருந்துக்கும் கூட அமலாக்கப்படுவதில்லை.
‘வேலை’ என்கிற கோரிக்கை, 13 வது மக்களவைத் தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சியினாலும், 14வது மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியினாலும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இரண்டு கட்சிகளும் ஆண்டொன்றுக்கு 1 கோடிப் பேருக்கு வேலை, தருவ-தாக அறிவித்தனர். ஆனால் மேற்படி 10 ஆண்டுகளில் 2 கோடி புதிய-வர்கள், வேலை தேடி, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இணைந்துள்ளனர். 1999இல் 3.5கோடியாக இருந்த எணணிக்கை, 2009ல் 5.5 கோடியாக உயர்ந்-துள்ளது.
நமது ஆட்சியாளர்கள் இந்தியாவில் உள்ள வேலையின்மையின் சீர-ழிவைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. புரிந்த காரணத்தால் தான், தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனாலும், அதை அம-லாக்க மறுக்கிறார்கள். முதலாளித்துவம், பிரக்ஞையுடன் தான் வேலையின்மையை வளர்க்கிறது, என்பதற்கு இந்தியாவின் கடந்த கால ஆட்சிகள் உதாரணம்.
எந்தவொரு சமூகத்தில், வேலையின்மை இல்லாமல் அல்லது வேலை-யின்மை மிகக் குறைவாக இருக்கிறதோ, அந்த சமூகம், வளர்ச்சி பெற்ற சமூகம், என்று ஐ.நா.வின், மனித வளர்ச்சி குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அடிப்படையில், இந்திய வளர்ச்சியை கணக்-கிட்டால், பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதை அறியலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கையில், 123 வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்தாண்டு 138வது இடத்திற்கு பின்னோக்கித் தள்ளப்பட்டது. டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, 22 வது இடத்தில் இருந்து 33வது இடத்திற்கு வந்-தால் பல்வேறு அதிர்வுகளை வெளிப்படுத்தும் நமது ஊடக உலகம், மனித வளர்ச்சி அறிக்கை குறித்த செய்தியை, சப்தமின்றி பிரசுரித்து முடித்தது.
நமது சமூகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதற்கு இன்னும் ஒரு உதாரணத்தையும் குறிப்பிட முடியும். 2008ஆம் ஆண்டு துவக்-கத்தில் அர்ஜூன் சென் குப்தா, என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தலை-மை-யிலான குழு, ஆய்வறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்-பித்தது. அதில் “77 சதவிகித இந்திய மக்கள், அதாவது 83.6 கோடி இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20 மட்டுமே, செலவிடக் கூடிய நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. 30 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இந்திய நாடு முழு-வதும் உள்ள, இன்றைய விலைவாசி நிலைமையில், ஒரு நாளைக்கு, ஒரு நபர் ரூ. 20 மட்டுமே செலவிடுகிறார் என்பது, மிகக் குறைவான தொகை மேற்படி மனிதர்கள் போக்குவரத்து மற்றும் தேனீர் அல்லது இதர தேவைகளுக்காக செலவிடுவதும், ரூ. 20க்குள் அடங்கும். ஒரு வேளைக்கு ஹோட்டலில் சாப்பிட்டால், ரூ. 20க்கு அரை வயிறு உணவு மட்டுமே கிடைக்கும். இவ்வளவு குறைவான தொகையை மக்-கள் செலவிடுவதற்கு காரணம், சிக்கனமல்ல, வறுமை அல்லது வரு-மான பற்றாக்குறை ஆகும்.
அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கையில் இருந்து, வருமான பற்-றாக்-குறை கொண்ட மனிதர்களும், குடும்பங்களுமே, இந்தியாவில் அதி-கம் என்பதை நாம் அறிய முடியும். வருமானப் பற்றாக்குறைக்கு காரணம் வேலையின்மை, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, அல்லது வேலையிழப்பு மற்றும் உழைப்புச் சுரண்டல் போன்றவை ஆகும். இந்தியாவில் உள்ள 85 சதவிகிதமான குடும்பங்களின் வருமானம், முறைசாராத் தொழில்களைச் சார்ந்தே இருக்கிறது. தினக்கூலி அல்லது வாரக்கூலி என்ற முறையிலேயே உள்ளது. உழைத்தால் மட்டுமே கூலி என்ற நிலையில், நிரந்தரமான வருமானத்திற்கான வாய்ப்பு இல்-லாத காரணத்தாலேயே இந்த அவல நிலை உருவாகிறது.
2004, நாடாளுமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைமை அறிவித்த, “ ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை” என்ற வாக்குறுதி, மேற்படி வருமான பற்றாக்குறையை போக்கக் கூடியதாக இருந்ததா? 2004இல் இருந்து 2009 துவக்கம் வரை எத்தனை குடும்பங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் உத்தரவாதத்தை அரசு கொடுத்-திருக்கிறது? உண்மையில் கொடுக்கவில்லை, மாறாக குறைத்-திருக்கிறது. மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், 2005, பிப்ரவரியில், மாநில அரசு-களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் “புதிய அரசு வேலை நியமனங்களை நிறுத்தி வையுங்கள்’’ என்பது முக்கிய ராஜ கட்டளை ஆகும். இதன் மூலம் பல்லாயிரம் பணியிடங்களை மத்திய அரசின் நேரடி பொறுப்பாலும் லட்சக்கணக்கான பணியிடங்களை, மாநில அரசு-களின் பொறுப்பிலும் பூர்த்தி செய்வது நின்று போனது.
ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியின் போது, 2002இல் வாஜ்பாய், மத்திய அரசுப் பணியிடங்களை ஆண்டிற்கு 2 சதமாகக் குறைக்கப் போவதாக அறிவித்து, அமலாக்கினார். அதையே காங்கிரஸ் கட்சியும் பின்-பற்றியது. ஐ.மு.கூ.வின் கூட்டாளியான திமுக, தனது மாநில ஆட்சி-யிலும் இதை நிறைவேற்றியது. உதாரணத்திற்கு, தமிழக உள்ளாட்சித் துறை மூலம் கிராமங்களில் துவங்குவதாக அறிவித்த, நூலகங்களில், நூலகராகப் பணியாற்ற, ஓய்வு பெற்ற ஆசிரியர், அல்லது அரசு ஊழி-யர்களை நியமிக்கப் போவதாக, அரசாணை எண் 177 மூலம் பகி-ரங்கமாக அறிவித்தது. ரூ.1000 ஊதியம் என்றும் தெரிவித்தது.
தமிழக உயர்கல்வித்துறை, அரசுக் கல்லூரிகளில் உள்ள, 3025 காலிப்-பணியிடங்களை ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நிரப்ப-லாம் என, அரசாணை எண் 274 (04.07.08) வெளியிட்டது. இப்படி நாம் அறிந்து ஆயிரம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை நிரந்தர வருமானத்தை தட்டிப்பறித்துள்ளது. சுமார் 1.75 லட்சம் பணியிடங்களை மாநில அரசிலும், இதர மாநிலங்களிலும், மத்திய அரசிலும் கணக்கிட்டால், சுமார் 30 லட்சம் பணியிடங்கள் அரசுத் துறையில் மட்டும் காலியாக இருப்பதை குறிப்பிட முடியும்.
இவையன்றி வங்கி, ரயில்வே, இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு துறை-களில் பல லட்சம் பணியிடங்கள் அழிக்கப்பட்டுள்ளது. உலக-மயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின், இரண்டாம் கட்ட சீர்-திருத்தம் என்ற பெயரில், விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு போன்றவை மூலம் ஆள்குறைப்பு, அரசு பொதுத்துறைகளில் மேற்கொள்ளப்-பட்டது. 1999இல், பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை “ஒரு ஆண்டுக்கு ஒரு கோடிப் பேருக்கு வேலை தருவோம்’’ என்று குறிப்பிட்டது. ஆனால் 2002இல் வங்கிப்பணியாளர் தேர்வாணையம் (ஙிஷிஸிஙி) என்பதையே கலைத்துவிட்டது. 2002இல் சுமார் 99 ஆயிரம் வங்கிப் பணிடங்கள் காலியாக இருந்ததை அன்றைய, பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை குறிப்பிட்டது. 2008 நவம்பரில், சென்னை உயர்-நீதிமன்றத்தில் நடந்த பாரத் மிகு மின் நிறுவனத்திற்கும் (திருச்சி) ஐ.டி.ஐ படித்த இளைஞர்களுக்குமான வழக்கு முக்கியமானது. அதில் “ஐ.டி.ஐ படித்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும், பயிற்சி பெற்ற பிறகு திறன் பெற்றவராக மாறிய தொழிலாளர்களின் திறமை-யையும், பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல’’ என்று நீதிமன்றம் குறிப்-பிட்டுள்ளது. இதன் பிறகும் அப்ரண்டிஸ் முடித்த இளை-ஞர்களை மேற்படி நிறுவனம், நிரந்தர வருமானத்துடன் பணியமர்த்த-வில்லை.
நெய்வேலி அனல் மின் நிலையம், 1957இல் துவக்கப்பட்டது. அன்-றைக்கு ஒரேயரு நிலக்கரி சுரங்கமும், ஒரேயரு மின்னுற்பத்தி நிறு-வனமும் செயல்பட்டது. மிக குறைவான மின்சாரம் அதாவது 600 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. ஊழியர்கள் எண்-ணிக்கை 24 ஆயிரம் என இருந்தது. ஆனால் இன்று 3 சுரங்கங்களும், 3 மின்னுற்பத்தி மையங்களும் செயல்படுகின்றன. சுமார் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், நிரந்-தரப் பணியாளர்களின் எண்ணிக்கையோ 17 ஆயிரமாக குறைந்து விட்டது. உற்பத்தியும், வேலையின் தன்மையும் அதிகரித்த சூழலில், வேலை வாய்ப்பு குறைந்து, லாபம் அதிகரித்து இருப்பது அரசு நிறு-வனத்தின் லாப வெறியை வெளிப்படுத்துகிறது. நமது ஆட்சி-யா-ளர்கள், இந்தியா 8 சதவிகித வளர்ச்சியையும், 9 சதவிகித வளர்ச்சியை- -யும் அடைந்துவிட்டது என்று குறிப்பிடுகிற புள்ளி விவரம், இளைஞர் -களுக்கான வேலை வாய்ப்பை சூறையாடியதன் மூலம் உருவானதாகும்.
மேற்கண்ட விவரங்கள் மூலம் கோடிக்கணக்கான, நிரந்தர வருமா-னம் கொண்ட மனிதர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை, கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி ஆட்சி-கள் அழித்து இருப்பதை அறிய முடியும். ஒருபுறம் வருமானப் பற்றாக்-குறையுடனும், வறுமைக்கோட்டிற்கு கீழும் மக்கள் வாழ்கிற, அதே நேரத்தில், பணக்கார அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தையும் ஊடகங்-கள் வெளிப்படுத்துகின்றன. நடைபெற உள்ள 15வது மக்களவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான, வேட்பாளர்களுக்கான நேர்காணல் பணிகளை, தமிழக அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. திமுக வில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு, எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்? என்பதை மையப்படுத்தி நடந்ததாக செய்திகள் வெளி-யாகின. பல நூறு கோடி ரூபாய்களை செலவிடும் நாடாளுமன்ற உறுப்-பினர்கள், எவ்விதத்தில், இந்திய மக்களின் ஒரு நாளைய வருமானத்தை உயர்த்துவதில் அக்கறை செலுத்துவார்கள்.
பெரும் பணக்கார அரசியல்வாதிகள் குறித்து பிப்ரவரி, 2009, இந்-தியா டுடே செய்தி வெளியிட்டு இருந்தது. முதல் 10 மக்களவை உறுப்பினர்களதும், மேலவையில் 10 உறுப்பினர்களதும் சொத்துக்களின் கூட்டுத் தொகை 1500 கோடி ரூபாய் என குறிப்பிடுகிறது. 150 பேர் பெரும் கோடீஸ்வரர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இந்த செய்தி எம்.எல்.ஏ., எம்.பி.க்களை பெரும் பணக்காரர்களாகவும், மக்களை பரிதாபத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
தற்போதைய நெருக்கடியும் வேலை பறிப்புகளும்
கட்சிகள் தேர்தலின் போது கொடுக்கின்ற வாக்குறுதிகளை, வார்த்தை-களில் இருந்து மட்டும் அமலாக்க முடியாது. கொள்கை மிக முக்கியமானது. இந்தியாவைப் பொருத்தளவில் கடந்த 22 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கை அல்லது உலகமயமாக்கல் கொள்கை, பெரும்பான்மை மக்-களுக்கு எதிரானதாகும். உலகளவிலான பெரும் பணக்காரர்களின் நிறுவனங்களுக்கும், இந்தியப் பெரு முதலாளிகளின் நிறுவனங்-களுக்குமான, சந்தையை நமது நாட்டில் கட்டமைப்பதற்கான பொரு-ளா-தாரக் கொள்கைகளையே, இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்றி வரு-கின்றனர். வர்த்தகச் சந்தைக்கும், பங்குச் சந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்த நமது ஆட்சியாளர்கள், உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியின் உயர்வு குறித்தோ, அல்லது உற்பத்தித் துறைகளின் மீதான முதலீடு குறித்தோ கவலை கொள்ளவில்லை. எனவே பெரும் சமூக மாற்-றத்திற்குரிய வேலை வாய்ப்புகள் பெருகும் சூழல் நமது மண்ணில் உருவாகவில்லை.
இரண்டாவதாக, நமது ஆட்சியாளர்கள் ஏற்றுமதி வளாகங்களின் மூலமான வருவாய் காரணமாக, ஜவுளித்துறையிலும், மென்பொருள் துறை-யிலும், கூடுதல் ஏற்றுமதி குறித்து சிந்திக்கத் துவங்கினர். அதே போல் தொழில் துறையிலான வேலை வாய்ப்பு அதிகரித்தது. இவை-யனைத்தும் சேர்ந்து, கடந்த 6 மாதங்களில் லட்சக்கணக்கான வேலை இழப்புகளை உருவாக்கியுளளது. 2008 டிசம்பரில் நடைபெற்ற நாடா-ளுமன்றக் கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், ஆஸ்கர் பெர்னான்டஸ், 5லட்சம் பேர் உலகப் பொருளாதார நெருக்-கடி காரணமாக வேலை இழந்ததாக, நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்-டார். தற்போதைய சூழலில், இந்தியா, உலக அளவில் ஏற்-பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பாதிப்பிற்கு ஆளாகி-யுள்ளது. இது கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளா-மல், அமெரிக்கா போன்ற நாடுகள் மீதான விசுவாசம் காரணமான பாதிப்பு ஆகும்.
இன்று அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி வளர்ந்து படிப்-படியாக, உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது. இதே போன்ற நிலை 1929லும் நிகழ்ந்து உள்ளது. 24.10.1929 அன்று நியூயார்க் நகரின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. அன்று ஒரு நாளில் மட்டும் 1,28,94,650 பங்குகள் கைமாறி உள்ளன. வால் தெரு-வில் ஏற்பட்ட இந்த மாற்றம் படிப்படியாக, உலகை பாதித்தது. இந்-தி--யாவிலும் பொருளாதார நெருக்கடியை விளைவித்தது. சென்னை மாகாணத்திலும் இதன் பாதிப்புகளை உணர முடிந்ததாக, பேரா.கா.அ.மணிக்குமார் எழுதிய, “1930களில் தமிழகம், பொரு-ளாதாரப் பெருமந்தம் ஒர் ஆய்வு’’ எனும் நு£லில் விளக்கியுள்ளார்.
வணிகம், வர்த்தகம், மற்றும் தொழில் ஆகியவற்றில் கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவுகளிலும், மீட்கப்படாத மந்தம் நிலவுகிறது. ரயில்-வேயின் வருமானத்தைப் பார்த்தாலும் சரி, பங்குச் சந்தை வருவாயைப் பார்த்தாலும் சரி, கூட்டு நிறுவனப் பதிவாளர்களின் அறிக்கைகளைப் பார்த்தாலும் சரி, அறிவிக்கப்பட்ட இந்திய உற்பத்திகளின் விலைக் குறி-யீட்டைப் பார்த்தாலும் சரி, சில இனங்களில் தேக்கத்தின் அடை-யாளத்தையும், மற்ற இனங்களில் சரிவின் அடையாளத்தையும் நம்மால் பார்க்க முடியும். அனைத்துப் பொருட்களிலும் தொடர்ந்த விலைச் சரிவு தான், கடந்த வருடத்தின் மிகவும் ஏமாற்றமளிக்கும் நிகழ்வாகும். இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை விட, ஏற்றுமதிப் பொருட்-களில் தான் இந்த சரிவு அதிகமாக இருந்தது.
அன்றைக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தோல் தொழில் பாதிப்படைந்தது. ஜரோப்பிய கண்டத்தில் தேவைக் குறை-பாடு இருந்தமையாலும், அந்நியச் சந்தையின் நிச்சயமற்றத் தன்மை காரணமாகவும், பல தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மலாய் நாடுகளில் ரப்பரில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், ஜெர்மனியின் மலி-வான உற்பத்திப் பொருட்களின் காரணமாகவும், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட லுங்கிகள், கைக்குட்டைகள் தேங்கின. ஏற்று-மதி பாதித்தது. இதன் காரணமாக நெசவு மற்றும் அதன் தொடர்-புடைய தொழில்கள் பொருளாதார மந்தத்தால் கடுமையாக பாதிக்கப்-பட்டன. இது 1930களில், நமது இந்திய ஆட்சி, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த காரணத்தால் நிகழ்ந்த கொடுமைகள் ஆகும்.
80 ஆண்டுகள் கழிந்த பின்னரும், இந்தியாவில் மேற்படி தன்மையி-லான, பாதிப்பை உணர முடிகிறது. இப்போதும் அமெரிக்காவில் ஏற்-பட்டுள்ள நெருக்கடி இந்தியாவை பாதிக்கிறது. அதுவும் இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகள் நிறைவு பெற்றும் மாற்றம் இல்லை. என்ன காரணம் என்றால், இந்தியாவை நவீன காலனியாதிக்க நாடாக-வும், அமெரிக்காவின் விசுவாசியாகவும், மாற்றுவதில், உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை பங்களிப்பு செய்துள்ளது ஆகும்.
இப்போது, உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கோவை-யில் உள்ள ஜவுளித் தொழில்களில், 40 முதல் 50 சதம் பாதிக்கப்படும் என்றும், 25 சதவிகிதத்தினர் வேலை இழப்பர் என்றும், மார்ச் 2009 ஃபிரன்ட்லைன் ஏடு குறிப்பிடுகிறது. திருப்பூர் பனியன் தொழிற்-சாலைகள் பெருமளவு ஏற்றமதியை சார்ந்து இருக்கிற காரணத்தால், 3000 நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு படிப்-படியாக வேலை இழப்பை உருவாக்கும் என்று, பனியன் ஏற்று-மதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தெரியப்படுத்துகிறார். குஜ-ராத் மாநிலம் சூரத் நகரில், தங்க நகை ஆபரணத் தொழிலில் ஈடு-பட்டு வரும் தொழிலாளர்கள், ஏற்றுமதியில் தேக்கம் ஏற்படும் போது பாதிக்கப்படுகிறார்கள் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைத் கொடுத்த தொழில்களில் 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு வந்ததாகவும், ஏறத்தாழ 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்த-தாகவும், ஃபிரன்ட்லைன் ஆய்வு குறிப்பிடுகிறது.
மோட்டார் தொழில், வங்கித்துறை (தனியார்) ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என எல்லாத் துறைகளுமே பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இந்திய ஆட்சியாளர்கள், பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை கல்வித் துறையுடன் இணைந்தது. இந்தியாவில் நாம் என்ன கல்வி பயில வேண்டும், என்பதை பன்-னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்-களுக்கான உழைப்பாளர் சந்தையை உருவாக்கிக் கொள்ளும் இடமாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் இருந்து கிடைக்கும் மலிவான கூலி உழைப்பாளர்களால், பன்னாட்டு நிறுவனங்கள் பெருத்த லாபம் சம்பாதிக்கின்றனர். உதாரணத்திற்கு தகவல் தொழில்நுட்பத் துறையை குறிப்பிட முடியும். புதிய பொருளாதாரக் கொள்கையுடன் இணைந்து புதிய கல்விக் கொள்கையும் இந்தியாவில் திணிக்கப்பட்டது. இது பாடத்திட்டங்களிலும், மாற்றத்தைக் கொண்டு வந்தது. தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் வல்லுனர்களை அதிக அளவில் உருவாக்கும் வகையிலான, பாடத்திட்டங்கள் பெருத்தது. 85களுக்கு பின் 24 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் இளைஞர்கள் மேற்படித்-துறைகளில் பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர்.
2003 ஆம் ஆண்டு கணக்குப்படி, மேற்படி பட்டதாரிகளில், அமெ-ரிக்க பட்டதாரிகளுக்குப் போட்டியாக நிறுத்தப்பட்டனர். “இந்தியா-வில் ஒரு கால் சென்டர் ஊழியர் ஒரு மணிநேரத்திற்கு 45 ரூபாய் சம்-பளம் பெறுகிறார். அதே வேலையை ஒரு அமெரிக்கர் செய்யும் பட்சத்தில், 550 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு இந்தியப் பணியாளர் மூலம் அமெரிக்க நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் டாலர் லாபம் அதிகரிக்கிறது’’ என்று இந்தியா டுடே 2003இல் குறிப்பிட்டது. இப்படி வேலை வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், அதிகப் படியான பட்டதாரிகள், தகவல் தொழில் நுட்பத் துறையில் உரு-வாக்கப்பட்டனர். இதன் மூலம் இந்தியாவிலும், இன்ஃபோசிஸ், சத்யம், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியைப் பெற்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடி, இத்துறையை பாதிக்கத் துவங்கி இருக்கிறது. இன்ஃபோசிஸ் 2007_08 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டு 25 ஆயிரம் பேரை மட்டுமே பணி நியமனம் செய்ததாகத் தெரிகிறது. சத்யம் கம்ப்யூட்டரில் 14 ஆயி-ரம் பேரை நியமனம் செய்ய வேண்டியத் தேவையில், 8 ஆயிரம் பேர் நியமனத்தின் மூலம் சமாளிக்க முடிவு செய்துள்ளனர். பல பொறி-யியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ குறைந்-ததாக சொல்லப்படுகிறது. டாக்டர் அனந்த கிருஷ்ணன் போன்ற கல்வியாளர்கள், ஐ.டி துறையில் 100 பேருக்குக் கிடைத்த வேலை வாய்ப்பு 10 பேருக்கானதாக சுருங்கும் என்று குறிப்-பிடுகின்றனர். இவை சம்பளக்குறைப்புக்கும் நிர்பந்தம் செய்யும். இதன் காரணத்தை தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பணி-யில் 47 மில்லியன் டாலர் அளவிற்கு மட்டுமே உள்நாட்டு வர்த்த-கத்தை சார்ந்து இருக்கிறது. இப்படி வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்திய மென்பொருள் தொழில்களை தாக்குவதை, எப்படி ஆட்சியாளர்கள் தடுக்கப் போகிறார்கள்?
இத்தகைய வேலைப் பறிப்புகள் குறித்து கவலை கொள்ளாமல், இந்திய வங்கித்துறை குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் பாது-காக்கப்பட்டது குறித்து, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பெருமை பேசு-கின்றனர். இந்தப் பெருமைக்கு காரணம் ஆட்சியாளர்கள் அல்ல என்-பதும் இடதுசாரிகளின் தொடர் எதிர்ப்பும், போராட்டமுமே கார-ணம், என்பதும் நாடறிந்த உண்மை. இந்தியாவிலும், ஜூலை19, 1969 அன்று தேசிய மயமாக்கிய வங்கிகளை மீண்டும் தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளின் ஆட்சியின் போது மேற்கொண்டார்கள். 1991களில் அமைக்கப்பட்ட நரசிம்மம் கமிட்டி, 1998இல் நரசிம்மம் கமிட்டி வெளியிட்ட 2வது கட்ட அறிக்கை, 2000இல் வெளிவந்த வர்மா கமிட்டி பரிந்துரைகள் ஆகியவை மிக முக்கியமான உதாரணங்களாகும். பா.ஜ.க தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது, “வங்கிகளின் பங்குகளை பகுதி, பகுதியாக பங்கு சந்தையில் விற்கவும், 33 சதவிகித பங்கு-களை மட்டும் அரசு கை வசம் வைத்துக் கொண்டால் போது-மானது, என்றும் முடிவெடுத்தனர். அதன்படி 67 சதவிகித பங்குகளை விற்பதற்கு அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தனர்’’. இடதுசாரிகளின் தீவிர எதிர்ப்பின் காரணமாக வாபஸ் பெறப்பட்டது.
மீண்டும் 2004இல், செப்டம்பரில், லீலாதர் என்பவர் தலைமை-யிலான குழு சமர்ப்பித்த அறிக்கை, நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கி-களை இணைப்பது சார்ந்தது. இது ஆபத்தானது என்பதை இடதுசாரிகளும், வங்கி ஊழியர் சம்மேளனமும் அறிந்து எதிர்த்தன. ஜரோப்பாவில் 1998 இல் இதுபோன்ற இணைப்பு காரணமாக 1.3 லட்சம் பணியிடங்கள் அழிக்கப்பட்டதாகவும், 2002க்குள் 3 லட்சம் பணியிடங்கள் அழிக்கப்படும் என்றும் அன்றைய அறிக்கை கூறுகிறது. இது போல் இந்திய வங்கிகள் இணைப்பும், வேலைகளை அழிக்கும் ஆபத்து கொண்டது. 1998இல் நரசிம்மம் குழு தனது இரண்டாவது பரிந்துரையை அளித்தது. அதில் வங்கிகள் இணைப்பு மூலம், கிளை-களின் எண்ணிக்கையையும், ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய விவ-ரங்கள் அனைத்தும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வின் ஆபத்தான நடவடிக்கைகளையே வெளிப்படுத்துகிறது.
வேலை வாய்ப்பும் உரிமைப் பறிப்பும்
நமது ஆட்சியாளர்கள், தமது ஆட்சிக் குடையின் கீழ் வேலையின்மை என்ற கொடுமை இருப்பதாக ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை. வாரம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதும், அது பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்-கும் என்பதும், பத்திரிகைகளில் தமிழக முதல்வர் வெளியிடும் செய்தி, தமிழகத் தொழில் கொள்கை என்ற பெயரிலும், தமிழகத் தொழில் நுட்பக் கொள்கை என்ற பெயரிலும் அறிக்கைகளாக வெளி-யிடப்பட்டது. அதில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவது குறித்து குறிப்பிட்டு இருந்தனர். அறிவிப்புகள் வெளிவந்து ஓர் ஆண்டு ஆன பின்பும், பயனடைந்தவர்களைக் கண்டறிய இயலவில்லை. கிரா-மத்தில் பேசிக் கொள்வதைப் போல், “ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கிடும் கதை’’ மற்றபடி விஷயம் இருப்பதில்லை.
ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர், பன்னாட்டு நிறுவனங்களுக்-காக, மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பந்தம் செய்வதையும், அது குறித்து பூதாகரமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு, மக்களையும், ஆட்சியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியதையும், தான் எழுதிய, “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்’’ புத்தகத்தில் குறிப்-பிட்டுள்ளார். தமிழக அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சிரித்துக் கொண்டே போடுகிற கையெ-ழுத்தை, ஊடகம் மூலம் பிரம்மாண்டப் படுத்தப்படுவதும், ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிடுவது போன்ற ஒன்று தான். இத்தகைய பிரம்மாண்டங்கள் சில வேலை வாய்ப்பை கொடுத்திருக்கும். ஆனால் அவை, “யானைப் பசிக்கு சோளப் பொரி’’ போன்றது. அத்தகைய வேலை, தொழிலாளர் நலச் சட்டத்திற்கு கட்டுப்படாது. உதாரணம், மிகச் சமீபத்தில் போராட்-டம் நடைபெற்ற ஹ¨ண்டாய் மோட்டார் தொழிற்சாலை. இங்கு வரையறுக்கப்பட்ட, தொழிலாளர் நலச்சட்டம் அமலாவ-தில்லை. வேலைப்பளு, அதிக நேரம் உழைத்தல், வார விடுமுறை இல்-லாமை (சம்பளத்துடன்) போன்றவற்றை சொல்ல முடியும்.
இரண்டாவது உதாரணம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், பஞ்சாலைகளில், கேம்ப் கூலி, சுமங்கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம் என்ற பெயரில் நடைபெறும் கொடுமை. விவசாயம் ஏமாற்றுவித்தை காட்டுகிற கிராமம் மற்றும் சிறு நகரங்களில் இருந்து ஏராளமான பெண்கள் குறிப்பாக திருமணம் ஆகாத 15 முதல் 22 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் கேம்ப் கூலி முறைக்கு ஒப்பந்தம் செய்யப்-படு-கின்றனர். வேலைக்கான பெண்களை, “தகப்பன் இல்லாத, குடிகாரத் தகப்பனைக் கொண்ட, பல பெண் குழந்தைகள் உள்ள, மிகக் கொடிய வறுமையில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து, நயவஞ்சக வார்த்தை-கள் மூலம் சம்பந்தப்பட்ட பெண்களை வேலைக்கு அழைத்துவரும் முக-வர்களை, பஞ்சாலை முதலாளிகள் கொண்டுள்ளனர். இத்தகைய தொழிற்கூடங்களில், உணவு, தங்கும் இடம், இலவசம் என்றும் இவை இல்லாமல் சம்பளம் பேசப்படுவதும், பின்னர் உணவிற்கும், தங்குமிடத்திற்கும், சம்பளத்தில் எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. 2 அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தத்ததில் பணியமர்த்தப்படும் இத்தகைய பெண்கள், உடல் நல-மில்லை என்றாலும் வேலை வாங்கப்படும் நிலையும், பாலியல் சீண்-டல்களையும், தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் அனுபவிக்-கின்றனர். 12 முதல் 15 மணி நேரம் மிகச் சாதாரணமாக வேலை வாங்-கப்படுகின்றனர்.
மூன்றாவதாக, வேலையின்மை அதிகரித்து, வேலை வாய்ப்பு சுருங்கி-யுள்ள இக்காலத்தை முதலாளிகள் பெரும் சுரண்டலுக்கு பயன்படுத்தி உள்ளனர் என்பதாகும். எவ்வளவு நிதி நெருக்கடிகள் இருந்தாலும், முதலாளிகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், முதலாளி ஆட்-குறைப்பு மூலமாகவோ, சம்பளக் குறைப்பு மூலமாகவோ, தனது லாபத்தை தக்க வைத்துக் கொள்கிறார். நெருக்கடியை தொழி-லாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்து முதலாளி தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார். இதன் மூலம், தொழிற்சங்க உரிமை, பேரம் பேசும் உரிமை, போன்ற அனைத்தும் அழிக்கப்படுகிறது. ஏறக்குறைய முறை-சாரா தொழிலாளர்களைப் போல் நிலைமை மாறுகிறது. பிரா-விடண்ட்ஃபண்டு, கிராஜூவிடி, வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகள் பறிக்கப்படுகிறது. இத்தகைய நிலை, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் துவங்கி, தனி-யார் நிறுவனங்கள் வரை எல்லாவற்றிலும் காணக்கிடைக்கும் ஒன்-றாக வளர்ந்து இருக்கிறது.
உலகிலேயே மிக அதிகமான வயோதிக உழைப்பாளிகள் இந்தி-யாவில் தான் அதிகம், சிறுகடை வியாபாரிகளாக, பாதையோர வியா-பாரி-களாக, கூடையில் எடுத்துக்கொண்டு வீடு, வீடாக செல்வோராக அபார்ட்மெண்ட் வாட்ச்மேனாக, விவசாயத் தொழிலாளியாக, என்று பல்வேறு வடிவங்களில், ஆண், பெண், பேதமில்லாமல் ஒய்வு பெற வேண்டிய வயதில் உழைக்கும் அவலத்தைக் காண முடியும். ஐரோப்-பாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் கல்லறையில் எழுதி வைக்-கப்பட்ட,
நண்பர்களே, எனக்காக வருந்தாதீர்கள்
எனக்காக எப்போதும் அழவும் வேண்டாம்
ஏனெனில், நான் இனி, எப்போதும்
எதுவும் செய்யப் போவதில்லை
ஏனென்றால் நான் பிணம்.
என்ற வாசகம், நமது உழைப்பாளர்களுக்கும் பொருந்தும். சாவு மட்டுமே ஓய்வைக் கொண்டு வரும், என்ற நிலை இருக்கிறது. அந்தளவிற்கு உரிமைகளற்ற தொழிலாளர் கூட்டம், நமது நாட்டில் நிரம்பி வழிகிறது.
கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் கொள்கைகளால், பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினர், சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் ஆவர். கடந்த 15 ஆண்டுகளில், வளர்ந்த தொழில்கள் வர்த்தகம், விடுதி மற்றும் ஹோட்டல் தொழில் ஆகும்.
இதில் ஒரளவு வேலை வாய்ப்பும் அதிகரித்தது. குறிப்பாக சுய-தொழில் புரிவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் சமீபத்திய பொருளா-தார நெருக்கடி காரணமாகவும், பெரும் வர்த்தக நிறு-வனங்களின் வருகை காரணமாகவும், இத்துறையில் கிடைத்து வந்த வேலை வாய்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. “பொது நிர்வாகம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் அரசு போதிய கவனம் செலுத்தாததன் காரணமாக இவற்றில் அதிகரித்து இருக்க வேண்டிய வேலை வாய்ப்பு சரிந்துள்ளது’’ என்று ஜெயதிகோஷ் உள்ளிட்ட பேராசியர்களின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஒரு புறத்தில் பன்னாட்டு வர்த்தக நிறுவனமான, வால்மார்ட் போன்றவை, இந்திய சந்தையில் நுழைவது இடதுசாரிகளின் தீவிர எதிர்ப்பு காரணமாக தடுக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஃபிரெஷ், பிர்லாவின் மோர் போன்ற நிறுவனங்கள் வால்மார்ட்டிற்கு பதிலாக, சிறு வியாபாரிகளை அழித்து வருகின்றன. ஓர் ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்-தகத்தை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக, ரிலையன்ஸ் ஃபிரெஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரும் வணிக வளாகங்களாக மாறு-வதன் மூலமும் வேலை கிடைக்கும், என்ற வாதம் உண்மையாக இருந்-தாலும், பல மணி நேர உழைப்பை சுரண்டிக் கொழுக்கும், பெரும் நிறுவனங்களுக்கே, இந்த வேலை வாய்ப்புகள் சாதகமாக இருக்கும்.
நிலக்குவியல்களும் சிறப்பு பொருளாதார மண்டலமும்
பெரும் நகரங்களை நோக்கி இடம்பெயரும் அவலம், உலகில் ஆசியா கண்டத்தில் அதிகம் என்றும், அதிலும் இந்தியாவே முதலிடம் பெறுகிறது என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் நகர்மய மாதலில் முதலிடத்தில் மகாராஷ்ட்ராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் இருப்பதாக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை குறிப்பிடுகிறது. இந்தத் தகவல், உழைக்கும் மக்களை துயரத்தில் ஆழ்த்துவதாகும். தங்குமிடம், சுகாதாரம், பொது விநியோகத் திட்-டத்தைப் பயன்படுத்துதல், கல்வி போன்ற அத்தியாவசியத் தேவை-களைப் பெறுவதில் பெரும் கஷ்டங்களைச் சந்திக்கும் நிலைக்கு தள்-ளப்-படுவர்.
கிராம சமுதாயத்தில் சிதைவும், ஏழை மற்றும் விளிம்புநிலை மக்-கள் அதிலும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளுமே. இதனால், பெரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள். உலகமயமாக்கல், பாரம்பரிய சமூக, பொருளாதார உறவுகள் மீது தொடுத்த தாக்குதல் காரண-மாகவே, பெண்களும், குழந்தைகளும், உலக சந்தையில் விற்கப்படும் பொருளாக மாறியுள்ளனர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை நகரில் ராஜ் தாக்கரே தலைமை-யிலான நவ நிர்மான் சேனா, நாடு முழுவதும் இருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது, மராத்தியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தாக்குதல் நடத்தியது. அதே போல் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி-யில், உல்ஃபா மற்றும் இதர பிரிவினர், அங்கு வாழ்ந்து வரும் பீகார் மாநிலத்தவர் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கு அவர்கள் மொழி மற்றும் இன அடையாளங்களை ஒரு புறம் முன்வைத்தாலும், இன்னொரு புறம் வேலை வாய்ப்பு பெறுவதற்கு இடம் பெயர்ந்-தவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்பதாகும். இதை நடுத்தர வர்க்-கம் நம்புவதும், இத்தகைய பிரச்சாரத்திற்கு இரையாவதும், இந்-தியத் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கான தடையாக இருக்கிறது.
மிக சமீபத்தில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, இடம்பெயர்தல் குறித்த அறிக்கையை, லண்டன் நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் சமர்ப்-பித்து உள்ளது. அதில் “1950களில் பெரும் எண்ணிக்கையிலான கருப்பு இனத்தவர் வந்த போது, எதிர் புரட்சி சிந்தனையாளர்களும், அரசியல் வாதிகளும், பிரிட்டன் அழியப் போகிறது, என ஒப்பாரி வைத்தனர், அது வலது சாரி அரசியல் வாதிகளை தூக்கி நிறுத்த உதவி செய்தது’’, என்று குறிப்பிடுகின்றனர். மகாராஷ்ட்ராவிலும், அஸ்-ஸாமிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருக்கிறது. மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும் இனவாத அல்லது அடிப்படைவாத கருத்துக்-களை மறைமுகமாக மேற்கண்ட இரண்டு மாநிலங்களிலும் வளர்த்து விடுகின்றனர். இது அரசின் மீதான கோபத்தை திசை திருப்பப் பயன்-படும், என காங்கிரஸ் தலைமை கையாண்ட காரணத்தினால் ஏற்-பட்ட விளைவு ஆகும்.
இந்தியாவில் முறையான நிலச்சீர்திருத்தம் நடைபெற்று இருந்தால், நகர்மயமாதலின் வேகம் கட்டுப்பாட்டிற்குள் இருந்திருக்கும். தமி-ழகத்தில் வீட்டிற்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப் போவதாக, 2006இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், இன்றுவரை சில ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிகப்பட்டு பரிதாபகரமான நிலையிலேயே இந்தத் திட்டம் உள்ளது. ஆனால் பயன்பாடு திமுக-வினருக்கு சாதகமாக இருந்தது என்பது அரசின் வஞ்சக குணத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சீர்திருத்தம் இடம் பெயர்தலைத் தவிர்க்கும். உள்ளுர் அல்லது கிராமப்புற உற்பத்தியை அதிகரிக்கும். கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும. புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்கும் என்று பல்வேறு வாய்ப்புகளை சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனாலும் இடதுசாரிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களைத் தவிர இதர பகுதிகளில் சீரிய முயற்சி மேற்கொள்ளப் படவில்லை.
இந்தியாவில் தேபாகா, சர்மா பள்ளத்தாக்கு, புன்னப்புரா வயலார், திரிபுரா, மகாராஷ்டிரத்தில் வோர்லி இன மக்கள், தெலுங்கானா விவசாயிகள் கீழ்தஞ்சை ஆகிய பிரதேசங்களில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களும், நிலத்திற்காக உயிர் பலி கொடுத்து போராடி-யுள்ளனர். விடுதலை இந்தியாவில் நிலச்சீர்திருத்தத்திற்காக மகலனோ-பிஸ் குழு அமைத்து, “நில உச்ச வரம்பின் படி 6 கோடியே 30லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக இருக்கிறது’’. என்று 1969இல் அறிக்கை சமர்ப்-பித்தது. அதன் பின் பல்வேறு காலங்களில், பல விதமான கணக்கு-களைத் தெரிவித்தனர். 2004 ஆகஸ்ட் 19 அன்று மக்களவையில் அரசு வெளியிட்ட கணக்கின் படி, நாட்டில் 73 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஏக்கர் நிலம் இருக்கிறது, என்று பிரகடனப்படுத்தினர். அதில் 54 லட்சத்து 2ஆயிரத்து 102 ஏக்கர் விவசாயிகளுக்குப் பிரித்து கொடுக்-கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் விவசாயிகளுக்கு, 12 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம் பிரித்து கொடுக்கப்பட்டு இருக்-கிறது. அதே போல், கேரளா, திரிபுரா மாநிலங்களிலும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அரசு விவரங்களில் இருந்து கோடிக்கணக்கான ஏக்கர் நிலம், மீண்டும் தனிநபர்களால் விழுங்கப்பட்டு இருக்கிறது, என்பதை நாமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில், வெள்ளையர் காலத்-தில், பஞ்சமர் நிலம் என்ற பெயரில் 5 லட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்-கப்பட்டது. இந்த நிலங்கள் தலித் மக்களைத் தவிர வேறு சாதி-யினர் விலைக்கு வாங்க முடியாது. இதை 1924, 1956 ஆண்டுகளில் எடுக்-கப்பட்ட சர்வே பஞ்சமர் நிலம் என்று குறிப்பிடுகிறது. இதுவே 1986 சர்வேயின் படி மாற்றப்பட்டு, தனியார் பெயர்களில் பட்டா வழங்கப் பட்டுள்ளது. இப்படி விற்க முடியாத நிலத்தை தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்குவதற்கு அரசே துணை போயிருப்பது, தமிழ-கத்தில் நடந்துள்ளது. (ஆதாரம், கே.வரதராஜன் எழுதிய பிரசுரம்).
இன்னொரு மோசடி சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில், தனியாருக்கு அரசு வழங்கி உள்ள நிலங்களாகும். குஜராத் மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா வீதம் வழங்கியது. பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம், ஒரு சதுர அடிக்கு ரூ, 800 வீதம் குடிமனைப் பட்டா போட்டு விநியோகித்தது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 400க்கும் அதிகமான, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு லட்சக்-கணக்கான ஏக்கர் நிலங்களை சலுகை விலையில் கொடுத்து பெரு முத-லாளிகளின் லாபத்திற்கு மத்திய அரசு துணை போய் உள்ளது. தமிழகத்திலும் இது நிகழ்ந்துள்ளது.
ஆனால் மேற்கு வங்கத்தில் நந்திகிராம், சிங்கூர் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்ட, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு காங்., பா.ஜ.க உள்ளிட்ட எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து, நிறுத்தி-யது. மேற்கு வங்கத்தில் அரசு நிலம் மிகக் குறைவாகவும், தனியார் நிலம் அதிகமாகவும் எடுக்கப்பட்டது. தனியார் நிலத்திற்கு சந்தையில் உள்ள விலை தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் உருவாக்கப்படும் தொழிற்-சாலைகளுக்கு நிலம் கொடுத்த அல்லது சம்மந்தப்பட்ட கிராமத்தினருக்கு வேலைக்கு உத்திரவாதம் தரப்பட்டது. இதற்கென சிறப்பு பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டது. ஆனால் அரசியலில் எதிரும் புதிருமாக செயல்படும் காங்கிரஸ், திரிணாமுல், பா.ஜ.க மாவோ-யிஸ்ட் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து, அதை அமைய-விடாமல் தடுத்தனர். சிங்கூரில், டாடாவின் நானோ கார் தொழிற்-சாலை அமைவதற்கு தடையாக இருந்த பா.ஜ.க குஜராத்தில் இடம் கொடுத்தது. (ஷிணிழி) குறித்து காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மாற்று அணுகுமுறையைக் கொடுத்தது, மார்க்சிஸ்ட்டுகள் மட்டுமே. இன்றைக்கும் மார்க்சிஸ்ட கட்சியின் இணையதளத்தில், மார்க்-சிஸ்ட்டு-களின் தொழிலாளர் நலன் காக்கும், கொள்கை அறிக்கையைக் காண முடியும்.
காங்கிரஸ் ஆட்சியாளர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் பன்-னாட்டு முதலாளிகளையும் அனுமதித்து உள்ளனர். உதாரணத்திற்கு, மும்பை ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில், அண்மைக் காலமாக இஸ்-ரேலியர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். என்ற தகவலை ஃபைனான்-சியல் டைம்ஸ் நாளேடு, மும்பைத்¢தாக்குதல் நடைபெற்ற 26/11க்குப் பிறகு தெரிவித்து உள்ளது. ராஜ்தாக்கரே போன்றவர்கள், மராட்டியர் அல்லாத எதிர்ப்பு இயக்கத்தில், இந்தப் பிரச்சனையை ஏன் சேர்க்கவில்லை, என்பது காங்கிரஸ், பாஜக, சிவசேனை ஆகிய அனைவருக்கும் தெரியும். ஆக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு ஏற்படும் என்று சொன்னவர்கள், உலகப் பொருளாதார நெருக்-கடிக்குப் பின் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். அடிப்படையில் நிலச்-சீர்திருத்தத்தின் மூலம் உள்நாட்டு விவசாய உற்பத்தியையும், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியையும், மேம்படுத்தாமல், தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் வளர்ச்சி பெறப் போவதிலை.
வாங்கும் சக்தியும் வேலைவாய்ப்பும்
மக்களின் வாங்கும் சக்தி (றிuக்ஷீநீலீணீsவீஸீரீ சிணீஜீணீநீவீtஹ்)க்கும், வேலை வாய்ப்பு-களுக்கும், நிறைய தொடர்புகள் இருப்பதை பேரா.பிரபாத் பட்நாயக் போன்ற பொருளாதார மேதைகள் நிறையவே எழுதி உள்ளனர். இன்-றைய முதலாளித்துவத்திற்கு சாதகமான உலகமயமாக்கல் கொள்கை, விவசாய மற்றும் சிறு தொழில் உற்பத்திகளைப் பாதித்-துள்ளது. இத்தகைய தொழில்களில் ஈடுபட்டவர்களின் வேலை வாய்ப்-பையும் பறித்துள்ளது. மேற்படி சிறு தொழில்களில் ஈடுபட்-டுள்ள-வர்கள் இடம் பெயர்ந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுவதைத் தடுப்-ப-தற்கு எந்த வித நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, முதலாளித்துவத்திற்கு சாதகமான பொருளாதார அறிஞரான கெய்ன்ஸ் சுட்டிக்காட்டிய நலத்திட்ட கொள்கைகளையும் அரசுகள் கைவிட்டன. அது முதலாளிகளை மேலும் பெரு முதலாளிகளாக மாற்-றும் பணியைச் செய்தது. அது “நிதிகளின் உலகமயமாக்கலாக’’ வளர்ந்தது. உற்பத்தியைப் பெருக்கவில்லை. எனவே தான் இந்த நிதி மூலதன வளர்ச்சியை, வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்றும், வேலை இழப்பு வளர்ச்சி என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய நிதி மூல-தனத்தின் வளர்ச்சி மற்றொரு புறத்தில் வாங்கும் சக்தியை குறைக்கிற காரணத்தினால், புதிய தேவைகள் குறைந்து உற்பத்தி தேக்கம் ஏற்-படுகிறது. இப்போதைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவே காரணம், என குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ள ஜ.நா.சபை, நோபல் பரிசு பெற்ற பேரா.ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையில் குழு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையில் பிரதானமான ஒன்று, அரசு தனது பொதுச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இந்தப் பரிந்துரை மிகச் சரியானது. ஏனென்றால், அமெரிக்காவின் வால்தெரு வங்கிகள் திவாலான போது, அதை மீட்க, அமெரிக்க அரசு 700 மில்லியன் டாலரை இழப்பீட்டு தொகையான கொடுத்தது. அதேபோல் இந்தி-யாவில், பங்குச் சந்தையின் சரிவைத் தடுக்க, ப.சிதம்பரம் நிதியமைச்-சராக இருந்த போது, இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இன்-சூரன்ஸ், வங்கி ஆகியவற்றின் லாப தொகையை, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கட்டாயப் படுத்தப்பட்டனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 7800 கோடி ரூபாய் மோசடியில் சிக்கித் திணறிய போது, இந்திய அரசே 2100 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை கொடுக்க முன் வந்தது. இந்தியாவின் பெரும் மோட்டார் தொழில் நிறுவனங்களும், இதர தொழில்களும், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போது, மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டத்துடன் முன் வந்ததை, நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகளில் இருந்து அறிய முடிந்தது.
இவையனைத்தும், சிலரின் நலனைக் காப்பவை. பெரும்பான்மையான மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த இவை உதவாது. எனவேதான் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், பொதுச் செலவை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்-தியுள்ளார்.
1980களின் துவக்கத்தில் இந்திய அரசு மேற்கொண்ட நலத்-திட்டங்கள், குறிப்பாக, கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகள், பொதுச் செலவினத்தை அதிகரித்தது என்றும், மக்களின் வேலை நாட்களை பாதிக்காமல் தடுத்தது என்றும், அதன் மூலம் உற்பத்தித் தேக்கம் இல்-லாமல் ஒரளவு வளர்ச்சி கண்டது என்றும், புதிய வேலை வாய்ப்பு-களுக்கு உதவியது என்றும், பேராசிரியர்கள் சி.பி.சந்திரசேகர் மற்றும் ஜெயதி கோஷ் ஆகியோர் எழுதிய “விணீக்ஷீளீமீt tலீணீt யீணீவீறீமீபீ’’ என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. ஆனால் உலகமயமாக்கல் காலத்தில் அரசின் பொதுச் செலவினம், முதலாளிகளுக்கு துணை போவதாக அமைந்தது. இக்-காலத்திலும், சாலை, ரயில் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதை பொது மற்றும் தனியார் கூட்டணி (றிuதீறீவீநீ - றிக்ஷீவீஸ்ணீtமீ - றிணீக்ஷீtஸீமீக்ஷீsலீவீஜீ (ஜீஜீஜீ)) மூலம் நிறை-வேற்றினர். இது 80 களின் துவக்கத்தில் இருந்ததைப் போல் அல்லா-மல், நவீன தாராளவாதத்திற்கு துணை போகிற வகையில் அமைந்தது. இதன் விளைவாக ஒன்று விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் நலிவுற்று மக்கள் இடம் பெயர்ந்தனர். இரண்டு, நவீன தாராளவாத அணுகு முறையின் காரணமாக எல்லாவற்றிலும் தனியாரின் ஆதிக்கம் உருவானது. மூன்று, மேற்படி இரண்டின் மூலம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொதுச் செலவினம் தடுக்கப்பட்டது. அது மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்த வில்லை.
இவையனைத்திற்கும் மேலாக, அரசு முதலீடான பொதுப் பணத்தை, அரசுத்துறை மூலமாகவே செலவிடுகிற போது, சம்மந்தப்-பட்ட பணியின், தரமும் வாழ்நாளும், தனியாரின் செயலை விட அதிக-மாக இருக்கும். நாம் மேலே குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் கூட்டணி என்ற பெயரில், தனியாரிடம் கொடுக்கப்படும் ஒப்பந்தங்கள் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் காரணமாகவும், லாபம் காரணமாகவும், தரக்குறைபாடு உடையதாக இருக்கும்.
அதே நேரத்தில் வாங்கும் சக்தியை பாதுகாக்கும் முயற்சி என்ற பெயரில் தொடர்ந்து, உழைப்பாளிகளை கடும் உடலுழைப்பு தொழி-லாளிகளாக பராமரிப்பது சரியா? பெரும் வளர்ச்சி ஏற்படுகிற போது, இடம் பெயர்தலும், சிறு தொழில்களின் அழிவும் தவிர்க்க முடியாதது, என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் நியாயம் இருக்கிறது. திறனற்ற (ஹிஸீsளீவீறீறீமீபீ) உழைப்பாளர்களை, திறன் (ஷிளீவீறீறீமீபீ) கொண்ட-வர்களாக மாற்றுவதும், நவீன உற்பத்திக் கருவிகளை கையாளும் திறன் கொண்டவர்களாகவும் மாற்றுவது அவசியம். ஆனால் இது நடைபெறவில்லை. காரணம் உலகமயமாக்கல் கொள்கை, உற்பத்தி சார்ந்த தொழில்களின் மீது முதலீடுகளை உருவாக்கவில்லை. ஆகவே தான் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான வேலை வாய்ப்பை வலியுறுத்த வேண்டியுள்ளது. தொடர்ந்து வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது, புதிய உற்பத்தித் துறை யூனிட்டுகள் வளர்ச்சி பெறும் என்பது, பொருளாதாரத்தின் அடிப்படை புரிதல். இதை தேவை மற்றும் விநியோகம் (ஞிமீனீணீஸீபீ ணீஸீபீ ஷிuஜீஜீறீஹ்) என்று குறிப்பிடுவர்.
தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டமும்
ஐ.மு.கூவின் அணுகுமுறையும்
கடந்த 14 வது மக்களவையின் ஆட்சியாளர்கள், இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடத்தில் இருந்தது மிகப்பெரும் நன்மையை, இந்திய மக்களுக்கு சில வகைகளில் புரிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தது. தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை அமலாக்கியது, வன உரிமை மசோதாவை நிறைவேற்றியது. போன்றவை முக்கியமானதாகும். இன்று காங்கிரஸ் கட்சி, ழிஸிணிநிகி திட்டத்திற்கு உரிமை கொண்டாடலாம் அல்லது பெருமை பேசலாம். ஆனால் அதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதே உண்மை.
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசுக்கு ஆதரவு அளிக்க ஒப்புக் கொண்ட காலத்தில் இருந்து, இடதுசாரிகள் 10க்கும் மேற்-பட்ட கொள்கை அறிக்கைகளை (றிஷீறீவீநீஹ் ஸீஷீtமீ) முன்வைத்து பிரதமரிட-மும், சோனியாவிடமும் விவாதம் நடத்தி உள்ளனர். இதை காங்கிரஸ் தலைமை மறுக்க முடியாது. இதன் விளைவுகளின் ஒன்று தான் ழிஸிணிநிகி ஆகும். 2004 செப்டம்பரில், இது குறித்த ஆலோசணை உருவானது. பின்னர் 2005 பட்ஜெட்டில் 200 மாவட்டங்களுக்கு என விரிவாக்கம் செய்தது. அதன் பின் 2007இல் அனைத்து மாவட்-டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ழிஸிணிநிகி வை இடதுசாரிகள் முன் மொழிந்ததற்கு அடிப்படைக் காரணம். கிராமப்புற மக்கள் தங்களின் வறுமையின் காரணமாக, வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். அதி-லிருந்து மீள, 100 நாள் வேலைக்கான சட்டமும், ஏற்கனவே அரசு நிர்ணயித்துள்ள ஒரு நாளைக்கு 80 ரூபாய் கூலியும் ஒரளவு உதவி செய்யும் என்பதாகும்.
இந்திய அரசு தெரிவித்துள்ள விவரத்தின் படி, 1990களில் 184 வேலை-நாட்கள், 2000இல் 135 ஆக குறைந்து, 2007இல் 74 நாட்களாக அதல பாதாளத்தில் விழுந்தது. 2005இல் தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் நிறைவேறுவதற்கு முன் 57 நாட்களாக இருந்தது. என்பதைக் கணக்கிட வேண்டும். ஒரு நபர் ஒரு வருடத்தில் மேலே குறிப்பிட்ட குறைவான நாட்கள் மட்டுமே உழைத்து, குடும்பம் நடத்து-வதன் கொடுமையை நாம் உணர முடியும். எனவே 100 நாள் வேலை உறுதி சட்டம், ரூ, 80 கூலி, குறைந்த பட்ச மாற்றத்தை கொணரும், என இடதுசாரிகள் நம்பினர்.
இந்த நம்பிக்கை வீண் போகவிலலை. சிறு முன்னேற்றத்தை, கிராமப்-புற விவசாயத் தொழிலாளிகளிடம் ஏற்படுத்தி உள்ளது. குறைந்த பட்ச வேலை நாட்களையும், வருமானத்தையும் உத்திரவாதம் செய்துள்ளது. இடம் பெயர்தலை வட இந்திய மாநிலங்களில் கட்டுப் படுத்தி உள்ளது. என்ற வகையில் இத்திட்டம் தொழிலாளர்களுக்கு நன்-மையையும், பொதுச் சொத்துக்களான, கிணறு வெட்டுதல், கால்வாய் அமைத்தல், ஏரி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற வகையில் சமூகத்திற்கு நன்மையையும் அளித்துள்ளது.
இருந்த போதிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கு, மேற்படி சட்டத்தில் முழுமையான உடன்பாடு இல்லை. எனவே தான் நிதி ஒதுக்கீட்டினை போதுமான அளவிற்கு உயர்த்த வில்லை. மற்றொரு புறத்தில் இடதுசாரிகள், சட்டம் வரையறை செய்ய வேண்டிய, தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பற்றி வலி-யுறுத்தியது வேலை வழங்க ஒரு கிராமத்திலோ, பஞ்சாயத்து யூனியனிலோ வாய்ப்பு இல்லாத பட்சத்தில் சம்பளம் 100 நாட்கள், விண்ணப்பித்த குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என வரையறை செய்துள்ளது. 5க்கு மேற்பட்ட 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் தாய்மார்கள் வேலைக்கு வருவார்களானால், ஒரு பெண்ணை, குழந்தை-களை பராமரிக்கும் பணிக்கு அனுப்ப வேண்டும், கிராம பஞ்சாயத்-திற்கு தேவையான வேலையை, கிராம சபைக் கூட்டத்தில், உழைப்-பாளர்களின் கருத்திற்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்பன போன்ற ஜனநாயக உரிமைகள் இடதுசாரிகளின் வற்புறுத்தலால் மேற்-கொள்ளப்பட்டது. ஆனால் இந்த உரிமைகள் எங்குமே பின்பற்றப்-படவில்லை. என்பதை ராஜஸ்தான் , ம.பி., பீகார், உ.பி., ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் பிரன்ட் லைன் (ஜுன் 16, 2009) ஏட்டிற்காக ஆய்வு மேற்கொண்ட ஜான் ட்ரெஸ் குழுவினர் குறிப்-பிடுகின்றனர் ம.பி.யில் பதி என்கிற கிராமத்தில் மட்டுமே, வேலை கொடுக்-காத நிலையில், சட்டத்தின் உரிமைகளைப் பயன்படுத்தி, சில நாட்களுக்கு கூலி பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் 2 இடங்களில் மட்டுமே குழந்தைப் பராமரிப்புக்கான, ஊழியர் ஏற்பாடு செய்யப்-பட்டுள்ளனர். என்பது ஆய்வுக்குழு அறிக்கை.
காண்ட்ராக்டர்களை அனுமதிக்கக் கூடாது என சட்டம் குறிப்பிடு-கிறது. ஆனால் பணியிடங்களில் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். மஸ்டர் ரோல் (பெயர் பதிவு) ஊழல், வங்கி கணக்கு துவங்குவதில் முறைகேடு போன்ற முறைகேடுகளைக் காணமுடிந்ததாக குறிப்-பிடுகின்றனர். தமிழகத்தில தற்போதைய தேர்தல் அறிக்கையில் திமுக, வரும் காலங்களில் ழிஸிணிநிகி க்கான வேலைத் திட்டத்தை 150 நாட்-களுக்கு உயர்த்துவோம், என அறிவித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு உரிய முறையில் செயலாற்றவில்லை. என்பதை மத்திய தணிக்கைக்குழு 2006 ஆண்டு பணியை தணிக்கை செய்து குறிப்பிட்டுள்ளது. 10 மாவட்-டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. என குறிப்பிட்டுள்ளது. கூலி ரூ. 40 மட்டுமே கொடுத்தனர். என்பதை எதிர்த்து, விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் போராடிய கிராம மக்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையை தமிழ்நாடு அரசு பாதுகாத்தது. ஏனென்றால் தமிழக அரசின் கொள்கை ழிஸிணிநிகி விற்கு எதிரானது. மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர். உழைத்தால் மட்டுமே கூலி என்ற வார்த்தைகள் மூலம் தொழிலாளர்களை அவமானப்படுத்தியதுடன், சட்டத்தையும் புரிந்து கொள்ள மறுத்தார். ஆண், பெண் பாரபட்சம், தலித், தலித் அல்லாதோர் பாரபட்சம் போன்றவை தமிழகத்தில் ழிஸிணிநிகி செயல்-பாட்டில் இருக்கிறது.
வேலைக்கு வராதோரின் பெயர்களை எழுதி, கூலியை திருடிச் செல்லும் காண்ட்ராக்ட் முறையும், தமிழக கிராமங்-களில் இருக்கிறது. 150 நாட்கள் உயர்த்துவோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக 100 நாட்கள் எந்தெந்த கிராமங்களில் வேலை கொடுத்தோம் என்பதை ஏன் குறிப்பிடவில்லை. இவையன்றி, திமுக கடந்த காலத்தில் நியமனம் செய்த ழிஸிணிநிகி அமலாக்கத்திற்கான, கிராமப் பஞ்சாயத்து குமாஸ்தாக்களை வேலை நீக்கம் செய்து அனுப்பிவிட்டு, தான் ஆட்சிக்கு வந்த பின், தனது கட்சியைச் சேர்ந்-தவர்-களை நியமனம் செய்தது. அப்பட்டமாக அரசு திட்டத்தில், தனது கடசியின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டது திமுக.
எல்லாவற்றிற்கும் மேலாக, ழிஸிணிநிகி யின் வெற்றி, ஒதுக்கப்படும் நிதியில் தான் இருக்கிறது. ஐ.மு.கூ. அரசு இது குறித்து போதுமான அக்-கறை செலுத்தவில்லை. உதாரணம் 5 ஆண்டுகளில் சுமார் 1.25 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போதைய பட்-ஜெட்டில் 30,100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது தேர்தல் ஆண்டு என்ற சூழலிலும், 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருந்ததில் 6 ஆயிரம் கோடியை இத்திட்டத்திற்கு குறைத்தது அக்கறை இன்மையின் வெளிப்பாடே ஆகும். ஆனால் விரல் விட்டு எண்ணுகிற எண்ணிக்கை கொண்ட முதலாளிகளின் நலனுக்காக, 30 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இப்படி முதலாளிகள் கண்ணில் வெண்ணையையும், கிராம தொழிலாளிகள் கண்ணில் சுண்ணாம்பையும் வைத்தது தான், மத்திய ஐ.மு.கூ. அரசு.
வேலையின்மையைத் தீர்ப்பதில் அரசின் பாங்கு
“வேலையில்லா திண்டாட்டம்’’ என்ற சமூக அவலம், நமது நாட்-டில் ஒழிக்கப்பட வேண்டுமானால், அரசு தீவிரமாக செயலாற்ற வேண்-டும். தற்போதைய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் காலிப்பணி இடங்களை பூர்த்தி செய்வதன் மூலம் சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உத்தரவாதமான வேலை வழங்க முடியும். இதன் மூலம் அரசின் பொதுச் செலவினமும் உயரும். சுமார் 35 லட்சம் குடும்பங்களின் நுகர்வுத் தன்மை, பஞ்சாலை, உணவு, மற்றும் வீட்டுத் தேவைகளின் உற்பத்தியை அதிகரிக்கும். புதிய உற்பத்தி நிறுவனங்கள் துவக்கப்பட வேண்டிய தேவை உரு-வாகும். அதன் மூலமும் வேலை வாய்ப்பு பெருகும்.
இத்தகைய அணுகுமுறை, அரசின் கொள்கை மாற்றத்தின் மூலமே சாத்தியம். புதிய பொருளாதாரக் கொள்கையும், உலகமயமாக்கல் கொள்¬-கயும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மன்மோகன் சிங் குறிப்பிட்ட “மனித முகம் பொருந்திய உலகமயமாக்கல் கொள்கை’’, என்ற பெயரில் பழைய கள்ளைப் புதிய பாட்டிலில் ஊற்றிக் கொடுத்த சம்பவமே, கடந்த 5 ஆண்டுகளில்¢ நடந்துள்ளது. இது உதவாது, அணுகுமுறை இரண்டு வகையில் மாறவேண்டும். ஒன்று அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமன விகிதாச்சாரத்தை உயர்த்தும் வகையில் இருப்பது. இரண்டு வெளிநாட்டிலிருந்து இறக்கு-மதி செய்யப்படுகின்ற நுகர்வு மற்றும் மின்னனு பொருட்களுக்கு தடைவிதித்து உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கவும், அதிகரிக்கவும் வாய்ப்பு கொடுப்பது. இந்த இரண்டு கொள்கை மாற்றங்களை இந்திய அரசு பின்பற்றுவதற்கு, நவீன தாராளமயமாக்கல், நவ காலனி-யாதிக்கத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்த விழைகின்ற, ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கிகளின் கட்டளைகளுக்கு அடிபணியக் கூடாது.
ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், அமெ-ரிக்காவிற்கு பறந்து சென்று, ஜ.எம்.எப்.பின் ஆலோசனையைப் பெற்று வரும் கடமையை செய்து வரும், நிதியமைச்சரின் அனிச்சைச் செயல், அயல்துறைக் கொள்கைகளில் இருந்தே மாற்றம் பெறும். தற்போது இந்தியா அமெரிக்காவிற்கு இளைய பங்காளியாக மாற விரும்புகிறது. அமெரிக்காவிற்கு சாதகமான பொருளாதாரக் கொள்கைகளையே, அது இந்தியாவில் திணிக்கும். உதாரணத்திற்கு “அணுசக்தி ஒப்பந்தம்’’ என்ற தொழில் நுட்ப ஒப்பந்தத்துடன், கூடவே பல வர்த்தக ஒப்பந்-தங்-கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்கள், இந்-தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சிகளை பாதிப்பதில் துவங்கி, சில்லரை வர்த்தகம் வரையிலும் பாதிக்கும் சூழலை உருவாக்கும். 2008, செப்டம்பரில் இந்திய அரசு திட்டத்தைத் தொடர்ந்து, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்தியா வந்து தொழில் நுட்ணீகங்கள் வெளிப்படுத்தி செய்தி வெளியிட்டன. மற்றொரு புறம் சில்லரை வர்த்தகத்தில் ஈடு-படத் துடிக்கும் வால்மார்ட் இந்தியாவிற்குள் வருவதை தடுக்கும், முழு-மை-யான முயற்சி மத்திய அரசிடம் இல்லை.
மேற்படி நிகழ்வுகளுக்கு அடிப்படை நவகாலனி ஆதிக்கத்திற்கு உடன் -படுவது ஆகும். காலனி ஆதிக்கத்திற்கு ஆட்படும் நாடு, தனது சுயேட் சையான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது, என் பது கடந்த கால அனுபவம். எனவே வேலை வாய்ப்பை உருவாக்க, உற் பத்தியைப் பெருக்க, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளுடன், அயல்துறைக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இவையன்றி உள்நாட்டு அளவிலும் சில சட்டதிட்டங்களை, எளிய-வர்-களைப் பாதுகாக்கின்ற வகையில் உருவாக்க வேண்டும். இந்தியா விடுதலைப் பெற்ற காலத்தில், நேரு ஆட்சியில் இவை இருந்தது. இந்தியாவின் பாரம்பரியமான குடிசைத் தொழில்களில் ஈடுபட்ட-வர்கள் பாதுகாக்கப்படும், வகையில், இந்திய பெரு முதலாளிகள் மேற்படி தொழில்களிலும் உற்பத்தியிலும் ஈடுபடுவதில் இருந்து தடுக்கப்-பட்டனர். உலகமயமாக்கல் காலத்தில் இந்த சிறு தொழில் பாதுகாப்பு நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. உலக முதலாளி-களை மட்டும் அனுமதிக்காமல், உள்ளூர் பெரு முதலாளிகளையும் அனுமதிக்கிற போது, அரசின் ஸ்திரத் தன்மை உறுதி செய்யப்பட்டது. வளர்ச்சியின் கட்டத்தில் சிறு தொழில்கள் அழிவது தடுக்கப்பட முடி-யாததாக இருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடு-பட்டுவரும் தொழிலாளர்களின் திறனை, நவீன உற்பத்திக்கு சாதக-மாக உயர்த்தி, அவர்களின் வருமானத்தை, வாங்கும் சக்தியை பாது-காக்காமல் மேற்கொள்வது, இந்தியப் பொருளாதாரத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும். இதுவே இப்போது நடைபெற்று உள்ளது. எனவே ரிலையன்ஸ்,, டாடா, பிர்லா உள்ளிட்ட பெரு முதலாளிகளின் வணிகத்திற்கு, சிறு தொழில்களை பாதிக்காத கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்.
மூன்றாவதாக, இந்திய அரசிற்கான நிதி வருவாயை உரு-வாக்குவதாகும். நீண்டகாலமாக குறிப்பிட்டு வரும் வருமான வரி பாக்கி 1.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிப்பது, வாராக்கடன் பட்டிய-லில் வங்கிகள் வைத்துள்ள 1.3 லட்சம் கோடி ரூபாயை மீட்பது, சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளில் உள்ள, பல லட்சம் கோடி ரூபாய் களை இந்திய அரசு கைப்பற்றுவது, போன்ற மூன்று பிரதானப் பணிகளை அரசு மேற்கொண்டால், அரசின் வரு-வாய் பெருகும். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான, முதலீடு கிடைக்கும். இத்தகைய அணுகுமுறையை கடந்த கால ஆட்சி-யாளர்களான காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி மேற்கொண்டது இல்லை. இனி மேற்கொள்ளப் போவதும் இல்லை. தற்போது அத்-வானி, சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை இந்தியாவிற்கு எடுத்து வர பாஜக முயற்சிகள் மேற்கொள்ளும் என்று பேசி வருகிறார். இது-வும் கடந்த கால வாக்குறுதியின் ஒரு பகுதியே. அல்லது கானல் நீரை காண்பித்து ஏமாற்றுவது போன்றதே.
நான்காவதாக, தற்போதைய தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை 200 நாட்களுக்கு உயர்த்துவது, கூலியை ரூ. 150 ஆக உயர்த்து-வது, இத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவு செய்வது போன்றவை அவசியமானதாகும்.
மேற்படி அணுகுமுறையை கடந்த கால அனுபவங்களில் இருந்து, புதிய மாற்று அரசு அமைவதன் மூலமே, மேற்கொள்ள முடியும். காங்-கிரஸ், தலைமையிலான ஐ.மு.கூட்டணி அல்லது பாஜக தலைமை-யிலான தே.ஜ.கூ. ஆகியவை மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. எனவே நோய் உருவாக்கத்திற்கு காரணமான அல்லது நோய் பரப்பும் கிருமிகளாக செயல்பட்ட காங்கிரஸ், பாஜக கூட்டணிகளை முறியடிப்பதும், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக மாற்று சக்திகளை தேர்வு செய்வதும், காலத்தின் தேவை, என்பதை உணர வேண்டும்.
மாற்று அணி என்பது காலத்தின் கட்டாயம்.
அதை அரியணை ஏற்றுவது நமது கடமை.
ஒவ்வொருவரும் நன்கு சிந்திப்போம்.
சிறந்த கூட்டணிக்கு வாக்களிப்போம்.
மூன்றாவது மாற்று அணியினை ஆதரிப்போம்.
2009 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்டது