திங்கள், 12 ஜூலை, 2010

மாவோயிஸ்டுகள்

மாவோயிஸ்டுகளும் மம்தாவும்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சாதனையைப் படைத்த பெருமை மேற்கு வங்க மக்களுக்கு உண்டு. 30 ஆண்டு காலம் தேர்தல் முறையில் தொடந்து மக்களால் ஒரு கம்யூனி°ட் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவது, முதலாளித்துவத்தை எரிச்சலூட்டியது என்றால் மிகையல்ல. 44 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 31 பேர் இடது முன்னணியைச் சேர்ந்தவர்கள் இடதுசாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எண்ணிக்கையில் சரிபாதி மத்திய அரசை, மக்களுக்கான அரசாக வழிநடத்து-வதில் 50 சதமான ஆற்றலைக் கொடுத்த மாநிலம், ஆனாலும். “நந்திகிராம்” பிரச்சனை அறவுஜீவிகளையும் சந்தேகம் கெள்ளச் செய்துள்ளது. எதிர்ப்பு, கண்டனம், நாடாளுமன்றத்தில் விவாதம் போன்ற கடுமையான சவால்களை மார்க்சி°ட் கட்சியும், இடது முன்னணியும் எதிர் கொண்டுள்ளது.

நந்திகிராம் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்த காரணம் என்ன?

நமது நாடு ஒரு அரை நிலபிரபுத்துவ, முதலாளித்துவ நாடு என்பது தெளிவானது, இங்கு அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் அரை நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிப்பதாகவே இருக்கும் என்பதில் வியப்பில்லை, ஊடகம் என்கிற நான்காவது தூணும், மேற்படி முதலாளிகளால் தான் நடத்தப்படுகிறது. சின்னதை பெரிதாக்குவதும், பெரிதான ஒன்றை இருட்டடிப்பு செய்வதும் ஊடகங்களின் வித்தைகளில் ஒன்றாகும். “ஒன்றரை லட்சம் விவசாயிகளின் தற்கொலை” என்ற செய்தி மூலையில் சின்ன செய்தியாகவும், நந்திகிராம் தினசரி தலைப்பு செய்தியாகவும் வருவதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஜனவரி - 5, 6 - 2007 தேதிகளில் வன்முறையைத் துவக்கிய பூமி உச்சத் பிரத்தியோர்க் கமிட்டி (க்ஷருஞஊ) (நிலப் பாதுகாப்பு இயக்கம்), நந்திகிராம் என்றழைக்கப்படுகிற பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள மார்க்சி°ட்டுகளை வேட்டையாடியது. பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டார். 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டார். இன்னும் பலர் சித்திரவதைக்கு உள்ளானர். 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி வேறு பகுதியில் குடியேறினர். இந்த எண்ணிக்கைக்குட்பட்ட குழந்தைகள் படிப்பை நிறுத்தினர். வீடுகளை இழந்தனர். நிலம், சொத்து போன்றவை இருந்தும், அரசு மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்களின் உதவியினால் உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்-பட்டனர். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ், ளுருஊஐ, மாவோயிஸ்டுகள், உலேமா ஜமாத்இ போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து, மார்க்சிஸ்ட் மற்றும் ஆதரவு குடும்பங்களை வெளியேற்றினர். பிப்ரவரியில் மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா, இராசாயனத் தொழிற்-சாலையைத் துவக்கவில்லை என்பதை பகிரங்க-மாக அறிவித்ததுடன், நிலம் கையகப்-படுத்தும் திட்டத்தையும் கைவிட்டதாக அறிவித்தார், நந்திகிராம் பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் - 14 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு, மேற்படி அகதிகள், மறுவாழ்வு மையம், கலகக் கும்பல்களின் செயலை பின்னுக்குத் தள்ளியது.

பதினோறு மாத காலம் அகதிகள் முகாமில் வாழ்ந்த மக்கள் தன் சொந்த வசிப்பிடத்திற்கு திரும்பியதை, மீண்டும் கைப்பற்றியது (சுநு ஊஹஞகூருசுநு) என்ற பெயரின் ஊடகங்கள், ஆளுநர், அறிவுஜீவி உள்ளிட்ட அனைவரும் கண்டித்-திருப்பது, வர்க்கக் கூட்டணியின் ஆதங்கம், அகதிகள் திரும்பியதில் மார்க்சி°ட் ஊழியர்கள் 30 பேர் கொல்லப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.

நிலம் கையகப்படுத்துவதை மேற்குவங்க அரசு உண்மையில் கைவிட்டு விட்டதா?

நந்திகிராம் பிரச்சனையை செய்தியாக ஆக்குகிற ஊடகம், அரசியல் தேவைக்கு பயன்படுத்தும் பா.ஜ.க, திரிணாமுல், நக்சலைட், மாவோயிஸ்ட் போன்ற அனைவரும், “சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தை, நிலம் மீட்புக் குழுவினரை, மேற்கு வங்க அரசு ஒடுக்கியது”, என்று தான் துவக்குகின்றனர். உண்மையில் மேற்குவங்க அரசு, நந்திகிராமில் அமைக்க இருந்த இராசாயன ஆலையை வாபஸ் பெறுவதாகப் பிப்.2007இல் அறிவித்தது. நிலம் கையகப்படுத்தாது, என்பதை தெளிவுபடுத்தியது. இத்தகைய அறிவிப்புகளை அரசு வெளியிடுவதற்கு முன்பாகவே, “நில மீட்புக்குழு” என்ற பெயரிலான கலகக்குழு கிராமங்களைக் கைப்பற்றிவிட்டது. “நில மீட்பு” என்ற வார்த்தை, கம்யூனிஸ்ட்களால் உருவாக்கப்பட்ட வீரியம் கொண்ட வார்த்தை, அதை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்துவதில் முதலாளித்துவமும், மேற்படி இயக்கமும், ஊடகங்களும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

நமது நாட்டிலேயே நிலச்சீர்த்திருத்தை முறையாக அமல் படுத்தி, விவசாய உற்பத்தியை, கிராமப்புற மேம்பட்டை வளர்ச்சி பெற செய்தது இடது முன்னணி அரசான மேற்கு வங்க அரசு மட்டும் தான். அப்படி இருக்கை-யில் ‘நில மீட்பு’ என்ற பெயரை இடது முன்னணிக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட முயற்சியே, மேற்படி செய்தி-களுக்கு அடிப்படை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சன கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களும், மேற்படி செய்திகளுக்கு அடிப்படை. அவர்களே இந்தப் பிரச்சாரத்திற்கு இறையாகியுள்ளனர் ஆந்திராவில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய நிலமீட்பு போராட்டத்தையும், 7 பேர் படுகொலை ஆனதையும் ஏன் கண்டு-
கொள்ளவில்லை என்ற கேள்வி மிக நியாயமானது.

அறிவு ஜீவிகள் பிரச்சாரத்திற்கு இறையாவார்களா?

அறிவு ஜீவிகள் தரவுகளை ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைக்கின்றனர். கடந்த நவம்பர் 5ம் தேதி முதல், இன்று வரை முன்வைக்-கப்படும் தரவுகள் என்ற செய்தி அனைத்தும், முதலாளித்துவ ஊடகங்களின் வர்க்கத்தை மறந்து விட்டு, செய்தியை மட்டும் பார்க்கிற போது, ஏற்படுகிற ஊசலாட்டம் , அறிவு ஜீவி-களையும் அசைத்திருக்கிறது.

நேம் சாம்ஸ்கி, தாரிக்அலி, முகம்மது அமீன், வால்டன் பெல்லோ போன்ற உலக அறிஞர்கள், “நந்திகிராமில் நடந்த கலவரத்தையும், அதற்கு பின்னால் உள்ள சர்வேதச அரசியல் பின்-னணியும் இணைத்து பார்க்க வேண்டும்,’’ என்று விடுத்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத அல்லது பிரசுரிக்காத ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமான ஊடகங்களாகத் தானே இருக்க வேண்டும். அந்த வேண்டுகோள் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கைகளிலும், தி இந்து விலும் பிரசுரமானது. அதன் பின் இந்திய அறிவு ஜீவிகள் சற்று மௌணம் காக்கின்றனர் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேதா பட்கர் போன்றவர்கள் அறிவு ஜீவிகள் என்ற பட்டியலில் இருந்து, அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பிரநிதிகள் என்ற பட்டியலில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள். வெளிநாட்டு நிதியைக் கொண்டு “எளிய’’ வாழ்க்கை நடத்துபவர்கள் காந்தியின் அகிம்சையை உதட்டில் கொண்டு, நக்ஸல்-களுடன் உளமார்ந்த நட்பு கொண்டவர்கள். அதனால் தான் இந்திய மண்ணில் ஆ°திராவில் நடைபெறும் நக்ஸலிஸத்தை எதிர்த்தும், மேற்கு வங்க மண்ணில் உள்ள நக்ஸலிஸத்தை ஆதரித்தும் பேச முடிகிறது.

மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது எப்படி?

உண்மை தான் நவ-10ம் தேதி நந்தி கிராம் பகுதிகளில் சொந்தக் காரர்கள் தங்களுடைய வீடுககளுக்கு திரும்பிய பின், மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ், ளரஉi, நக்ஸல் மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் நடத்தின. பந்த்-ன் போது, அரசை வெறுப்பூட்டும் செயல்களில் நடந்தன. ஆனால், அசம்பாவிதங்கள் நடைபெற-வில்லை. மேலும் ஒரு நாள் போராட்டம் நீடித்ததே அன்றி, தொடர் வேலைநிறுத்தம் அல்லது காலவரையற்ற பந்த் என்ற அறைகூவல் வெற்றி பெறவில்லை.

“நவ 7, சோவியத் மண்ணில் ஜார் மண்ணை வீழ்த்தி புரட்சி வெற்றி பெற்ற நாள். அந்த தினத்தை குறி வைத்து இந்திய ஸ்டாலின்ஸ்டுகள், நந்தி கிராமில் வன் முறையைக் கட்ட-விழ்த்து விட்டனர்,’’ என்று வாரப் பத்திரிக்கை
பத்திரிக்கைகளான டெஹல்கா, த சண்டே இண்டியன் போன்றவை செய்தி வெளியிட்டுள்ளன. “மகா கொடுமையான தாக்குதல்களும், கொலைகளும், கற்பழிப்புகளும் கூட நடந்துள்ளன,’’ என்று வெறியூட்டும் செய்திகள் வந்த வண்ணம் இருந்த போதும் கூட, காலவரையற்ற வேலைநிறுத்தம் ஏன் வெற்றி பெறவில்லை.? என்று ஊடகம் அல்லது முதலாளித்துவம் கேள்வி எழுப்பிப் பார்த்த-துண்டா? மாறாக நந்திகிராமில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. அதையும் ஊடகங்கள் திரித்து செய்தியாக்கின. டெஹல்கா பத்திரிக்கை, உலேமா ஜாமாத் இ என்ற அமைப்பில் பிரதிநிதி உள்ளிட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மிரட்டி, வெற்றிப் பேரணிக்கு அழைத்து வந்தனர், என எழுதியுள்ளது. ஃபிரண்ட்லைன் பத்திரிக்-கையில் வெளிவந்த புகைப்-படம் இதை மறுக்கிறது. பேரணியில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்பது தெளிவாகிறது.

ஊடகத்தின் அடுத்த தாக்குதல், நவ - 21 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற வேலை நிறுத்தம் சார்ந்து இருந்தது. “தஸ்லீமா நஸ்ரூதீன் என்ற எழுத்தாளரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்,’’ என்ற கோரிக்கையை பிரதான-மாக்கி நடைபெற்ற வேலை நிறுத்தம், பின் கலவரமாக மாறியது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை போனது. ராணுவத்தை தயக்கமின்றிஅழைத்தது மாநில அரசு. ஆனால் ஊடகங்கள், நந்திகிராம் பிரச்சனை மீதான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலவரம் என செய்தி வெளியிட்டது.

குஜராத் சம்பவத்துடன் நந்திகிராமை ஒப்பிடலாமா?

குஜராத் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதை மிக சமீபத்தில் டெஹல்கா அம்பலப்படுத்தியது. மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியின் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டன. 3000க்கும் அதிகமானோர் கொலை செய்யப்-பட்டனர். மாநிலத்தில் இஸ்லாமியர்கள் குடியிருந்த அனைத்துப் பகுதியிலும் கலவரம்- படுகொலைகள் இணைந்து நடந்தது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக வெட்டி கொல்லப்பட்டார். நீதிமன்றம் மகராஷ்ட்டிராவுக்கு மாற்றப்பட்டது. மனித உரிமை ஆணையம் தலையிடுவதற்கு அல்லது பார்வையிடுவதற்கான அனுமதி பல மாதங்கள் கடந்த பின்பு தான் வழங்கப்பட்டது. தீஸ்தா செதல்வாத் என்ற மனித உரிமைப் பேரணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவமானப்-படுத்தப் பட்டார். நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாயி கலவர காலத்தில், மத மாற்றம் தடுக்கப்பட வேண்டும் என சம்மந்தம் இல்லாத வார்த்தை-களைப் பயன்படுத்திப் கொண்டிருந்தார்.

இத்தகைய மனித தன்மையற்ற செயல்-களுடன் மேற்கு வங்கத்தில் நடந்த நந்திகிராம் சம்பவத்தை இணைப்பது கீழ்த்தரமான அரசியலாகும். மேற்கு வங்கத்தில் 44 பேர் படுகொலை செய்யப்-பட்டுள்ளனர். அதில்14 பேர் துப்பாக்கி சூட்டிலும், 30 பேர் திரும்ப தனது வீடுகளுக்கு திரும்பிய மார்க்சிஸ்ட் ஊழியர்-களும் ஆவர். ஜனவரியில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியு-டன் பேச அரசு முயற்சித்தது. ஆளுநர் பேசியுள்ளார், ஜோதிபாசு பேசியுள்ளார். மம்தா பானர்ஜி தனது அரசியல் கீழ்த்தனத்தை ஒரு போதும் மேம்படுத்த முயற்சிக்க வில்லை. நாடாளு-மன்றத்தில் மாநில அரசின் செயல்பாடு குறித்து விவாதிக்க வேண்டியதில்லை என்ற போதும், மார்க்சிஸ்ட் கட்சி சம்மதித்தது. அகதி-களாக ஆளும் கட்சியின் ஊழியர்கள், குடும்பங்கள், குழந்தை குழந்தைகள் 11 மாத காலத்தை கழித்து வந்ததை ஜீரணித்துக் கொண்டது. எந்த பத்திரிக்கையாளரும் கொலை செய்யப்-படவில்லை. த சண்டே இந்தியன் பத்திரிக்-கையாளர் தான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருடன் போனதால் தான் நந்திகிராமத்-திற்குள் அனுமதிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய ஒப்பீட்டுக்குப் பின்னர் பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஊடகங்களுக்கு அது போன்ற உரிமையை யாரும் வழங்கவில்லை, என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மனித உரிமை ஆணையம் ஒரே வாரத்திற்குள் பார்வையிட்டு அறிக்கையையும் வெளியிட்டு உள்ளது.

மாவோயிஸ்டுகள் பா.ஜ.க வுடன் உறவு என்பது நம்பும்படியானதா?

நாடாளுமன்றத்தின் எதிர் கட்சித்தலைவரும், பா.ஜ.கவின் தேசியத் தலைவர்களில் ஒருவருமான எல்.கே. அத்வானி, நந்திகிராமுக்குச் சென்ற போது,கம்யூனிஸ்ட் கொடியுடன் மாவோயிஸ்டுகள் வரவேற்ற செய்தியை படத்துடன் பார்த்தவர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். “எதிரிக்கு எதிரி நண்பன்’’ என்ற முறையில் பா.ஜ.க மாவோயிஸ்டுகளை மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கிறது. தரகு முதலாளித்துவம் தான் இந்திய ஆளும் வர்க்கம் என்ற விமர்சனத்தைக் கொண்டிருந்த மாவோயிஸ்டு-கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும், உலேமா மாத் இ என்ற இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புடனும் சமரசம் கொள்ள தயங்காத போது, பா.ஜ.கவுடன் சமரசம் செய்து கொள்ள என்ன தயக்கம் இருக்கப் போகிறது.

ராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தின் போது, சுஷ்மா சுவராஜ் ,“நேபாளத்தில் நல்லவர்களாக காட்சி அளிக்கும் மாவோயி°டுகள், மே.வங்கத்-தில் மட்டும் மோசமானவர்கள் என சி.பி.எம் குறிப்பிடுவது ஏன்,’’ என மறைமுகமான சான்றிதழை பா.ஜ.க வழங்கியது. மாவோயிஸ்டு-கள் என்ற ஒரே பெயரில் இரு கொள்கை-களுடன் செயல்படுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ளவில்லை. நேபாளத்தில் மிகப்பெரிய மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய மாவோயிஸ்டுகள், பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருந்தனர். மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நந்திகிராம் என்கிற சிறு பகுதிக்குள் நுழைந்து மக்களை விரட்டி விட்டதுடன், பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காதவர்கள் இந்த வேறுபாட்டை பா.ஜ.க ஏற்க மறுக்கிறது.

ஊடகங்களும் தமிழகத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் என்ற விவாதம் நடந்தால் அதை தீவிரவாத கண்ணோட்டத்துடன் செய்தியாக்குவதும், அதையே மேற்கு வங்கத்தில் நல்லவர்களாக சித்தரிப்பதும் மேற்கு வங்கமும், தமிழகமும் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் இரண்டும் மாநில அரசுகள் என்ற பார்வை இல்லை. மேற்கு வங்க அரசின் வேண்டு-கோள் படி, சி.ஆர்.பி.எஃப் நந்திகிராமத்திற்குள் புகுந்து ஒரே ஒரு ஏ.கே.47 துப்பாக்கியையும் ஜெலட்டின் குச்சி ஒன்றையும் கண்டறிந்தனர்,’’ என குறிப்பிடுகின்றது ஒரு பத்திரிக்கை. அதே நேரத்தில் மனித உரிமை ஆணையம், தன்னுடைய அறிக்கையில், (நவ-15- என்.எச்.ஆர்.சி.) கன்னி வெடிகள் ஜெலட்டின் குச்சிகள், ஏ.கே-47 துப்பாக்கிகள் பலவும் இருந்ததாகவும், அவற்றில் தெழுங்கு மொழியில் எழுதப் பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. அதோடு வீடுகளில் கிடைத்த மார்க்சீய இலக்கியங்கள் பெரும்பாலும் தெழுங்கில் எழுதப்பட்டதாக குறிப்பிடுகிறது. மனித உரிமை ஆணையமே குறிப்பிட்ட இத்தகைய விவரங்களை முதலாளித்துவ ஊட-கங்-கள் ஏன் வெளியிடவில்லை, என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நாடளுமன்றத்தில் விவாதிக்க முதலில் மறுத்தது ஏன்?

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் போது கேள்வி நேரங்களை முழு-மையாக ஒத்திவைத்து விட்டு, அவையின் மையப் பிரச்சனையாக நந்திகிராம் பிராச்சனையின் மீது விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க வெளிநடப்பு மற்றும் ரகளையில் ஈடுபட்டது. மார்க்சிஸ்ட் கட்சி இது போன்று மாநில பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதித்தது இல்லையே, இப்போது 371 பஞ்சாயத்து யூனியனைக் (பிளாக்) கொண்ட மேற்கு வங்கத்தில், ஒன்றரை பிளாக் என்ற அளவில் உள்ள ஒரு பகுதியின் பிரச்சனையை, நாடாளு-மன்றத்தில் விவாதிக்க வேண்டியதில்லை, என்று சொன்னது, தொடந்து பா.ஜ.க ரகளையில் ஈடுபட்டதால், மக்கள் பணம் வீணாவதைக் தடுக்கிற தேவையில் இருந்து நாடாளு-மன்றத்தில் விவாதிக்க சம்மதம் தெரிவித்தது. நாட்டையே அச்சுறுத்தும் நக்சல் தீவிரவாதம் குறித்தும் விவாதிக்க வேண்டும், என்ற சி.பி.எம்.-ன் வேண்டுகோளை பா.ஜ.க, திரிணாமுல் போன்ற கட்சிகளும், ஊடகமும் புறக்கணித்தது. இதிலிருந்தே தேச நலனில் அக்கறை செலுத்தும் கட்சியை புரிந்து கொள்ள முடியும்.

மார்க்சிஸ்ட் கட்சி, ஜனநாயகத்தை மதிப்பதில்லை என்ற அவதூறு, நாடாளுமன்ற விவாதத்தின் போது தகர்ந்தது.3000 பேரைக் கொலை செய்த நரேந்திர மோடி மற்றும் குஜராத் மாநில அரசு குறித்து நாடாளு-மன்றத்தில் விவாதிக்க முன்வராத பா.ஜ.க, நந்திகிராம் பிரச்சனை மூலம் அம்பலமானது. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டி-லும், தனது பதிலில், மாவோயிஸ்டுகள் இருந்தது உண்மை. மேற்படி பிரச்சனைக்கு திரிணாமுல் காங்கிரஸ் உடன் இணைந்து துணை போனது உண்மை என்பதை ஒப்புக் கொண்டார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா என்ற தனி நபர் தான் காரணமா?

மாநிலத்தின் இடது முன்னணி 30 ஆண்டு-களைக் கடந்து ஆட்சி நடத்தி வருகிறது. 24 ஆண்டுகள் கடந்து ஆட்சியில் இருக்கிறார். புத்ததேவ் பட்டாச்சார்யா உலகிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் அரசு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டது கேரளாவில் தான். முதன் முதலில் ஒரு மாநில அரசு கலைக்கப்-பட்டதும் கம்யூனிஸ்ட் அரசு தான். அதுவும் கேரளாவில் தான் நிகழ்ந்தது. நபர் அல்ல பிரச்சனை, கொள்கை தான் காரணம். ஜோதி-பாசு அவர்கள் முதல்வராக இருந்த போது, நிலச்சீர் திருத்தம், விவசாய உற்பத்தி, கிராமப்புற மேம்பாடு, பள்ளி கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி-களுக்கான அதிகாரம், பொதுவிநியோகம் போன்றவை தீவிரமாக திட்டமிட்டு அமல் படுத்தப்பட்டது. அதற்கு காரணம் இடது முன்னணியின் கொள்கை. அன்றைக்கு பிரச்சனை இருந்தது. கூர்க்கலாந்து போராட்டம், ஆனந்த மார்க்கிகளின் போராட்டம், புரூலியாவில் ஆயுத மழை போன்றவை பூதாகரமாக்கப்பட்டது. ஜோதிபாசுவை நல்லவர் என்று சொல்லும் மம்தா கூட, 1992-ல் ரைட்டர்ஸ் பில்டிங்-ல் இருந்த முதல்வர் அறையில் தகராறு செய்து கீழ்த்தரமான போராட்டத்தை நடத்தியவர் தான் அதையும் ஜனநாயகப் பூர்வமான முறையில் எதிர் கொண்டது இடது முன்னணி. உலமயமாக்கலுக்கு மாற்றான கொள்கை அணுகுமுறையைக் கொண்ட இன்றைய இடது முன்னணி, தொழில்வளர்ச்சி, உயர்கல்வி, தொழில்நுட்பம், அதிநவினம் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுவும் கொள்கை சார்ந்ததே அல்லாமல், தனிநபர் சார்ந்தது அல்ல. எனவே இது ஒரு முதலாளித்துவ பிரச்சாரம். முதலாளித்துவ கட்சியில், தனிநபர் விமர்சனத்தின் மூலம் மாற்று நபரை முன்நிறுத்தி அரசியல் செய்வது வழக்கம்.
எப்படி இருந்தாலும் நந்திகிராம் பிரச்சனை, இடது முன்னணிக்கு மட்டுமல்லாது மக்களுக்கு ஓர் எச்சரிக்கை. ஏன் என்றால் உழைக்கும் மக்-களை இடது முன்னணியை விட வேறுயாரும் பாதுகாக்கும் வாய்பில்லை.

2007 டிசம்பரில் இளைஞர் முழக்கதில் வெளிவந்த கட்டுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக