“எந்த புதிய தேவையும் இல்லாத மக்கள் அல்லது போராட்ட உரிமைகூட மறுக்கப்பட்ட அடிமைகள் வாழும் நாட்டில் மட்டுமே தீவிர போராட்டங்களுக்கு வாய்ப்பில்லை”.
கேள்வி 1: “சுரேஷ் கல்மாதி கண்காணிக் கப்படுவார்,” என பிரதமர் கூறுகிறார். சுரேஷ் கல்மாதியின் பத்திரிகை தொடர்பு உதவியாளர் ஜி.ராஜாராமன், “எந்த ஒரு திட்டமானாலும் ஒப்பந்தத்திற்கு விடப்படும் போது 10 சதம் கமிஷன் பெறுவது உலகம் முழுவதும் நடை பெறுகிறது. இது தவிர்க்க இயலாதது” என்று ஃப்ரண்ட்லைன் ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளிக்கிறார். திருடனைப் பிடிக்க வேறு என்ன ஆதாரம் வேண்டும். கண்கா ணிப்பதற்கு இனியும் என்ன தேவை முன் எழுகிறது? அலட்சியங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே மைதானத்தின் கூரை தானாக இடிந்து விழுவதும் புதியதாக கட்டப்பட்ட நடைமேடை சரிவதும் நிகழ்கிறது. பணியில் இருந்த பலரும் காயமடைகிறார்கள். உள்ளூர் மக்கள் கைகொட்டி சிரித்தது போதாது என்று, 53 நாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து, இந்திய ஆட்சியாளர்களை நோக்கி சிரிக்க வைக்கும் ஏற்பாடு காமன் வெல்த் போட்டிகள் மூலம் அரங்கேறுகிறது. ஊழலையும், ஊதாரித்தனத்தையும் நியாயப் படுத்தும் பிரதமரும், அதிகாரிகளும் நிறைந் திருக்கும் கூட்டணிக்கு பெயர்தான் ஐ.மு. கூட்டணியா?
கேள்வி 2: தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் பெயர் அண்ணா அறிவகம். இங்கு படித்த மாணவர் சுரேஷ். 11ம் வகுப்பு படித்த சுரேஷ் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பணம் செலுத்தாமல் வகுப்பறையில் இருக்க முடி யாது என நிர்வா கம் வீட்டுக்கு அனுப்புகிறது. பள்ளி வளாகத் திற்குள்ளேயே, பள்ளி பேருந்து ஏறி, இறந்து விடுகிறார்.
சம்பவத்தை நேரில் பார்த்ததாலும், பல முறை நிர்வாகத்தின் நடவடிக்கையில் அதிருப்தியில் இருந்ததாலும் பொதுமக்கள் பள்ளியில் நுழைவதும், அசம்பாவிதங்கள் நிகழ்வதும் அரங்கேறுகிறது. இதைத் தொடர்ந்து, தனியார் பள்ளி நிர்வாகங்கள், பள்ளிகளை மூடி எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த வேலை நிறுத்தம் மாணவர்களுக்கு ஏற்படுத்திய இழப்பு குறித்து ஆள் வோர் அல்லது போராட்டங்களை எதிர்ப்போர் கவலை கொள்ளவில்லை. கட்டட சேதாரத்தை சரி செய்து கொள்ளலாம். ஆனால் சுரேஷின் உயிரைத் திரும்பத் தரமுடியுமா? மாநில அரசின் சமச்சீர் கல்வி அறிவிப்புக ளும், நீதிபதி கோவிந்தராஜன் பரிந்துரைத்த கல்வி கட்டணங்களும் மேற்படி தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது. “நாங்கள் அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் இல் லை” என்பதை பிரகடனப்படுத்தும் தன்மை யிலேயே, தனியார் பள்ளி உரிமையாளர்களின் அணுகுமுறை உள்ளது. மாணவி ஜோதியின் தற்கொலை, மாணவர் இளையராஜாவின் தற் கொலை முயற்சி என நீளும் பட்டியல் அரசு பின்பற்றும் கல்வி கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வி இல்லையா?
கேள்வி 3: தமிழில் படிக்கும் மாணவர் களுக்கு தமிழகத்தில், அரசு வேலை வாய்ப் பில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல் வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கென சிறப்பு சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை அமலானால், தமிழகத்தில் சில முதல் தலைமுறை குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கலாம். ஆனால் அரசாணை எண் 170 மூலம் ஓய்வு பெற்றவருக்கு வேலை என அறிவித்து, பின் னர் தமிழில் படித்தவர்களுக்கு வேலை என் பது நம்பும் படியாக இல்லை. தமிழ்நாட்டில் 68 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தை எதிர்பார்த் திருப்பவர்களில் 90 சதவீதத்தினர் தமிழில் பாடம் பயின்றவர்களே. தமிழில் படித்தவருக்கு வேலை என்றால் அரசு ஏன் மெட்ரிக் பள்ளி களை நடத்த அனுமதிக்கிறது?. மெட்ரிக் பள் ளியில் படிக்கும் மாணவரின் வேலை வாய்ப் பில் அரசுக்கு பங்கு இல்லையா? சமச்சீர் கல்வி அறிவிப்புக்கு பிறகும், 4 வாரியங்கள் தொடர அனுமதிப்பது ஏன்? அரசுத் துறையில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல், தமி ழில் படித்தோருக்கு வேலை வாய்ப்பு எப்படி உருவாகும்? தமிழக அரசு பின்பற்றுகிற இது போன்ற சுய முரண்பாடு, நகைச்சுவையாக இல்லையா?
கேள்வி 4: தமிழக ஆளும் கட்சியை விட வும் சுயமரியாதை குறித்து வேறுயாரும் சிறப் பாக பேசிவிட முடியாது. ஆனால் செயல்பாடு, இளைஞர்களுக்கு சுயமரியாதையைக் கொடுப்பதாக இல்லை. உதாரணம், டாஸ்மாக் ஊழியர்களாக முதுகலை பட்டதாரிகள் பணி யாற்றுகின்றனர். ஊதியம், விடுப்பு, வேலை நேரம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடினால், கைது, மிரட்டல் என்று அதிகா ரத்தை நிலைநாட்ட, காவல்துறை ஏவப்படு கிறது. காவல்துறையை கொண்டு பூட்டை உடைத்து திறக்க வைத்தனர் ஆட்சி யாளர்கள். சத்துணவு ஊழியர்கள் போராடினால், 8 மணி நேரம் வேலை செய்யவில்லை. எனவே ஊதி யத்தை உயர்த்த முடியாது என கைது, வேலை நீக்க உத்தரவு, பெண்கள் நள்ளிரவில் கைது போன்றவற்றை அரங்கேற்றியது. சத்துணவு ஊழியருக்கும் ஊதியத்தை உயர்த்தவில்லை. டாஸ்மாக் ஊழியருக்கும் ஊதியத்தை உயர்த்த வில்லை. ஆனால் 365 நாள்களில் 75 நாள்கள் மட்டுமே கூடுகிற, சட்டமன்ற கூட்டங்களில் கலந்து கொள்கிற, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கேட்காம லேயே உயர்த்துகின்றனர். எங்கே இருக்கிறது சுயமரியாதை?
கேள்வி 5: தீண்டாமை தமிழகத்தில் இல்லை என தொடர்ந்து வாதிடுகிறார் தமிழக முதல்வர். கரூர் மாவட்டம் நொய்யல் கிராமத் தில் உள்ளது ஈ.வெ.ரா.பெரியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் பயின்ற மாணவி பிரேமா, 2008ல் கழிவறையை கழுவச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்பட்டார். மறுக் கவே, மாணவி பள்ளியை விட்டு நிறுத்தப்பட் டார். 2010லும் இரு மாணவர்களை, அதே தலைமை ஆசிரியர் “கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் அந்த சாதிதானே” என நியாயப்படுத்தவும் செய்திருக்கிறார். வாலிபர் சங்கம் இரு சம்பவங்களிலும் தலை யீடு செய்து போராடியுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தலைமை ஆசி ரியர் தொடர்ந்து அதே பள்ளியில் நீடிக்கிறார். கோவை மாவட்டம் இருகூரில் இது போன்ற செய்தி அறிந்து வாலிபர் சங்கம் தலையிட்டு போராடிய போது, ஆசிரியர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். மேற்படி சம்பவங்கள் தீண்டாமை வடிவத்தில் இல்லையா? உத்தப் புரம் கோரிக்கைக்காக, சிதம்பரத்தில் நந்தன் நடந்த பாதை என்பதை திறக்கக் கோரியதற் காக, காங்கியனூரில் வழிபாடு செய்ய அனுமதி கேட்டதற்காக, தடியடி, கைது, சித்ரவதை, சிறையில் அடைப்பு, கிரிமினல் குற்றவாளி களுக்கும் இல்லாத நிபந்தனை ஜாமீன் போன்ற சித்திரங்கள் தற்போதைய திமுக ஆட்சியின் காலத்திலேயே அரங்கேறியுள்ளது. இதற்கு என்ன பெயர் வைப்பது?
கேள்வி 6: கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தில் மக்கள் பெறும் பயன்பாட்டிற்கு அளவே இல்லை என்ற தன்மையில், மாநில ஆட்சி பிரச்சாரம் செய்கிறது. பல்லடம் தனியார் பள்ளி ஒன்றில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி மைதானத்தில் ஈட்டி எறியும் பயிற்சி நடைபெறுவதை அறியாமல் சென்றதால், பாய்ந்து வந்த ஈட்டி, தலையில் குத்தி, பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கலைஞர் காப்பீட்டுத் திட் டம் இதுபோன்ற விபத்திற்கு பொருந்தாது, என சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் நிரா கரித்து விட்டது. இப்போது பன்றிக் காய்ச்சல், பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து வரு கிறது. காப்பீட்டு திட்டம் பயன்படவில்லை. பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை, உருவாக்கி மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்யாமல், அடிப்படை சுகாதாரத்தை மேம் படுத்த முடியாது. சமீபத்தில் போலிமருந்துகள் கண்டறியப்பட்டன. ஒருசிலர் கைது செய்யப் பட்டாலும், அரசு நடவடிக்கையில் நம்பிக்கை ஏற்படவில்லை. மது விற்பனையில் ஆர்வம் காட்டும் அரசு, மருந்து விற்பனையை ஒழுங்கு செய்ய முன்வராதது ஏன்?
இத்தகைய கேள்விகளை கடந்த காலத்தி லும், இனி வரும் காலத்திலும் தொடர்ந்து முன்வைக்கும் இயக்கமாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செயல்படுகிறது. தேச அளவி லும், மாநில அளவிலும் உள்ள மக்கள் தொகை யில் சரிபாதியாக உள்ள இளைஞர் நலனில் அக்கறை செலுத்தும் அமைப்பாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் நடைபோடுகிறது. இளைஞர்களிடத்திலான முதலீடு, எதிர்கால இந்தியாவை வலுப்படுத்தும் என்ற முழக் கத்தை முதலில் வைத்த இயக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்திய போராட்ட அனுபவங்களில் இருந்து அடுத்த கட்ட செயல்களை, கோவையில் துவங்கியுள்ள 13வது மாநில மாநாடு தீர்மானிக்க இருக்கிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக