வியாழன், 14 அக்டோபர், 2010

தமிழில் படித்தால் வேலையா?

மொழித் தகவல் தொடர்பின் அச்சு. பண்பாட்டின் வேர். மொழிதான் ஒரு சமூகம் குறித்த தொன்மையை, வரலாற்றை முழுமை யாக ஆய்வு செய்யப் பயன்படும், ஆய்வு முறையின் பிரதான கருவி. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்கு உரிய மொழியைப் பாடமாக கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை எனப் பேசுவதும், அவசரச் சட்டம் இயற்றுவதும் ஒரு சமூகத் தில் நடந்தால், அந்த சமூகம் தன் தாய்மொழி குறித்தும், அதனுடன் இணைந்த வேலை வாய்ப்பு குறித்தும், கடந்த காலத்தில் சிந்திக்க வில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

இங்கு விவாதிக்கும் இந்தப் பிரச்சனை வெளிப்பட்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம் ஆகும். சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான ஆதிச்ச நல்லூர் தொல்லியல் வரலாற்றை கொண்டிருக்கும் மாநிலம் தமிழ் நாடு. தன் தாய்மொழிக்காக தீக்குளித்ததும், உண்ணாவிரதம் இருந்து மாண்டதும், அந்நிய மொழிகளை எதிர்த்துப் போராடியதும், இந் தியாவில் தமிழ்நாடு தவிர, வேறு எங்கும் பெரி தாக நடந்ததாக அறிய முடிய வில்லை. அந்த போராட்டமே தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத் திற்கு வழிவகுத்தது என்ற பெருமையும் பேசப்படுகிறது. அவ்வளவு உணர்ச்சிகள் தமிழ்ச்சமூகத்தில் கடந்த காலத்தில் மொழிக் காக கிளரப் பட்டுள்ளன. அவை அரசியலாக வும் பயன்பட்டுள்ளது என்பது வெளிப்படை. இன்று திடீரென, தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதும் அரசியலுக்காகத்தானா? என்ற கேள்வி தவிர்க்க இயலாமல் முன்வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவதாக, கடந்த கால ஆட்சி, தாய் மொழி குறித்தும், வேலை வாய்ப்பு குறித்தும் அக்கறையற்றதாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்வதாக மேற்படி அறிவிப்பு வெளியீடு செய்தியாகிறது. மூன்றாவதாக, மாநில அரசு இன்றைக்குப் பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை கார ணமாக, தன்னுடைய அவசரச் சட்டத்தை அமலாக்க இயலாது என்பதை உணர வில்லை.

ஒன்று: தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் தாய்மொழிக்கல்வி குறித்த ஆர்வம் குறைந்த தற்குக் காரணம், அரசு பின்பற்றுகிற கொள்கை. நவீன தாராளமய, தனியார்மயக் கொள்கைகள், கல்வி தருகிற பொறுப்பை அரசிடம் இருந்து படிப்படியாக விலக்கி, தனியாரிடம் முழுமை யாக ஒப்படைத்துவிட்டன. தமிழ்நாடு, இந்தி யாவிலேயே மிக அதிகமான தனியார் பள்ளிக் கூடங்களைக் கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இன்றைய மாநில ஆட்சியாளர்களான திமுக விற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி, இது குறித்து எழுதுகிற போது, தனியார் பள்ளிக்கு வக்காலத்து வாங்குவேரின் கூட்டம் அதிக மாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளும், பொதுப் பள்ளிகளும் சிறப்பாக செயல்படத் தொடங்கி விட்டால், கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்ற கவலை ஆட்சியாளர்களுக்கு இருக்கி றது. எனவேதான் ஆட்சியாளர்கள் அரசுப் பள் ளிகள் குறித்தும், பொதுப்பள்ளிகள் குறித்தும் கவலை கொள்வதில்லை என அரசின் அணுகுமுறை குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். மிகச் சமீபத்தில் மாநில தி.மு.க அரசு அமைத்த நீதிபதி கோவிந் தராஜன்குழு பரிந்துரைத்த கட்டணத்தை தடை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போது, பெற்றேர்களும், மக்கள் இயக்கங் களும் மேல் முறையீடு செய்த பின்னரே, மாநில அரசு மேல்முறையீடு செய்தது. அந்த அளவுக்கு தனியார் பள்ளிகள் மீது அரசு பரிவு கொண்டிருக்கிறது. உண்மையில் தாய் மொழிக்கல்வி குறித்து தி.மு.க அக்கறை கொள்ளும் என்றால், இனி தமிழகத்தில் தனி யார் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இரண்டு: மாநில அரசு தனது வேலை வாய்ப்பு குறித்த கொள்கையை மாற்ற வேண் டும். உலகமயமாக்கல் கொள்கை அமலாகத் துவங்கிய போது, முதல் கட்டச் சீர்திருத்தம் அமலானது. அரசு மற்றும் பொதுத் துறை நிறு வனங்களில் பணிபுரிவேரை விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில், வீட்டிற்கு அனுப்பினர். இப்போது இரண்டாம் சீர்திருத்தம் அமலா கிறது. ஓய்வு பெற்றேரை மீண்டும் பணியில் அமர்த்தும் வேலையைச் செய்கிறது. முதலில் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் ஆள் குறைப்பு அமலானது. இரண்டாவதாக, வேலையின்மை அதிகமாக உள்ள நிலை யைப் பயன்படுத்தி, உரிமைகளற்ற வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அல் லது பணிஓய்வு பெற்றவர்களை, காலிப்பணி யிடங்களில் வேலைக்கு அமர்த்துகிறது அரசு. 2009 இறுதியில் அரசாணை எண் 170-ஐ மாநில அரசு வெளியிட்ட போது அதை எதிர்த்து போராட்டம் நடத்திய காரணத்தால், திரும்பப் பெறப்பட்டது. எனவே மாநில அரசு தாய்மொழி யில் படிப்போருக்கு வேலை என்ற அவசரச் சட்டத்தை முன் மொழியும் முன், அரசு காலிப் பணியிடங்களை நிரப்பவும், புதிய வேலை வாய்ப்பு களையும் அரசு உருவாக்க வேண்டும். கூடவே இனி எப்போதும் ஓய்வு பெற்றேரை பணி அமர்த்தும் செயலில் ஈடுபட மாட்டோம் என்ற கொள்கை அறிவிப்பையும் வெளியிட வேண்டும்.

மூன்று: தற்போதைய நிலையில், இந்திய அளவில் அரசுத் துறையில் பணியாற்றுவதை விடவும் தனியார் துறைகளில் பணிபுரிவே ரின் எண்ணிக்கை அதிகம் என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது. மாநில அரசு தனது தொழிற் கொள்கையை 2007ம் ஆண்டில் அறி வித்த போதும், அதன் பின்னர் பல்வேறு புரிந் துணர்வு ஒப்பந்தங்களை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்கிற போதும், பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப் பயன்படும் திட்டம் என்று கூறுகின்றனர். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் இப்படித்தான் உருவாகும் என்று, மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. இதற் கும் ஆதாரம் கொடுக்கப்படவில்லை. தாய் மொழியை மையப்படுத்திய வேலைவாய்ப்பு இத்தகைய தனியார் துறைகளில் எப்படி உரு வாகும் என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. ஒரு அரசு தன்னைவிட வலிமையான தனியா ரிடம் தன் ஆட்சியதிகாரத்தை வெளிப்படுத்த இயலாது. உலக வங்கியிடம் கடன் பெற்றதற் காக கைகட்டி நிற்கிற மூன்றாம் உலக நாடு கள், அந்த உலக வங்கி அதிகாரத்தை கை வசம் வைத்திருக்கும் பெரும் முதலாளிகளி டம் எந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்தி விட முடியும். தமிழகத்தில், தகவல் தொழில் நுட்பத்துறை, புதிய மின் உற்பத்தி நிறுவனங் களின் வருகை, செல்ஃபோன் உற்பத்தி நிறு வனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏராளமான சலுகைகளை வாரிவழங் கும் அரசு, தமிழில் படித்தால் வேலை வாய்ப் பில் முன்னுரிமை என அவசரச்சட்டம் கொண்டு வருவதனால் என்ன பயன்? தனி யாருக்கு வழங்கும் சலுகைகளை அனுப விக்க முடிகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத் தர மக்கள் பயன் பெற வேண்டிய இடஒதுக் கீடு உள்ளிட்ட பல்வேறு உரிமைகள், தனியார் துறைக்குப் பொருந்துவதில்லை. எனவே தனியாருக்குக் காட்டும் தாராளத்தை முழு மையாக மாற்றிக் கொள்ளாமல், அரசின் அறி விப்பு காகிதப் பூவாகத்தான் இருக்கும். மேற்படி மூன்றும் தாய்மொழிக் கல்விக் குத் தடையாக உள்ளன. இக்கொள்கை அம லாக்கத்தில், தி.மு.க அரசு மற்ற மாநிலங்களை விடவும் முனைப்புக் காட்டுகிறது. உலகப் பொருளாதாரத்துடன் மூன்றாம் உலகப் பொரு ளாதாரம் இணைக்கப்பட்டதே, மூன்றாம் உலகச் சமூகங்களைப் பின்னோக்கி இழுத் துக் கொண்டிருக்கும் பிராந்திய வாதம், பிரி வினைவாதம் மற்றும் தனிமை வாதம் தலைத் தோங்க காரணம். நவீன காலனியாதிக்க மானது ஒரு நாட்டில் இனக்குழு மேன்மை வாதம், பிராந்திய மேன்மைவாதம், சமய மேன்மைவாதம் ஆகியவை தலைத்தோங்கு வதற்கான சூழலை உருவாக்குகிறது. இப்படிப் பட்ட சூழலினால் உருவான பிரிவினைவாத சக்திகளை மோசமானவை என வர்ணித்துக் கொண்டே, அவைகளைத் தங்கள் நோக்கத் தை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்து கின்றனர் என்று பேரா. பிரபாத் பட்நாயக் குறிப்பிடுகிறார். இத்தகைய பொருளாதாரக் கொள்கையுடன் சமரசம் செய்து கொண் டுள்ள மாநில அரசு, வேலை வாய்ப்பினை உருவாக்க முடியாது என்று தெரிந்த பின் னரும், தமிழில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற அவசரச் சட் டம் வெளியிடக் காரணம், செம்மொழி மாநாடு குறித்த விமர்சனம் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் சுமார் 68 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர் களில் 90 சதமானோர் தமிழில் படித்தவர்கள் என்பதை ஆட்சியாளர்கள் மறுக்க முடியாது. எனவே மீண்டும் மீண்டும் பொருளில்லா காலிப் பாத்திரத்தை முன்னால் வைத்து விட்டு, கரண்டியை எல்லேருக்கும் கொடுத்த கதையைப் போல், கொள்கையை மாற்றாமல் வேலை வாய்ப்பு உருவாகாது என்பதை மாநில ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

Thanks to theekkathir on 14.10.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக