ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கோயபல்ஸ்,தொடர்ந்து செய்து வந்த பொய்ப் பிரச்சாரம் உண்மையைப் போல் நம்புவதாக இருந்தது,அதனால் தான் பொய்ப் பிரச்சாரம் செய்வோரை கோயபல்ஸ் பிரச்சாரம் செய்யாதேஎன்பார்கள் ஒரு பொய் பலமுறை திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது,மெய் போல் தோற்றமளிக்கிறது. தற்போது தமிழகத்தில் உள்ள திமுக வின் ஆட்சி இதே பிரச்சாரத்தை மேற்கொள்வது தமிழகம் எங்கும் நடைபெறுகிறது .சமீபத்தில் விழுப்புரம் சென்ற முதல்வரை வரவேற்க தமிழகத்தில் 3லட்சம் பேருக்கு வேலை தந்த முதல்வரே,வருக வருக என பிரம்மாண்ட கட்டவுட்டுகளை வைத்திருந்தனர் அடுத்து கலைஞர் 86, என்ற பெயரில் அவர் மகள் கனிமொழி நடத்தி வரும் வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் 73ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தது என்கிற தகவல்.குமரி,விருதுநகர்,நீலகிரி,கடலூர் ,திருச்சி மாவட்டங்களில் இந்த முகாம் நடந்ததாகவும், அதில் 73 ஆயிரம் இளைஞர்கள் பயனடைந்ததாகவும் செய்திகள் வெளிவருகின்றன. மேலே கண்ட இரு தகவல்களும் இளைஞர்களை ஏமாற்றும் பொய்ப் பிரச்சாரத் தகவல் என ஆணித்தரமாகக் கூறலாம் முதலில் அரசு கொடுத்ததாகச் சொல்லப்படும் வேலைகளில் 80 சதமானம், நிரந்தரமற்றது ,பணிப்பாதுகாப்பு அற்றது சமூகப் பாதுகாப்பு இல்லாதது 20சதம் வேலைகள் மட்டுமே தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டது என்பதை பல முறை கூறியுள்ளோம் .
இரண்டாவது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த இளைஞர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தில் இருந்து 62 லட்சமாக உயர்ந்துள்ளது2006ல் இருந்த எண்ணிக்கையில் 61 சதமானம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பெருக்கத்தை ஒப்பிடும் போது யானை பசிக்கு சோளப் பொறி கொடுத்த கதை தான் நினைவுக்கு வரும்.இதிலும் சத்துணவு,மக்கள் நலப்பணி,கிராம டேங்க் ஆப்பரேட்டர் போன்றவர்கள் முதல்வர் கூற்றுப்படி முழுநேரப்பணியாளர்கள் அல்ல.இந்த அரைகுறைப் பணி வாழ்க்கைத் தேவையை நிறை வேற்றாது.
மூன்றாவதாக, 2010,ஜனவரியில்,கவர்னர் உரையின்போது சுமார் 2இலட்சம் காலிப்பணியிடங்கள் அரசுத் துறையில் இருப்பதாக ,மாநில முதல்வர் ஒப்புக் கொண்டு இருக்கின்றார்.இது நீண்ட நாள்களாக காலியாக உள்ளது .இதற்கான வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கு பதிலாக கனிமொழி மூலம் தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது ஏன்? அதுவும் தனியார் நிறுவனங்களில் யார் சென்று அணுகினாலும் கிடைக்கிற வேலைக்கு ,திமுக கட்சி மூலம் ஏற்பாடு செய்வது,ஏன்? இப்படி கேள்வி மேல் கேள்விகள் பொது மக்களால் வினவப்படுவதற்கு ,மாநில அரசு எப்போதும் போல் காதுகளை இறுக மூடிக்கொள்கிறது ஏனென்றால் மேற்படி அரசு தந்த வேலைகளோ கனிமொழி நடத்திய முகாம்களோ,மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை என்பதை பல்வேறு விவரங்கள் உறுதி செய்கின்றன.
சுய வேலை வாய்ப்பும் - ஏமாற்றமும்.
கடந்த பிப்-25 அன்று சென்னை விருந்தினர் மாளிகை முன்பு சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்ட எண்ணற்ற இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர் அதில் ஒரு இளைஞர் ,திருமணமானவர் இருந்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்த விரக்தியில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,என் சடலத்தின் மீது நின்று போராடுங்கள் நீங்களாவது நல்லாயிருங்கள் என பேசிக் கொண்டிருந்தார் இவருடைய ஏமாற்றத்திற்கு காரணம் 3ழு இன்ஃபோடெக்என்கிற பெரும் நிறுவனமும் அரசும் ஆகும். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் சகாஜ் என்ற நிறுவனத்தை எதிர்த்து போராடிக் கொண்டு இருந்தனர் வேறு மாநிலங்களிலும் இந்த நிலை இருக்கலாம் என்றே தெரிகிறது .
இது தகவல் தொழில் நுட்ப உலகம், இன்னும் வரிசையில் காத்திருக்கலாமா? கம்ப்யூட்டர் உலகில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சேவைகளைப் பயன்படுத்துங்கள் என பஸ் நிலையத்தில் லேகியம் விற்பவனைப் போல்,பன்னாட்டு ,இந்நாட்டு நிறுவனங்களும், மத்திய, மாநில அரசுகளும் விளம்பரம் செய்கின்றன.இந்தியா முழுவதும் கிராமங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப் போகிறோம் என்றார் பிரதமர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் மோசம் போய் உள்ளனர்.
அரசு அறிவிப்பின் படி,கிராமங்களில் பொதுச் சேவை மையம்என்பதை துவக்கினார்கள். தமிழகத்தில் சமார்5400 மையங்கள் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது ஒரு மையத்தை செயல்படுத்த படித்த இளைஞர் ஒருவர் அந்த மையத்திற்கு பொறுப்பாக்கப் பட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்ய வேண்டும். இளைஞர் ஒருவர் ரூ1.25லட்சம் முதலீடு செய்தால் நிறவனம் ரூ60ஆயிரம் பெறுமானமுள்ள சாதனங்களைத் தருவார்கள் கிராமத்தில் நீ அரிசி எடுத்துவா ,நான் உமி எடுத்து வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதித் தின்னலாம்என்று சொல்வார்கள் அது போல் தான் இந்த ஞ.ஞ.ஞ. (ஞரடெஉ, யீசஎயவந, யீயசவநேசளாயீ. )என்ற முறையும். இதில் சில அரசுத்துறை வங்கிகள் கடன் தருவதால் பப்ளிக் அந்தஸ்தில் இணைகிறார்கள் மேலே கூறிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து கடைதிறந்தால் கொள்வார் யாரும் இல்லை. சேவை மையத்தில் தொலைபேசி பில்,டுஐஊ பிரீமியம்,சிட்டா,அடங்கல்,செல்போன் ரீசார்ஜ் என பல்வேறு சேவைகள் நடைபெறும் ஒவ்வொன்றிற்கும் சேவைக் கட்டணம் உண்டு. எனவே,முதலீட்டை குறுகிய காலத்தில் மீட்டுவிடலாம், சுய வேலைவாய்ப்பு முறையில் காலமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம், என கற்பனை சிறகசைத்த அனைவரும் சிறகொடிந்து நிற்கின்றனர்.
ஒரு பொதுச் சேவை மையப் பணியாளர் எங்கள் மையத்தில் செல்போன் ரீசார்ஜ் அதிகம் நடைபெறுகிறது.இதில் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 4 சதம் சேவை மையத்தை நடத்துபவருக்கும் 4சதம் நிறுவனத்திற்கும் செல்கிறது இந்த ஒப்பந்தப்படி எந்த விதமான பெரும் முதலீடுகளையோ, உழைப்பையோ செலுத்தாமல் சம்பாதிப்பதற்கு, சகாஜ் மற்றும். 3ழுஇன் ஃபோடெக் ஆகிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.பொதுத்துறை வங்கிகளை நேரடியாக இது போன்ற சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் ஈடுபடுத்தி இருந்தால் சம்பந்தப்பட்ட இளைஞர் கூடுதல் பலனடைய முடியும் மறுபுறம் மக்களின் பயன்படுத்தும் திறன் அதிகரிக்கச் செய்ய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், கம்ப்யூட்டரை அறிமுகம் செய்வது எந்த வகையிலும் பலனளிக்காது,என்பதையும் மேற்படி திட்டங்களில் பார்க்க முடிகிறது. 6மாதங்களுக்கு மேலான பின்னரும், சேவை மையத்தில் வெறும் செல்போன் ரீசார்ஜ் மட்டுமே நடைபெறுவது,மிகப்பெரிய ஏமாற்று வேலை எல்லா கடைகளிலும் ரீசார்ஜ் கூப்பன்கள் விற்பனையாகும் போது பொதுச்சேவை மையத்தை எத்தனை பேர் தேடி வருவார்கள்? இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் கூறுவது போல், வாங்கும் சக்தி அதிகரிக்காமல், இது போன்று நுகர்வுப் பொருள்கள் அறிமுகம் செய்யப்படுவது, விற்பனையாகாது, அல்லது அத்தியாவசிய தேவைக்கு பணம் ஒதுக்காமல், ஆடம்பரத்திற்கு பணம் ஒதுக்குவது அதிகமாகும் என்பதை நமது அரசுகள் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கின்றன. நமது நாட்டில் செல்போன் இன்கமிங் -கிற்கு மட்டுமே கிராமங்களில் பயன்படுகிறது. ஆயுள் காலா சேவையைப் பெற்றவர்களே அதிகம் என்ற தகவலை சமீபத்திய ஆய்வு வெளியிட்டுள்ளது. அதே போல் மிஸ்டு கால் கொடுப்பவர்களும் கிராமங்களில் அதிகம் என்ற தகவல் இருக்கிறது.
இந்நிலையில் சிராமப் பொதுச் சேவை மையம், சுயவேலை வாய்ப்பை எந்த வகையில் அதிகரிக்கும்? இது போன்ற உண்மைகளின் காரணமாகத்தான் , நாம் மேலே குறிப்பிட்ட இளைஞன் தற்கொலை செய்து கொள்வதாக அறிவிப்பு வெளியிடுகிறான்.
சுயமரியாதை என்ன விலை?
நாம் மேலே பட்டியலிட்டுள்ள 1, தரப்பட்ட அரசு வேலைகளில் 80 சதம் சமூகப் பாதுகாப்பு அற்றது. 2.கனிமொழி வேலைவாய்ப்பு முகாம். 3.அரசு தனியார் இணைந்த சுயவேலை வாய்ப்பு ஆகிய மூன்று வேலைகளுமே சுயமரியாதையை நேசிப்பவர் பின்பற்றுபவர் செய்யக் கூடிய வேலைகளல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமெர்த்தியா சென், வேலை என்பது 3. அடிப்படை குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
1.உற்பத்தி சார்ந்தது.
2.உழைப்புக்கான அங்கீகாரத்தை தருவது .
3.வருமானத்தை உறுதி செய்வதாக இருப்பது.
அமெர்த்தியா சென் குறிப்பிட்ட குணாம்சங்களுடன் ஒத்துப்போக வில்லை. முதலாளிகள் தனியார் நிறுவனங்கள், சுரண்டலை மேம்படுத்தி, லாபத்தை மையமாகக் கொண்டவை அப்படித்தான் இருக்கும். அரசும் இதே முறையை மேற்கொள்வது, நிச்சயமாக ஏற்புடையதல்ல.மக்கள் நலன் காக்கும்அரசு என சொல்லிக்கொள்ள இயலாது. இத்தகைய பணி நியமனங்களின் மூலம் மக்கள் வயிறு பிழைத்திருக்கிறார்களே அல்லாது வாழ்க்கையாக வாழவில்லை. இப்படித்தான் பா.ஜ.க ஒரு கோடிப் பேருக்கு வேலை கொடுத்தோம்! இந்தியா ஒளிர்கிறது,என பிரச்சாரம் செய்தது.மக்கள் மரண அடி கொடுத்தார்கள் என்பதை திமுக நினைவில் கொள்வது அவசியம் .
நன்றி தீக்கதிர் 2009 march
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக