வியாழன், 16 ஜனவரி, 2020

Kavitha I

சலிப்பு

கூலிக்கு உழைக்கும் போது வருவதில்லை…
தனக்காக மற்றவர் உழைத்தால் வருவதில்லை…
ஆனால் மேலோங்குகிறது…
வேலைகிடைத்த பின் படிக்கும் போது…
நடத்திய யுத்தங்கள் நீடிக்கும் போது….

நினைத்துப்பார்ப்பதில்லை வரலாற்றை..
முன்னோர் சலித்திருந்தால்…
ஒன்று சேர சலித்திருந்தால்….
போராட சலித்திருந்தால்...
அடிமை நுகத்தடியில் இருந்து 
விடுதலை பெற்றிருப்போமா …. என்று…
முரண்பாடு முற்றாமலா இந்த நிலைக்கு வந்தோமென்று…

போராடு… போராடிப்பார்…
நீயே சலித்து… விரக்தியாகி…
அடங்கி விடுவாய்… உன்னில் சிலரை 
அடக்கினால்…. மிரண்டு விடுவாய்..
முடியாதெனில் கொஞ்சம் கோரிக்கைகளை நிறைவேற்றி…
அனைத்து கொள்வது...
இதுதானே முதலாளித்துவத்தின் சூத்திரம்…

சூத்திரங்கள் மாறாமல்…
சலித்துக் கொள்வதில் நியாயமில்லை...
சங்கம் அழைக்கிறது...
அடங்காமல், மிரளாமல், போராடிப்பார்…
புது ரத்தம் பாய்ந்தோடும்…
புது சூத்திரத்திற்கான படைப்பில்…
சலிப்பும் இல்லை… ஓய்வும் இல்லை…

பண்டிகைகளின் கொண்டாட்டத்தில்..
மட்டுமல்ல…
சங்கத்தின் சங்கமத்திலும்...
எழுச்சி பெறுகிறது… உறவுகள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக