செவ்வாய், 19 அக்டோபர், 2010

சேதுத்திட்டமும் ஆள்வோரின் அக்கறையின்மையும்

2010 பிப்ரவரி 6 அன்று காலை, திருச்சி மாநகர் முழுவதும் பத்திரிகை களில் பரபரப்பு செய்தி. மத்திய அமைச் சர் ஜி.கே. வாசன், போக்குவரத்து நெரிச லில் கார் சிக்கிக் கொண்டதால், இரு சக் கர வாகனத்தை, வழியில் சென்ற நபரிடம் கேட்டு வாங்கி, விமானநிலையத்திற்குச் சரியான நேரத்தில் சென்றடைந்தார். அவர் அதுபோன்று முயற்சிக்காவிட் டால், அடுத்த விமானத்தில் சென்றிருப் பார். அரசுப் பணம், அநாவசியமாக, சில ஆயிரம் ரூபாய் வீணாகி இருக்கும். அவரு டைய நிகழ்ச்சிகள் சிலவும் பாதிக்கப்பட் டிருக்கும். ஜி.கே.வாசன் பொறுப்பு வகிக்கும் கப்பல் போக்குவரத்துத் துறையும், மத்திய அமைச்சரவையும், சரியான நேரத்தில் செயல்படாமல், தாமதிப்பதால், இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.2400 கோடியை பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும்.

ஆம், சேதுக் கால்வாய்த் திட்டத் தினை செயல்படுத்த நிதி ஒதுக்கி, ட்ரெ ஜிங் இயந்திரங்களை சுமார் மூன்றாண்டு காலம் பயன்படுத்தி, 300 மீட்டர் சதுர பரப்பளவைத் தவிர இதர பணிகள், அனைத்தும், முடிந்துவிட்ட சூழலில் நிதியும் செலவு செய்யப்பட்ட நிலையில் திட்டம் முழுமை பெறாமல் இருக்கிறது.

கடந்த 2009 டிசம்பர் முதல் வாரத் தில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய் துள்ளது. அதில் நீதிமன்றம் கேட்ட ஆவ ணங்களை ஒப்படைக்க ஒன்றரை ஆண்டு கால அவகாசம் வேண்டும் என, பணி நின்று ஒன்றரை ஆண்டுகள் கழித்து அது கேட்டிருக்கிறது. அதற்கடுத்த ஒரு மாதத்திற்குள் ஒரு கமிட்டி அமைத்திருப் பதாகவும், அதற்கு 18 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் புதிய வழித்தடத்தைக் கண்டறிய வேண் டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள் ளது. முன்னுக்குப் பின் முரணாக நமது மத் திய அரசும், கப்பல் போக்குவரத்துத் துறை யின் செயல்பாடும் இவ்வாறு இருக்கின்றன.

கடந்த 2007ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் வழங்கிய இடைக்காலத் தடை யைத் தொடர்ந்து, சேதுக் கால்வாய்ப் பணி மந்தகதியை நோக்கித் திரும்பியது. ஆதம்பாலமா? ராமர் பாலமா? என்ற சர்ச் சையில் 300 மீட்டர் சதுரப் பரப்பு சிக்கிக் கொண்டதன் காரணமாக, மக்களின் நம் பிக்கை என்கிற விரலைக் கொண்டு, வளர்ச்சி என்கிற, மக்களின் கண்ணைக் குத்துகிற கொடுமையை சில அரசியல் கட்சிகளும், இந்துத்துவா இயக்கங்களும் அரங்கேற்றி இருக்கின்றன. இவர்கள் ஆட்சியிலிருந்தபோது, சேதுக் கால் வாய்த் திட்ட அமலாக்கத்திற்கான ஒப்பு தல் வழங்கியதை, எதிர்க்கட்சியான பின் மறந்துவிட்டார்கள்.

நமது தமிழகத்தைப் பொறுத்தளவில் வேளாண் பணி காரணமாகக் கிடைத்து வந்த வேலைவாய்ப்பும், இதர உப தொழில் களும் அழிவை எதிர்கொண்டுள்ளன. ஏறத்தாழ 15 ஆண்டுகளில் மிகக் குறை வாக இருந்த புலம்பெயர்தல், கிராம வேறு பாடின்றி இப்போது அதிகரித்துள்ளது. தமிழக உழைப்பாளிகள், வேறு மாநிலங் களுக்கும், வேறு மாநிலத்தவர் தமிழகத் தின் பெரு நகரங்களுக்கும் புலம்பெயர் வது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பஞ்சாலைகள் பெருமள வில் மூடப்பட்டு, வேலையிழப்பை உரு வாக்கியுள்ளன. நிரந்தரத் தொழிலாளர் கள் வெளியேறியபின், அதே வேலைக்கு கேம்ப் கூலி அல்லது சுமங்கலித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த, தனிப் பெண்கள் உள்ள பெண் குழந்தைகள் அதிகம் உள்ள, குடிகார அப்பாவைக் கொண்ட குடும்பத்து இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

பாஜக அல்லது இந்துத்துவா அமைப் பினர் இத்தகைய சமூக அவலங்கள், கொடுமைகளுக்கு எதிராக ஒருபோதும் போராடியதும் இல்லை. மாறாக, மும்பை போன்ற இடங்களில் இனம் மற்றும் மொழி உணர்வைத் தூண்டி கலவரங் களையும், கொலைகளையும் அரங்கேற்று கிறார்கள். இந்துத்துவா அமைப்புகள் மானுட வளர்ச்சியை மேற்படி குணாம்சத் தின் காரணமாக நிராகரிக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான, திமுக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசு, பெரும் முதலாளிகளுக்குத் துணை போகின்றது. இடம்பெயர்கிற மக்கள் மீதான சுரண்டலைத் தடுக்க, தீவிர நடவடிக் கைகளை மத்திய-மாநில ஆட்சியாளர்கள் ஒரு போதும் எடுப்பதில்லை. இடம்பெயர் தலைத் தடுக்கும் விவாதத்திலும் ஈடு படவில்லை.

சேதுக் கால்வாய்த் திட்டம், சுரண் டலை முற்றிலும் தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இடம் பெயர்தலை, குடும்ப உறுப்பினர்களின் சிதைவைத் தடுக்கும் என எதிர் பார்க்க லாம். ஆண்டுக்கு சுமார் 7000 கப்பல்கள் மேற்படி கால்வாய் வழி சென்று வரும். இது தூத்துக்குடி துவங்கி கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் சிறு துறைமுகங்களை உருவாக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் காரணமாக, உட்புற மாவட்டங்களிலும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இன்றைய நிலையில் முன்னேற்றப் பாதையை நோக்கி சில மாற்றத்தை உரு வாக்கும். அந்த மாற்றத்தை உருவாக்குவ தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு ஏன் ஆர்வம் காட்டவில்லை, மந்தகதி யில் செயல்படும் காங்கிரஸ் தலைமை யை, மாநில வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு திமுக, ஏன் வலியுறுத்தவில் லை? கடந்த காலத்தில் கப்பல் போக்கு வரத்துத் துறையைத் தன் வசம் வைத்தி ருந்த திமுக, தற்போது காங்கிரசிடம் பறி கொடுத்ததால் ஆர்வம் காட்டவில்லையா? தற்போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விரயமாக்கிவிட்டு, பொதுப் பணத்தை தன் விருப்பப்படி செலவிட்டு விட்டு மக்களை ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்?

சேதுக்கால்வாய்த் திட்டம் நிறைவேற் றத்திற்காக போராடிய அமைப்புகளில் முக்கியமான அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். தமிழகத்தில் தொடர் போராட்டம், புதுதில்லியில் 2000 நவம்பர் 28 பேரணி-ஆர்ப்பாட்டம், 2007 அக்டோ பரில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் துவங்கி, இராமேஸ்வரம் நோக்கி சைக்கிள் பேரணி - பிரச்சாரம். தொடர்ந்து கடலோர மாவட் டங்களில் சைக்கிள் பிரச்சாரம். 2008 டிசம்பரில் மாநில அளவில் சென்னை நோக்கி பிரச்சாரம் என பல வடிவங்க ளில் போராடியுள்ளது. அதன் தொடர்ச்சி யாக தற்போது, மத்திய அரசின் கவ னத்தை மேலும் ஈர்ப்பதற்காக, வாலிபர் சங்கம் தலைநகர் தில்லியில், நாடாளு மன்ற வீதியில் 24 மணி நேர உண்ணா விரதத்திற்குத் திட்டமிட்டு, பிப்ரவரி 12இல் அரங்கேற்றுகிறது.

தென் மாவட்டங்களில் அமைப்பாளர் களையும், தளபதிகளையும் கொண்டிருக் கும் ஆட்சியாளர்கள், சேதுக் கால்வாய்த் திட்டத்தைத் தயக்கமின்றி, தடைகளை எதிர்கொண்டு நிறைவேற்றுவதன் மூலமே, தென் மாவட்டங்களில் புதியவேலை வாய்ப்புகளுக்கான வழிகளைத் திறக்க முடியும்.

thanks to theekkathir published on 12 02 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக